வாழை இலை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:32 PM | Best Blogger Tips
வாழை இலை க்கான பட முடிவுதொடர்புடைய படம்

*கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார்

*“
வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே .! அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”*
.
*
என்ன பதில் சொல்வது இதற்கு..?*
.
*
லாஜிக்படி பார்த்தால் , எல்லா இலைகளையும் போலத்தான் வாழை இலையும் ..!*
*
எனவே நண்பரின் கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் ,"நீங்களே சொல்லுங்க ..!"என்றேன்.*
.
*
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார்


*# "
புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் இவ்வளவு பெரிய கோடு கிடையாதாம்..!*
*
இராமாயண காலத்தில் ....*
*
ஒரு முறை ராமன் சாப்பிடும்போது அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம்*
*
இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம்*
.
*
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி*
*
வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு பெரிய கோட்டைக் கிழித்தாராம் ராமன்.*
.
*
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும்*
*
அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம்*.
*
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம்*
*# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!*
.
*நல்லது... வாழை இலை பற்றி இன்னும் சில விஷயங்கள் 


*
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,சாப்பிடும் முன் ... ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.*
.
*“
பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..?*
*
இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?*
.
*
சிம்பிள் ..!*
.
*
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.*
.
*
ஏன்..?*
.
*
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால்*
*
இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!*
.
*
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்*
*
இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?*
.
*
உப்பு, ஊறுகாய், இனிப்பு ..* *இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது*
*
கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !*
.
*
சாதம் , காய் கறிகள் ...* *இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் .*
*
அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.*
.
*
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக* *சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?*
.
*
இல்லை..!*
.
*
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது*
*
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.*
.
*#
அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...*
*
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?*
.
*
ஆனால் ....*
*
இவை எல்லாவற்றையும்*
*
ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு பலி கொடுத்து விட்டு ,*
*அந்நிய கலாச்சாரத்திற்கு மாறி , அடிமைகளாகிக் கொண்டிருக்கும் நம்மை* ,
*
இனி யார் வந்து திருத்துவது..?*




 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
🌴🍃 *வாழ்க வளமுடன்* 

நன்றி இணையம்

இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 PM | Best Blogger Tips
இடையூறுகளற்ற க்கான பட முடிவுஇடையூறுகளற்ற  க்கான பட முடிவு

மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது. 'இரவு நன்கு தூங்கினாயா?' எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, 'அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை...' என, சொன்னாள் மீனம்மா.
'அப்படியா... ஏண்டி?'
'உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை...' என்றாளாம் மீனம்மா.
*மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்*.
வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.
'என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, *பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்*... 'எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; *நான் தனியா உட்கார்ந்திருக்கணும்*. உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, 'அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...'
*
இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர,* *பதில் என்னமோ மறுப்பு தான்*; பதில் என்னவோ அலுப்பு தான்.
முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?
வங்கி, தபால் நிலையம்...
'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!' 'நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!'
*எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும்*, *ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!*
பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற *வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்*; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.
'எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.
அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
'
என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...' என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.
*'எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்*; *நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க.*..' என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?
தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.
இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.
எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. *இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல*; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!
'எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.
*'எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா*...' என வேண்டுபவனே நடைமுறையாளன்.
Most valuable lesson for parents and children

 Image may contain: 1 person, smiling, sunglasses, phone and outdoor
நன்றி இணையம்