அடுத்தவர்கள்.... என்ன

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 அடுத்தவன் என்ன நினைப்பான் #வாழ்க்கைத்தத்துவங்கள் #tamilmotivation - YouTube

 

 அடுத்தவர்கள்.... என்ன

நினைப்பாங்க...!!..சத்தியமாக உங்களை பற்றி நினைத்து கொண்டே இருக்க வாய்ப்பு இல்லை..
அவர்கள்..அவர்களின் பிரச்சனையை  எப்படி முடிப்பது..என..ஓடிக் கொண்டு இருக்கும் போது..

ஆம்.நண்பர்களே..நம் வாழ்க்கையின் பெரும் பகுதி.அடுத்தவர்,உறவுகள்..பக்கத்து வீட்டார்கள்...என ....வாழ்க்கை கடந்து விடுகிறது..
 அடுத்தவன் என்ன நினைப்பான் என்று யோசிக்காதே|Tamil Best Motivational speech  |chiselers academy
நாம் பெரிய சங்கடத்தில் கஷ்டத்தில் வீடே ஜப்தி வந்த நிலையில் கூட..
நம் தெருவில்,பக்கத்து வீட்டார்,உறவுகள்..
நம்மை  ..ஏளனமாக நினைப்பார்களோ..என.கூட
 நினைக்க வேண்டாம்..

யாரும் உறவு கூட உதவ வில்லை என வருத்தப்பட வேண்டாம்..

நம்மைப்போல அவர்களுக்கு வெளியில் தெரியாமல் ஆயிரம் பிரச்சனைகள்..அந்த பிரச்சனையை கடந்து சிவனேன்னு இருக்கவே ஓடிக் கொண்டு இருப்பார்கள்..

அதனால் அடுத்தவர்கள் உதவ வில்லை

..இல்லை நம்மை இப்படி நினைத்து விடுவார்களோ..என கவலை வேண்டாம்..

அதற்கு வாய்ப்பு இல்லை..என்பதே..ஏதார்த்தமான உண்மை..

உண்மையில் நம் தேவை உள்ளவர்கள் தான்..நம்மிடம் வர முடியும்..
 அடுத்தவன் என்ன நினைப்பான் என்று நினைத்து வாழாதே.. Tamil Voice Message |  Motivational Speech in tamil
இதுவும் ஏதார்த்த மான உண்மை..

இது இரத்த உறவு ஆனாலும்...

நம்மால் அவர்களுக்கு ஒரு தேவை இருந்தால் தான் வருவார்கள்...

உதாரணமாக..
ஒரு மகானை,ஒரு சித்தரை..  இறைவனை..பார்க்க செல்கிறோம்..என்று வையுங்கள்....
அவர் எப்படி இருக்கிறார்..என விசாரிக்கவா.செல்வோம்..

நம் தேவை பூர்த்தி ஆகுமா..என நானே செல்வோம்..

அதுபோல..தான். உறவுகள்...நட்புகள்..எல்லாம்..

நம்மால் அவர்களுக்கு தேவை என்றால் தான் வருவார்கள்..

நம் கஷ்டத்தை பகிர..சரி செய்ய இறைவனை தவிர.. வாய்ப்பு இல்லை...என புரிந்து பயணம் செய்யும் போது..

ஒரு மன அமைதி...கிடைக்கும்..

இறைவனை தவிர நம்மை காப்பாற்ற நல்வழி,நற்கதி அடைய வைக்க உலகில்.. யாரும் இல்லை..
why men dont talk about their feelings reason here in tamil : ஆண்கள் தங்கள்  வலியை ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டார்கள்... பார்த்திருக்கிறீர்களா...அது ஏன்  தெரியுமா??
என்ற புரிதல் கொஞ்ச..கொஞ்சமாய். மனதில் வந்து விட்டால்...
எல்லா பிரச்சனைகளும்..

எளிதாக எடுத்துக் கொண்டு..

கடவுள் துணை கொண்டு

கடின உழைப்பின் மூலம்..
வைராக்கியம் கொண்டும்..

கடந்தும் விடலாம்...............
.      🥦     🩶        🫡        🩶     🥦

🙏🌹 நன்றி இணையம்   May be an image of 1 person and smiling         🌹🙏

சென்னையில்_அமைந்திருக்கும்_பஞ்சபூத_ஸ்தலங்கள்_தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 4:17 PM | Best Blogger Tips

 சென்னையில் அமைந்திருக்கும் பஞ்சபூத ஸ்தலங்கள்..! ஒரே நாளில் சென்று வழிபட்டு  வர முடியும்..! / Chennai - YouTube

சென்னையில்_வசிக்கும்_அன்பர்களுக்காக ................

1 #ஆகாயம்:

சென்னையில் அமைந்திருக்கும் ஆகாயஸ்தலமாக சிதம்பரேசுவரர் ஆலயம் ஆகும்.இதன் மூலவர் திருமூலநாதசுவாமி ஆவார்.

சென்னையில் பரசுராமர் பூஜித்த தலம் / Parasurama lingeswarar temple  /Ayanavaram @Indiatempletour

NO:112,அவதான பாப்பையா தெரு,சூளை , சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை-112 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது. 7C, 7B, 7D, 164, 59, 159 என்ற எண்ணுடைய பேருந்தில் பயணித்து புவனேஸ்வரி திரையரங்கம் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். காலை 6 மணி முதல் 11.30 வரையிலும்,மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

1994 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்ற இத்திருக்கோவிலின் தல மரம் வில்வம் ஆகும்.

தில்லை சிதம்பரம் போன்றே இங்கும் ஸ்படிக லிங்க பூஜை தினமும் காலை மற்றும் இரவு 8.30க்கு நடைபெற்றுவருகிறது.

2 #மண்:

சென்னையின் மண் ஸ்தலமாக அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
Chennai Mint Ekambareswarar Temple,சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில் :  சென்னை பஞ்சபூத தலங்கள் - நிலம் - chennai mint ekambareswarar temple :  chennai pancha bootha stalam - earth - Samayam Tamil
NO:315, தங்கச்சாலை தெரு,பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.இங்கே ஏகாம்பரேசுவரர் காமாட்சி அம்மனுடன் அருள் புரிந்து வருகிறார்.
Chennai Mint Ekambareswarar Temple,சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில் :  சென்னை பஞ்சபூத தலங்கள் - நிலம் - chennai mint ekambareswarar temple :  chennai pancha bootha stalam - earth - Samayam Tamil
தலமரமாக வன்னிமரம் அமைந்திருக்கிறது.சென்னையில் வன்னிமரத்தடியிலும்,அரசமரத்தடியிலும் சிவலிங்கம் அமைந்திருப்பது இங்கே மட்டுமே!

காலை 6 முதல் 12 வரையிலும்,மாலை 4 முதல் 9 வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும்.

1, 21, 51, 57, 18A என்ற எண்ணுள்ள பேருந்தில் பயணித்து கந்தசாமி கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.அங்கிருந்து ராசப்பதெரு வழியே தங்கச்சாலை தெரு திரும்பி சிறிது தொலைவில் அமைந்திருக்கிறது.

மண் ராசிகளான ரிஷபம்,கன்னி,மகர ராசிகள் மற்றும் ரிஷப லக்னம்,கன்னி லக்னம்,மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவான சிவ அருள் இங்கே வந்து அடிக்கடி வழிபட,அல்லது இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்ய நல்ல வீடு மனை தோட்டம் கிட்டும்.

3 #நீர்:

சென்னையின் நீர்ஸ்தலமான கங்காதரேசுவரர்,தாமரைத்தாய் மற்றும் பங்கஜாம்பாளுடன் அருள்புரிந்து கொண்டிருக்கிறார்
அற்புதங்கள் கொடுக்கும் கங்காதீஸ்வரர் கோயில் | Gangadeeswarar Temple |  Chennai
7A, 7F, 7H, 34, 16A, 22, 29D, 23C, 27K என்ற எண்ணுள்ள பேருந்துகளில் ஏதாவது ஒன்றில் பயணித்து கங்காதரேசுவரர் சிவன் கோவில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.இந்த ஆலயம் புரசைவாக்கத்தில் அமைந்திருக்கிறது.

கடக லக்னம் அல்லது கடகராசி, விருச்சிக லக்னம் அல்லது விருச்சிக ராசி,மீன லக்னம் அல்லது மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வருகை தந்து சிவ அபிஷேகம் அல்லது ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்.ஏனெனில்,இந்த ராசி மற்றும் லக்னமானது நீர் ராசியைச் சேர்ந்தது ஆகும்.

4 #நெருப்பு:

சென்னையின் நெருப்பு ஸ்தலமாக அருணாச்சலேசுவரர்+அபிதகுலசாம்பாள் திருக்கோவில் திகழுகிறது.நெருப்பு ஸ்தலமான அண்ணாமலைச் சமமான இத்திருக்கோவில் சவுகார்ப்பேட்டையில் அமைந்திருக்கிறது. NO:24,பள்ளியப்பன்தெரு, சவுக்கார்பேட்டை, சென்னை-79.
Arunachaleswarar Temple in Tondiarpet,Chennai - Temples near me in Chennai  - Justdial
28, 34, 37, 159 இந்த எண்ணுள்ள பேருந்துகளில் பயணித்து யானைக்கவுனி காவல் நிலையம் நிறுத்தத்தில் இறங்கி,வால்டாக்ஸ் ரோட்டில் அண்ணாப்பிள்ளை தெரு வழியாக சிறிது தொலைவில் பயணித்தால் இந்த திருக்கோவிலை அடையலாம்.

ஜீவகாருண்யத்தை நமக்குப் போதித்த ராமலிங்க வள்ளலார் வழிபட்ட ஆலயம் இது.இங்கே பெரிய சிவலிங்கத் திருமேனி அம்பாள் 6 அடி உயரத்தில் அருள்பாலித்து வருகிறார்.

மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசி,சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசி,தனுசு லக்னம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் அடிக்கடி இங்கே வந்து வழிபட அவர்களின் நியாயமான நோக்கங்கள் நிறைவேறும்;தகுந்த ஆன்மீக குருவை அடையலாம்;மற்ற ராசிக்காரர்களும் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்து வர மிகுந்த ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவார்கள்.

5 #வாயு:

சென்னையின் வாயு ஸ்தலமான அருள்நிறை காளத்தீசுவரர்+ஞானபிரசன்னாம்பிகை அம்மன் திருக்கோவில்,

NO:155, பவளக்காரத்தெரு,பாரிமுனை,சென்னையில் அமைந்திருக்கிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இத்திருக்கோவில் திறந்திருக்கும்.

38H, 44, 44C, 56C, 116 என்ற எண்ணுள்ள பேருந்தில் ஒன்றில் பயணித்து மாணவர் மன்றம் அல்லது தம்புச்செட்டித்தெரு அல்லது பவளக்காரத் தெரு நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் கடைசியில் இந்த திருக்கோவில் அமைந்திருக்கிறது.அல்லது ராயபுரம் மேம்பாலம் எதிரில் பவளக்காரத்தெரு நுழைந்தவுடன் இந்த திருக்கோவிலை அடையலாம்.

மிதுன லக்னம் அல்லது மிதுன ராசி,துலாம் லக்னம் அல்லது துலாம் ராசி,கும்ப லக்னம் அல்லது கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சிவகடாட்சம் இங்கே கிடைத்துக் கொண்டே இருக்கும்;யாரெல்லாம் இங்கே வந்து ஸ்ரீகால பைரவ வழிபாடு அல்லது சிவ வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுக்கு சிவகடாட்சமும்,பைரவ கடாட்சமும் எளிதில் கிட்டும்.✍🏼🌹 


🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

நந்தியம்பெருமான்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:18 PM | Best Blogger Tips

நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்! – chinnuadhithya



ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன், இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் இன்று பிரதோஷ விரத வழிபாடு  (21.09.2014)
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.
Mantras and Miracles - *நந்திஸ்வரா் திருமணம்* *❀ •࿐•࿐• ❀* *பிரதோ‌ஷ நாயகரான  நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் ...
3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
ஓம் சிவ சிவ - 🌹 ஸ்ரீ நந்திதேவர் துதி ஸ்ரீ நந்திதேவரை தொழ... | Facebook
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
ஆயுஷ்மான் பவ ஜோதிடம் - வித்தியாசமான கோலத்தில் நந்திதேவர் அருளும் தலங்கள் 💚  சிவபெருமானை நோக்கியபடி அருள்பாலிக்கும் நந்திதேவர், சில ...
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசித் தலபுராணம் | சிவசைல நாதர் பரமகல்யாணி அம்பாள் நந்தியம்பெருமான்  சந்தன காப்பு | Instagram
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.



🚩🔯🕉

நன்றி இணையம்🌹

Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005



சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:13 PM | Best Blogger Tips

சிவன் கோவில் வழிபடும் முறை | Sivan kovil vazhipadu murai

சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும்.
ஆன்மீக சிந்தனை!: சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்?
 அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும்.
Unofficial: Sri Sivan Temple
கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.

எனவே தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவதற்கான காரணம் என்ன...?
கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம் ஆகும்.
Balipeedam,பலி பீடத்தை தொட்டு வணங்குவது நல்லதா? கெட்டதா? - secrets and  significance of balipeedam in temples - Samayam Tamil
அதனருகில் சென்று கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
World Of Divine - கோயிலில் அமைக்கப்படும் கொடிமரத்தின் சிறப்புகள் பற்றிய  பதிவு...🙏🙏🙏🙏 கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன்  ...
இதற்கு அடுத்து இருப்பது துவஜஸ்தம்பம் அல்லது கொடிக்கம்பமாகும்.
How to worship in Perumal temples? | பெருமாள் கோவில்களில் எவ்வாறு வழிபட  வேண்டும்?
 இந்த கொடிக்கம்பத்தில் தான் கோவிலின் திருவிழாக்காலங்களில் கொடியேற்றி அதை ஊர் முழுவதும் தெரிவிப்பார்கள்.

அதற்கு அடுத்து சிவனின் வாகனமான நந்தியின் மண்டபம் அமைந்துள்ளது. இவரை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும்.
Global Indians - The Nandi Mandapam Brihadeswara Temple, Thanjavur This  temple is located in the city of Thanjavur, has a monolithic seated bull  facing the sanctum. 🚩The Nandi (Bull) facing the mukh-mandapam
சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும்.

 அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும்.
தமிழ்நாடு ஆன்மிகம் மற்றும் ...
 பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பசாமி ...
கடைசியாக இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களின் கோரிக்கையை கணக்கெடுக்கும் சண்டிகேசுவரருக்கு முன் நின்று “வந்தேன் வந்தேன் வந்தேன், இறைவனின் தரிசனம் கண்டேன், கண்டேன், கண்டேன் என மெதுவாக கூறி, இரு கைகளையும் மெதுவாக தட்டி, நன்றி சொல்லி வெளியே வர வேண்டும்.
கருப்புக்கோட்டை ஸ்ரீ கருப்பசாமி ...
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து...
Om Namashivaya - 🔯🚩தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 28 சிவன் கோயில்கள்🔯🚩  இந்தியாவில் இருக்கும் சிவன் கோயில்களில் பாதிக்கு மேற்பட்ட கோயில்கள் ...
இறைவா! நான் எனது பிரார்த்தனையை உன்னிடம் கூறிவிட்டேன், இதில் எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது உனக்கு தெரியும். அதன்படி வரம் கொடு என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
உங்களை மிரளவைக்கும் உலகின் முதல் ...
பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படுமபடியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும் படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும்.

கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனை வழிபட்டால் மட்டும் போதாது.

 அவனுக்கு பிடித்த மாதிரியும் நடந்து கொள்ள வேண்டும்.

கோயிலில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் எப்போதும் தியானத்தில் இருப்பதால் தொட்டு வணங்குதல் கூடாது.
செல்வம், கல்வி, ஞானம் அருளும் 14 சிவ ...
கோயிலில் இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதல் கூடாது.
ஸ்ரீ சிவன் கோயில் - HEB
இறைவன் எளிமையையே விரும்புவான்.

 அவனை தரிசிக்க செல்லும் போது ஆடம்பரமான உடைகள், நகைகள், மொபைல் உபயோகிப்பது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது...


🚩🔯🕉
🙏🙏🙏 👌👌👌
இணையம்நன்றி இணையம்🌹Copy From உழவார/இறைப்பணி /அழகிய தஞ்சை -2005