தோலை
உரிக்காமல்
அப்படியே
சாப்பிடுங்கள் ..!
சத்தான
உணவைத்
தேர்வு
செய்து
சாப்பிடுவது
மட்டுமல்ல ,
அதைச்
சாப்பிடும்
விதமும்
முக்கியம் .
ஆப்பிள்
போன்ற
பழங்கள்
முதல்
கடலை
வகைகள்
வரை
தோலை
நீக்கிச்
சாப்பிடும்
பழக்கம்
நம்மில்
பலருக்கு
இருக்கிறது .
அது
கூடாது ,
அதன்
மூலம்
பல
முக்கியமான
ஊட்டச்சத்துகளை
நீங்கள்
இழக்க
நேரிடலாம்
என்று
ஊட்டச்சத்து
நிபுணர்கள்
கூறுகின்றனர் .
சாப்பாட்டு
விஷயத்தில்
அவர்கள்
கூறும்
சில
ஆலோசனைகள் :
விலங்கு
புரதம்
வேண்டாம் :
புரதத்துக்காக
கால்நடைகளிலிருந்து
கிடைக்கும்
வெண்ணை ,
பால் ,
இறைச்சி ,
பாலாடைக்கட்டி ,
முட்டை
போன்றவற்றை
அதிகம்
சார்ந்திருக்காமல்
இருப்பது
நல்லது .
தாவர
புரதங்களைப்
போலில்லாமல்
இவை
செரிமானம்
ஆவதற்கு
அதிக
நேரம்
எடுத்துக்
கொள்கின்றன .
இவை
உங்களுக்கு
ஒரு
கனமான ,
வசதியற்ற
நிலையை
அளிக்கக்கூடும் .
நிலையை
மேலும்
மோசமாக்கும்
விதத்தில் ,
ஜீரணம்
ஆக
வேண்டும்
என்பதற்காக
அமிலவகைப்
பானங்களை
அருந்தும்
வழக்கம்
இருக்கிறது
(உதாரணத்துக்கு
பீட்சா
சாப்பிட்ட
பிறகு
சோடா
பருகுவது ).
அசிட்டிக்
உணவுகளான
சர்க்கரை ,
பால் ,
பால்
பொருட்கள் ,
செயற்கைக்
குளிர்பானங்கள்
போன்றவற்றைத்
தவிர்ப்பதும் ,
ஆல்கலைன்
உணவு
வகைகளான
பழங்கள் ,
காய்கறிகளை
அதிகமாகச்
சேர்த்துக்
கொள்வதும்
நல்லது
என்பதே .
பால்பொருட்களைத்
தவிர்க்கலாம் :
உங்களால்
தினசரி
பால்
சாப்பிடாமல்
இருக்க
முடியாது
என்றால்
சோயா
பால்
அல்லது
பாதாம்
பால்
சாப்பிடலாம் .
அதிலும்
தற்போது
பெரும்பாலும்
பால்
பொருட்கள்
கலப்படமாக
வருகின்றன
என்று
சந்தேகிக்கப்படும்
நிலையில்
அவற்றைத்
தவிர்ப்பதே
நல்லது
என்கின்றனர்
வல்லுநர்கள் .
எண்ணை
உண்மை :
நீங்கள்
உங்கள்
உணவில்
எவ்வளவு
எண்ணை
எடுத்துக்
கொள்கிறீர்கள்
என்று
பாருங்கள் .
கொட்டைகள் ,
விதைகளிலிருந்து
நேரடியாக
எடுக்கப்படும்
எண்ணை
தான்
சிறந்ததே
தவிர ,
ரீபைண்ட்
ஆயில்
அல்ல .
அதில்
நார்ச்சத்து
இழக்கப்பட்டு
விடுகிறது .
சமைக்கும்
முறையை
மாற்றுங்கள் :
எண்ணையில்லாமல் ,
ஆரோக்கியமான
முறையில்
சமைப்பதற்குச்
சற்றுக்
கூடுதல்
நேரமாகும் .
ஆனால்
அவ்வளவு
நேரம்
எடுத்துக்
கொண்டாலும்
நன்மையே .
கட்லட்
போன்றவற்றை
நிலக்கடலை
மாவு
போட்டு
ரோஸ்ட்
செய்யலாம் .
அதற்கு
சற்று
கூடுதல்
நேரமானாலும் ,
நிலக்கடலையில்
இருந்தே
போதுமான
எண்ணை
கிடைத்து
விடும் .
முழுமையாகச்
சாப்பிடுங்கள் :
பெரும்பாலான
உணவுப்
பொருட்களில்
சத்துக்களும் ,
மணமும்
அவற்றின்
தோலில்தான்
இருக்கிறது .
நீங்கள்
தோலை
உரிக்கும்போது
சத்துகள்
அதனுடன்
போய்விடுகின்றன .
காய்கறிகளுக்கு
மணமூட்ட
நாம்
ஏன்
மசாலாவையும் ,
சாஸ்களையும்
சேர்க்கிறோம்
என்று
எப்போதாவது
நீங்கள்
யோசித்தது
உண்டா ?
நீங்கள்
தோலை
உரிக்கும்போது
அதனுடன்
மணத்தையும்
அகற்றி
விடுகிறீர்கள் .
முழு
உணவாக
நீங்கள்
சமைக்கப்
பழகினால்
மசாலா
சேர்ப்பதைக்
குறைத்துக்
கொள்ளலாம் .
அதேபோல
பட்டை
தீட்டப்பட்ட
பளபள
அரிசிக்குப்
பதிலாக
பட்டை
தீட்டப்படாத
அரிசி
நல்லது .
மைதாவுக்குப்
பதிலாக
ஆட்டாவைப்
பயன்படுத்தலாம் .
அதிகமாக
அலச
வேண்டாம் :
காய்கறிகள் ,
பழங்கள் ,
தானியங்களை
தண்ணீ ரில் அலசுவது நல்லதுதான் .
ஆனால்
அதுவே
அதிகமாகிவிட
வேண்டாம் .
அப்படிச்
செய்தால்
அனைத்துச்
சத்துகளையும்
இழக்க
நேரிடும் .
காய்கறிகளை
தண் ணீரில் வேகவைப்பதை
விட
ஆவியில்
அவியுங்கள் .
அதற்குத்
தண் ணீர் குறைவாகத்
தேவைப்படும்
என்பதுடன் ,
சத்துகளையும்
இழக்காது
இருக்கலாம் .
காய்கறிகளை
வெட்டியபிறகும்
அலச
வேண்டாம் .
பழங்களைத்
தனியாகச்
சாப்பிடுங்கள் :
உணவுடன்
பழங்கள்
சாப்பிட
வேண்டாம் .
மற்ற
உணவுகளுடன்
ஒப்பிடும்போது
பழங்கள்
வேகமாக
ஜீரணமாகின்றன .
அவை
சர்க்கரைத்தன்மையைக்
கொண்டுள்ளதால்
உங்கள்
வயிற்றில்
நொதிக்கின்றன .
அது
பொதுவாக
நல்லதுதான் .
ஆனால்
நீங்கள்
நிறைய
உணவு
சாப்பிட்டபின்
பழங்கள்
சாப்பிட்டால்
ஜீரணம்
மெதுவாக
நடைபெறுகிறது .
நீண்ட
நேரம்
நொதித்தல்
நடைபெற்று
வாயுப்
பிரச்சினை ,
வயிற்றுப்
பொருமல்
போன்றவற்றை
ஏற்படுத்தலாம் .
சாறாக
இல்லாமல்
முழுப்
பழமாகச்
சாப்பிடுவதும்
நல்லது .
பழச்சாறில்
கலோரிகள்
அதிகமாக
இருக்கின்றன .
ஆனால்
பழமாகச்
சாப்பிடும்போது
அதிக
நார்ச்சத்தைப்
பெறலாம் .
குரங்கைப்
பின்பற்றுங்கள் :
இயற்கையே
நமக்குச்
சிறந்த
ஆசிரியர் .
அந்த
வகையில்
நமது
நெருங்கிய
உறவினரான
குரங்கு
நமக்கு
வழிகாட்டுகிறது .
எப்போதாவது
குரங்கு
ஆப்பிளைத்
தோலை
உரித்துச்
சாப்பிடுவதைப்
பார்த்திருக்கிறீர்களா ?
ஆனால்
வாழைப்பழம் ,
ஆரஞ்சு
போன்றவற்றை
அது
நிச்சயமாகத்
தோலை
உரித்துச்
சாப்பிடும் .
அதே
பாணியை
நீங்கள்
உங்களின்
உணவு
முறையிலும்
பின்பற்றுங்கள் .
தோல்
உரிக்கத்
தேவையில்லாத
காய்கறிகள் ,
பழங்களைத்
தோல்
உரிக்காதீர்கள் ..! —