சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம்..

மணக்கால் அய்யம்பேட்டை | 12:15 PM | Best Blogger Tips

 Foods For Kidney Health,சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட  வேண்டிய 17 உணவுகள் என்னென்ன?... - foods that are good for your kidneys in  tamil - Samayam Tamil

🟢🩺🟢🩺🟢🩺🟢🩺
சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த உணவுகள் மிக அவசியம்..

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அது மோசமடையக்கூடுமோ என்ற அச்சம் எப்போதும் இருக்கும்.இருப்பினும், நாள்பட்ட சிறுநீரக நோயை ஆரம்ப கட்டங்களில் நன்கு நிர்வகிக்க முடியும். உங்கள் சிறுநீரகத்தை கவனித்து சரியான உணவை உட்கொள்வது இதய பிரச்சனைகள், எலும்பு நோய் மற்றும் இரத்த சோகை போன்ற பிற உடல்நல பிரச்சனைகளை தவிர்க்க உதவும். சிறுநீரக நோயைக் குணப்படுத்தும் போது, ​​தினசரி உடற்பயிற்சி மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் உணவு முறையில் மாற்றங்களை செய்வதும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
Foods For Kidney,கிட்னி ஆரோக்கியமா இருக்கணும்னா உணவில் இந்த காய், பழங்களை  அதிகமா சேர்த்துக்கோங்க... - 7 fruit and veggies to eat for a healthy kidney  in tamil - Samayam Tamil
சிறுநீரக நோயின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் (Reasons and Symptoms of Kidney Diseases)

மோசமான வாழ்க்கை முறை, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் சிறுநீரக (Kidney) நோய் ஏற்படலாம். வாந்தி, பசியின்மை, சோர்வு, மன தீவிரம் குறைதல் மற்றும் பல அறிகுறிகள் இதற்கு உள்ளன. சிறுநீரக நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது கடினம், ஆனால் இந்த நோய் தீவிரமடைந்தால் உடலில் திரவங்கள், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் கழிவுகளின் அளவு அதிகரிக்கிறது.

தைராய்டு மற்றும் சிறுநீரக நோய்களை நிர்வகிக்க, மக்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க, பழங்கள் மற்றும் காய்கறிகள், மீன், முட்டை, குறைந்த அளவு கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். வீட்டில் சமைத்த உணவை உண்பது மிகவும் ஆரோக்கியமானது. பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. ஆகையால் இது போன்ற உணவுகளை தவிர்க்கவும்.
சிறுநீரகத்திற்கான ஆரோக்கியமான உணவுகள் (Healthy Foods For Kidney)

மஞ்சள்
மஞ்சள் தூளில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்...!!
மஞ்சள் (Turmeric) அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது தைராய்டு மற்றும் சிறுநீரகங்கள் இரண்டிற்கும் உதவும். இதில் குர்குமின் உள்ளது. இது ஆண்டி-ஆக்சிடெண்ட் விளைவுகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீரக நோயுடன் தொடர்புடைய வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தயிர்
Yogurt that gives immunity | நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் தயிர்
இந்திய உணவுகளில் தயிர் (Curd) அயோடின் ஒரு நல்ல மூலமாகும். இது தைராய்டுக்கு அவசியம். சிறுநீரகத்திற்கு உகந்த உணவை உட்கொள்ள, குறைந்த கொழுப்புள்ள தயிரை தேர்வு செய்யவும். ஏனெனில் அதில் பாஸ்பரஸ் குறைவாக இருக்கும்.

பச்சை காய்கறிகள்
Eating vegetables does not prevent heart disease risk says an UK Research | பச்சை  காய்கறிகள் இதய நோய் அபாயத்தை தடுக்கிறதா; ஆய்வு கூறுவது என்ன! | Health News  in Tamil
பச்சை இலை காய்கறிகள் (Green Vegetables) மற்றும் கீரைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட்கள் நிறைந்துள்ளன. இது தைராய்டு மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு முழுமையான உணவாகும். அவற்றில் பொட்டாசியம் குறைவாக உள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பயத்தம் பருப்பு
Health News| Amazing Health Benefits of Moong Dal | பாசிப்பருப்பு ஒரு  பொக்கிஷம்: பல உடல் பிரச்சனைகளின் ஒரே தீர்வு, விவரம் இதோ | Health News in  Tamil
புரதத்தின் வளமான ஆதாரமான பயத்தம் பருப்பில் (Moong Dal) பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் குறைவாக உள்ளது. இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

தினை
தினை பயன்கள் | Thinai benefits in Tamil | Thinai uses in Tamil
இந்த பாரம்பரிய தானியங்களில் மற்ற தானியங்களை விட ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் பாஸ்பரஸ் குறைவாகவும் உள்ளது. தினையை (Millets) ரொட்டி வடிவில் உணவில் சேர்க்கலாம் அல்லது இன்னும் பல வழிகளிலும் உட்கொள்ளலாம்.


வாழ்க வளமுடன் 

 

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person and text  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை ....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - 
 
என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?
 
நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?
 காண்டீபதாரி அர்ஜுனன் - #கிருஷ்ணர்_கர்ணன் மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக்  கேட்டான் - என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் ...
பரசு ராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?
 
ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.
 
திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்
 
குந்தி கூட இறுதியாக என் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார். 
 
இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது, துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்
 
அதற்கு கிருஷ்ணன் பதிலாக
 
"கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்
 
என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது. 
 
நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.
 நிராயுதபாணியை_கொன்றானா_அர்ஜூனன்_???... - காண்டீபதாரி அர்ஜுனன் | Facebook
நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் 
 
ஆனால் . 
 
நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன
 
நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்
 
நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்டிபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!
 
நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.
 
ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!
 
துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், 
 
உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? 
 
கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்
 
கர்ணா ஒன்றை நினைவில் கொள் 
 
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.
 
வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை
 
ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்ல அந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.
 
நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில் போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை.
 
எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே.
 
அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை. 
 
இங்கு எல்லாம் சரியாக அமைந்த வாழ்க்கை யாருக்கும் இல்லை....
 
நல்லதே நடக்கும்.
 

 

🌹 வரலட்சுமி விரத பூஜை முறை...!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:12 PM | Best Blogger Tips

May be an image of templeNo photo description available.


செல்வம் செழித்தோங்கவும், மாங்கல்ய பலம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இவ்விரதத்தை பெண்கள் கடைபிடிக்கின்றனர்....
 
ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். ஆனால் இந்த வருடம் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை (16.08.2024) இவ்விரதம் அனைத்து வயது பெண்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது...
 
வரலட்சுமி விரத பூஜையை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கேற்ப செய்யலாம்....
பூஜைக்கு வேண்டிய பொருட்கள் :
 
மஞ்சளால் பிடித்த பிள்ளையார், வாழை இலை, அரிசி, தேங்காய், பழம், பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, எலுமிச்சைப்பழம், குங்குமம், திருநீறு, சந்தனம், மலர்கள், குத்துவிளக்கு, நோன்பு கயிறு, நகை மற்றும் பணம் வைத்தும் வழிபடலாம்....
 
பூஜை செய்யும் முறை :
 
ஒரு தாம்பூலத்தில் அரிசியை பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்திற்காக வைக்கலாம்....
 
அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியே நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டிற்குள் வருமாறு அழைக்க வேண்டும்....
 
மகாலட்சுமி வீட்டிற்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் (தெய்வத்தை மனதில் எண்ணுதல்) செய்ய வேண்டும்...
 
மகாலட்சுமி உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டாள். 
 
அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்க வேண்டும். அப்போது மங்களகரமான மந்திரங்களை சொல்லவும். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களையும் பாடலாம்....
 
இதையடுத்து நோன்புக்கயிற்றை கும்பத்தில் சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி சொல்லவும். மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நீங்கள் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீங்கள் தர வேண்டும் என்று மனம் உருகி வணங்க வேண்டும்....
 
பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்பது ஐதீகம்....
 
நிவேதனம் :
 
பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன் மற்றும் கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம்....
 
பலன்கள் :
 
வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், செல்வ வளம் உண்டாகும், மங்கள வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்....
 

 

காசியை விட பல மடங்கு புண்ணியம் தரும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:09 PM | Best Blogger Tips

 No photo description available.

காசியை விட பல மடங்கு புண்ணியம் தரும் திருத்தலம் எங்குள்ளது தெரியுமா?
 
ஒரு சமயம் சிவபெருமான் உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன். 
 
காசி, காஞ்சிபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், ஸ்ரீவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது. இங்குள்ள தீர்த்தமான குப்த கங்கை கங்கையை விடவும் புனிதமானது.
 
இந்தத் தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே கயிலாயத்தில் சிவகணமாக இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார். 
 
இதையடுத்து, ஸ்ரீவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான் இத்தல நாயகிக்கு, ‘வாழவந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
 
துவாபர யுகம் முடிந்து, கலி யுகம் தொடங்கியதும் சரஸ்வதி நதிக்கரையில் தவம் இருந்த ஸர்வா என்ற முனிவர் துடித்துப் போனார். ‘கலி யுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ’ என்ற கவலை அவரை வருத்தியது.
 
 அப்போது ஸ்ரீவாஞ்சியம் என்ற வார்த்தை அசரீரியாக அங்கு ஒலித்தது. இதையடுத்து முனிவர் ஸ்ரீவாஞ்சியம் கோயிலை நோக்கி ஓடினார். அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது. இதனால் முனிவர், ‘சிவாய நம ஸ்ரீவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார்.
 
பக்தனின் குரல் கேட்டு வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை ஸ்ரீவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். ஈசன் கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது, ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது.
 
காசியில் வழங்கப்படுவது போல் ஸ்ரீவாஞ்சியத்திலும் காசிக் கயிறு எனும் கருப்பு கயிறு வழங்கப்படுகிறது. காசியில் பாவமும் புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன. அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார். ஆனால், ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது. அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை. இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்துவிட்டு தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் பைரவருக்கு இத்தலத்தில் இல்லை.
 
இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.
ஸ்ரீவாஞ்சியத்தின் தல விருட்சமாக விளங்குவது சந்தன மரமாகும். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபரத்துடன் கம்பீரமாகக் கோயில் காட்சியளிக்கிறது. இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் குப்த கங்கையில் நீராடி, அருகே உள்ள கங்கை கரை விநாயகரை வழிபட வேண்டும். பின்பு தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் எமதர்மராஜனை வழிபட்டு பின்னர் அனுக்கிரக விநாயகர், பாலமுருகனை வழிபட வேண்டும். அதன் பிறகுதான் மூலவர் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையும் மங்களாம்பிகையையும் தரிசனம் செய்து வணங்க வேண்டும்.
 
இங்குள்ள குப்தகங்கை தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது. இது தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களை ஏற்பதாக ஐதீகம். குப்த கங்கை தீர்த்தம் தனது ஆயிரம் கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு காட்சி தருகிறது என்றால் இந்தத் தீர்த்தத்தின் மகிமையை வார்த்தைகளினால் அளவிட முடியாது. கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் அச்சுதமங்கலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம்.
 

 

இன்றைய மனிதனின்.....!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:38 AM | Best Blogger Tips

May be an image of text

50 ரூபாவை யாரும் ஒரு ஏழைக்கு அவ்வளவு எளிதில் தானமாகக் கொடுக்கமாட்டார்கள் ! 
 
ஆனால் ஹோட்டலில் டிப்ஸ்ஸாக அவர்கள் 50ரூபாவைக் கொடுப்பார்கள் ! 
 
3 நிமிடம் கடவுளைக் கும்பிடப் பிடிக்காது ! 
 
ஆனால் 3 மணி நேர சினிமாப் படம் பார்கப் பிடிக்கும் ! 
 ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் முக்கியமான மருத்துவ அளவுகள்
... 
 
முழு நேர வேலைக்குப் பின்னர் கூட உடற்பயிற்ச்சிக்கு செல்வார்கள் ! 
 
ஆனால் வீட்டில் அப்பா அம்மாவுக்கு உதவக் கேட்டால் முடியாது என்பார்கள் ! 
 
காதலர் தினத்திற்காக 1 வருடம் காத்திருந்து பரிசு வாங்குவார்கள் ! 
 
ஆனால் அன்னையர் தினம் மட்டும் நினைவில் இருக்காது ! 
 
புகைப்படத்திலுள்ள சிறுவனுக்கு ஒரு பண் துண்டை கொடுக்க யாரும் இல்லை ! 
 
ஆனால் இந்த ஓவியம் வரையப்பட்ட முறையில் சோகம் இருக்கிறது என்பதனால் இதனை ஒருவர் 10 லட்சம் ரூபாய்களுக்கு வாங்கிச் சென்றுள்ளார் ! 
 
இதுதான் இன்றைய மனிதனின் நிலை. 
 
மனிதர்களை நினைக்கும்போது நூதனமாக உள்ளது அல்லவா ?!