வரகுண பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் ஒருவர் இருந்தார்
இரவு நேரங்களில் தவளைகள் கத்தும் ஒலி கூட சிவ நாமம் ஆன ஹர ஹர என்பது போல் இருக்கும்
உடனே அவர் ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜபிப்பார்.
அந்த அளவுக்கு சிவபக்தி கொண்டிருப்பவர்.
ஒரு முறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் வரகுண பாண்டிய மன்னர்.
ஒரு வீட்டு வாசலில் காய வைத்திருந்த எள்ளை திருடித் தின்று கொண்டிருந்தான் ஒருவன்.
அவனை கையும் களவுமாக பிடித்தனர் அந்த வீட்டு உரிமையாளர்கள்.
நகர்வலம் வந்து கொண்டிருந்த மன்னரும் அதைப் பார்த்தார்.
அவனருகில் சென்று ஏன்டா எள்ளை திருடி தின்னுகிறாய் ?
பசியால் தின்னுகிறாயா? எனக் கேட்டார்.
மன்னா ! நான் ஒரு சிவபக்தன்.
பசுவாகப் பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்து இருப்பேன்.
பூச்சியாக பிறந்திருந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.
ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை.
இந்த எள்ளை திருடித் தின்றதால் அதன் உரிமையாளர் என்னை செக்கு மாடாக பிறப்பாய் என்று சபித்தார்.
அடுத்த பிறவியில் அப்படி நான் பிறந்தால். நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே!
அதனால்தான் இந்தப் பாவத்தை செய்தேன் என்றான்.
அவ்வளவு தான்
வரகுண பாண்டிய மன்னன் அவன் மீது பாய்ந்தார்.
அவனது வாயோரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார்.
இதை பார்த்த அந்தத் எள்ளுத் திருடன் திகைத்தான்.
மன்னா ! ஏன் இப்படி செய்தீர்கள்? .
என் எச்சில் பட்ட எள்ளைத் தின்னலாமா? எனக் கேட்டான்.
அடேய் ! நீ மட்டும் சிவனுக்கு தனியாக செக்கிழுக்க முடியுமா ?
ஜோடி மாடு வேண்டாமா ?
அந்த மாடாய் நான் பிறக்கவேண்டும் என்று நான் அப்படி செய்தேன் என்றார் வரகுண பாண்டிய மன்னர்.
திருச்சிற்றம்பலம்!!
சிவ சிவ!!
நன்றி இணையம்