🔥🍀 வாராகி வாகனத்தில்....பவன் கல்யாண்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:09 AM | Best Blogger Tips

 

 


🔥🍀 வாராகி வாகனத்தில்....

 

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத ஒருவர் மிகப் பெரிய கவனம் பெற்றிருக்கிறார். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்கிற வார்த்தைக்கு நிரூபணமாகி இருக்கிறார் இவர்.

 

மோடி அவரை குறிப்பிட்டு பேசும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார். நம் தமிழக சட்டபேரவையிலும் இவரை குறித்து பேசியிருக்கிறார்கள் என்பதில் தான் விஷயமே தங்கியிருக்கிறது. இந்த இடத்திற்கு அவர் ஒன்றும் சாதாரணமாக வந்துவிடவில்லை..... பல ரணங்கள் தாங்கி, பல அவமானங்களை கடந்து இந்த அளவிற்கு வந்து தடம் பதித்திருக்கிறார்.

 ஆந்திராவின் துணை முதல்வர் ஆகிறார் பவன் கல்யாண்? | Andhra Pradesh, Pawan  Kalyan's deputy chief minister's post has caused a stir with the new  cabinet list

இந்த தேர்தலில் நூறுக்கும் நூறு சதவிகிதம் வெற்றி பெற்ற கட்சியில் ஜன சேனாவும் ஒன்று.

 

அவர் பவன் கல்யாண் அதன் தலைவர். பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றது இந்த உயரத்தை தொட.....

ஆந்திர மாநிலத்தில் சினிமா வட்டாரத்தில் அவர் பவர் ஸ்டார். அவரது அண்ணன் சிரஞ்சீவி மெகா ஸ்டார். பாரம்பரியமிக்க சினிமா குடும்பம் அவர்களுடையது.... கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக தெலுங்கு பேசும் தேசத்தை கட்டி ஆண்டு வருகிறார்கள்.

 Jana Sena President Pawan Kalyan Car Collection: இந்தியாவே உன்னிப்பா  கவனிக்கும் பவன் கல்யாணின் இன்னொரு முகம்... விஷயம் தெரிஞ்சதும் வாயை  பிளக்கும் மக்கள்... - Tamil ...

சிரஞ்சீவி தான் முதன் முதலில் அரசியல் கட்சி ஆரம்பித்து களம் கண்டவர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் மத்திய அரசில் பேருக்கு அங்கம் வகித்து பின்னர் பின்வாங்கிவிட்டார். கட்சியும் கலைத்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் அவர் தம்பி பவன் கல்யாண் தனியே ஜன சேனா என்கிற கட்சியை தொடங்கிய போது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

 

2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக  ஒன்று பட்ட ஆந்திராவை பேசிய முதல் நபராக பவன் கல்யாண் இருந்தார். இஃது பலரது ஏளனத்தை சம்பாதித்தது. இவர் முன்பு போட்டியிட்ட பீமாபுரம் மற்றும் பீதாபுரத்தில் தோல்வியை தழுவியதும், இவரது கட்சி சார்பில் வெற்றி பெற்றவர் அணி மாறியதும் ..... அனைவரும் அவ்வளவு தான் என்றனர். ஆனால் நடந்ததே வேறு.

 Pawan Kalyan touches Chiranjeevi's feet; celebrates political win with Ram  Charan, Varun Tej. Watch - Hindustan Times

பீதாபுரத்தில் போய் வீடு வாங்கி தங்கினார். அரசியல் மாற்றத்திற்காக உழைக்கின்றேன், அதன் முதல் படியில் இருக்கிறேன். நிச்சயம் வெற்றி கொள்வேன் என்றார்.

ராணுவத்தினர் பயன் படுத்தும் கனரக வாகனத்தை வாங்கி அதனை தனது பிரசார வாகனமாக பயன் படுத்தி, அதற்கு வாராகி என பெயரிட்டு ஆந்திராவில் வலம் வந்து அசரடித்தார். மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது அவரது பேச்சு. சனாதனத்தை தூக்கி பிடித்தார். அதனை இழிவு படுத்தி பேசினால் பிராமணர்கள் மட்டுமே காயப்படமாட்டார்கள் ...... அத்தனை இந்துக்கள் தான் என கர்ஜித்தார். இந்த சம காலத்தில் இவர் அளவிற்கு யாரும் தைரியமாக பேச முன் வராததால் இவரது பேச்சு சிறப்பு கவனம் பெற்றது. ஆரம்ப காலங்களில் மோடி அரசின் மீது விமர்சனங்கள் முன் வைத்தவர் பின்னாளில் அவரை பொது மேடைகளில் கொண்டாட ஆரம்பித்தார்.

 

சந்திரபாபு நாயுடுவுடன் மோடிக்கு இருந்த பிணக்குகளை களைய நடையாய் நடந்தார். கூட்டணிக்குள் கொண்டு வர தனது பிரதான தொகுதிகளை விட்டுக்கொடுத்தார். மிக குறைந்த அளவு தொகுதிகளிலேயே  (21 + 2) போட்டியிட்டார். ஆனால் பிரசாரம்........ பின்னி எடுத்தார். சளைக்காமல் மோடிக்கும் நாயுடுவுக்கும் வாக்கு சேகரித்தார். அசந்து போனார்கள் தெலுங்கு தேசக் கட்சியின் பிரதிநிதிகளே. அவர்களே செய்ய தயங்கிய சமாச்சாரம் அது.

 

மனமுவந்து செய்திருக்கிறார் இதனை. அது செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி நல்லிரவு. நந்தியாலத்தில் தங்கி இருந்த சந்திரபாபு நாயுடுவை கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட தருணம் அது. யாருமே எதிர்பாராத விதமாக முதல் ஆளாக தனது ஆதரவாளர்களுடன் போய் நின்றது பவன் கல்யாண். மொத்த ஆந்திராவும் பிரமித்து நின்ற தருணம். அதுவரைக்கும் பேருக்கு கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருப்பதாக நினைத்தவர்களை நிலைகுலைய செய்த தருணம் அது.

 

அந்த நல்லிரவில் இருபத்தைந்து ஆயிரம் பேர் தங்கள் வாகனங்கள் அணி திரண்டு வந்து இருக்கிறார்கள். திணறி போனது நிர்வாகம். அத்தனை ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லை. ஆனால் வெளியே குப்பம் பகுதிகளில் தெலுங்கு தேச கட்சியினர் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து தொம்சம் செய்து இருந்தனர். இவர்களளோ கட்டுப்பாடோடு நடந்துக் கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்து என்றே சொல்லலாம்.

 

அன்று இருந்த நிலைமையில் இவர் தனது கட்சியை தெலுங்கு தேசத்தோடு ஒன்றிணைத்து விடுவார் என்றே பலரும் ஆரூடம் சொல்லிக் கொண்டு இருக்க ...... இவர் மாத்திரம் ஜெகனுக்கு எதிராக.... பின்னணியில் இயங்கிய மிஷனரிகளுக்கு எதிராக மிகவும் தெளிவாக காய் நகர்த்தினார். வீரியமான..., உத்வேகமான இவரது பிரசார பாணி பலரை குலை நடுங்க செய்தது. அதற்கு பலனும் கொடுத்தது என்பது இந்த தேர்தலில் பட்டவர்த்தனமாக தெரிந்து போயிற்று.

 

முதல் அடி......

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்தவர்கள் அவர்களாகவே ராஜினாமா செய்ய.... இவரது சகோதரர் நாகா பாபு அந்த பொறுப்பில் வர இருக்கிறார் என்கிறார்கள். கடந்த காலங்களில் பிரமோற்சவ சமயத்தில் சிலுவை வடிவிலான மின் விளக்கு அழிச்சாட்டியங்களை செய்து வந்தவர்களுக்கும் கிரிப்டோ கிருத்துவர்களாக தேவஸம்போர்டில் பணியில் இருந்து கொண்டு அட்டூழியம் செய்து கொண்டு வருபவர்களை இவரது நியமனம் ஒரு வழி பண்ணும் என நம்பிக்கை பிறந்திருக்கிறது என்கிறார்கள்.

 

கொரணாவுக்கு பின்னான காலத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் லட்டுகள் காணாமல் போனதாக கணக்கு சொல்லி இருப்பதாக சொல்கிறார்கள் என்றால்... இதன் வீர்யம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.கோவிலை சுற்றிலும் கான்கிரீட் காடுகளாக மாற்றியிருப்பதை, தற்போது பதவிக்கு வருபவர்கள் தான் மாற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

திருமலையில்  ஆழ்வார்களை விடுத்து அன்னமய்யாவை தாங்கி பிடிப்பதாக சொல்லி சிலை வைத்தவர்கள்..... அவர் வாழ்ந்துவந்த வீட்டை இடித்து கழிவறை கட்டிவைத்து அழிச்சாட்டியம் செய்து வருவது என பல குற்றச்சாட்டுக்கள் சுப்பாரெட்டி காலத்தில் எழுந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

பவன் கல்யாண் பொறுத்தவரை அவருக்கு ஒன்று பட்ட ஆந்திராவை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலேயே கண்ணாக இருக்கிறார். மொழி வாரி மாநிலங்களாக பிரித்து விட்டு இன்று நிர்வாக காரணங்களுக்காக தெலுங்கு பேசும் மக்களை இரண்டு கூறுகளாக பிரித்து விட்டீர்களே என காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகிறார்.

 

நடைமுறையில் மீண்டும் ஒன்று பட்ட ஆந்திர மாநிலம் சாத்தியமா என்பது கேள்விக்குறியே...... ஆன போதிலும் தன்னால் அதை நிர்வாகத்தால் மீட்டெடுக்க முடியும் என்றும்...., அதனை நோக்கி நகர்ந்து கொண்டே வருவதாக சொல்லி வருகிறார்.ஜன சேனா அதனை சாதிக்கும் என்கிறார் அவர்.

அவரது தீர்க்கமான பார்வை வெல்லட்டும்.

 

ஜனசேனா கட்சி தலைவராக வாழ்வாங்கு வாழ நாமும் அவரை வாழ்த்தலாம். திரையில் தோன்றி நிஜத்திலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்பதை விட எந்த இடத்தில் இருந்தாலும்

தேசத்தின் மீது நல்லபிமானம் கொண்டவர்கள் தோற்கவே கூடாது என்பதற்காகவே அவரை தாராளமாக வாழ்த்தலாம்.

 

💓 ஜெய் ஹிந்த்.

 May be an image of 3 people and monument


 நன்றி இணையம்

திருப்புகழ் கிடைத்த கதை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:35 PM | Best Blogger Tips

திருப்புகழ் கதைகள்: 14. பாற்கடல் கடைந்தது!

திருப்புகழ் கிடைத்த கதை
 
இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா ? அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா ?
 திருப்புகழ் கதைகள்: 14. பாற்கடல் கடைந்தது!
அருணகிரிநாதர் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்அவர் அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல் திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன., அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்திருக்கிறார்கள்.திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களிலடங்காத தனித்தன்மை பெற்றவை.
 
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை .....என்றுதான் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் தனது அனைத்து சொற்ப்பொழிவுகளைத் தொடங்குவார் .அவர் மூலமே அடியேனுக்கும் திருப்புகழ் அறிமுகம் ஆனது .
 
அத்தகைய திருப்புகழ் நமக்குக் கிடைக்கத் தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்ற தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது. அந்த போற்றுதலுக்குரிய அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை ஆவார் .
 Scholars of Tirupugazh - arunagirinatharmanimandapam
திருப்புகழ் நமக்குக்கிடைக்கவும் சுவையான ஒரு காரணமும் உள்ளது . அவர் குறித்து ஒரு கட்டுரையை தமிழ் இந்து 9/8/14 அன்று வெளியிட்டிருந்தது .அதை இப்போது பார்ப்போம்
வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். 
 
அப்பாடலின் வரி;
 
“தாது மலர் முடியிலே வேத நன்முறை
வாளுவமே தினம் வேல்வி யாலிலில்
புனை மூவயீர வேட்டியர் மிகவே புகனை புரிகோவே
(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)
 
தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
 
தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து, ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.
 
அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.
உ.வே.சாமிநாதையர் - Tamil Wiki
 
உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.
 
ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.
 
திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.
 
வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும்புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.
 
வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது

 
Source:- நாம் இந்து