நாகபூஷணி_அம்மன்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:48 PM | Best Blogger Tips

 

 May be an image of temple and text

51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த இடமான, 
 
தந்திர சூடாமணியில் தேவியின் சிலம்பு விழுந்த இடமானதும்,
 
64 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகவும் உள்ள
ஈழ நாட்டில் உள்ள
 
 
 
திருக்கோயிலில் உள்ள
நாகபூஷ்கரணியில் உள்ள அழகிய சுதை சிற்பம் 🙏🙏🙇
வட இலங்கைத் தீவுகளில் ஒன்றான நயினாதீவு வரலாற்று பழமை மிக்கதொரு இடமாகும். இந்த தீவில் நாகர்களின் ஆதிக் குடியிருப்பாலும், அங்கு இடம் பெற்ற நாக வழிபாட்டாலும், நாகங்கள் அதிகமாக அங்கு வாழ்ந்ததாலும் நாகதீவு என்றும், நயினாதீவு என்றும் பெயர் வழங்கப்பட்டது. 
 
நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.நாகபூசணி அம்மன் சிலையை அகற்றமுடியாது - நீதிமன்றம் அறிவிப்பு - Jettamil
 
இலங்கை நாட்டின் பழம்பெரும் அம்மன் கோவில், 64 சக்தி பீடங்களுள் ஒன்றாகத் திகழும் ஆலயம், அம்மன் சுயம்புவாக தோன்றிய திருத்தலம், தலபுராணச் சிற்பங்கள் நிறைந்த சித்திரத் தேர் கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்குவது, நயினா தீவு நாகபூஷணி அம்மன் திருக்கோவில்.
 
முக்கியத்துவம் வாய்ந்த சக்தி வழிபாட்டுத் தலங்களில், ஈழ நாட்டில் உள்ள ‘நயினா தீவு’ம் ஒன்றாகும். 64 சக்தி பீடங்களில் இது, புவனேஸ்வரி பீடமாக திகழ்கின்றது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று.
 
நயினா தீவில் கோவில் கொண்டுள்ள நாகபூஷணி அம்மன் வரலாறு, மிகவும் தொன்மையானதாகும். கருவறையில் உள்ள மூலவர் சிலையானது, காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை, இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்தார். நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று, 
 
அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய, புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வாடிக்கை.
ஒருநாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை, கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம், கடலில் எழும்பி நின்றிருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும், நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது.யாழ்.பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்ற பொலிஸார் தீவிரம்..!  (Video) - தமிழ்வின்
 
அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்து, கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்றும் நோக்கில் கருடனிடம், ‘நாகம் அம்மனை வழிபடும் நோக்கத்தைத் தடுக்க வேண்டாம்’ என்று வேண்டினான்.
 
அதற்கு கருடன், ‘ஐயா! அம்மன் மீது உமக்கு பக்தி இருக்குமானால், கப்பலில் உள்ள உன் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர சம்மதம் சொல்வீரா?. அப்படி நீ ஒப்புக்கொண்டால், நானும் உமக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன்’ என்றது.
 
கருடனின் சவாலுக்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று, வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும், சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது.
 
நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும், கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம். இது இத்தலம் குறித்து கூறப்படும் கர்ண பரம்பரைக் கதையாகும்.
 
இவ்வாறு சிறப்புற்றிருந்த ஆலயம், ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுவது, இதனை உறுதி செய்கின்றது. போர்ச்சுக்கீசியர் போர்தொடுக்கும் முன்பாக, ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள், பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர்.
 யாழ்.நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் நுழைய தடை! - Today Jaffna News -  Jaffna Breaking News 24x7
 அம்பாளை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர் ஆட்சிக்குப் பின்பு, நயினா தீவில் நாகேஸ்வரி கோவில் சிறிய அளவில் மீண்டும் எழுப்பப்பட்டது. இதன்பிறகு அழகிய கோபுரம் அமைக்கப் பட்டது. 1935-ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலைச் சுற்றி மடங்களும் உருவாக் கினர். 1951-ல் விமானங்கள் புனரமைக் கப்பட்டு குட முழுக்கு நடைபெற்றது.
 
வரலாறு :
நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. தமிழர்களின் முன்னோர்களான நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழிபாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. 
 
ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.பிற்போடப்பட்டது நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந் திருவிழா | Virakesari.lk
 
ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, பல்லாயிரமாண்டுகள் பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. 
 
வரலாற்றுக் குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ண பரம்பரைச் கதைகள், புராண வரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறு வகையில் ஆலயத்தோடும் தொடர்பு கொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு (நயினாதீவு) வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும்  அழைப்பர். 
 
மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும்.ஆவர் எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியமுடிகிறது.
 
நாகபூஷணி அம்மன் :
 
கருவறையில் அமைந்துள்ள சுயம்பு நாகபூஷணி அம்மன், நீள்உருளை வடிவத் திருமேனியராக எழிலாக காட்சி தருகின் றாள். என்றாலும், அலங்காரத்தால் அன்னை யின் முகம் மட்டுமே காட்சியளிக்கிறது. பின்புறம் சீறும் நாகமாக ஐந்து தலை நாகம் உள்ளது. இத்திருமேனிகள் பழமையானவை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இங்கு ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. சிவன், அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், விஷ்ணு ஆகிய ஐவரின் பூஜை நாட்கள் மாதந்தோறும் நடத்தப்படுகின்றன. பகலில் சங்காபிஷேகம், இரவில் ஸ்ரீசக்கர பூஜை நடைபெறுகிறது. விஜயதசமி மற்றும் வன்னிமர பூஜையும் நடத்தப்படுகின்றன.
ஆனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற் சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் இலங்கை மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். திருவிழாவின் 14-ம் நாள் தேரோட்டம் நடைபெறும்.
இவ்வாலயம் 1986-ம் ஆண்டு முதல் பன்னிரண்டு உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபையால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலய பூஜைகள், கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. ஆலய தல மரம் வன்னி, தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும்.
 
இலக்கியங்கள் :
 
யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய ‘மனோன்மணி மாலை’, அமரசிங்கப்புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல்’, வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய ‘நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம்’, வரகவி நாகமணிப்புலவர் எழுதிய ‘நயினை மான்மியம்’, வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய ‘திருநாக தீபப் பதிகம்’, க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம், நயினைத் தீவு சுவாமிகள், கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் அன்னையைப் புகழ்கின்றன.
 
நாகபூஷணித் தேர் :
 
இலங்கை நாட்டின் தேர்களில் நாகபூஷணி ஆலயத் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வு, கிருஷ்ணர், அஷ்டலட்சுமி, நாகம் புளியந்தீவில் பூப்பறித்தல், கருடன் காத்திருப்பது, மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேரில் நாகபூஷணி பவனிவர, தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில், எட்டுத்திசைகளிலும், மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.
 
தொன்மைச் சிறப்பு :
 
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம், நயினா தீவை ‘மணிபல்லவம்’ என்று குறிப்பிடுகிறது. குலோதர, மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க, புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும், படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும், பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.
நயினா தீவு பண்டைய காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உறுதி செய்கின்றன.
நாகர்கள் வாழ்ந்த காலத்திலேயே நயினாதீவில் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். ஏறத்தாள 14000 ஆண்டுகளுக்கு முன்பே நயினாதீவில் குடியேற்றம் இருந்தது என்றும். அவர்களால் ஸ்தாபிக்கப் பட்ட நாக பூசணி அம்மன் கோவிலின் மூலஸ்தானத்தில் உள்ள நாக விக்ரகம் 14000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்றும் கட்டிட, சிற்பக்கலை பொறியியல் நிபுணரான திரு. எம். நரசிம்மன் அவர்கள் தனது நூலில் (11.03.1951) குறிப்பிட்டுள்ளார்.
ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 2 மணி, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் சுவாமி தரிசனம் செய்யலாம்.
 
அமைவிடம் :
 
இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்து மகாசமுத்திரத்தில் உள்ள நயினா தீவில் நாகபூஷணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும், யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும் நயினா தீவு அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் படகுத்துறை வரை பேருந்து செல்கிறது. அங்கிருந்து எந்திரப்படகு மூலம் நயினா தீவுக்குச் சென்று வர வேண்டும். 

 
 
ஓம் சக்தி
 
Thanks & Copy from 
சிவபித்தன் சந்தோஷ் பாஸ்கரன்

 

மூக்கை உடைத்த மோடிஜி..!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:51 AM | Best Blogger Tips


Pawar-Modi rapprochement | பவார் - மோடி நெருக்கம் | Dinamalarமோடி சர்கார்..அரசு நிறுவனங்கள் “ஜீரோ” -வேலை “நோ”! இன்னுமா இந்தியா  ஜொலிக்குது? காங். தலைவர் கார்கே | Mallikarjun Kharge on Modi government PSU  privatisation - Tamil Oneindia

100 மோடிகள் வந்தாலும் என்னை அசைக்க முடியாது: மல்லிகார்ஜுன கார்கே | can not  shake me with 100 modes Mallikarjun Kharge

ஊடகங்கள் மூடி மறைத்த ஒரு நெத்தியடி சொற்போர்...!

காங்கிரஸ் கட்சியின் தலித் M.P மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்.

மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து,

தலித் ஆன எங்களுக்கு..

ஒவ்வொரு குடும்பத்துக்கும்.., குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள். Prime Minister Narendra Modi PNG Images Free Download

நாங்களும் வாழவேண்டாமா..?" .

என கர்ஜிக்கிறார்.

லோக்சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி.

கொஞ்ச நேரம் ஆனது.

Dramatic effect க்காகவே காலம் தாழ்த்தியவர் போல....

பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக

எழுந்தார்.

கேட்டார்...,

நீங்கள் தலித் தானே...?

உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா.. ?

நான் சொல்லட்டுமா...?

பிரதமர் சொன்னார்.Prime Minister Narendra Modi PNG Images Free Download

"சரி. நானே சொல்லி விடுகிறேன்.

பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு வணிகவளாகம் இருக்கிறது.

சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.

அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களா.

கெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ்

ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.

பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களா ...

பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம்.

இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்.

பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களாக்கள்.

இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள்

பெயரில்....

மைசூர்,

குல்பர்கா,

சென்னை,

கோவா,

பூனே, நாக்பூர்,

மும்பை,

டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா....?"

திரு மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை.

"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால்.....,

இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம்தானே."

காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.

ஆளுங்கட்சி தரப்பில் பெஞ்சைத் தட்ட ஆரம்பித்தார்கள்.

அடங்க ஐந்தாறு நிமிடங்கள் ஆனது.

ஊடகங்கள் ஏன் இதை வெளியில் சொல்லவில்லை....?

ஊடகங்களின் மௌனத்தை வாங்க...,

கார்கே என்ன விலை கொடுத்தாரோ.....,?

ஆனால் நாம் தெரியப்படுத்துவோம்...!

ஜெய்ஹிந்த்..!

பகிர்வு

 


 Thanks & copy from Web