புதிதாக வெளிநாடு வருபவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips




* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..

* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது..அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்..மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் ..(அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்..ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க )

* புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்..வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை...ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது..குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்..

* வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை..போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை..வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்..அவர்களே பார்த்துகொள்வார்கள்...

* தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்..நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்..ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்..டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்..

* சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்..சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும்காணமா இருப்பாங்க..ஆனா விடாதீங்க..விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர)..உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்..ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்..

* மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்...விலையும் அதிகமில்லை..நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்..மொக்கையாக வாங்கிவிட்டு..contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்...இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை...உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்..டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்..

*பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்..போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு..எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்...

* வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்...சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்..வளைகுடாவில் வரி கிடையாது

* இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்..பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்..இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்..

* இந்தியாவுக்கு கொண்டு செல்ல Electronic பொருட்கள் வாங்கும்போது அது இந்தியாவில் என்ன விலை என்று தெரிந்து வாங்குங்கள்..உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட சில பொருட்கள் விலை அதிகம்..இந்தியா புறப்பட ரெண்டு மாதங்களுக்கு முன் taxfreeயாக வாங்கலாம்..பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள்..இந்தியா எடுத்து வந்து உபயோகிக்கலாம்...

* கல்லூரி மாணவர்களுக்கு: ஜெராக்ஸ் எடுப்பது, மாற்று சாவி செய்வது எனக்கு தெரிந்து ஸ்வீடன், பின்லாண்டு, நார்வேயில் ரொம்ப கஷ்டம்...பிரிட்டனில் இதெல்லாம் சர்வ சாதாரணம்..அதனால் தயாராக இந்தியாவில் வாங்கி வந்து விடுங்கள் ..ஏனென்றால் புத்தகங்கள் விலை அதிகம்..

* பிரிட்டன், scandinavia போல் இல்லை...ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் வந்தால், பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தது போல் இருக்கும்..பிரிட்டனில் possibilities அதிகம்..நவீன இந்தியா மாதிரி இருக்கும்..எல்லா பொருளும் கிடைக்கும்.. பொது இடங்களில் ஆண்-பெண் நெருக்கங்கள் ஸ்வீடனில் மிக அதிகம்..யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்..topless ஆகா குளிக்கவும் சட்டபடி முடியும்..பிரிட்டனில் அப்படி இல்லை...முத்தமே சில நேரங்களில் தான் ...ஸ்வீடனில் என்னால் சொல்ல முடியவில்லை..நான் சொல்ல வருவது என்னவென்றால்..இதையெல்லாம் நீங்களும் கண்டு காணமல் இருக்க வேண்டும் என்பதே...staring is considered indecent .. (அப்ப அவங்க பண்றது என்னவாம்ன்னு கேக்காதீங்க..)

* Pub களில் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிடுங்கள்..அதுக்கு மேல் அடியெடுத்து வைக்காதீர்கள்...சோக்காளியா இருந்தா சீக்காளியா ஆயிடுவீங்க..

* கடைசியாக...இந்தியா வரும்போது, ஸீன் போடுவதை தவிர்த்து, நம் நாட்டில் இருக்கும் சிறப்புக்களை எண்ணி பாருங்கள்...இந்தியாவை அடிக்கடி compare செய்து எரிச்சலூட்டாதீர்கள்.. நண்பர்களுக்கு தண்ணி, தம் வாங்கி வருவதை விட ஷூக்கள், துணிகள் வாங்கி வந்து கொடுங்கள்...கண்டிப்பாக பெற்றோரை அழைத்து செல்லுங்கள்.."


- ராஜேஷ் 'பலவேஷம்'



வீடு கட்ட வாங்க போகிறீர்களா....?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:53 PM | Best Blogger Tips

நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவு சொந்தமாக ஒரு வீடு கட்டுவது. இந்த கனவை நனவாக்குவதில் சிக்கலாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். சிக்கல் நம்பர் ஒன், எகிறிக் கிடக்கும் ரியல் எஸ்டேட் விலை. குறைந்தபட்சம் ஆறேழு வருடங்களுக்கு முன்பு நிலம் வாங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்தான். நீங்கள் வாங்கிய நிலத்தின் மதிப்பு இன்றைக்கு பல மடங்கு பெருகி இருப்பதைப் பார்த்து நீங்களே உங்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், அன்றைக்கு வாங்கத் தவறியவர்கள் இன்று வாங்க நினைத்தால் அதைவிட பல மடங்கு பணம் கையில் இருக்க வேண்டும்.

சிக்கல் நம்பர் டூ, மணல், ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டடம் கட்டத் தேவையான பொருட்களின் விலை வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் கொண்டிருப்பது. மணல் விலை ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சென்னையில் இருக்கும் விலை வேறு; நெல்லையில் இருக்கும் விலை வேறு. செங்கல்லின் கதையும் அதேதான். இவை தவிர, கட்டடம் கட்டுபவர்களுக்கான கூலியும் பாரதூரமாக மாறுகிறது. இப்படி சந்துக்குச் சந்து கட்டடம் கட்டுவது தொடர்பான அத்தனை விஷயங்களும் வெவ்வேறாக இருக்க, புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் ஏகத்துக்கும் குழம்பித்தான் போவார்கள்.

''என் பக்கத்து வீட்டுக்காரர் கட்டுற அதே அளவுக்குத்தான் நானும் வீடு கட்டுறேன். ஆனா, என்னைவிட கம்மியாத்தான் அவரு செலவு பண்றாரு. நான்தான் ஏமாந்துட்டேன்'' என்று புலம்புவர்கள் ஒருபக்கம்...

''எட்டு லட்ச ரூபாய்க்குள்ள வீடு கட்டி முடிச்சுடலாம்னு நெனைச்சு ஆரம்பிச்சேன்... இன்னைக்கு பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டிடுச்சு'' என்று புலம்புவர்கள் இன்னொரு பக்கம்... ஆக மொத்தத்தில், இன்றைக்கு கரெக்ட்-ஆன செலவில் வீடு கட்டுவது எப்படி என்பது சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது. உள்ளபடி ஆயிரம் சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பணம் செலவாகும்? கான்ட்ராக்ட் முறையில் வீடு கட்டப் போவதாக இருந்தால் எவ்வளவு தரலாம்? ஃபிளாட்-ஆக இருக்கும் பட்சத்தில் எவ்வளவு விலை கொடுத்து வாங்கலாம்? என்பதை யாராவது எடுத்துச் சொன்னால் கோடி புண்ணியமாகப் போகும் என்கிறீர்களா?

இதோ உங்களுக்காகவே சரியான செலவில் வீடு கட்ட சூப்பர் மாடல் பட்ஜெட்... ஒவ்வொரு இடத்தைப் பொறுத்து ஒவ்வொரு விலை இருந்தாலும் இந்த பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஓரளவு சரியான விலைதான் நாம் கொடுக்கிறோமா என்பதை செக் செய்து கொள்ளலாம்.

வீடோ, ஃபிளாட்டோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், பில்டர் அல்லது புரமோட்டர்கள் பல்வேறு டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி நம்மை குழப்ப வாய்ப்பிருப்பதால், முதலில் சில விஷயங்கள் பற்றி நமக்குள் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வோம்.


கார்பெட் ஏரியா

நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவு. அதாவது, வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுக்குள் கார்பெட் விரித்தால் எவ்வளவு இடத்தை அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா.

பிளின்த் ஏரியா

கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்தது.

சூப்பர் பில்ட் அப் ஏரியா

பிளின்த் ஏரியா அளவில் 15% முதல் 20% அதிகரிப்பது சூப்பர் பில்ட் அப் ஏரியா. இந்த பரப்புக்குதான் விலை சொல்வார்கள். பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றின் அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும்.

யூ.டி.எஸ்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, அந்த மனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதை குறிப்பது. 'பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ (Undivided Share) என்று கிரய பத்திரத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும். (யூ.டி.எஸ். எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை பெட்டிச் செய்தியில் பார்க்க!)

மேற்சொன்ன இந்த நான்கு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், உங்களுக்குத் தேவையான அல்லது உங்களுக்கு கிடைக்கப் போகும் கட்டடத்தின் அளவு தெரிந்துவிடும். இனி, இந்த கட்டடம் கட்ட என்னென்ன பொருட்கள் தேவைப்படும்? அதன் விலை என்ன? என்பதைப் பார்ப்போம்...





என்ன செலவாகும்?

ஆயிரம் சதுர அடி பிளின்த் ஏரியா கட்டடம் கட்ட சுமார் 15 லட்ச ரூபாய் செலவாகும். (ஒவ்வொரு பொருளுக்கும் எவ்வளவு செலவாகும் என்பது மேலே தனியாகக் கொடுக்கப் பட்டுள்ளது.)

சொல்லப்பட்ட கணக்கி லிருந்து விலைவாசி உயர்வைப் பொறுத்து மணல், செங்கல், சிமென்ட், கம்பி மற்றும் இதர பொருட்களின் விலை 2% முதல் 3% வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த கணக்குபடி ஒரு சதுர அடி கட்ட சுமார் 1,500 ரூபாய் ஆகிறது. இது பில்டர்கள் கட்டுவதற்கான செலவு. நீங்களே முன்நின்று கட்டும்போது 1,400 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை குறைய வாய்ப்பிருக்கிறது. முதல் தரமான பொருட்களை வாங்குவதாக நினைத்தே இந்த கணக்கு போடப்பட்டுள்ளது. சென்னையைவிட மதுரை, சேலம், திருநெல்வேலியில் மணல், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை குறைவு என்பதால், செலவு இன்னும்கூட குறைய வாய்ப்பிருக்கிறது.

நாம் வாங்கும் ஒரு பிளாட்டின் விலை ஓரளவு நியாயமானதாக இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது என்ற விஷயத்துக்கு இப்போது வருவோம்... உதாரணமாக நீங்கள் சென்னை தாம்பரத்திற்கு அருகில் ஒரு ஃபிளாட்டை வாங்குவதாக முடிவு செய்கிறீர்கள். அந்த ஃபிளாட்டின் விலை ஒரு சதுர அடி சுமார் 3,000 ரூபாய் என்று பில்டர் சொல்கிறார்... நீங்கள் வாங்கப்போகிற ஃபிளாட்டின் சூப்பர் பில்ட் அப் ஏரியா 952 ச.அடி. என்றும் உங்களுடைய யூ.டி.எஸ். 555 ச.அடி. என்றும் அவர் சொல்கிறார்.

ஆனால், நம் கணக்குப்படி எவ்வளவு செலவு ஆகும் ஃபிளாட்டின் விலை எவ்வளவு வரும் என்று பார்க்கலாம்...

அங்கு மனை விலை ஒரு சதுர அடி 1,400 ரூபாய் என்று விசாரித்தபோது நமக்குத் தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்... அடுத்து கட்டுமானச் செலவு எவ்வளவு ஆகும் என்று பார்க்கலாம்... நாம் முன்பு கணக்கிட்டபடி ஒரு சதுர அடி 1,400 ரூபாய் எனும்பட்சத்தில் 952 ச.அடிக்கான கட்டுமானச் செலவு 13,32,800 ரூபாய் வரும். அதேபோல் 555 சதுர அடி மனைக்கான விலை (சதுர அடி விலை 1,400 ரூபாய்) 7,77,000 ரூபாய் ஆகும். ஆக, மொத்தம் 21,09,800 ரூபாய் ஆகும்.

இந்த கணக்கின்படி பார்த்தால் ஒரு ச.அடிக்கான விலை சுமார் 2,220 ரூபாய் வருகிறது. இதற்கு மேல் பில்டர் சொல்லும் விலை அவரது லாபமாகும். ஒருவேளை அவர் 20% லாபம் வைத்தால் சதுர அடி 2,660 ரூபாய் என்று வைத்து விற்பார். ஒருவேளை அவர் பத்திரிகை மற்றும் டி.வி-களுக்கு விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்து, மேலும் புராஜெக்ட்டுக்கு கடனும் வாங்கி இருந்தால், கடனுக்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்ப்பார். அந்த வகையில் அவர் சுமார் 2,900-3,000 ரூபாய் வரை சொல்ல வாய்ப்பிருக்கிறது.




கவனிக்க வேண்டியவை..!

கட்டிய வீட்டை வாங்கும்போது!

* தனி வீடுகளைப் பொறுத்தவரையில் பிளின்த் ஏரியா 1,000 சதுர அடி என்றால் கார்பெட் ஏரியா 750-800 சதுர அடி வரை இருக்கும். ஃபிளாட் என்று வரும்போது, 600-650 சதுர அடிதான் இருக்கும். பொது இடங்கள், பார்க்கிங் என பொதுவான வசதிகள் அதிகமாக அதிகமாக, கார்பெட் ஏரியா என்பது குறைந்து கொண்டே வரும்.

* எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து உறுதி செய்யுங்கள். கட்டி முடித்த ஃபிளாட் என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவை துல்லியமாகக் கணக்கிடுங்கள். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்ட் அப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அந்த பில்டர் நியாயமானவர். அதற்கு மேல் இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கேளுங்கள்.

ஏனென்றால், நீங்கள் விற்கும்போது இந்தப் பிரச்னை எழும். மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள், நீச்சல் குளம், தோட்டம், வாக்கிங் செல்லும் நடைபாதை போன்றவை விடப்பட்டிருக்கும் புராஜெக்ட்களில் பிளின்த் ஏரியா, சூப்பர் பில்ட் அப் ஏரியா 30-35 சதவிகிதமாக இருக்கும் என்பது வேறு விஷயம்.

* அடுக்குமாடி குடியிருப்பு களில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடைபெறுகிறது. அதனால் அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்ப்பது அவசியம். வீட்டுக் கடன் வாங்காத பட்சத்தில் முறைப்படி அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்ட வீடுகளை குறைந்த விலைக்கு தள்ளிவிடுவது நடக்கிறது. இதுபோன்ற வீடுகளை வாங்கினால் பிற்காலத்தில் பிரச்னை வர வாய்ப்பு இருக்கிறது. அவசரத்துக்கு வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.

* காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள். சில பில்டர்கள்/புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்று விடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

* சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கார் நிறுத்தும் இடம் சூப்பர் பில்ட் அப் ஏரியாவில் சேர்க்கப்பட்டிருக்கும் பட்சத்தில் கார் நிறுத்தும் இடத்துக்குப் பணம் கொடுக்கத் தேவையில்லை. திறந்தவெளி கார் நிறுத்தும் வசதி என்கிறபோது நயா பைசா கூட கொடுக்கத் தேவையில்லை.

* தனி வீடு என்கிறபோது அஸ்திவாரம் எத்தனை அடி என்பதை கவனியுங்கள். குறைந்தது நான்கு அடி போடுவது கட்டடத்துக்கு நல்லது. சில பில்டர்கள் இரண்டு அடிதான் தோண்டுவார்கள் என்பதால் உஷாராக இருப்பது நல்லது. இதேபோல், வீட்டில் அறையின் உயரம் குறைந்தது 10 அடி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். சில பில்டர்கள் ச.அடி விலையைக் குறைத்துச் சொல்லிவிட்டு, வீட்டின் உயரத்தை 9.5 அடி அல்லது 9 அடியாக குறைக்கவும் வாய்ப்புண்டு!

* வீட்டைச் சுற்றி குறைந்தது 5 அடி விட்டிருக்கிறார்களா என்பதைக் கவனியுங்கள். பல பில்டர்கள் 2 அடிதான் விடுகிறார்கள். இது பிற்காலத்தில் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.



சொந்தமாக வீடு கட்டும்போது..!

* செப்டிக் டேங், மாடிப் படி, தண்ணீர் தொட்டி, போர்ட்டிகோ, சுற்றுச்சுவர் கணக்கை எல்லாம் மொத்த சதுர அடி கணக்கில் சேர்க்க விடாதீர்கள். உதாரணத்துக்கு சுற்றுச் சுவர் கட்ட ஒரு சதுர அடிக்கு 200 ரூபாய்தான். அந்த வகையில் மேற்கண்ட செலவுகளை தனியாக கணக்கிட்டால் மொத்த செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது.

* கீழ்தளத்தை விட மேல்தளம் கட்டும்போது செலவு 10-15% குறையும். கணக்குபடி இன்னும் அதிகமாககூட குறைய வேண்டும். ஆனால், பொருட்களை மேல் தளத்துக்கு எடுத்துச் செல்ல கூடுதல் கூலி கொடுக்க வேண்டியிருக்கும்.

நன்றி :

விகடன்

பிள்ளையார் நான்மி (விநாயகர் சதுர்த்தி )

மணக்கால் அய்யம்பேட்டை | 12:24 PM | Best Blogger Tips


பிள்ளையார் நான்மி (விநாயகர் சதுர்த்தி ) கொண்டாடும் தமிழர்கள் கவனத்திற்கு! இயற்கையை பாதுகாப்பது உங்கள் கையில் !

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் தமிழர்கள் பிள்ளையாரை முதன்மை படுத்தி வழிபாடு செய்து வருகிறார்கள். பிள்ளையார் வழிபாடு பல ஆயிரம் காலங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது. திருமூலர் 'ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை' என்று பாடி பிள்ளையாரை சிறப்பிக்கிறார்.

பிற்கால ஔவையாரும், ' தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சேர்வார் தமக்கு' என்று பாடியுள்ளார். பல தமிழ் மெய்யியல் அறிஞர்கள் பிள்ளையாருக்கு காப்பு எழுதி வைத்து பாடி உள்ளனர். பிள்ளையாரை குறித்த தத்துவ விளக்கங்கள் பக்தி இலக்கியங்களில் நிரம்பி இருந்தாலும், அதனை சுற்றி பல புராண இட்டுக் கதைகளும் இருந்தே வருகிறது. இந்தியாவில் முதல் பிள்ளையார் கோவிலும் தமிழகத்தில் தான் தோன்றியது. தமிழ் ஆசிவக கடவுளாக பிள்ளையார் சித்தரிக்கப்பட்டாலும், வடநாட்டில் பிள்ளையாரை சுற்றி பல கதைகள் பின்னப்பட்டு பிள்ளையாருக்கு பெரு விழா எடுத்து வருகிறார்கள். இது ஒரு மதத்தின் அடையாளமாக இப்போது மாறி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பிள்ளையாருக்கு இவ்வளவு பெரிய பேரணியோ, விழாவோ எடுக்கப்பட்டது இல்லை. ஆரிய இந்துத்வா நெறியை தீவிரமாக பரப்பும் நபர்கள் திட்டமிட்டே விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்வை தமிழகத்தில் பெரு விமர்சையாக கொண்டாட தீர்மானித்தனர். வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வை , வீதிகளில் பெரும் சத்தத்துடன் கொண்டாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர். வீட்டுக் கிணற்றில் பிள்ளையார் சிலையை மூழ்கடித்த தமிழர்கள், இப்போது கடலில், ஏரியில் கொண்டு போய் கரைக்கும் நிலைக்கும் ஆளாக்கப்பட்டனர். பிற்காலத்தில், பெரும் பெரும் பிரமாண்ட பிள்ளையார்கள் தோற்றுவிக்கப்பட்டது. பல வர்ணங்கள் , வடிவமைப்புகள் பிள்ளையாருக்கு கொடுக்கப்பட்டது. இது ஒரு வியாபாரமாக உருவாகி, இன்று பல ஆயிரம் , லட்சம் பிரமாண்ட பிள்ளையார்கள் இந்த தினத்தன்று உருவாக்கப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும் கொண்டு போய் கரைக்கும் இடமாக கடல் விளங்குகிறது.

ஏற்கனவே , பல ஆயிரம் டன்கள் எடை கொண்ட குப்பைகள் கடலில் கலந்து கடல் மாசடைந்து உள்ளது. ரசாயனம் கலப்பதாலும், குப்பைகள் சேர்வதாலும் , கடல் வாழ் அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இந்த நிலையில் பிள்ளையாருக்கு பல லட்சம் சிலைகள் உருவாக்கி அவற்றை கடலில் கரைப்பதால் கடல் வளங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இந்த சிலைகளில் ரசாயன பூச்சு இல்லை என்று அரசும் உறுதி செய்வதில்லை . உறுதி செய்ய அரசுக்கு போதிய வசதியும் இல்லை. அதனால் பிள்ளையார் சிலை வியாபரம் செய்யும் வியாபாரிகள் பல வண்ணங்களில் ரசாயனத்தை பிள்ளையாருக்கு பூசுகின்றனர். பாதரசத்தை பயன்படுத்துகின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை கொண்டு பல பிரமாண்டசிலைகள் வேறு உருவாக்கப்படுகிறது . அதன் மேல் பல வர்ணங்கள். அதில் பல்வேறு அலங்கார உலோக இணைப்புகள் வேறு இணைக்கின்றனர்.

இவை அனைத்தும் கடலில் கரைப்பதால் , கடல் தான் மாசுபடுகிறது . இயற்கை வளங்கள் தன்னுடைய இயல் தன்மையை இழக்கிறது. இந்த சிலைகள் முற்றிலும் கடலில் கரைய சில மாதங்கள், ஆண்டுகள் கூட தேவைப்படுகிறது. நமக்கு எப்படி வீடு என்பது நாம் வாழும் இருப்பிடமாக இருக்கிறதோ , அப்படித் தான் கடல்வாழ் உயிர்களுக்கு கடல் தான் வீடு இருப்பிடம் எல்லாமே. நம்வீட்டில் குப்பையை கொட்டினால் நமக்கு கோபம் வருகிறது அல்லவா? அப்படி இருக்கும் போது கடல்வாழ் உயிர்களுக்கு அதன் வீடாகிய கடலில் குப்பையை கொட்டினால் கோபம் வராதா ?

இதை நாம் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும். பிள்ளையார் நான்மியை யாரும் கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை அக்காலத்தில் நம் வீட்டில் எளிமையாக கொண்டாடியதை போல் கொண்டாடினால் எந்த சிக்கலும் இல்லை . சிறிய அளவிலான களிமண் பிள்ளையாரை மட்டுமே உருவாக்கி அதை நீரில் கரைத்தாலும் எந்த பாதிப்பும் இல்லை . ஆனால் பிரமாண்ட பிள்ளையார் சிலையை உருவாக்கி அதை கடலில் குப்பையாக சென்று சேர்ப்பது இயற்கைக்கு விரோதமானது. கரையாத தன்மையுடை எந்த அலங்கார இணைப்புகள், உலோகங்கள், கலவைகள் பிள்ளையாருக்கு நாம் சூட்டக் கூடாது. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்னும் ரசாயன கலவையை வைத்து பிள்ளையாரை உருவாக்கக் கூடாது. இவற்றையெல்லாம் நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். பல்லின மக்களை முகம் சுளிக்க வைக்கும் பெரும் சத்தம், பெரும் பேரணி, நெரிசல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இத்தைகைய பண்பாடு தமிழர்கள் முன்பு கடைபிடிக்கவும் இல்லை. தற்காலத்தில் வந்த பழக்கம் தான் இந்த பிரமாண்ட பிள்ளையார் பேரணி , திருவிழா, கடலில் கரைப்பது போன்றதெல்லாம்.

ஆகவே தமிழர்களே, பிள்ளையாரை முன் காலத்தில் வழிபட்டது போல் எளிமையாக இல்லத்தில் சிறு களிமண் பிள்ளையார் சிலை வைத்து வழிபடுங்கள் . அருகாமையில் உள்ள கிணறு , குளங்களில் அதை கரைத்து விடுங்கள். தற்காலத்தில் உள்ள பிரமாண்ட பிள்ளையார் சிலை , ஊர்வலம், கடலில் கரைப்பு போன்ற ஆடம்பரத்தை தவிர்த்து இயற்கைக்கு உதவுங்கள்.

பிள்ளையார் நான்மி கொண்டாடும் தமிழர்களுக்கு நம் வாழ்த்துகள்!

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:23 PM | Best Blogger Tips
அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர். 

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள். 
மருந்து - 1
நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2
ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3
சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்
அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!

வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும்.

இந்த நோய்க்கு கிராமங்களில் மண் பாண்டம் செய்யும் குயவர்களிடம் செல்வார்கள்.அவர்கள் காவி மண்ணினால் அக்கி நோய் கண்டவரின்
காளி அம்மன் போன்று உருவம் உடலில் வரைந்து மந்திரம் செபித்து அனுப்பி விடுவார்கள். வலியும்,வேதனையும் நீங்கி குணமடைவர்.

அக்கி நோய்க்கு சித்த மருத்துவ முறையில் அனுபவ முறை தீர்வுகள்.
 
மருந்து - 1

நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி எனக் கேட்டால் கொடுப்பார்கள். அதனுடன் பன்னீர் வாங்கி வந்து பூங்காவி பொடியை துணியில் வைத்து சளித்து எடுத்து பன்னீர் சேர்த்து குழைத்து அக்கி உள்ள இடங்களில் பூசவும். எரிச்சல்,வலி, வேதனை குறையும்.

மருந்து - 2

ஊமத்தை இலை பறித்து வந்து அரைத்து அதனுடன் வெண்ணை சேர்த்து கலந்து அக்கியின் மேல் பூசவும்.கொப்புளங்கள் அடங்கும்.எரிச்சல்,வலி குறையும்.தொடர்ந்து ஒரு வாரம் போட்டு வரவும்.

உணவில் காரம்,உப்பு,குறைக்கவும்.குளிர்ச்சியான உணவுகள் உண்ணவும். வெயிலில் அலையக்கூடாது,

மருந்து - 3

சித்தா மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10-கிராம் வாங்கி அதில் ஒரு மொச்சை அளவு எடுத்து வெண்ணையில் [எலுமிச்சை]அளவு கலந்து காலை மாலை உண்ணவும்.7-நாள் தொடர்ந்து மருந்தை உண்ணவும். அக்கி குணமாகும்.

நன்றி !
Dr.அரவின் தீபன்

விநாயகர்-கொழுக்கட்டையின் தத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:45 PM | Best Blogger Tips


விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும். இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும்.

பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.

அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.

விநாயகர்-கொழுக்கட்டையின் தத்துவம்;
--------------------------------------------------------
விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும்.  இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும்.

பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.

அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.

கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. 

எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.
 
“விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன்..,
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.

எவரும் அதிகம் விரும்பாத வெள்ளெருக்கு மாலை, மருத்துவக் குணமுடைய அருகன் புல் அர்ச்சனை ஆகியனவும் விநாயகருக்குப் பிடித்தமானவையாகும். “மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களுக்கும் நான் ஆதரவாக நிற்பேன்’ என்பதை வெள்ளெருக்கு மாலை தெரிவிக்கின்றது.

“விநாயகரை வணங்கினால் நோய்கள் தீரும்; பிறவி நோயும் மாயும்’ என்பதை அருகன்புல் அர்ச்சனை அறிவிக்கின்றது. கணபதியைத் தொழுவோம்! கவலையெல்லாம் மறப்போம்!

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

ஆனைமுகனுக்கு ஏன் அறுகம்புல்?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:39 PM | Best Blogger Tips

சாதாரணமாக கிடைப்பதாலேயே மிகச் சிறந்தவைகளின் மதிப்புகளை நாம் உணரத் தவறி விடுகிறோம். அது புல்லில் தொடங்கி மனிதன் வரை பொருந்தும்.


நம் வீட்டுத் தோட்டங்களில் சாதாரணமாக வளர்ந்து கிடக்கும் அறுகம்புல் பற்றி நமக்குத் தெரியுமா? ‘விநாயகருக்கு மாலையா கட்டி அம்மா போடுவாங்க!’ என  ஊகமாக ஒரு விடை மனதில் தோன்றும். ஏன் இது விநாயகருக்கு? அனலாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் கொடுமைப் படுத்தி வந்தான். அவனது  கொட்டத்தை யாராலும் அடக்க முடியாத நிலையில் தேவர்கள் விநாயகரின் உதவியை நாடினார்கள்.

அனலாசுரனுடன் மோதினார் விநாயகர். ஆனால், அவனை ஒடுக்க முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே தூக்கி விழுங்கினார் விநாயகர்.  வயிற்றினுள் சென்ற அனலாசுரன் வெப்பத்தை அதிகப்படுத்த சூடு தாங்கமுடியாமல் தவித்தார் விநாயகர். குடம் குடமாக தண்ணீர் அருந்தியும் சூடு குறைந்த  பாடில்லை. ஒறு முனிவர் அறுகம்புல்லை விநாயகர் தலைமீது வைக்க, உடனே சூடு தணிந்தது. அனலாசுரன் விநாயகரின் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.  அன்று முதல் விநாயகருக்கு அறுகம்புல் பிடித்த விஷயமாகி இன்றும் நாம் அதை அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.

இதில் மறைவாய் சொல்லப்பட்ட விஷயம் உடல் சூட்டை அறுகம்புல் தணிக்கும், ஜீரண சக்தியை உண்டாக்கும் என்பதே! அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச்  சேர்ந்தது. பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும்.  தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon . சமஸ்கிருதத்தில் துர்வா என்றும்  ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள். தமிழில் அறுகு, பதம், தூர்வை, மேகாரி  என பல பெயர்கள் இதற்கு.

சொறி, சிரங்கு, படர்தாமரை போன்ற சரும நோய்கள் குணமாக அறுகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துக் குளித்தால் போதும். உடனே குணமாகும்.  மூலநோய்க்கு காய்ச்சாத ஆட்டுப்பாலில், அரைத்த அறுகம்புல்லைக் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். நரம்புத் தளர்ச்சிக்கும், அல்சருக்கும்,  வெள்ளைப்படுதல், வெட்டை நோய்க்கும் இது அருமருந்து. தினமும் அறுகம்புல் சாறு குடிக்க ரத்தம் சுத்தமாகும். ஆனால், மருத்துவத்திற்கு இதை பயன்  படுத்தும்போது சுத்தமான இடத்தில் வளர்ந்த அறுகம்புல்லை பயன்படுத்துவது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள். ஆனால், ஆன்மிக அன்பர்களுக்கு  விநாயகரின் ஸ்பரிசம் பட்டு அது பிரசாதமாக கிடைக்கும் போது மகத்துவமும் பல மடங்கு கூடிப் போகிறது. இந்து மதத்தில் ஆன்மிகத்தோடு அறிவியல்  இழையோடி கிடப்பதற்கு மஞ்சள் பிள்ளையாரை அலங்கரிக்கும் அறுகம்புல்லே சாட்சி!

Thanks To Dinakaran Newspaper

விநாயக சதுர்த்தி .............

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 PM | Best Blogger Tips

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும்.

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக  விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு அனிமா, மகிமா  முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம்  கேள்' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு  வரமளித்தார்.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித்திதியன்று  விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபாடி, உண்ணா நோன்பிருந்து,  தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.

இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார  விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது  மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் பிறகு சுதந்திர போராட்டக்காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில்  ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில்  விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் எல்லாம் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து  கொண்டாடும் விழாவாக நடத்தினர். ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர். வெகுகாலத்தின் பின்னரே  தமிழகத்தில் இவ்விழா அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

நன்றி தினகரன் பேப்பர்

எளிய பாட்டி வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips
எளிய பாட்டி வைத்தியம்:-

*  சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

*  அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

*  கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

*  சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

*  நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

*  வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

*  பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

*  புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

*  சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

*  முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
  
Via FB Karthikeyan Mathan
 

பேஸ்புக்கில் - Photo Tag

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips


பேஸ்புக்கில் மிகப்பெரிய தொல்லை என்றால் அது இந்த Photo Tag தான். பேஸ்புக்கால் வரும் நோட்டிஃபிகேஷன்களில் பெரும்பங்கை இந்த Photo Tags பிடித்துக்கொள்ளும். இதனால் பேஸ்புக்கை திறந்தாலே எரிச்சல்தான் வரும். Tag பண்ணுவது நண்பர்கள் ஆகையால் நேராக போய்என்னை Tag பண்ணாதேஎன்று சொல்லவும் பலர் தயங்குவார்கள். சாதாரண நாட்களை விட ஏதாவது விஷேட தினங்களில் பெருந்தொகையான நோடிஃபிகேஷன்கள் வந்து மெயில் இன்பாக்ஸை நிரப்பிவிடும்.

இவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி, Photo Tag OFF செய்துவிடுவதுதான். பேஸ்புக்கில் Photo Tag செட்டிங்கை மாற்றுவதன்மூலம் நீங்கள் அனுமதியளித்த பின்னரே ஒருவர் உங்களை Tag பண்ணும்படி செய்யலாம்.

இதை எப்படி செய்வது

உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்துகொள்ளுங்கள். அதில் Privacy Settings செல்லுங்கள்

அங்கு Timeline and Tagging என்பதற்கு அருகில் உள்ள Edit Setting என்பதை கிளிக் பண்ணுங்கள்

கிளிக் பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ ஒன்று வரும். அதில் Review posts friends tag you in before they appear on your timeline என்பதை On செய்யுங்கள்.

On
பண்ணியதும் புதிய பாப் அப் விண்டோ தோன்றும். அதில் Review Control Enable செய்துவிட்டால் சரி,

இப்போது செட்டிங்ஸ் முழுமையடைந்துள்ளது. இதன் பின்னர் உங்களை யாராவது Tag பண்ணினால் அவை உங்கள் அனுமதிக்காக காத்திருக்கும். நீங்கள் அனுமதி அளித்த பின்னரே உங்களை Tag செய்யும். அனுமதிக்காக காத்திருக்கும் Tags உங்கள் ப்ரோபைலில் Activity Log என்ற பகுதியில் காணலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பிரயோசனமாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Thanks from FB தமிழ் -கருத்துக்களம்-




ரத்த ஓட்டம் தடைபட்டால்...?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:42 PM | Best Blogger Tips
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

என் வயது 64. ஆறுமாதம் முன்பு பைபாஸ் சர்ஜரி செய்தார்கள். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறேன். கடந்த ஒரு மாதமாக இடது வலது உள்ளங்கால் மற்றும் குதிகால் பகுதிகளில் கடுமையான எரிச்சல், வலி ஏற்படுகிறது. கால்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதை ஆயுர்வேத சிசிச்சை மூலம் குணப்படுத்த முடியுமா?

ஜி.ஆர்.வெற்றிவேல், அவினாசி.

கால் பகுதிகளுக்குத் தேவையான பிராண வாயுவை ஏந்திச் செல்லும் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர் தடித்துப் போனாலோ, உட்புற விட்டம் சுருங்கினாலோ, ரத்தத்தின் வேக அழுத்தம் குறைந்து போகும் தறுவாயில், கடுமையான வலி, எரிச்சல், ரத்த ஓட்டத் தடை போன்ற உபாதைகள் தோன்றக் கூடும். புகை, மதுபானம், அதிகம் நேரம் கால்களைத் தொங்க விட்டு வேலை செய்தல், அதிகம் நடந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம், சைக்கிள் சவாரி, நீச்சல், வண்டி ஓட்டுதல் போன்ற செயல்களால், கால் பகுதிகளிலுள்ள ரத்தக் குழாய்கள் வலுவிழக்கக் கூடும். சர்க்கரை உபாதையில், ரத்த நாளங்கள், தசைநார்கள் போன்றவை விரைவில் செயலிழக்கும் ஆபத்திருப்பதால், அவற்றை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தமும், சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய அவசியமுமிருக்கிறது.

இரவில் நன்றாக உறங்கி காலையில் எழுந்ததும், ரத்தக் குழாய்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கிட்டியிருப்பதால், ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய பிண்டதைலம் மற்றும் நிசோசீராதி தைலத்தை வெதுவெதுப்பாகச் சூடு செய்து பஞ்சில் முக்கி எடுத்து எரிச்சல் வலி உள்ள பகுதிகளில் சுற்றி அதன் மேல் ஒரு துணியை இறுக்கமாக அல்லாமல், மிருதுவாகக் கட்டி சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்த பிறகு, பஞ்சை எடுத்து விட்டு, வேறு ஒரு துணியால் எண்ணெய் ஊறிய பகுதியைத் துடைத்துவிடும் எளிய சிகிச்சை முறையால், ரத்தக் குழாய்களை நம்மால் மிருதுவாகச் செய்ய இயலும். அதன் ரப்பர் போன்ற தன்மையை இந்தத் தைல முறையில் ஏற்படுத்தினால், ரத்த ஓட்டம் சீராக வாய்ப்பிருக்கிறது. சுருங்கிய உட்புற விட்டம் விரியத் தொடங்கும்.

மூலிகைத் தைலங்களைக் கால்களில் தாரையாக தொடர்ந்து விழும்படி சுமார் 12 அங்குலம் மேலிருந்து பிடித்து ஊற்றும் சிகிச்சை முறையாலும், கால் எரிச்சல் வலி ரத்த ஓட்டத் தடையைக் குறைக்க உதவிடக் கூடும். தசமூலம் எனும் பத்து மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தண்ணீரை, எண்ணெய் ஊறிய பகுதிகளில் தாரையாக விடும் சிகிச்சை முறையும் சிறந்ததே.

அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா சூரணத்தைச் சுமார் 5 கிராம் அளவில் சிறிது சூடான பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட கால் ரத்தக் குழாய்களை வலுப்படுத்த முடியும். தற்சமயம் இந்தச் சூரண மருந்து தரமாக மூலிகை மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

சர்க்கரை உபாதைக்குப் பயந்து உணவில் அதிக அளவில் கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய்கள் விரைவில் வலுவிழக்கக் கூடும். அதனால் அவற்றை மிதமாகச் சாப்பிடுவதுடன், நெய்ப்புடன் கூடிய கோதுமை, உளுந்து, எள்ளு போன்ற உணவுகளையும் மிதமாகச் சாப்பிடுதல் நலம். குடலில் வறட்சி ஏற்படாமலிருக்க 10 மி.லி தான்வந்திரம் அல்லது விதார்யாதி எனும் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்துகளில் ஒன்றை லேசாக உருக்கி, காலை, இரவு உணவுக்கு அரைமணி நேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுதல் நல்லது. குடலில் ஏற்படும் நெய்ப்பை, ரத்தக் குழாய்களின் உட்புறம் வரை கொண்டு செல்லும் வேலையை வாயு எனும் தோஷம் பெற்றிருப்பதால், அதன் வேலைத்திறன் மங்காத வகையில் இந்த மூலிகை நெய் மருந்துகள் உதவிடக் கூடும்.

இப்படி உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஏற்படும் எண்ணெய்ப் பசையால் ரத்த நாளங்களில் உண்டாகும் கடினமான தன்மையையும், அவை சுருண்டு கொள்ளும் நிலையையும் நம்மால் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

By எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771 via தினமணி &
ஆரோக்கியமான வாழ்வு

ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:37 PM | Best Blogger Tips
ஒரே நட்சத்திரம்,ராசியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாமா?
--------------------------------------------------------------------------------------
திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது 
 பெரும்பாலும் 10  பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியமான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது.
  
இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் வரும்.
 ஒரே நட்சத்திரமாக இருந்து வெவ்வேறு லக்கினமாக இருந்தாலும் பராவாயில்லை.
 
 தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.மேலும் ஜென்ம குரு வந்தாலும் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு.

ஒரே ராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே மாதத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திரப் பொருத்தம் என்று ஒரு பிரிவு உண்டு, அது எப்படி என்றால் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஆறும் ஸ்திரீ ,புருஷர்களுக்கு ஒரே நட்ச்சத்திரமானால் உத்தமம் என்றும்,அசுவனி, கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம், உத்திரம், சித்திரை,அனுஷம், உத்திராடம் இவை எட்டும் சுமார்.இந்த நட்சத்திரங்கள் உள்ளவர்களை பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம். மற்றவை பொருந்தாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

திருமணப் பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் நட்சத்திர பொருத்தம் ஆகும். நட்சத்திர பொருத்தம் மொத்தம் 10-க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும்,தற்பொழுது
பெரும்பாலும் 10 பொருத்தங்களையே பார்க்கின்றனர்.ஆண்,பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாகஇருந்தால்,முக்கியம
ான பொருத்தமான ரஜ்ஜு பொருத்தம்(மாங்கல்ய பொருத்தம்)இருக்காது.

இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால்,தவிர்க்க முடியாத பட்சத்தில் சில பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம்.இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் வரும் திசா,புக்திக்கள் ஒரே நேரத்தில் வரும்.
ஒரே நட்சத்திரமாக இருந்து வெவ்வேறு லக்கினமாக இருந்தாலும் பராவாயில்லை.

தம்பதிகள் வெவ்வேறு ராசியாக இருப்பது நல்லது. ஏனென்றால் இருவருமே ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது (ஏழரைச் சனி, அஷ்டமச் சனி) இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.மேலும் ஜென்ம குரு வந்தாலும் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு.

ஒரே ராசியாக இருக்கும் சமயத்தில் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை.
ஆனால் ஒரே ராசியாக இருந்தால் தம்பதிகளின் ரசனை ஒத்துப்போகும். எனினும் மோசமான கிரக நிலையின் போது இருவருக்கும் இடையே மாதத்தில் ஒருமுறையாவது கருத்து மோதல்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

நட்சத்திரப் பொருத்தம் என்று ஒரு பிரிவு உண்டு, அது எப்படி என்றால் ரோகினி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், திருவோணம் இவை ஆறும் ஸ்திரீ ,புருஷர்களுக்கு ஒரே நட்ச்சத்திரமானால் உத்தமம் என்றும்,அசுவனி, கிருத்திகை,மிருகசீரிடம்,புனர்பூசம், உத்திரம், சித்திரை,அனுஷம், உத்திராடம் இவை எட்டும் சுமார்.இந்த நட்சத்திரங்கள் உள்ளவர்களை பரிகாரங்கள் மூலம் இணைக்கலாம். மற்றவை பொருந்தாது.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.