படிக்ககூட நேரமில்லாமல் கடந்து போகும் இந்து மக்களே அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் என் உறவுகளே...
இந்துகோயில்களில் உள்துறை ஊழியர்கள் சார்ந்த மோசடிகள்
தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாளர்கள் மூன்று வகை,...
1) கமிஷ்னர், JC, AC, EO, செலக்க்ஷன் கிரேடு EO.
2) கோயில் அலுவலக மேனேஜர், சூப்பிரண்டட், கணக்குப்பிள்ளை, (கிளார்க்) மற்றும் அலுவலக பணியாளர்கள்.
3) குருக்கள், பர்சாரகர், ஓதுவார், தவில் நாதஸ்வரம், பூக்கட்டி, பண்டாரம், வேத சாஸ்திரிகள், மெய்க்காவல், வண்ணார் என்பர். இவர்களே உள்துறை பணியாளர்கள்.
இவற்றில் முதலில் உள்ளவர்கள் கோயில் பணத்தில் அதிக சம்பளம் வாங்கும் அதிகாரம் கொண்டவர்கள். உண்டியல் பணத்தில் கார்வாங்கி, அர்ச்சனை பணத்தில் பெட்ரோல் போட்டுக் கொண்டு காரில் வருபவர்கள்.
இரண்டாவதாக உள்ளவர்கள் இந்துசமய அறநிலையத் துறையால் நேரடியாக நியமிக்கப் பட்டவர்கள், மற்றும் தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்கள் என உண்டு. இவர்களுக்கு அரசு சம்பளமும் உண்டு. மேலும் கோயில் அலுவலகத்திலேயே அமர்ந்தபடி ஒரு துளி வியர்வை சிந்தாமல் அலுங்காமல் குலுங்காமல் மேற்படி வகையில் வருமானமும் உண்டு.
பெரிய கோயில்களில் இந்த அலுவலக பணியாளர்கள் வைத்ததே சட்டம். அலுவலகத்தில் இருந்து சுவாமிக்கு எந்த பொருளும் போகாது. ஆனால் காலபூஜை நடைபெற இவர்களுக்கும், குருக்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு.
ஒரு உபயதாரர் வேண்டுதலுக்காக அலுவலகத்தில் பணம் கட்டினால், அந்த பணம் அலுவலகத்தோடு சரி. பெயருக்கு ஒரு ரசீது கிழித்துவிட்டு முறைப்படி பங்கு போடப்பட்டுவிடும்.
மறுநாள் அந்த உபயதாரர் அந்த வேண்டுதலை செய்ய வரும்பொழுது, குருக்கள் எப்பாடு பட்டாவது உரிய பொருட்களை சேகரித்து அந்த வேண்டுதலை நிறைவேற்றி தந்துவிட வேண்டும். குருக்கள் அவர் சாமார்த்தியத்திற்க்கு ஏதாவது உபயதாரரிடம் வாங்கிக் கொள்ளலாம்.
குருக்கள் இப்படி சமர்த்தாக நடந்து கொள்ளாமல் உங்கள் உபயம் திற்க்காக அலுவலகத்தில் இவ்வளவு பணம் கட்டினீர்கள். ஆனால் அலுவலகத்தில் இருந்து எந்த பொருளும் வரவில்லையை என்று கூறினார் அவ்வளவுதான். அதன்பின் அந்த குருக்களை ஆயிரம் கண்கள் பின்தொடரும். ஏதாவது தவறு கண்டிப்பிடித்து பழி வாங்குதல் நடைபெறும்.
கிராமக் கோயில்கள் வகையில் சுமார் நூறு கோயிலுக்கு ஒரு கிளார்க் இருப்பார். இந்த கிளார்க் யார் என்றால், அந்தப் பகுதியில் பெரியசாதி எதுவோ, அந்த சாதியை சார்ந்தவராக இருப்பார்.
இந்த நூறு கோயிலுக்கும் எவ்வளவு நிலம் உள்ளது என்பது இந்த கிளார்க்கிற்கு அத்துப்படி. அதிகபட்சம் இந்த நிலங்கள் எல்லாம் இந்த கிளார்க் சார்ந்த சாதிக்காரனிடம் இருக்கும். நாளை அந்த கிளார்க்குக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அந்த சாதிக்காரன் வந்து பாதுகாப்பான்.
அடுத்து மூன்றாவதாக உள்ளவர்களே உள்துறை ஊழியர்கள். இந்த உள்துறை ஊழியர்களுக்கு பிரதானமாக தேவை ஜால்ரா.
ஜால்ரா போடத் தெரிந்தால் இந்த உள்துறை ஊழியர்கள் பிழைத்துக் கொள்ளலாம். இல்லையேல் பிழைப்பு காலி. காரணம் பணிப் பாதுகாப்பு இல்லை.
கோவில் ஊழியர் ஒரு குருக்கள் அல்லது நாதஸ்வரம் 60 வயது ஆகி ஓய்வு பெற்றுவிட்டால் அதன் பின் முறைப்படி குருக்களையோ நாதஸ்வரம் வாசிப்பவரை ஓதுவார்களையோ நியமிப்பதில்லை இது அறமற்ற துறை அதிகாரிகள்.
ஏற்கனவே, உள்துறை ஊழியர்களில் வேதம் ஓதும் சாஸ்திரிகளை நாற்பது ஆண்டு முன்பே திராவிட ஆட்சிகள் கோயிலை விட்டு விரட்டி விட்டனர்.
கோயில் நந்தவனத்தில் இருந்து தினம்தோறும் பூக்கட்டி தரும் பூக்கட்டியை அவருக்குரிய மாணிய நிலத்தை பிடுங்கி அனுப்பியாயிற்று.
அடுத்து கோயில்களில் நித்தம் சங்கு இசைக்கும் பண்டாரம், இறைவன் துணிகளை சுத்தம் செய்யும் வண்ணார் என அவர்களுக்குரிய மாணிய நிலங்களையும் பிடுங்கி வெளியே துரத்தியாயிற்று.
அடுத்து மீதி இருப்பது குருக்கள், ஓதுவார், நாதஸ்வரம். இதில் பல கோயில்களில் ஓதுவார் நியமிக்க படவில்லை அதேபோல் பல கோயில்களில் நாதஸ்வரமும் நியமிக்கப்படவில்லை. சில கோயில்களில் என் தந்தை நாதஸ்வரம் வாசித்தார் என்ற முறையில் நான் வாசிக்கின்றேன் என்ற முறையிலும், இன்ன கோயில் நாதஸ்வரம் என்ற அடையாளத்திற்கு நாதஸ்வர பணி நடைபெறுகின்றது.
மீதி இருப்பது குருக்கள். அவருக்கு வேறு வழி இல்லை. கோயில் பூஜை விட்டால் வேறு எதுவும் தெரியாது.
பெரிய கோயில்களில் குருக்களுக்கு 60 வயது என்று ஓய்வு பெற்றால் அடுத்து முறைபடி வேறு அர்ச்சகரை நியமிக்காமல், இருக்கும் அர்ச்சரை கொண்டு அல்லது எதிர்காலத்தில் நமக்கு அர்ச்சக நியமனம் கிடைக்கும் என்ற நினைப்பில் வாரிசுகள் தட்டு காசு வருமானத்தை நம்பி பணி செய்வார்.
இதில் ஒரு சில பெரிய கோயில்களில் வாரிசு அர்ச்சகர் நியமனத்திற்க்கு பல லட்சங்களில் பேரம் நடைபெறும்.
இவற்றுக்கெல்லாம் மசியாமல் ஏதோ ஒரு குருக்கள் சட்டம் பேசி, சட்டரீதியாக போராட்டம் மேற்க்கொண்டால் ஒட்டு மொத்த துறையே அவரை பழி வாங்கக் துடிக்கும்.
இப்படி கோயில்களில் உள்துறை பணியாளர்களை நியமிக்காமலேயே, ஒரு துறை கோயில் வருமானத்தை சுரண்டிக் கொண்டிருக்கின்றது. பல கிராமத்து கோயில்களில் அர்ச்சகர் நியமனம் என்ற பேச்சுக்கு இடமே இல்லை ஆனால் கிராம கோயில்கள் சொத்துகளை ஏலம்விட்டு கொள்ளையடிக்க மட்டும் முதலில் வந்து நிற்க்கும் இந்த துறை.
இந்துக்களிடமும் பக்தர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படாதவரை இதற்க்கு விமோசனம் இல்லை
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தும் நம்முன்னோர்கள் வழிபட்டு வந்த இந்துகோவில் அனைத்தும் ஒருவேளை பூஜைகள் இல்லாமலும் கோவில் கட்டிடம் எந்த வித பராமரிப்பு இல்லாமல் அழிந்து கொண்டு இருக்கிறது பல கோவில்கள் 50 ஆண்டுகள் ஆகியும் 12ஆண்டுக்கு ஒருமுறை நடை பெரும் மகா கும்பாபிசேகம் வழிபாடு செய்யாமல் கோவில் சொத்தை அபகரிக்க திட்டம் போட்டு கோவில் மட்டும் அழித்து வருகிறது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த விதமான நவீன இயந்திரங்களும் இல்லாத காலத்தில் வெறும் உளி, சுத்தியல் கொண்டு கடினமான பாறையில் நுட்பமாக செதுக்கப் பட்ட அற்புதமான கலை நயமிக்க மன்னர்கள் கட்டிய கலை நயமிக்க கோவிலை காப்பாற்ற வேண்டும்
உங்களுக்கு அக்கறை இருந்தால் இதை உங்கள் நண்பனுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புங்கள் ஜெய்ஹிந்த்.
பாரத் மாதா கி ஜே.
வந்தே மாதரம் கலியுகத்தில் கடவுள் வருவார் காப்பாற்றுவார் அதுவரை நாம் இந்த மாதிரி தகவலை பகிர்வோம். மக்களுக்கு இந்து கோயில்களை பற்றி தெளிவு படுத்துவோம். தெரிவிப்போம். வாழ்க பாரதம். வளர்க தமிழ் மாநிலம்.
நன்றி இணையம்