பின்னல் உறவை...................!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips

 May be art of 2 people

பின்னல் உறவைக் குறிக்கிறது.
முடியை விரித்துவிடுவது(free hair) அமங்கலமானது...
 
எவ்வுறவும் வேண்டாம் என்பதை குறிக்கிறது.
 
ஆகையினால்தான் இறந்தவர் வீட்டிலும் பிணத்தின் பின்னும் தலைவிரி கோலமாக செல்வர்.
 
அதன் பொருள் "என்னவரே சென்ற பின் எனக்கேது உறவு. 
 
இனி எந்த உறவும் எனக்கில்லை" என்பதாகும்...
 
மேலும் தலை முடியின் நுனி வழியாக ஆத்ம சக்தி வெளியேறுகிறது.
 
நல்ல / தீய உணர்வுகள் அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் (medium) போன்றது முடியின் நுனி...
 
மேலும் சந்நியாசிகள் மொட்டை அடித்துக் கொள்வதற்கு இதுவும் ஒரு காரணம்...
 
ஏனெனில் வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை... நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை... 
 
 
என்பதை உணர்த்துவதற்காக...
 
ஆகையினால்தான் முற்காலத்தில் நுனிமுடி வெளியில் தெரியாமல் இருக்க நார் அல்லது குஞ்ஜலம் கட்டிக் கொள்வர்...
 
ஆகையால் தலைவிரி கோலத்தை தவிர்ப்போம்.
 
இது உறவின் மீதான பிடிப்பை அறுக்க கூடியது.
 
பின்னல் அமைப்பு த்ரிவேணி சங்கமத்தை ஒத்தது. 
 
மூன்று நதிகள் சேரும் போது இரண்டு நதிகள்(கங்கை,யமுனை) கண்களுக்கு புலப்படுகின்றன. 
 
ஒரு நதி (ஸரஸ்வதி) புலப்படுவதில்லை.
 
இதே போலவே பின்னலின் மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.
 
பின்னலின்
 
வலது- பிறந்த வீடு
 
இடது-புகுந்த வீடு
 
நடுப்பகுதி-பெண்
 
தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும்.
 
ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல வாழ்வின் தத்துவமாகும்.......

 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

சுஜாதாவின் - 'நெருங்கிய தொல்லை'

மணக்கால் அய்யம்பேட்டை | 10:52 AM | Best Blogger Tips

 Filter Coffee | South Indian Filter Coffee Recipe | Karnataka Tourism

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பில்டர் காபி பற்றி எழுதி இருக்கும் சுவையான கட்டுரை!
ஏண்ணா.. பால் பாக்கெட் போட்டுட்டான்னானு பாருங்கோ..
 
இல்லையேடி.. எல்லார் ஆத்துலேயும் போட்டுட்டு கடைசில தான் நம்மாத்துக்கு வர்றா..
அறுபது வயதிற்கு மேற்பட்ட தமிழ் நாட்டு பிராமணர்களின் வயிற்றிற்கு எரி பொருள் காப்பி தான்.. கார்த்தால ஒரு தடவை . அதே போல் மத்யானம் மூணு மணிக்கு ஒரு தடவை. ஒரு வாய் காபி உள்ளே போனால் தான் அன்னிக்கு வேலையே நடக்கும். குறிப்பாக ஆண்களுக்கு.
 
காபி …அதுவும் முதல் டிகாக்ஷனில் போட வேண்டும். இரண்டு டைப் பீபரி கொட்டைகளையும் சம அளவு மிக்ஸ் பண்ணி , சிலருக்கு சிக்ரியுடன், சிலருக்கு இல்லாமலேயும் சுட சுட அரைச்சு வாங்கணும்.. எவர்சில்வர் பில்டரில் குறைந்த பட்சம் மூணு ஸ்பூன் காபி பொடிய அமுக்கி போடணும்.. சிறிய ஜாலி மூடி போன்ற ஒன்றை கொண்டு மேலும் அமுக்கி விடணும். தள தள வென வெந்நீர் கொதித்தவுடன் , நேரே விடாமல் போக வர சுற்றி விட வேண்டும். 'ணங்' என்று செல்லமாக பில்டர் மூடியால் ஒரு தட்ட வேண்டும். அதிகமாய் தட்டி விட கூடாது. அப்போது தான் சொட்டு சொட்டாக டிகாக்ஷன் ஸ்ட்ராங்கா விழும். கொஞ்சம் கூட தட்டி விட்டாலோ , பொடி அமுக்கா விட்டாலோ டிகாக்ஷன் நீர்த்து போய்விடும்.
 
அந்த கால கூட்டு குடும்பங்கள் , பெரிய சம்சாரிகள் வீட்டில் இரண்டாவது டிகாக்ஷன் தான் எல்லாம். முதல் டிகாக்ஷனில் குடும்ப தலைவருக்கு மட்டும் ரகசியமாக தயாரிக்கபடும். இன்றைய காஃபி மேக்கர்களெல்லாம் ஃபில்டருக்கு இணையாகாது.
 
பழைய திரைப்படங்களில் 'பிறாமணாள் காபி க்ளப்' என்ற போஸ்டரை அதிகம் பார்க்க முடியும்
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு எங்கள் ஸ்ரீரங்கம் ரெங்க பவன் ஹோட்டல் காப்பி மிகவும் பிரசித்தம்..அவர்களே கூட பிரத்யேகமாக ரெங்கநாயகி காபி என்று ஒரு கடை வைத்து இருந்தார்கள்..எனது சீனு மற்றும் ராமநாதன் பெரியப்பாக்கள் வெளியூரிலிந்து வருபவர்கள் .டவுன் பஸ்ஸில் இருந்து இறங்கி ரங்க பவனில் ஃபர்ஸ்ட் கிளாஸ் காப்பி கொடுத்தாம்பா என்று ஸ்லாகிப்பதை கேட்டு இருக்கிறேன். ஒரு சிறிய டபராவின் உள்ளுக்குள்ளே சூடு இறங்காமல் இருப்பதற்காக ஒரு குட்டி டம்ப்ளரை கவுத்து காபியை கொடுக்கும் வழக்கம் இன்றும் பல ஊர்களில் இருக்கின்றது.. மிக ஜாக்கிரதையாக அதை பிரித்து டபராவில் கொட்டி ஆற்ற வேண்டும். இல்லையெனில் மேலே சிந்தும் அபாயம் உண்டு. இன்றைக்கு ஸ்ரீரங்கத்தில் காந்தி சிலை அருகே முரளி கடை ஒன்றில் தான் காபி சொல்லி கொள்ளும்படியாக இருக்கிறது . 
 
காப்பி போடுவது என்பது ஒரு கலை. ரொம்பவும் பால் இருக்க கூடாது. ரொம்பவும் கறுத்து போய் விட கூடாது. ஓரிரண்டு முறை பெரிதாக ஆற்ற வேண்டும். நல்ல சூடு அதன் சிறப்பு.. நுரை வந்து அதை பார்ப்பதே ஒரு அழகு .அளவாக சர்க்கரை போட வேண்டும்.இந்த சுகர் ஃப்ரீ மாத்திரைகள் எல்லாம் அதன் சுவையை மங்க செய்து விடும். ஒரு மிதமான கசப்பு தான் அதன் தனித்துவம். முக்கியமாக, குடித்த பிறகும் நாக்கில் அதன் சுவை ஒரு மணி நேரத்திற்காவது தங்க வேண்டும்.சில பிரகிருதிகள் அதனுடன் சேர்ந்து மருந்து மாத்திரையை எடுத்து கொள்ளும்போது , ரசனை கெட்ட ஜென்மங்கள் என்று சொல்ல தோன்றும். 
 
காலையோ , மதியமோ பரபரப்பு இல்லாமல் குடிக்க வேண்டும்.
 
ம்..' மேலே படிக்க போறானா இல்லை வேலைக்கு போக போறானா?; ', என்ன இருந்தாலும் அவா சுப்பிணியை கல்யாணத்துக்கு கூப்பிடாதது தப்பு தான்' - இப்படி சில வம்பு சம்பாஷனைகளையும் சேர்த்து கொண்டால் காப்பி கூடுதல் சுவையுடன் இருக்கும். 
 
இதெல்லாம் மிடில் கிளாசுக்கு தான். கொஞ்சம் வசதி இருந்தால் போர்ன்விட்டா,ஓவல்டின் என்று தடம் மாறி விடுவார்கள். அப்படியே காப்பி சாப்பிட வேண்டி இருந்தால் , பையன் கறுப்பாகி விடுவானோ என்ற பயத்தில் அம்மாக்கள் நிறைய பால் விட்டு வெள்ளை காப்பி ஆக்கி விடுவார்கள்.. அவன் படித்து விட்டு பின்னாளில் இஞ்சினியர் ஆகி ராமகுண்டத்தில் இருந்து கறு கறு என்று வருவான் என்பது வேறு விஷயம் .
காப்பியை டம்ளர் டபராவில் குடித்தால் தான் அது ருசிக்கும்.. இந்த கப் அண்ட் சாசர் எல்லாம் டீ யிற்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம், காபிக்கு அல்ல.. திருச்சியில் பத்மா கபே என்று ஒரு ஓட்டல் உண்டு. ஆர் ஆர் சபா சமீபம் . அங்கே இன்ன பிற அயிட்டங்கள் இருந்தாலும் , அதன் காபிக்கு தான் மவுசும் கூட்டமும்...பிற்காலத்தில் திருச்சியில் அபிராமி , காஞ்சனா போன்ற ஹோட்டல்களில் ஓரளவு தரமான காப்பி கிடைத்து வந்தது..
இந்த ப்ரு, நெஸ்கா ஃ பே எல்லாம் ஹனி மூன் தம்பதியரின் அசதிக்கும் , விளம்பரத்துக்கும் மட்டும் தான் சரியாக வரும்.
 
திடீர் என்று ஒரு நாள் எங்கள் மாரீஸ் தியேட்டரில் இடைவேளையின் போது புஸ் புஸ் என்று சத்தம் போட்டு ஒரு இரும்பு கம்பிக்குள் காப்பி கப்பை செலுத்தினார்கள்.. நிறைய நுரையுடன் பாலாக ஒரு காபி வந்தது. எஸ்ப்ரெசோ என்று அழைத்தார்கள். ஆர்வ மிகுதியில் உடனே குடிக்க போக சூட்டில் நாக்கு பற்றி கொண்டது.
 ரூ 40 கோடியில் படமாகும் சுஜாதாவின் என் இனிய இயந்திரா! | Sujatha's En Iniya  Iyanthira coming to silver screen - Tamil Filmibeat
சென்னையில் தி நகர் பஸ் நிலையம் அருகில் இந்தியா காப்பி ஹவுஸ் என்று ஒரு கடை இன்றும் இருக்கிறது..ஒரு காலத்தில் புகழ் பெற்றது.அங்கே ரயில்வே ஐ ஆர் ஆர் போல வெள்ளை பீங்கான் கப்பில் தான் காப்பி . ஆனால் சகாய விலையில் கிடைக்கும்.
நீரிழிவு நோயாளிகளை கேட்டு பாருங்கள் . காலையில் வெறும் வயிற்றில் ரத்தம் கொடுக்க க்யூவில் நின்று ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு காப்பி குடித்தவுடன் அவர்களுக்கு கிடைக்கும் நிம்மதி சொல்லி மாளாதது..
 
அதிகமாக காபி விளையும் கர்நாடகாவில் கூட காபியின் சுவை என்னை பொறுத்தவரை சுமார் தான். உடுப்பியும் , காமத்தும் ஓரளவு சொல்லி கொள்ளும்படியான ஹோட்டல்களாக இருந்தாலும் , நம்ம ஊர் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு நாக்கை அடகு வைத்தவர்களால் ஒருவித தயக்கத்துடன் தான் அவைகளை ஏற்று கொள்ள முடியும் ..
 
கல்யாணங்களில் காபியின் தரம் என்பது திருமண உறவையே அசைக்கும் வல்லமை பெற்றது. 
 
சுடு தண்ணி சுடு தண்ணி என்று திட்டிக்கொண்டே எல்லோரும் ரயிலில் வரும் காப்பியை குடிப்பது தவிர்க்க முடியாதது..ஒரு காலத்தில் மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் தரமான காப்பி கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.
 Throw Back: ரோபோவை எந்திரனாக மாற்றிய எழுத்தாளன்; சினிமாவில் எழுத்தாளர்  சுஜாதா செய்த பங்களிப்புகள் | List of Writer Sujatha's contributions in  Tamil Movies - Tamil Filmibeat
தலையெழுத்தே என்று குடிக்கும் காப்பி என்றால், இரண்டை சொல்லலாம் ஒன்று விமானங்களில் கொடுக்கப்படுவது..மற்றொன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரூம்களில் நாமே கெட்டில் பயன்படுத்தி தயாரிப்பது.. விமானங்களில் ஒரு முழு கப்பிற்கு டிகாக்ஷன் கொடுத்தாலும் , ஒரு குட்டி குமிழிலிரிந்து சொட்டு பாலை கலப்பதற்குள் ஆறி தொலைத்து விடும்..மற்றொன்று பால் பவுடர் வகையை சேர்ந்தது.
 
இன்றைய நவீன உலகில் வய் ஃபை தேடி அலையும் இளைஞர்களுக்கு கடலை போடுவதற்கு வசதியாக இருபது கஃபே காபி டே. லாட்டே , காபுசினோ என்று வகையறாக்களுக்கு தொண்ணூறு ரூபாய் வாங்கினாலும் அதன் சுவை அங்கே கூட்டி கொண்டு செல்பவரை பொருத்தது.
 
ஹௌ ஆர் யு டூயிங் டுடே என்று கூறி அறிமுகமில்லாதவரிடமும் சிரித்தால் , அது அமெரிக்கா..
 
எ காபுசினோ .. டால்(பெரிது)....
மில்க் ?..
 
நோ தேங்க் யூ…
 
ஒரு குண்டு பீப்பாய்காரி உங்கள் ஆர்டரையும் , பெயரையும் ஸ்கெட்ச் கொண்டு ஒரு பெரிய பேப்பர் கப்பில் எழுதி காப்பி தயாரித்து கொடுத்தால் அது ஸ்டார் பக்ஸ்.. கை சுடாமல் இருப்பதற்காக ஒரு பேப்பர் மேலுறையை நீங்கள் சொருகி கொண்டு மேலுக்கு ஒரு மூடியை எடுத்து கொள்ள வேண்டும் .
எவ்வளவு தான் காபி புராணம் பாடினாலும், வீட்டில் மனைவி தரும் காபிக்கு இன்னொரு கூடுதல் சிறப்பும் உண்டு .
 
'டொங்க்' என்று டம்ப்ளரை கீழே வைக்கும் வேகத்தில் அன்றைய நாள் ராசி பலனை தெரிந்து கொண்டு விடலாம் 
 
'நெருங்கிய தொல்லை'
எழுத்தாளர் சுஜாதாவின்
காஃபி கதை

 

ஆடிப்பெருக்கு விழா எதற்காக?

மணக்கால் அய்யம்பேட்டை | 9:38 AM | Best Blogger Tips

அதிர்ஷ்ட பெருக்கெடுக்கும் ஆடி பதினெட்டு! | aadi perukku is a day dedicated  to the god of nature - Tamil Oneindia


 
ஆடிப் பெருக்கு: ஆற்றங்கரையில் தூய்மையான ஓர் இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்திருப்பார்கள். அவர் முன்னால், முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும்.
 
பிள்ளையார் காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்க, காவிரி நதி உருவானது எனும் கதையை அறிவோம். அதே போல் மணிமேகலை காப்பியம் சொல்லும் பொன்னி நதியின் கதை என்ன... ஆடிப்பெருக்கில் காவிரியை ஏன் கொண்டாடுகிறோம், அன்று நிகழும் அபூர்வ வழிபாடுகளின் தாத்பர்யங்கள் என்ன...
 
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாக வகுத்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது மழைக் காலத்தின் தொடக்கம். தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இது கோடைக் காலத்தின் தொடக்கம்.
 
மழைக்காலத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். அதே போல் இந்த தட்சிணாயனக் காலம் தேவர்களுக்கு மாலைப் பொழுது.
 மாங்கல்ய பலம் தரும் காவிரி- ஆடி பதினெட்டில் நன்றி கூறுவோம்! | aadi perukku  is a day dedicated to the god of nature 3-8-2018 - Tamil Oneindia
அந்தி சாய்ந்தவுடன், கன்று தாயைத் தேடும். தாய்ப் பறவையைக் குஞ்சுகள் தேடும். அனைத்து ஜீவராசிகளும் அன்னையைத் தேடும். அப்படியே, தேவர்களின் மாலை நேரமான இந்த ஆடி மாதத்தில் அன்னையின் அருளை வேண்டி அம்மன் மாதமாக ஆடி மாதத்தைப் போற்றிக் கொண்டாடுகிறது மனித குலம். அதேபோல் ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிப் பதினெட்டு என்று மற்ற விழாக்களாலும் ஏற்றம் பெறுகிறது இந்த மாதம்.
 
அது ஏன் பதினெட்டு?
 
பதினெட்டு என்ற எண் ‘ஜய’த்தை அதாவது வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன. 
 
இந்த முறையிலேயே, நீர் பெருக் கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நம் முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் காவிரி முதலான நதிகளுக்கு நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.
 

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக

மணக்கால் அய்யம்பேட்டை | 10:13 PM | Best Blogger Tips

 

ஆடிப்பெருக்கு: குடும்பத்தில் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் பெருக காவிரியை வணங்குவோம்!

 

 

 நாளை  ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு பண்டிகை தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காகச் செய்கிறோம் என பொருளுணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். அந்த வகையில் ஆடிப்பெருக்கு எதற்காக அனுசரித்து வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

 

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையின் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடிப்பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல் இப்படி, நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடிமாத விசேஷ வைபவங்கள் பல உண்டு.

 

தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். 

 

ஆடிப் பெருக்கு

 

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகமாகிப் பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பிக் காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரி நதியைப் பெண்ணாக - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கள விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும். அனைவரையும் வாழ வைக்கும் அந்தக் காவிரித்தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாகவே, "ஆடி பதினெட்டாம் விழா' கொண்டாடப்படுகிறது.

 

முக்கியமாக தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆறுகள் பொங்கி பிரவாகம் எடுத்துள்ளன. காவிரி கரையோரங்களிலும், தாமிரபரணி ஆற்றங்கரைகளிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது.

 

ஆடிபதினெட்டு கொண்டாட்டம்

 

ஆடி பதினெட்டிற்குப் பத்து நாட்கள் முன்பாக நவதானியங்களை ஒரு தட்டில் தூவி, மண் அல்லது எரு கலந்து மூடி வைப்பார்கள். அது வெண்மையாக முளைத்து வளர்ந்திருக்கும். அதை முளைப்பாலிகை அல்லது முளைப்பாரி என்பார்கள். ஆடி18 அன்று பிற்பகல் வேளையில் முளைப்பாலிகையை ஏந்தி ஊர்வலமாக ஆற்றுக்குச் செல்வர். தூய்மையான இடத்தில், பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பர். அவரின் முன்னால், முளைப்பாலிகைகளை வரிசையாக வைப்பார்கள். அது முடிந்ததும் பச்சரிசி, சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றிக் கலந்து விநாயகரின் முன்னால் வைத்து வேண்டுவார்கள்.

 

வயதான சுமங்கலி ஒருவர், அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் தடவிய நூலைக் கொடுப்பார். சிலர் கைகளிலும், சிலர் கழுத்திலுமாக கட்டிக் கொள்வார்கள். அதன் பின், அவரவர் கொண்டு வந்த முளைப்பாலிகை, பனை ஓலைகளால் செய்யப்பட்ட வட்டமான காதோலை, கருகுமணி ஆகியவற்றை நீரில் விடுவர். நுரைத்துச் சுழன்று வரும் காவிரித்தாயின் வரவால் பயிர் பச்சை எல்லாம் தழைக்கப் போகின்றன.

 

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

 

காவிரிக்குச் சூல்

 

காவிரித்தாய் இப்போது அவள் கருவுற்று இருக்கிறாள் என்ற ஐதீகத்தில் தான் இவையெல்லாம் செய்யப்படுகின்றன. சிறுவர்கள் சப்பரம் என்ற ஒன்றை (தேர் போல சிறியதாக இருக்கும்) அழகாக அலங்கரித்து, அதிகாலையிலிருந்தே வீதிகளில் சத்தமிட்டு இழுத்தபடி ஓடுவார்கள். மாலையில், அந்தச் சப்பரத்தின் உள்ளே, ஒரு சிறிய அகல்விளக்கை வைத்து மெதுவாக இழுத்து வருவார்கள்.

 

சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி -  தலை வாழையிலையில் - காதோலை கருகுமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய நூலினை பழுத்த சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

 

ஸ்ரீ ரங்கநாதர் தங்கைக்குச் சீர்

 

ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது சீர்வரிசை கொண்டுவந்து கங்கையினும் புனிதமான காவிரிக்குச் சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார்.

 

ஜோதிடத்தில் ஆடி பதினெட்டு

 

ஆடி பதினெட்டு என்பது சுக்கிரனோடு சூரியன், சந்திரன், புதன். குரு ஆகியவர்களுக்கு ஏற்படும் தொடர்புகளைக் குறிப்பதாகவே அமைந்திருக்கிறது. காவிரிக்குச் சீர் கொடுப்பது என்பது ஒரு பாரம்பரியமான விழாவாகும். அழகிய இளம்பெண்ணையும் கர்ப்பத்தையும் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும். ஜோதிடத்தில் பாரம்பரியத்தைக் குறிக்கும் கிரகம் சூரியன் ஆகும். நதியைக் குறிக்கும் கிரகம் சந்திரன் ஆகும். சீர் வரிசை மற்றும் சித்திரான்னங்களைக் குறிக்கும் கிரகம் புதனாகும்.

 

ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. ஆடி பதினெட்டு அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டுவிட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார். அந்த சனி நட்சத்திரத்தை விட்டுவிட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும்போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும். ஏனென்றால் புதனும், சூரியனும் நட்பு கிரகங்கள். சூரியன் புதனின் ஆயில்ய பாதத்தில் வரும்போது ஒருவித கிளர்ச்சி, புத்துணர்ச்சி, செடி கொடிகளில் பச்சையத் தன்மை சதவிகிதம் அதிகரிக்கும். இதனால்தான் இந்த நாட்களில் இதுபோன்றெல்லாம் செய்வது நல்லது.

 

ஜோதிடத்தில் நதிகள் மற்றும் கடல் சார்ந்த பகுதிகள் மற்றும் அனைத்து நீர் நிலைகளுக்கும் காரகர் சந்திர பகவான் ஆவார். காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். மேலும் கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசி மற்றுமல்லாது பெண் ராசியாகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த சந்திரனின் ராசியான கடகத்தைத் திரிகோண ராசிகளாகப் பெற்ற விருச்சிகம் மற்றும் மீன ராசிளும் நீர் ராசிகள் மற்றும் பெண் ராசிகளாகும்.

 

மேலும் சுக்கிர ஸ்தலத்து இறைவன் ஸ்ரீரங்கநாதர் காவிரியை சகோதரியாக கருதி சீர் செய்வதாகவும் அமைந்திருக்கிறது. நதியை குறிக்கும் கடகத்திற்கு சகோதர பாவமாக அதாவது மூன்றாம் பாவமாக வருவது கன்னியாகும். காவிரிக்கும் கடகத்திற்கும் அதிபதி சந்திரன் ஆகும். மாலவனுக்கும் கன்னிராசிக்கும் காரக கிரகம் புதன் ஆகும். இந்த வருடம் கூடுதல் சிறப்பாகச் சூரியன் புதனின் ஆயில்யத்திற்கு பயணிக்கும் அதேவேளையில் சந்திரன் மற்றொரு நீர் ராசியான மீனத்தில் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் பயணிப்பது மட்டுமல்லாமல் புதனின் வீட்டில் நிற்கும் சுக்கிரனை சம சப்தமமாக பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ராவணன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, என்ன செய்வது என்று வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் கேட்டார். அதற்கு வசிஷ்டர், 'அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் தன்னிடத்தில் கொண்டுள்ள காவிரி ஆறு, தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்' என்றார். அதன்படி ராமர், காவிரி ஆற்றில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொண்டார். ராமபிரான் காவிரியில் நீராடிய தினம் ஆடிப்பெருக்கு எனப் புராண தகவல் தெரிவிக்கின்றன.

 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

 

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம்  விநச்யதி |

 

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோனே  விநச்யதி |

 

கும்பகோனே க்ருதம் பாபம் காவேரி ஸ்நானே விநச்யதி |

 

என்று காவேரி ஸ்நானத்தின் மகிமையை வேதம் போற்றுகிறது.

 

கோச்சாரத்தில் விருச்சிக ராசியில் குரு பகவான் பயணம் செய்யும் நிலையில் தாமிரவருணி புஷ்கர ஆண்டில் காவிரியில் மட்டுமல்லாது தாமிரவருணி நதியிலும் ஆடிப் பெருக்கு விழாவைக் கொண்டாடுவது மற்றும் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். பெரும்பாலும் எல்லாரும் ஆசைப்படுவது எதற்கு? வளமான வாழ்க்கை, சுகபோகங்கள், ஆரோக்கியமான நீண்ட ஆயுள். இதைப் பல கிரகங்கள் தந்தாலும் எல்லாவற்றிற்கும் சிகரமாக இருந்து வாரி வழங்கக்கூடிய தன்மை சுக்கிரனுக்கு உண்டு. சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்கியத்துக்கு அதிகாரம் வகிப்பவர்.

 

இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். இயல், இசை, நாடகம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபதி. தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.  ஒருவருக்குப் பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவற்றைச் சிறப்புடன் வாழும் யோகத்தைத் தருவது சுக்கிரன் ஆகும்.

 

ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, விநாயகர் முன்னால் வைக்கப்பட்டிருந்த பச்சரிசி, சர்க்கரை கலவையை எடுத்து வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வழங்குவார்கள். சிலர் தேங்காய் சாதம் முதலான சித்ரான்னங்களைக் கொண்டு வந்து, ஆற்றங்கரையில் அமர்ந்து உண்பார்கள்.

 

🌸🙏🌸

என்றும் அன்புடன்

அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜயம்  🛕

Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005