தைராய்டு
சுரப்பி
எங்குள்ளது
அதன்
பணிகள்
என்ன ?
கழுத்துப்பகுதியில்
உள்ள
நாளமில்லாச்
சுரப்பிகளுள்
ஒன்று .
இது
அதிகம்
அல்லது
குறைந்து
வேலை
செய்தால்
சிக்கல்தான் .
இதிலிருந்து
சுரக்கிற
தைராக்ஸின்
என்ற
ஹார்மோன்
நீர்
நமது
உடல்
வளர்ச்சிக்கும் ,
மூளை
வளர்ச்சிக்கும்
ஊட்டமளிக்கிறது .
ஆண் ,
பெண்
உறுப்புகள்
முதிர்ச்சி
பெறவும்
இதுதான்
உதவுகிறது .
தைராய்டு
நோய்க்கு
என்ன
காரணம் ?
நிறைய
காரணங்கள்
இருக்கிறது .
பாக்டீரியாக்கள் ,
வைரஸ்கள்
காரணமாகின்றன .
நம்
பெற்றோர்கள்
யாருக்காவது
இந்த
நோய்
இருந்தால்
அதுவும்
நம்மைத்
தொடர்ந்து
தாக்க
வாய்ப்புகள்
உள்ளன .
எனவே
சர்க்கரை
நோயைப்
பரிசோதித்து
அறிந்து
கொள்வதுபோல
இதையும்
பரிசோதித்து
தெரிந்து
வைத்துக்கொள்வது
நல்லது .
இளம்
வயதில்
புற்றுநோய்
தாக்கி
கதிரியக்க
சிகிச்சை
பெற்றிருந்தால்
நாளடைவில்
தைராய்டு
பாதிப்புகள்
வரலாம் .
குறிப்பாக
நம்
உணவில்
அயோடின்
குறைவைக்கூட
ஒரு
காரணமாகச்
சொல்லலாம் .
காரணமில்லாமல்
கோபம்
வருவது
ஏன்
டாக்டர் ?
அதற்கும்
தைராய்டு
பாதிப்பிற்கும்
என்ன
தொடர்பு ?
ஹைபர்
தைராய்டு
என்கின்ற
தைராய்டு
அதிகமாக
சுரப்பதால்தான்
காரணம்
இல்லாத
கோபம் ,
மனக்குழப்பம்
போன்றவை
ஏற்படும் .
அப்படிப்பட்டவர்கள்
தைராய்டுக்கான
தகுந்த
சிகிச்சை
எடுத்துக்
கொண்டால்
நோயை
குணப்படுத்தி
விடலாம் .
தைராய்டு
பிரச்சினை
யாருக்கு
வேண்டுமானாலும்
வரலாம்தானே ?
தைராய்டு
பிரச்சினை
எவருக்கு
வேண்டுமானாலும்
வரலாம்
என்றாலும்
அதிக
அளவில்
பெண்களுக்கே
வரும் .
சிறுமி
முதல்
மூதாட்டி
வரை
வர
வாய்ப்புண்டு .
தைராய்டு
பாதிப்பிற்கு
இதுதான்
காரணமென்று
துல்லியமாக
இதுவரை
கண்டறியப்
படவில்லை .
எனினும்
உணவில்
அயோடின்
சத்து
குறைவாக
இருப்பது ,
பரம்பரையாக
வருவது ,
சிலவகை
தொற்று
நோய்
போன்ற
காரணங்கள்
சொல்லப்பட்டு
வருகின்றன .
பெண்கள்
மட்டும்
இந்தப்
பாதிப்பு
அதிகம்
தாக்க
அவர்களின்
உடல்
அமைப்பும்
பெண்களுக்கு
மட்டும்
சுரக்கின்ற
பிரத்தியேகமான
சில
ஹார்மோன்கள்தான்
காரணம் .
தைராய்டு
சுரப்பி
குறைபாடுகளினால்
என்ன
பாதிப்புகள்
ஏற்படலாம் ?
தைராய்டு
சுரப்பியில்
இரண்டு
வகையான
குறைபாடுகள்
ஏற்படலாம் .
1. குறைவாக தைராய்டு சுரப்பது .
இதற்கு
ஹைபோ
தைராய்டு
என்று
பெயர் .
2. அதிகமாக தைராய்டு சுரப்பது
இதற்கு
ஹைபர்
தைராய்டு
என்று
பெயர் .
ஹைபோ
தைராய்டு
காரணமாக
காய்ட்டர்
என்றழைக்கப்படுகின்ற
வீக்கம்
ஏற்படும் .
முடி
கொட்டுதல் ,
பசியின்மை ,
எடை
அதிகரித்தல் ,
கர்ப்பம்
தரிக்க
முடியாமை ,
உடலில்
அசாத்தியமான
சோர்வு ,
அசதி ,
மந்த
நிலை
போன்றவை
இருக்கும் .
ஹைபர்
தைராய்டு
காரணமாக
படபடப்பு ,
நாடித்துடிப்பு
அதிகமாக
இருக்கும் .
கை
காலில்
நடுக்கம் ,
டயரியா ,
லூஸ்
மோஷன் ,
மாதவிலக்கு
தொந்தரவு ,
கால்
வீக்கம் ,
ஞாபக
சக்தி
குறைதல் ,
கடுமையான
பசி ,
கோபம்
வருதல் ,
முடி
கொட்டுதல் ,
கர்ப்பம்
தரிக்க
முடியாமை ,
அளவிற்கு
அதிகமான
உடம்பு
வலி
போன்றவை
இருக்கும் .
இரண்டு
வகை
தைராய்டு
கோளாறுகளில்
தைராய்டு
சுரப்பி
குறைவாக
சுரக்கின்ற
குறைபாடுதான்
மிக
அதிக
அளவில்
மக்களிடம்
உள்ளது .
உணவில்
உள்ள
உப்பிற்கும்
தைராய்டு
குறைபாட்டிற்கும்
என்ன
தொடர்பு ?
பொதுவாக
நம்
நாட்டில்
மலை
அடிவாரம் ,
கடல்
இல்லாத
பகுதிகளில்
உள்ள
தண்ணீரில்
உணவில்
உள்ள
உப்பில்
அயோடைஸ்டு
குறைவாகத்தான்
இருக்கும் .
எனவே
இப்பகுதியில்
வாழ்கின்ற
மக்களுக்கு
அதிக
அளவில்
தைராய்டு
பாதிப்பு
வர
வாய்ப்புண்டு .
இதனை
கருத்தில்
கொண்டுதான்
இந்திய
அரசாங்கம்
எல்லா
இடங்களிலும்
அயோடைஸ்டு
கலந்த
உப்பு
விநியோகிக்க
ஏற்பாடு
செய்தது .
இன்றைக்கு
கடைகளில்
விற்கப்படுகின்ற
அனைத்து
உப்புகளும்
அயோடைஸ்டு
கலந்த
உப்புதான் .
தைராய்டு
பாதிப்பிற்கு
என்ன
மாதிரியான
சிகிச்சைகளை
செய்கிறீர்கள் ?
குறை
தைராய்டு
(ஹைபோ )
பிரச்சினைக்கு
பரிசோதனை
முடிவினை
பார்த்து
மருந்து ,
மாத்திரை
மூலமாகவே
குணப்படுத்தி
விடலாம் .
எந்த
நிலையிலும்
இதற்கு
இதுதான்
சிகிச்சை .
அதிக
தைராய்டு
(ஹைபர் )
பிரச்சினைக்கு
மூன்று
வகையான
சிகிச்சைகள்
உள்ளன .
1. மருந்து மாத்திரைகள் மூலமாக குணப்படுத்துவது ,
2. அணுக்கதிர்
தன்மை
கொண்ட
சொட்டு
மருந்து ,
3. அறுவை
சிகிச்சை .
தைராய்டு
அதிகமாக
சுரக்கின்ற
நோயாளிக்கு
மருந்து
மாத்திரையே
நிரந்தரமான
தீர்வாக
அமையாது .
6 முதல்
12 மாதம்
வரை
மருந்து
சாப்பிட்டு
பார்த்து
குணமாகவில்லை
என்றால்
அணுத்தன்மை
உள்ள
சொட்டு
மருந்தோ
அல்லது
அறுவை
சிகிச்சையோ
செய்து
குணப்படுத்தி
விடலாம் .
அணுக்கதிர்
சொட்டு
மருந்து
சிகிச்சை
பற்றி
சொல்லுங்களேன் ?
இன்று
வேகமாக
வளர்ந்து
வரும்
அணுக்கதிர்
மருத்துவத்தில்
இத்தகைய
தைராய்டு
பாதிப்புகளை
கண்டுபிடிப்பதற்கும் ,
குணப்படுத்துவதற்கும்
ஐசோடோப்
எனப்படும்
அணுக்கதிர்
மருந்து
உபயோகிக்கப்படுகிறது .
கதிர்
இயக்கத்
தன்மை
உடைய
இந்த
மருந்தை
நோயாளிக்கு
வாய்
வழியாகவோ
அல்லது
ஊசி
வழியாகவோ
செலுத்தப்படும் .
உடலில்
எல்லா
உறுப்புகளிலும்
ஏற்படும்
புற்றுநோய்களையும்
குறிப்பாக
மூளை ,
கல்லீரல் ,
சிறுநீரகம் ,
தைராய்டு
ஆகியவற்றில்
ஏற்படும்
புற்றுநோய்களை
கண்டுபிடிக்க
முடியும் .
இந்த
மருந்து
பாபா
அணுக்கதிர்
ஆராய்ச்சி
நிலையத்தில்
தயாரிக்கப்
பட்டு
இந்தியா
முழுதும்
அனுப்பப்
படுகிறது .
கழுத்தில்
ஏதேனும்
கட்டி
இருந்தால்
குழந்தைகள்
படிப்பிலும் ,
வளர்ச்சியிலும்
மந்தமாக
காணப்
பட்டால் ,
சுரப்பிகளில்
குறைபாடு
உள்ளது
என்று
அர்த்தம் .
இந்த
அணுக்கதிர்
சொட்டு
மருந்து
சிகிச்சையினை
பெற்ற
நோயாளி
அன்றைக்கே
வீட்டுக்குப்
போய்விடலாம் .
மருத்துவமனையில்
தங்க
வேண்டாம் .
ரத்த
இழப்பும்
இருக்காது .
நோகாமல்
தைராய்டு
நோயை
அகற்றுகின்ற
அற்புதமான
அதிநவீன
மருத்துவம்
இது .
சில
குழந்தைகள்
மந்தமாக
இருப்பதற்கு
தைராய்டு
பாதிப்பு
ஒரு
காரணம்
என்று
சொல்லப்படுகிறதே ?
பெரும்பாலும்
குழந்தைகளுக்கு
தைராய்டு
சுரப்பி
குறைவாக
சுரக்கின்ற
பாதிப்புதான்
வரும் .
பொதுவாக
தாயின்
வயிற்றில்
கரு
உண்டானதிலிருந்து
பிறந்து
3 வயது
வரைக்கும்
மூளை
வளர்ச்சியின்
வேகம்
அதிகமாகவே
இருக்கும் .
இந்த
மூளை
வளர்ச்சி
நிலையில்
குறை
தைராய்டு
(ஹைபோ )
இருந்து
அதனை
கண்டுகொள்ளாமல்
எந்தவிதமான
சிகிச்சையும்
எடுக்காமல்
விட்டு
விட்டால்
குழந்தையின்
அறிவுத்திறன் ,
அறிவு
நுட்பம்
(ஐக்யூ )
குறைந்து
விடும் .
படிப்பு ,
நடப்பது ,
பேசுவது ,
எழுதுவது ,
நடை ,
உடை ,
பாவனை
அனைத்திலும்
அந்தக்
குழந்தை
மிக
மிக
மந்தமாகிவிடும் .
இதுபோன்று
ஒரு
குழந்தை
மந்த
நிலையில்
இருந்தால்
ஒரு
தைராய்டு
ஹார்மோன்
பிளட்
டெஸ்டை
செய்தால்
தெரிந்து
விடும் .
அப்போதே
அலட்சியப்படுத்தாமல்
குழந்தைக்குச்
கிகிச்சை
அளித்தால்
பூரணமாக
குணப்படுத்தி
மந்த
நிலையை
போக்கி
விடலாம் .
தைராய்டில்
புற்றுநோய்
வருமா ?
தைராய்டு
சுரப்பியிலே
புற்றுநோய்
வர
வாய்ப்புள்ளது .
இதில்
பல
வகைகள்
உள்ளன .
தைராய்டு
புற்றுநோயின்
அறிகுறிகள் .
1. தைராய்டு சுரப்பி வீங்கி விடும் .
2. குரலில் மாற்றம் ஏற்படும் .
3. கழுத்து புறங்களில் சின்னச் சின்ன வீக்கமாக
ஏற்படும் .
4. தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை
எடுத்தும்
குணமாகாமல்
இருப்பது
போன்றவை
ஆகும் .
பெரும்பான்மையான
தைராய்டு
புற்று
நோயை
ஆபரேஷனுக்குப்
பிறகு
அணுக்கதிர்
சொட்டு
மருந்தினை
கொடுத்தே
குணப்படுத்தி
விடலாம்