ஆண்கள் என்பவன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 8:28 PM | Best Blogger Tips
Image result for ஆண்கள் என்பவன்Related image
ஆண்கள் என்பவன்...
கடவுளின்
உன்னதமான படைப்பு.

சகோதரிகளுக்காக,
இனிப்புகளை தியாகம்
செய்பவன்...

பெற்றோர்களின்
ஆனந்தத்திற்காக ,தான்
கனவுகளை தியாகம்
செய்பவன்.

காதலிக்கு பரிசளிக்க,
தன் பர்ஸை காலி
செய்பவன்.

மனைவி
குழந்தைகளுக்காக,
தன் இளமையை அடகு
வைத்து அலட்டிக்
கொள்ளாமல் அயராது
உழைப்பவன்.

எதிர் காலத்தை லோன்
வாங்கி
கட்டமைத்துவிட்டு,

அதனை அடைக்க
வாழ்க்கை ழுழுவதும்
லோ லோ என்று
அலைபவன்

இந்த
போராட்டங்களுக்கு
இடையில்,
மனைவி-தாய்
முதலாளிகளின்
திட்டுகளை வாங்கி
தாங்கிக்கொண்டே
ஓடுபவன் .

அடுத்தவர்களின்
ஆனந்தத்திற்காகவே
ஆயுள் ழுழுக்க
அர்ப்பனிப்பவன் .
Image may contain: 1 person, sunglasses and outdoor
அவன் வெளியில்
சுற்றினால்,
உதவாக்கரை,
என்போம் .

வீட்டிலேயே
இருந்தால்,
சோம்பேறி ,என்போம்.
குழந்தைகளை
கண்டித்தால்,
கோபக்காரன்,
என்போம்.

கண்டிக்கவில்லை
எனில்,
பொறுப்பற்றவன்
என்போம்.

மனைவியை
வேலைக்கு செல்ல,
அனுமதிக்காவிடில்
நம்பிக்கையற்றவன்'
என்போம்.

அனுமதித்தால்
'
பொண்டாட்டி
சம்பாத்தியத்தில்
பொழப்பை ஒட்டுபவன்
என்போம்.

தாய் சொல்வதை
கேட்டால்,
அம்மா பையன்
என்போம்.

மனைவி சொல்வதை
கேட்டால்,
பொண்டாட்டி தாசன்
என்போம்.

ஆக மொத்தத்தில்
ஆண்களின் உலகம்,
தியாகங்களாலும்
வியர்வையாலும்
சூழப்பட்டது.

இதனை பகிர்ந்து
ஆண்களுக்கு
புன்னகையையும்
பெண்களுக்கு
புரிதலையும்
ஏற்படுத்தலாம்....

ஆண்
அழத்தெரியாதவன்
அல்ல *

கண்ணீரை
மறைத்து வைக்கத்
தெரிந்தவன்..

அன்பில்லாதவன்
அல்ல
அன்பை மனதில்
வைத்து
சொல்லி வைக்கத்
தெரியாதவன்..

வேலை தேடுபவன்
அல்ல
தன் திறமைக்கான
அங்கீகாரத்தை
தேடுபவன்...

பணம் தேடுபவன்
அல்ல
தன் குடும்பத்தின்
தேவைக்காக
ஓடுபவன்..

சிரிக்கத் தெரியாதவன்
அல்ல
நேசிப்பவர்களின் முன்
குழந்தையாய்
மாறுபவன்..

காதலைத் தேடுபவன்
அல்ல
ஒரு பெண்ணிடம்
தன் வாழ்க்கையை
தேடுபவன்...

கரடு முரடானவன்
அல்ல..
Image may contain: 1 person, closeup
நடிக்கத் தெரியாமல்
கோபத்தை
கொட்டிவிட்டு
வருந்துபவன்...


 நன்றி இணையம்

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
Related image
Image result for வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்
1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).
2.
அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).
3.
அதிகமாக உழைத்தல் ( Extra work).
4.
தன்னம்பிக்கை ( Self confidence ).
5.
சேமிப்பு ( Saving ).
6.
முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).
7.
தலைமைப் பண்புகள் ( Leadership ).
8.
தணியாத ஆர்வம் ( Enthusiasm).
9.
கற்பனைத் திறன் ( Imagination )
10.
சுயக் கட்டுப்பாடு ( Self control).
11.
நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).
12.
தெளிவான சிந்தனை ( Accurate thinking ).
13.
கவனமாக செயல்படுதல் ( Concentration).
14.
ஒத்துழைப்பு ( Co-operation)
15.
தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).
16.
சகிப்புத்தன்மை ( Tolerance ).
17.
தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).
18.
திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).
19.
சரியான நேர நிர்வாகம் ( Time management ).
20.
இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).
Image result for வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்
நன்றி இணையம்


ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips
Image result for ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம்
அமைதியான கடல் ஒருபோதும் சிறந்த மாலுமியை உண்டாக்காதுஎன ஆங்கிலப்பழமொழி ஒன்று உண்டு. மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றிக்கும் முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கின்றன. ஆற்றின் ஓட்டத்தில் இறந்த மீன்கள் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் உயிருள்ள மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்துப் போராடும். உண்மையான வாழ்க்கை போராட்டம் நிறைந்ததே.
ஆனால் இன்றைய நவீன கால மனிதன் மறைந்த வாழ்வே வாழ துடிக்கிறான்.
தனிக் குடும்பம்
தனித் தொழில்
தனிப்பட்ட பிரச்சினைகள்
தனிமையான வாழ்வு என்று
தன்னையே தனிமைப்படுத்தி கொள்ள ஆசைப்படுகின்றான். ஏதோ ஒரு இருளின் நிழலில் தான் வாழ முயற்சி செய்கின்றான் .
இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை விட சோம்பல் மற்றும் சுயநலமுமே உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது.
Image result for நட்புImage result for  நட்பு
பெரும்பாலும் யாரும் உறவுகளை பெரிதாக நினைப்பதில்லை, மதிப்பதில்லை. உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி வரும் சூழ்நிலை. இதை ரொம்ப பெருமையாகமாடர்ன் லைப் ஸ்டைல்னு சொல்லிக்கொள்கின்றோம். இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும், படிப்பு, பணம் சம்பாதித்தல் ஆகியவைகளே குறிக்கோள் என நினைத்து அவைகளிலே பெரும்பொழுது கழிந்துவிடுகிறது.
பொய்மையானது உண்மை எனும் முகமூடியை அணிந்து உலா வந்து கொண்டிருக்கிறது. பணமும், பதவியும்தான் உலகம், வேறெதுவும் தேவையில்லை என்று அநேக மக்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் இதய உறவுகளை தொலைத்துவிட்டு, இணைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
Image result for ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம்
வேண்டாம் ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம். அதில் இருந்து வெளியேறி, ‘உறவுகள் வேண்டும்என்ற உணர்வோடு இதயவழி நட்புக்கு மாறுவோம்!

 *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*