ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips
ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

[DSCF0083.JPG]
108 முறைக்குக்குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்துவரவேண்டும்.வாயாலும் சொல்லலாம்.


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி
ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும் , நீங்கள் கண்கூடாக உணர முடியும். உங்களுக்கு வழிகாட்டுவது அந்த தீபமா அல்லது உங்கள் ஆழ்மனமா ? நீங்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்து பாருங்கள்...

இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும் .
 

வாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hints )

மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips

நாம் வாழும் வீடு , வாஸ்து முறைப்படி சரியாக அமைந்துவிட்டால் உங்கள் வாழ்வில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றி பெறும்.
 

வாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hints )
கிழக்கு - குடிநீர் ஆதாரம்
தென் கிழக்கு .. சமையலறை
தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்துக் கொள்ளும் படியாக அமைக்கவும்.
வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

மேற்குறிப்பிட்ட விளக்கங்களுடன், மனையில் உள்ள அறைகள் கீழ்க்கண்டவாறு உள்கூடு அளவுகள் அமைத்து (நீள அகலங்கள்) சிறப்பாக செயல்பட வேண்யுள்ளது. கடவுள் அருள் கிடைக்கும் வீட்டில் சுபிட்சம் பொங்கும். செல்வமும், போகமும் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும், நிறைந்திருக்கும்
 
8 அடி பலன்
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். உயர்ந்த பதவிகள் கிட்டும். பொருளாதார நிலை மிக வேகமாக உயர்ந்துவிடும். தெய்வ அருள் உண்டு.
 
10 அடி. பலன் பொருளாதார நிலையில் சரிவு என்பதே ஏற்படாது. செல்வநிலை மேலும், மேலும் உயர்ந்து கொண்டே போகும். எதிர்பாராத வகையில் பொருள் வரவு ஏற்படும். திடீர் யோகம் உண்டு.
 
11 அடி பலன்எந்த காரியத்திலும் தோல்வி என்பதே ஏற்படாது. வெற்றிக்கு மேல் வெற்றியாகக் குவியும். குடம்பத்தில் குதூகலம் நிலவும் செல்வ நிலை உயரும்.
 
16 அடி பலன்
சமுதாயத்தில் தனிப்பட்ட செல்வாக்கு உண்டாகும். பொருளாதார நிலை மிக வேகமாக உயரும் பலவகையான பொருள்கள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
 
17 அடி பலன்
தொழில் அல்லது வியாபாரத்தில் நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிரிகளை எளிதாக வீழ்த்த முடியும். எந்த காரியத்திலும் வெற்றி காணலாம்.
 
20 அடி பலன்
பண்ணைத் தொழிலில் சிறப்பான லாபம் ிகடைக்கும். பல கைகளிலும் வருமானம் பெருகும். உ்லாசமான வாழ்க்கை அமையும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
 
21 அடி பலன்
வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. எல்லா முயற்சிகளிலும் வெற்றியே கிடைக்கும். பொரளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். பொன்னும பொருளும் சேரும்.
 
22 அடி பலன்
மனதில் தைரிய உணர்வு மேலோங்கி யிருக்கும். எதிரிகளின் சதித் திட்டங்களை எளிதாக முறியடிக்க முடியும், வீண் பழிகள் வேகமாக அகலும்.
 
26 அடி பலன்
உற்சாகமும், உல்லாசமும் நிறைந்த வாழ்க்கை அமையும். போகமும் யோகமும் தேடிவரும். பொருளாதர நிலை செழித்தோங்க, பொன்னும் பொருளும் சேரும்.
 
27 அடி பலன்
பொது வாழ்க்கையில் புகழும் செல்வாக்கும கிட்டும். பலரும் வலிய வந்து, உதவி செய்வார்கள். அதிகாரம் செய்யக் கூடிய பதவிகள் தேடிவரும்.
 
28 அடி பலன்
கடவுள் அருள் உண்டு. வேதனைகளும், துன்பங்களும். விலகி ஓடும். இன்பமாக வாழக்கை அமைக்க எல்லா முயற்சிகளிலும எளிதாக வெற்றி கிட்டும்.
 
29 அடி பலன்
பண்ணைத் தொழிலில் பால் வியாபாரம் ஆகியவற்றில் நிறைந்த லாபம் கிட்டும். வாழ்க்கயைில் சிறந்த முன்னேற்றங்களைக் காணலாம். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
 
30 அடி பலன்
புத்திர பாக்கியம் தாராளமாக இரக்கும். எதிர்பாராத சொத்துக்கள் கிட்டும். திடீர் யோகம் உண்டு. பொருளாதார நிலை மகவும சிறப்பாக இருக்கும்.
 
31 அடி பலன்
நல்லவர்கள் நாடிவந்து உதவி செய்வார்கள். தீயவர்கள் விலகியோடுவார்கள். பொன்னும் புகழும் கிட்டும். வாழ்க்கையில் உயர்வான நிலை உண்டாகும் காரியசித்தி உண்டு.

பொதுவாக வீடு கட்டும் தாய், தந்தை மூத்த சகோதரர், ஆசிரியர், மூத்த உறவினர்கள் வாழும் பகுதிக்கு வடக்கு திசையிலும், கிழக்குத் திசையிலும், தான் மனை வாங்க வேண்டும்.. என்பது சாஸ்திரங்கள் கூறும் கருத்தாகும்.

வீட்டின் பகுதிகள்
அலுவலக அறை வடமேற்கு திசை
புத்தக அறை தென்மேற்குத் திசை
சமையல் அறை தென் கிழக்குத் திசை
உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
குளியல் அறை கிழக்கு திசை
சேமிப்பு அறை வடக்கு திசை.
கழிவறை வட மேற்கு திசை.

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:34 PM | Best Blogger Tips
 
வாசக அன்பர்களுக்கு வணக்கம். கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரை தினமலர் ஆன்மிகம் பகுதியில் வெளிவந்துள்ளது. நம் வாசகர்களின் நலம் கருதி இங்கே பகிரப்படுகிறது.

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும்.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.
 
 

ஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒரு குட்டி யோசனை...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:33 PM | Best Blogger Tips

வாசக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ஒரு ஜோதிடராக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் " ஹோரையும் " ஒன்று.

ஜோதிடராக இருப்பதை விட்டுத் தள்ளுங்கள். அன்றாட நடைமுறையில் , இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.


ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.


6 - 1- 8 - 3
இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.



===================================================

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
ஏன்..? அதுதான் உங்களுக்கு தெரியுமே..?

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 
என்னையா... அவசரமா பஞ்சாயத்து கூட்டி இருக்கீங்க.. என்ன சமாச்சாரம்... ?
ஐயா... இந்த ஹோரை சம்பந்தமா.... கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா...
ஏற்கனவே சொல்லி இருக்கிறோமேயா .... திரும்ப திரும்ப கேட்குறே.. நீ.. திரும்ப திரும்ப கேட்குறே நீ ......

"ஏ... ராசு...இன்னுமா தூங்குறே.... வேலைக்கு இன்னைக்கு போகலையா?"
"அய்யய்யே... எல்லாம் கனவா!"
"யம்மா... இந்தா ரெடி ஆகணும்மா"... கண்ணைக் கசக்கிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்... ஆமா... ஹோரைனா என்ன? நாம ஏற்கனவே எழுதி இருக்கிறோம்ல.... அப்புறம் என்ன? சரி, திரும்ப படிச்சுப் பார்ப்போம்ன்னு உட்கார்ந்தேன்யா... ஒரு விஷயம் சொன்னா , நல்ல இருக்கும்னு தோணுச்சு... அதுக்குத் தான் இந்த பதிவு..... வாங்க பார்ப்போம்...!
====================================================

ஹோரை : நமது ஜோதிட பாடங்கள் படித்தவர்கள் - இதை நன்றாக அறிவீர்கள்... ஹோரை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்று..!
படிக்காதவன் படத்தில - மலேசியா வாசுதேவன் சார் குரல்ல - ரஜினி பாடுவாரே.. "சொல்லி அடிப்பேனடி ... அடிச்சேனுன்னா நெத்தி அடிதானடி"ன்னு ... அந்த பாட்டு மாதிரி....

ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :


மணி-முதல்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
6.00 - 7.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
7.00 - 8.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
8.00 - 9.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
9.00 -10.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
10.00 -11.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
11.00 -12.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
12.00 -01.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
01.00 -02.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
02.00- 03.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
03.00-04.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
04.00-05.00௦
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
05.00-06.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
06.00 -07.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
07.00 -08.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
08.00 -09.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
09.00 -10.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
10.00 -11.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
11.00 -12.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
12.00 -01.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
01.00 -02.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
02.00- 03.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
03.00-04.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
04.00-05.00௦
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
05.00-06.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்


சரி, அட்டவணையை கையில வைச்சுக்கிட்டே இருக்கவும் முடியாது... சுலபமா ஞாபகம் வைச்சுக்க என்ன வழி ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டு இருந்தார்...

அந்த நாளைக்கு உரிய ஹோரை முதல்ல வரும், காலை 6 மணிக்கு. ஒரு மணி நேரத்துக்கு பிறகு அடுத்த ஹோரை ஆரம்பிக்கும். செவ்வாய் கிழமைன்னு வைச்சுக்கோங்க... முதல் ஹோரை செவ்வாய் ஹோரை - காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரைக்கும் வரும்..

மதியம் ஒரு மணிக்கு திரும்ப செவ்வாய் ஹோரை வரும். அதே மாதிரி இரவு எட்டு மணிக்கு வரும்.

Cycle time : 6 - 1 - 8 - 3

சரி, முதல் ஹோரை தெரிய வந்திடுச்சு , இரண்டாவது எப்படி கண்டு பிடிக்க?

நிஜமா, நாம் இப்போ சொல்லப் போறது, எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலை.. நானா கண்டு பிடிச்சது , சுலபமா எப்படி ஞாபகம் வைச்சுக்கிடாம்னு ... எப்படின்னு பாருங்க..... ( உனக்கு வேற வேலையே இல்லையா... இப்படியா லூசு மாதிரி இருப்பேன்னு , நீங்க அக்கறையோட கேட்குறது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாஸூ...)

ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
சனி

வரிசைப்படுத்திக்கிட்டோமா ?

இப்போ , reverse ல - ஒன்னு விட்டு ஒன்னு போகணும்....

செவ்வாய் ஹோரைக்கு அடுத்து , சூரியன், அடுத்து சுக்கிரன், அடுத்து புதன், அடுத்து சந்திரன் , அடுத்து சனி , அடுத்து குரு , அடுத்து திரும்ப செவ்வாய்....

சொல்ல வந்த விஷயம் தெளிவா புரியுதா?
ஏன்யா .. நான் கரெக்டா பேசுறனா.. ன்னு சங்கிலி முருகன் மாதிரி புலம்ப வைச்சுடாதீங்க.... (கையைப் பிடிச்சு இழுத்தியா... கையைப் பிடிச்சு இழுத்தியாடா......)

எனக்கு ஜோதிடம் சொல்லிக் கொடுத்த என்னோட குருநாதர் - குரு ஹோரை வர்றப்போ.. கரெக்டா ஆரம்பிப்பார்.... செவ்வாய் ஹோரை வரும்போது படக்குன்னு நிறுத்திடுவார் ... செவ்வாய் ஹோரை தேவையில்லாத வாக்கு வாதம், சண்டைன்னு கொண்டு போகும்....
திரும்ப திரும்ப பேசுற நீ...
ஒரு பெரிய பிரச்னை வர்ற மாதிரி இருக்கும்னா, செவ்வாய் ஹோரை அந்த நேரத்துல வந்தா... தயவு செஞ்சு வாயை மூடிக்கிட்டு , கம்முன்னு இருங்க...

வீட்டுக்கார அம்மணி கூட, ஏதாவது சண்டை வந்து , கொஞ்சம் நேரம் கழிச்சு சமாதானம் ஆகும் பாருங்க.. அதுல கூட ஹோரை யோட கைங்கர்யம் இருக்கலாம்...

காலம் அறிந்து நடவாதவன் , கோலம் அழிந்து குரங்காவான் னு பழமொழி இருக்கு தெரியும் இல்லை...

ரொம்ப பெரிய காரியம் ஒன்னு தொடங்கணுமா, நல்ல சுப ஹோரைகள் ல தொடங்குங்க.... சூப்பரா வரும்...

கோவில்ல சாமி கும்பிடனுமா... குரு ஹோரைல செய்யுங்க... நல்ல பலன் கிடைக்கும்....