*நடைபயிற்சி என்றால் என்ன?*
*நடைபயிற்சி (Walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.*
*நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.*
*மெதுவாக நடப்பது*
*எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.*
*இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.*
*உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.*
*உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.*
*பவர் வாக்கிங்*
*கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.*
*இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.*
*தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.*
*இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.*
*ஜாகிங்*
*நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.*
*அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.*
*அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.*
*தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.*
*இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.*
*நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்:*
*சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.*
*இரத்த ஓட்டம் சீரடையும்.*
*நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.*
*நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.*
*அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.*
*நரம்புகளை உறுதியாக்குகிறது.*
*எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.*
*எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.*
*உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.*
*கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.*
*மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.*
*உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.*
*நன்கு தூங்கிட உதவுகிறது.*
*கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.*