எண் ஏழின் சிறப்புக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:39 PM | Best Blogger Tips
 
எண் ஏழு (Number 7) பெருமை
ஏழு என்பது, வேத மரபில் ஒரு முக்கிய எண்.
ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.
ஏழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண் ஆகும்.
காலத்தைக் கணிக்கும் முறையில் எண் ஏழு பழங்காலமக்களிடையே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.
ஏழு என்பது தமிழ் எண்களில் '௭' என்று குறிக்கபடுகிறது.
எண் ஏழின் சிறப்புக்கள்:
1. புதிய உலக அதிசயங்கள் மொத்தம் ஏழு, இது அறிவிக்கப்பட்ட தேதி 07/07/2007
2. எழு குன்றுகளின் நகரம் ரோம்
3. வாரத்திற்குமொத்தம் ஏழு நாட்கள்
4. மொத்தம் ஏழு பிறவி
5. ஏழு சொர்க்கம்(குரான்)
6. ஏழு கடல்கள்
'
கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்தி குறுகத் தெரித்த குறள்' - ஒளவையார்.
7. வானவில்லின் நிறங்கள் (VIBGYOR)
8. ஏழு வானங்கள். (Qur'an)
9. ஏழு முனிவர்கள் (Rishi)
10. ஏழு ஸ்வரங்கள் (ச,ரி,க,ம,ப,த,நி)
11. ஏழு கண்டங்கள் (Europe, Asia, Africa, North America, South America, Australia, and Antarctica)
12. ஆதி மனிதன் Adam மற்றும் Eve ஆகியோரின் பெயர்களில் உள்ள மொத்த எழுத்துக்களின் கூட்டுத்தொகையின்
எண்ணிக்கை ஏழு
13. ஒவ்வொரு திருகுறளிலும் உள்ள சீர்கள் ஏழு. அதுமட்டுமா, ஒன்றே முக்கால் அடிக் குறளைக் காற் காற் பகுதியாக வெட்டிப் பாருங்கள் அதுவும் ஏழுபகுதிகளாக வரும்.
14. கண்ணுக்கு புலப்படக் கூடிய கோள்களின் எண்ணிக்கை ஏழு (Sun, Moon, Mercury, Mars, Jupiter, Venus and Saturn)
15. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்கள், 133 அதிகாரங்கள் உள்ளன. அதனுடைய கூட்டுத்தொகையும் ஏழு.
16. மேலுலகம் ஏழு
17. கீழுலகம் ஏழு
நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும்
எண்ணறிவாய் நின்ற எந்தை பிரான் தன்னைப்
பண் அறிவாளனைப் பாவித்த மாந்தரை
விண் அறிவாளர் விரும்புகின்றாரே - திருமூலர் பாடல்
18. திருக்குறளில் "கோடி' என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது
19. மொத்தம் ஏழு தாதுக்கள்
20. ஏழு செவ்விய போரியல் நூல்கள் - சீனா
21. ஏழானது மிகப்பெரிய ஓரிலக்கா பகா எண் (Prime Number) ஆகும்.
22. ஏழு புண்ணிய நதிகள்
23. இராமாயணத்திலுள்ள மொத்த காண்டங்களின் எண்ணிக்கை ஏழு
24. அகப்பொருள் திணைகள் ஏழு
25. புறப்பொருள் திணைகள் ஏழு
26. சூரிய பகவானின் ரதத்திலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை ஏழு
27. கடை ஏழு வள்ளல்கள்
28. சப்த நாடி (சமஸ்கிருதத்தில் சப்த என்றால் ஏழு)
29. "திருவள்ளுவர்" - எழுத்துக்களின் கூட்டுத்தொகையும் ஏழுதான்
30. ஏழு அதிர்ஷ்ட தெய்வங்கள் - ஜப்பான்
31. ஏழு மலையான் - திருப்பதி, ஆந்திரா
32. மனிதனுடைய தலையிலுள்ள ஓட்டைகளின் எண்ணிக்கை ஏழு
33. உடலை கட்டுப்படுதும் சக்கரங்கள் ஏழு.
34. பெண்களின் பல்வேறு பருவங்கள் ஏழு (பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,
பேரிளம் பெண்)

 நன்றி இணையம்

வெற்றிப்பாதை!!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 PM | Best Blogger Tips


🌺
🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்!
🌺🌺💐💐💐🌺🌺
👍கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்..
🌺🌺💐💐💐🌺🌺
👉முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்!
🌺🌺💐💐💐🌺🌺
🌹வெற்றிப்பாதை!!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது!
🌺🌺💐💐💐🌺🌺
🐝தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
🐝 தொடர்ந்து முயலும் வீரன் தான் சரித்திரம் படைத்தது வாழ்கிறான்!
🌺🌺💐💐💐🌺🌺
👉முயல்வோம்..
வெற்றி பெறுவோம். 🌺🌺💐💐💐🌺🌺

*பைரவரை வணங்கினால்* *எதிர்ப்பு தவிடுபொடியாகும்!*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 PM | Best Blogger Tips

*பைரவரை வணங்கினால்*
*எதிர்ப்பு தவிடுபொடியாகும்!*
சுத்தம் செய்யச் செய்ய அசுத்தமும் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் ஒட்டடை இருக்கிறதே என்று ஒட்டடைக்குச்சி எடுத்து, ஒட்டடைகளைச் சுத்தம் செய்வோம். ஆனால் பதினைந்து நாள் கழித்து மீண்டும் ஒட்டடை பல்லிளிக்கும். திரும்ப வருகிறதே என்கிற காரணத்தால், ஒட்டடையை அப்படியே விட்டுவிடுகிறோமா என்ன?
துவைத்து, அயர்ன் செய்து போட்டுக் கொள்கிற சட்டை மாலையிலேயே அழுக்காகிவிடும். மீண்டும் துவைக்கிறோம். அயர்ன் செய்கிறோம். உடுத்தி அழகு பார்க்கிறோம். மீண்டும் அழுக்காகிறது. இதுதான் வாழ்க்கையின் கணக்கு.
கடவுளை வணங்குவதன் தாத்பர்யமும் பலமும் பலனும் கூட இப்படித்தான். கடவுளை வணங்குகிறோம். இருக்கிற கஷ்டங்களெல்லாம் எங்கோ பறக்கிறது. பதவி, உத்தியோகம், வருமானம் என வாழ்க்கைத் தரம் உயர, அங்கே எதிர்ப்பு, எதிரி என உருவாக, மீண்டும் ஏதோவொரு சிக்கல், ஏதோவொரு பிரச்னை. எப்படியோ வருகிறது துக்கம்.
இந்த எதிர்ப்பில் இருந்து மீண்டும் வருவதற்குத்தான் காலபைரவ வழிபாடு கைகொடுக்கிறது. எதிரியை துவம்சம் செய்வதற்காகத்தான் காலபைரவர், தன் சந்நிதிக்கு வருபவர்கள் யார் என்று காத்திருக்கிறார்.
இன்று அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. காலபைரவருக்கு உரிய அருமையான நாள். சிவாலயத்துக்குச் செல்லுங்கள். ஞாயிற்றுக்கிழமைதான். விடுமுறை நாள்தான். குறிப்பாக, மாலையில் செல்லுங்கள். இன்று மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகால வேளை. பல சிவாலயங்களில், காலபைரவருக்கு ராகுகாலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொள்ளுங்கள். பைரவர் முன்னே ஒருமித்த மனத்துடன் நில்லுங்கள்.
உங்களால் முடிந்த அளவுக்கு அரளிப்பூச்சரங்களை வழங்குங்கள். இன்னும் முடியும் என்றால், தயிர்சாதம் நைவேத்தியம் வழங்குங்கள். குடும்பத்துடன் சென்று, குடும்பம் நன்றாக சீரும் சிறப்புமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். 
எதிர்ப்புகள் அகலும். தடைகள் விலகும். எதிரிகள் தவிடுபொடியாவார்கள். உங்கள் வீட்டில் தடைப்பட்ட காரியங்கள் யாவும் இனிதே நடைபெறும். உத்தியோகம் சிறக்கும். தொழில் விருத்தியாகும். லாபம் பெருகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகம் கரைபுரண்டோடும்.
ஒற்றுமை மேலோங்கும். இவையெல்லாம் இன்னும் இன்னும் வளரச் செய்யும். வாழையடிவாழையென தழைக்க வைக்கும். பைரவ வழிபாடு, மகத்துவமானது. மறந்துவிடாதீர்கள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு, உங்களை வளர்ச்சிப்படுத்தும். வளமாக்கும் என்பது உறுதி!
நன்றி 
*_- வி.ராம்ஜி(MyTemple team)_*


பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:45 PM | Best Blogger Tips



“
முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது மகள்களை பெற்றெடுத்த அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்…” இயக்குனர் ராமின் குரலில் உலகமெங்கும் அப்பா – மகள் பாசத்தை பறைசாற்றிய “தங்க மீன்கள்” திரைபடத்தில் இடம்பெற்ற வசனம். ஆம், அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.




ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்தா சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும்.

ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது…. நிறையவே இருக்கிறது தொடர்ந்துப் படியுங்கள்….

நேர்மையான நண்பன்


தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.


உலகை அறிமுகம் செய்தவர்

பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.


கோபத்தை காட்டியது இல்லை

மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.
முடியாது என்ற வார்த்தையே இல்லை
மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.
காவலன்
வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.
காதலை புரிய வைத்தவர்
காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.
சூப்பர் ஹீரோ
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.
தைரியம் ஊட்டும் அம்மா
என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.
மாற்றம் இல்லாதவர்
ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
பெண்களின் கண்ணீருக்கு உரியவர்
கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.






















 நன்றி 
இணையம்