உடம்புல ஸ்ட்ரெட்ச் மார்க் அதிகமா இருக்கா? அதை போக்க சில டிப்ஸ்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:21 PM | Best Blogger Tips

உடலின் வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்ற கோடுகள் காணப்படும். அது தான் ஸ்ட்ரெட்ச் மார்க். இந்த தழும்புகள் பொதுவாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னும், சிலருக்கு உடல் குண்டாக இருந்து, பின் ஒல்லியானாலும் வரும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது, குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து விரிவடைந்து, பின் குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும் போது, நமது சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு தழும்புகள் போன்று கோடுகள் இருக்கும். அதே நிலை தான் குண்டாகி, ஒல்லியானவர்களுக்கும்.
இந்த மாதிரியான தழும்புகள் நமது உடலின் அழகை கெடுக்கும் வகையில் இருப்பதால், அதனை போக்குவதற்கு கடைகளில் பல க்ரீம்கள், ஆயின்மெண்ட்கள் போன்றவை விற்கப்படுகின்றன. என்ன தான் விலை உயர்வான அந்த க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினாலும், அது முற்றிலும் அந்த தழும்புகளை போக்காமல், சில சமயங்களில் அவை சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, வேறு வித சரும பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
ஏனெனில் அனைவருக்குமே அந்த வகையான கெமிக்கல் கலந்த செயற்கைப் பொருட்கள் சரியான பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. எனவே அத்தகைய பிரச்சனைகள் எதுவும் வராமல் எளிதில் அந்த மாதிரியான தழும்புகளைப் போக்க, ஒரு சில இயற்கை பொருட்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல், தழும்புகளை போக்கலாம். அது என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, செய்து பாருங்களேன்...

உடற்பயிற்சி

உடற்பயிற்சியை வைத்தே ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும் போது தசைகள் சருமத்திற்கு சரியான ஒருவித பயிற்சியை கொடுப்பதால், அந்த பயிற்சியால், சருமத்தில் இருக்கும் அந்த ஸ்ட்ரெட்ச் மார்க் மறைய ஆரம்பிக்கும்.

ஆரோக்கிய உணவுகள்

உணவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, ஈ சத்துக்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் புதிய திசுக்கள் வளர்ச்சியடைவதோடு, பாதிக்கப்பட்ட திசுக்களும் சரியாகும். அதுமட்டுமின்றி ஜிங்க் சத்துள்ள உணவுகளான நட்ஸ் மற்றும் விதைகளையும் சேர்க்க வேண்டும். மேலும் வைட்டமின் கே உள்ள உணவுகளான பால் பொருட்கள், பச்சை இலைக் காய்கறிகள்

போன்றவற்றை சாப்பிட்டால், பழுதடைந்த திசுக்கள் குணமடைந்து, தழும்புகள் மறைந்துவிடும்.

கற்றாழை

கற்றாழையின் ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால், ஸ்ட்ரெட்ச் மார்க்கின் நிறம் மங்கி, சருமம் அழகாகும். ஏனெனில் அதில் உள்ள நொதிப் பொருட்கள், பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்கி, சருமத்தை ஈரப்பசையுடன் ஆரோக்கியமாக வைக்கிறது.

லாவெண்டர் ஆயில்

ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்க சிறந்த பொருள் என்றால், அதில் லாவெண்டர் ஆயிலும் ஒன்று. அதிலும் இதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து வந்தால், புதிய செல்கள் உருவாகி, ஸ்ட்ரெட்ச் மார்க்கை மறைய வைக்கும்.

ஆப்ரிக்காட் ஸ்கரப்

ஆப்ரிக்காட் பழத்தை வைத்து தழும்பு உள்ள இடத்தில் ஸ்கரப் செய்தால், அது அங்குள்ள சருமத் துளைகளை விரிவடையச் செய்து, அதில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாதிக்கப்பட்ட செல்களை கண்டுபிடித்து, அதன் நிறத்தை மங்க வைத்து, நாளடைவில் மறைய வைத்துவிடும்.

நறுமணமிக்க எண்ணெய்கள்

அவோகேடோ, பாதாம் மற்றும் ஜோஜோபா போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தினால், அவை ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கிவிடும். அதிலும் இந்த எண்ணெய்களை லாவெண்டருடன் சேர்த்து தடவி மசாஜ் செய்தால், மறுமுறை அந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கும்.

கொக்கோ வெண்ணெய்

பிரசவத்திற்குப் பின் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுப்பதற்கு கொக்கோ பட்டர் சிறந்ததாக இருக்கும். அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போதே தடவி மசாஜ் செய்து வந்தால், திசுக்கள் பாதிப்படையாமல், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுககலாம். அதையே மார்க்குகள் வந்த பின்பு செய்தால், அந்த தழும்புகளை மறைய வைக்கலாம்.

கேன்சரை உலகத்தை விட்டே விரட்டுவதே டெர்ரி பாக்ஸுடைய இலட்சியமாக இருந்தது !! வரலாற்றில் நாம் படிக்க வேண்டிய பக்கங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips

காலும் கை கொடுக்கும்!

டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்க

ு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.

விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.

நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.

1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.

ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.

இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.

1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.

இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.

கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.

டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.

நன்றி :
எழுதியவர் யுவகிருஷ்ணா

பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips
பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது.

அதேப்போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனைத்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் தான். அது என்னவென்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி- இது ஒரு பழங்கால முறை. இன்றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்பங்குச்சியைப் பயன்படுத்தி தான் தங்கள் பற்களை துலக்குகின்றனர். அதனால் தான், அவர்கள் பற்கள் இன்றும் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இதனைக் கொண்டு பற்களை துலக்கினால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச்சென்று, துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராமலும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துலக்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.1

உப்பு- உப்பைக் கொண்டும் பற்களை துலக்கலாம். ஏனெனில் இதில் சோடியம் அதிகம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற்களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்கலாம். மேலும் இது வாய் துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமும் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துலக்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்- கடுகு எண்ணெயை வைத்து பற்களை துலக்கினால், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இதுவும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறிது உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை- எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகைய அழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டும். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கிராம்பு- கிராம்பில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிராம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆகவே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனால் பற்கள் வெள்ளையாக இருப்பதோடு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட்களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு???????????

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips

 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்
மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.

ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.

ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும். ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.

பாதுகாப்பு முறை: குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது , போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். பாலியல் ரீதி யான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.
-ஸ்ரீதேவி

அவல் தோசை: அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.

ஓட்ஸ் வெஜ் அடை: கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.

கருவேப்பிலைக் குழம்பு: வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.

டயட்

பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

* ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
* அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.

சவுச்சவ் ஆச்சரியப்படுத்தும் உடல்நல நன்மைகள். . .

மணக்கால் அய்யம்பேட்டை | 2:29 PM | Best Blogger Tips
சவுச்சவ் இதய நொய்யாளிகளுக்கு நல்லது, மற்றும் புற்றுநோய் வராமல் காக்கும்.

சவுச்சவ் பொதுவாக ஒரு காய்கறி போன்றே தயார் செய்ய படுகிறது என்றாலும், அது உண்மையில் ஒரு பழம் ஆகும். இதில் மிகவும் முறுமுறுப்பான சதை பற்று இருப்பதால் இதைல் சமைத்தும் சாப்பிடலாம், பச்சையாகுவும் சாப்பிடலாம்.

1. இதயத்திற்கு நல்லது. . .

(Homocystein) ஒரு அமினோ ஆஸிட் ஆகும், இது இரத்தத்தில் அதிகமா இருந்தால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன, இப்படிப்பட்ட அமினோ ஆஸிட் வளர்வதை 'B' விடமின் தடுக்கிறது. இந்த Folate எனப்படும் 'B' விடமின் சவுச்சவ்வில் நிறைந்து இருக்கிறது.

2.புற்றுநோயை தடுக்க உதவுகிறது(வைட்டமின் சி) . . .

வைட்டமின் சி, ஒரு சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ்(antioxidants) ஆகும். இந்த சாரம் நம் உடலில் ஏற்படும் திசு சிதைவுகளை சரிசேய்யும் அது மற்றும் இன்றி இந்த ஆண்டி-ஆக்ஸிடெஂட்ஸ் மெதுவாக அல்லது சாத்தியமான வகையில் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சவுச்சவ்வில் வைட்டமின் சி ஒரு நல்ல மூலமாகும், இது . 17% வழங்கும்.

3. உடலின் ஆற்றல்/சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் (Manganese). . .

சவுச்சவ் முட்டை போடிமாஸ்யை காலை உணவாக உன்ணுங்காள், நாள் முழுவதும் உங்கள் உடல் ஆற்றல் / சக்தியுடன் இருக்கும். இதில் மாங்கனீசு உள்ளடக்கம் அதிகம் உள்ளத்தால் அந்த நாளில் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கொழுப்பை எநர்ஜீ(Energy) ஆகா மாற்றும்.

4. மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது (Fiber). . .

குடல்பகுதியை முறைப்படுத்தி ஊக்குவிக்க, உங்கள் உணவில் சவுச்சவ்வை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

5. தைராய்டு(thyroid) ஆரோக்கியமாக வைத்திருக்கும் (Copper). . .

தைராய்டு வளர்சிதையை கட்டுப்படுத்தும் அயோடின்க்கு, தாமிரம்(Copper) உதவுகிறது. அயோடின் என்பது தைராய்டு வளர்சிதை பரிணாமத்துடன் சம்பந்தப்பட்டு இருக்கும் ஒரு தாது குறிப்பாக ஹார்மோன் உற்பத்தியில் மற்றும் உட்கிரகிப்பிற்கும்.

6. ஆண்மை அதிகரிக்க மற்றும் முகப்பரு தடுக்க உதவுகிறது (Zinc). . .

சவுச்சவ் துத்தநாகம்(.) ஒரு நல்ல மூலமாகும். தோல் எண்ணெய் உற்பத்தி கட்டுப்படுத்தும் ஹார்மோன்கலை ஊக்குவிக்கும். ஆண்மை அதிகரிக்க மற்றும் மலட்டுத் தன்மையை போக்கும்.

7. எலும்பு இழப்பு தடுக்க உதவுகிறது (Vitamin K). . .

உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்களை சவுச்சவ் சாப்பிட சொல்லுங்கள், அதில் இயற்கை வைட்டமின் கே இருக்கிறது. வைட்டமின் கே மற்றும் எலும்பு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

8. இரத்த அழுத்தம் குறைக்க உதவுகிறது (Potassium). . .

சவுச்சவ் உங்கள் உடலின் தினசரி படாஸீயம் தெவயை பூர்த்தி செய்யும், இந்த தாது இரத்த அழுத்த அளவுகளை குறைக்க உதவுகிறது.

9. மூளை வார்சிக்கு நல்லது (Vitamin B6). . .

ஆய்வின் பங்கேற்பாளர்கள் சில குறிப்பிட்ட வயதில் உள்ளவர்களுக்கு மூளை நினைவக திறனை ஊக்குவிக்கும் என்று நம்புகிறார்கள்

10. கால் தசைப்பிடிப்புக்கலை தடுக்க உதவுகிறது (Magnesium). . .

ஒரு எலக்ட்ரோலைட் மற்றும் கனிமம் தசைப்பிடிப்புப்பை தடுக்கும் உதவும்.