மாடாய் நான் பிறக்கவேண்டும்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:27 PM | Best Blogger Tips



வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்

இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்

உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார்.

அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.

ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.

ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.

அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.

நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.

அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?

பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.

மன்னா ! நான் ஒரு சிவபக்தன்.

பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.

பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.

ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.

இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.

அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!

அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.

அவ்வளவு தான்

வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார்.

அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.

இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான்.

மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .

என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.

அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?

ஜோடி மாடு வேண்டாமா ?

அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.

திருச்சிற்றம்பலம்!!

சிவ சிவ!!

 


நன்றி இணையம்

✓ *இன்பத் தமிழ்...!*

மணக்கால் அய்யம்பேட்டை | 1:29 PM | Best Blogger Tips

 


✓ *இன்பத் தமிழ்...!*
*தொடர்ந்து படியுங்கள்...*
1. அந்தி, சந்தி:
*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
*சந்தி* : இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
2. அக்குவேர், ஆணிவேர் :
*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.
3. அரை குறை:
*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
4. அக்கம், பக்கம்:
*அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
*பக்கம்* : பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
5. அலுப்பு சலிப்பு :
*அலுப்பு* : உடலில் உண்டாகும் வலி.
*சலிப்பு* : உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
6. ஆட்டம் பாட்டம் :
*ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
*பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.
7. இசகு பிசகு:
*இசகு* : தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
*பிசகு* : தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.
8. இடக்கு முடக்கு:
*இடக்கு* : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
*முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.
9. ஏட்டிக்குப் போட்டி :
*ஏட்டி* : விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்)
*போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு :
*ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
*உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.
11. கடை கண்ணி :
*கடை* : தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.
*கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.
12. கார சாரம் :
*காரம்* : உறைப்பு சுவையுள்ளது.
*சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது.
13. காடு கரை :
*காடு* : மேட்டு நிலம் (முல்லை).
*கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).
14.காவும் கழனியும்:
*காவு* : சோலை.
*கழனி* : வயல். (மருதம் ).
15. கிண்டலும் கேலியும்:
*கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
*கேலி* : எள்ளி நகைப்பது.
16. குண்டக்க மண்டக்க :
*குண்டக்க* : இடுப்புப்பகுதி,
*மண்டக்க* : தலைப் பகுதி,
சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,
வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.
17. கூச்சல் குழப்பம்:
*கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)
*குழப்பம்* : துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.
18. சத்திரம் சாவடி :
*சத்திரம்* : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).
*சாவடி* : இலவசமாகத் தங்கும் இடம்.
19. தோட்டம் துரவு , தோப்பு துரவு :
*தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.
*தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்.
துரவு: கிணறு.
20. நகை நட்டு :
*நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)
*நட்டு* : சிறிய அணிகலன்கள்.
21. நத்தம் புறம்போக்கு :
*நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...
*புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.
22. நேரம் காலம் :
*நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
*காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.
23. நொண்டி நொடம் :
*நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.
*நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர்.
24. பற்று பாசம் :
*பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.
*பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...
25. பழக்கம் வழக்கம் :
*பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.
*வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.
26. பட்டி தொட்டி :
*பட்டி* : கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).
*தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.
27. பேரும் புகழும் :
*பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.
*புகழ்* : வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.
28. பழி பாவம் :
*பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.
*பாவம்* : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.
29. பங்கு பாகம்:
*பங்கு* : கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).
*பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து.
30. பிள்ளை குட்டி:
*பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.
*குட்டி* : பெண் குழந்தையைக் குறிக்கும்.
31. வாட்டம் சாட்டம் :
*வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.
*சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.✒️



















நன்றி இணையம்

பாரதம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:28 PM | Best Blogger Tips

 


🇮🇳✨ #பாரதம் என்பதை இந்தியா என்று பெயர் மாற்றம் செய்ததில் நாம் தவறு செய்துவிட்டோமா..!? -- கிரண் பேடி IPS
ஆம், தவறு செய்துவிட்டோம்.

அதில் சந்தேகமே இல்லை.!

ஒரு தேசத்தை ஒருவர் #ஆக்கிரமிக்கும் பொழுது...





செய்யும் முதல் வேலை பெயரை மாற்றி அதன் #அடையாளத்தை அழிப்பதுதுதான்.
ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த இது ஒரு யுக்தி, #அடிமைப்படுத்த இது ஒரு தொழில்நுட்பம்.
ஆப்பிரிக்க – அமெரிக்க வரலாற்றை நீங்கள் பார்த்தால், ஆப்பிரிக்கர்களை அமெரிக்கா அழைத்து வந்த பொழுது அவர்களின் ஆப்பிரிக்க பெயர்களை மாற்றி வேறு ஏதோ ஒரு பெயர் கொடுத்தனர்.

இதேதான் நமக்கும் நடந்தது.

சென்னை “மெட்ராஸ்” ஆனது இப்படிதான்.
இது போலத்தான் ‘இந்தியா’வும் – இதற்கு என்ன அர்த்தம்?

ஒரு அர்த்தமும் இல்லை. உங்களுக்கு நான் #அர்த்தமற்ற பெயரை வைத்தால், என் முன்னால் நீங்கள் ஒரு அர்த்தமற்ற, #முட்டாள் மனிதராகி விடுவீர்கள்.

ஏனென்றால் நமக்கு அர்த்தமுள்ள பெயர் இருக்கிறது.

நமக்கு ஒரு மிக உயர்ந்த #பாரம்பரியம், பண்பட்ட ஆதி #கலாசாரம் உள்ளது. அவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை. இந்த ரீதியில்தான் நாம் ‘#இந்தியா’ என்றானோம்.

தேசம் என்பது அனைவர் மனதிலும் நன்கு பதிய வேண்டும். உங்கள் மனதை எரித்து, இதயத்தில் நுழைந்து, உங்கள் உணர்ச்சியை தீவிரப்படுத்தினால்தான்,

ஒரு உண்மையான தேசமாக உருவாகும். இல்லையென்றால் தேசம் என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கும்.

துரதிருஷ்டவசமாக இதுதான் இன்றைய யதார்த்தம்.

ஆங்கிலேயர், 1947 இல் நம்மை விட்டு சென்ற பொழுது நாம் முதலில் செய்திருக்க வேண்டியது,

நம் அடையாளத்தை எதிரொலிக்கும் படியாக பூர்வீக பெயரையே வைத்திருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இங்கு அவர்களின் அடிமைகளை உருவாக்கிச் சென்றதால் இந்திய தேசத்திற்கு ஒரு அடையாளமற்ற ஆங்கில பெயரை கூறிக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலம் பேசியவர்கள் அவர்களின் அடையாளத்தை திணித்து நாட்டை விட்டு போய்விட்டார்கள். தற்போதைய பிரதமருக்கு நாம் வைக்கும் வேண்டுகோள், நம் பாரம்பரியம் அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் படியாக பூர்வீக பெயரையே நம் தேசத்துக்கு சூட்ட வேண்டும்.

நம்மிடையே இருக்கும் புத்திசாலிகள் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பெயரை உச்சரிக்கும் பொழுது அதில் சப்தம் இருக்கிறது. பெயருக்கான அர்த்தம் உளவியல் மற்றும் சமூகரீதியானது....

சப்தம் என்பது இந்தப் பிரபஞ்சம் சார்ந்தது. அதற்கென்று ஒரு #சக்தி உண்டு. ‘#பாரத்’ என்னும் சப்தத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. இந்த சக்தியானது இந்த தேசத்தில் அனைவர் #இதயத்திலும் எதிரொலிக்க வேண்டும்.
இந்தியனாக இருப்பதன் #பெருமையை அனைவரும் உணர செய்ய வேண்டும்.

தேசம் - அனைவரின் குறிக்கோளும், தேசத்தின் குறிக்கோளும் #ஒன்றிணைந்து இருப்பதுதான் --- ஸ்ரீ ஸ்ரீ சத்குரு அவர்கள்.

தேசம் நம் சுவாசம்.

மிக பத்திரமான பதிவு ☘️🌹☘️

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips

 































நன்றி இணையம்

தெய்வீகம் என்னும் போதை அப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:42 PM | Best Blogger Tips

 


ஒரு சர்க்கஸ் கூடாரத்திலிருந்து ஒரு சிங்கம் தப்பித்துவிட்டது.

பிடிப்பதற்கு எல்லோரும் ஆயத்தமானார்கள்.


மாஸ்டர் சொன்னார்.சிங்கம் மிக ஆபத்தானது.

ஆகவே அதை நெருங்க அதிக தைரியம் தேவை எனவே எல்லோரும் சிறிது மதுவை அருந்திகொள்ளுங்கள்.


எல்லோரும் மது அருந்த முல்லா மட்டும் மறுத்துவிட்டார்.


முல்லா சொன்னார் எனக்கு மது தேவையில்லை.

ஏனென்றால் சில அசாத்தியமான நேரத்தில் பயம் தேவைப்படுகிறது.


சிங்கத்தை பிடிப்பதைவிட நான் சிங்கத்திடம் பிடிபடாதிருக்க பயம் தேவைப்படுகிறது.


இது சரியான வழிதான்.


ஏனென்றால் மது உங்களுக்கு அளவுக்கு அதிகமான தைரியத்தை கொடுக்கிறது.

அதனாலேயே பல இடங்களில் அபாயத்தில் சிக்கிக்கொள்கிறீர்கள்.


ஆனால் அதை விட ஒரு சிறந்த போதை உள்ளது.


அது தெய்வீகம் என்னும் போதை.


பலர் மது அருந்துவதே இந்த சமுதாயம் என்னும் பைத்தியக்காரத்தனத்தை சமாளிக்க முடியாமல் போவதால்தான்.


ஆனால் தெய்வீகம் என்னும் போதை அப்படி அல்ல.


அது இந்த சமுதாயம் உருவாக்கின குப்பை கருத்துக்கள் உங்களிடம் நெருங்கவிடாமல் செய்கிறது.


#ஓஷோ




நன்றி இணையம்