பெண்களை மதிக்கும் பல ஆண்களுக்கும் சமர்பணம்.......!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:40 AM | Best Blogger Tips
Image result for பெண் ஆண்
நான் ரசித்த ஓன்று.....
Girl::! உன்கிட்டமுக்கியமான ஒரு விஷயம் பேசனும்
நீ என் பிரண்டுதான்
இருந்தாலும் நான் இப்படி கேட்கிறத 
தப்பா எடுத்துக்காத.. .!
இது என் மனசுல இருக்குற ரொம்பநாள்
கேள்வி.....?
boy::! சொல்லுப்பா என்ன விஷயம்
Girl:::! நானும்உன்கிட்ட பிரண்டா பழகி இத்தனை மாதம் ஆச்சு உன்கிட்ட இருந்து ஒரு தப்பான வார்த்தை தப்பான எண்ணம் எதுவுமே இல்லாம இருக்க
Image result for பெண் ஆண்
உனக்கு என்னை மாதிரி நிறையா
சினேகிதிகள் இருக்காங்க
எல்லாருக்கும்உன்னை பிடிக்கும்
ஆனாலும் நீ இன்னும் யாரையும் லவ் பண்ணல
நீ உண்மையிலயே யாரு
பெண்களுக்கும் உன்னை பிடிக்க என்ன காரணம்
உன்கிட்ட பேசுனாலே எங்களை பத்தி
எல்லாம் சொல்ல தோணுது
உன்னை தப்பா நினைக்க ஒருநிமிடம்கூட
மனசுல தோணல
இது நீ தெரிஞ்சே பண்றீயா
இல்ல தெரியாம எதார்த்தமா பண்ற விஷயமா..!...!
boy::! புரியுது.....வெயிட் சொல்றேன்
கவனமா கேளு.... !
ஒரு பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி நடக்கனும்னு எதுவுமே பண்ண வேண்டியது இல்ல.....?
பிடிச்ச மாதிரி நடக்க நா யாரையும் லவ் பண்ணல
யார்கிட்டயும் தவறா நடக்குற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து பழகல.....'
ஒரு ஆண் பெண்கள்கிட்ட 
ஒழுக்கமா இருக்கறத முதல்லபாராட்றதே தப்புதான்....?
இது ஒரு ஆண் தனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்குதர்ற மரியாதையான
கடமை..... ...!
ஒரு பெண் செய்ற தியாகத்துக்கு முன்னாடி ஒரு ஆண் தர்ற மரியாதை
ரொம்ப சாதாரணம்
இதுக்கு எதுக்கு பாராட்டனும்....?
ஒரு ஆண் பெண்ணை மதிக்க முதல் காரணம் 
அவன் அம்மா
ரெண்டாவது சகோதரி
மூணாவது சினேகிதி....!
இதைகடந்து வந்தாதான்.
லவ்வர்
மனைவி....!
எனக்கு உடன் பிறந்தசகோதரிகள் இல்ல
சினேகிதிகள் அப்படிங்குறது
ஒரு வயசுக்குமேல வந்த உறவு
லவ்வர் இப்ப இல்ல
லவ் பண்ணாதான் மனைவி
இப்ப இருக்கறது அம்மா மட்டும்
இப்படிநான் இருக்க அம்மாதான் காரணம்....!
என் சின்னவயசுல இருந்து இப்பவரைக்கும் என் அம்மாசொல்ற 
விஷயம்......!
Image result for பெண்களை மதிக்கும்
ஒரு பொண்ணு விடுற கண்ணீருக்கு
நீ எப்பவுமே காரணமாஇருக்ககூடாது..!
அதுயாரா இருந்தாலும்
அப்படி கண்ணீர் நீ விட வச்சா
அது நான்தான் உன் அம்மாவே நீ அழவச்சதா நினைச்சுக்க ....
.அப்படினுசொல்வாங்க.....!
அதனால நா இப்படி இருக்கறதும்
என் சுயநலம்தான்
உங்களுக்காக மட்டும் இல்ல
என் அம்மாவுக்காக.........!
Girl::! டேய் சூப்பர்டா உனக்கு வரபோற வொய்ப் ரொம்ப லக்கிடா....
ரொம்ப குடுத்துவச்சவ.....
boy:::! இதுதான் மறுபடியும் தப்பு.......!
என்னை பாத்துக்க வரபோற அவங்களுக்கு நான்தான்
சொல்லனும் நான் லக்கினு.......?
என்னை காலம் எல்லாம் பாத்துக்க என்னை உயிரா நினைச்சு வாழ வர்றாங்க
என்னையும் பாத்துக்கிட்டு
என்குழந்தைகளையும் சுமந்து பெற்றுஎடுத்து காலம் எல்லாம்பாக்கபோற அவங்களுக்கு
நான்தான் நன்றி சொல்லனும்.......!
நன்றி வெறும் வார்த்தையில இல்ல
அவங்க கண்ணீர் சிந்த காலம்எல்லாம்
நான் காரணம் இல்லாம..வாழவைக்கிறதுல.......!.
இப்பவும் சொல்றேன்
இது எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு நான் தரும் மரியாதை.....!
ஒவ்வொரு ஆணும் பெண்ணை மதிச்சு புரிஞ்சுக்கிட்டாலே போதும்
இங்க காதல் தோல்வி
நட்பு பிரிவு
மனைவிகூட பிரச்சனை அப்படினு இல்லாம வாழ முடியும்...........!
ஒரு பொண்ண மதிச்சு அவள் உணர்வுகளே புரிஞ்சுகிட்டாலே
எல்லா பெண்களயும்புரிஞ்சுக்கமுடியும்........
இதுதான் நான்........!?
இந்த பதிவு..... .!
அனைத்து பெண்சகோதரிகளுக்கும்
தாயாக இருக்கும் பெண்களுக்கும்
எனது சினேகிதிகளுக்கும்
பெண்களை மதிக்கும்
பல ஆண்களுக்கும் சமர்பணம்.......!

 நன்றி இணையம்

#என்னால் முடியும்#

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips
Image result for யானை பாகன்
யானைப்பாகனிடம் ஒரு கேள்வி ஒன்று கேட்கபட்டது.
இந்த யானையை அதன் காலில் சங்கிலியில் கட்டியிருக்கிறீர்களே அதை அது அறுத்துகொண்டு போகமுடியாதா என்று.
அதற்கு யானைப்பாகன் கூறினார்.அதனால் அறுத்துகொண்டு போகமுடியும் ஆனால் அப்படி போகாது என்றார்.
ஏன் என்று கேட்டபோது,அந்தயானை குட்டியாக இருந்தபோதும் இதேப்போலொரு சங்கிலியால் அதனை காலில் கட்டி போடுவார்களாம்.
அந்த குட்டியும் அதை அறுத்துகொண்டு ஓட எத்தனிக்குமாம்.ஆனால் முயன்று முயன்று போதிய வலு இல்லாத காரணத்தினால் நாளடைவில் அதன் முயற்சியை கைவிட்டு விடுமாம்.நம்மலால் முடியாது என்றொரு மைண்ட்செட்டுக்கு வந்துவிடுமாம்.அதே குட்டி வளர்ந்து பெரிய யானையாக ஆனப்பிறகு அதனுடைய இப்போதைய வலிமையை உணராமல் தன்னால் முடியாது என்ற பழைய மனநிலையிலேயே இப்ப உள்ள சங்கிலியை அறுக்க முயலாதாம்.சங்கிலிக்கு பதிலாக ஒரு கயிறு காலில் கட்டபட்டிருந்தாலும் அதனை அறுக்க முயலாதாம்.
காலில் கட்டபட்டிருந்தால் அங்கேயே நின்னுகொள்ளவேண்டும் என்ற மனநிலைக்கு அது பழகிவிட்டது.
இந்த உதாரணம் யானைக்கு மட்டுமல்ல.நமக்கும் பொருந்தகூடியதே.
எத்தனையோ முயற்சிகளை நாம் நம்முடைய வாழ்நாளில் எடுத்திருப்போம்.அதில் ஒரு சிறு தோல்வி கிடைத்திருந்தாலும்,போச்சி,இனி அவ்ளோதான் என்ற நம்பிக்கை இழப்பு தான் நாம் அதில் வெற்றியை அடையமுடியாமல் விட்டுவிடுகிறோம்.ஒருவகையில் நாமும் அந்த யானையை போலத்தான்.
எளிதாக அறுத்துவிடக்கூடிய கயிற்றை எப்படி தன்னால் அறுக்கமுடியாது என்ற தன்னுடைய பழைய நம்பிக்கைகுறைவிலேயே இருந்துவிடுகிறதோ அதேப்போல நாமும் பல சந்தர்பங்களில் நம்மலால் முடியாது,நமக்கு சரிபட்டு வராது,நமக்கெல்லாம் அது ரொம்ப பெரிய விஷயம் என்ற அவநம்பிக்கையே நம்மை மேலே வர பெருந்தடையாக அமைந்துவிடுகின்றன.
Image result for யானை பாகன்
என்னால் முடியும்,

இதை மீண்டுமொருமுறை முயற்சிப்பேன்,
இதில் வெற்றிபெறக்கூடிய தகுதி எனக்கு இருக்கிறது,இதை அடையாமல் நான் ஓயமாட்டேன் என்ற இடைவிடாத முயற்சி, நாம் அடையவேண்டிய இலக்கை நோக்கி வெற்றிகளோடு பயணிக்க வைக்கு"ம்.
மொத்தத்தில் தற்போது நமக்கு தேவை ஒரு ஆழமான,அழுத்தமான நம்பிக்கை.
#என்னால் 
முடியும்#