கடும் சோதனைகள் வருவது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 AM | Best Blogger Tips

Photo: கடும் சோதனைகள் வருவது ஏன்?

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

ஆப்பிரிக்காவிலுள்ள செவ்விந்தியர் என்னும் பழங்குடி மக்கள் வீரம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் உண்டு. அவர்களுடைய தலைவனை வாரிசு அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். எனவே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனக்குப் பின் பொறுப்பேற்க இருக்கும் தன் பிள்ளைக்கு, சிறுவயதில் இருந்தே பலவிதமான சோதனைத் தேர்வுகளை நடத்தி, அவர்களை தலைமைப் பதவிக்கு தயார் செய்வார்கள். அந்த இளைஞர்கள் அப்போது கடுமையான சோதனைகளைச் சந்திப்பார்கள். ஒருமுறை ஒரு தலைவன் தன் மகன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்ததும், அவனை அமேசான் காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு அமாவாசையன்று இருளில் தன்னந்தனியாக விட்டு வந்து விட்டான். அந்த இரவு முழுவதும் அவன் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குகொடுக்கப்பட்ட சோதனைப்பயிற்சி. அங்கு மிருகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றின் உறுமல் சத்தம் பயங்கரமாக இருந்தது. இதுவரை தந்தையின் அணைப்பில் இருந்த அந்தச்சிறுவனுக்கு, ""இப்போது தனிமையில் இருக்கிறோமோ! என்னாகுமோ?'' என்ற சிந்தனை ஒரு பக்கம். ""இந்தத் தேர்வில் மட்டும் ஜெயித்துவிட்டால், நாளை நான் செவ்விந்தியர்களின் தலைவன் ஆகிவிடுவேனே!'' என்ற ஆவல் மறுபுறம். ஒருவழியாக இரவுப்பொழுது கடந்துவிட்டது. வானம் வெளுத்து லேசான வெளிச்சம் படர்ந்தது. அந்த இளைஞன் தான் இருந்த இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான். தூரத்தில் தன் தந்தை வில்லை நாணேற்றி நின்று கொண்டிருந்ததைக் கண்டான். ""அப்பா! இரவெல்லாம் இங்கேயா இருந்தீர்கள்? என்னைத் தனியாய் விட்டுவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!'' என்றான் மகன். அந்த தந்தை அவனிடம், ""உன்னை பயமற்ற தலைவனாக்குவது என் கடமை. அதே நேரம் உன்னைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்குண்டு. அதனால் தான் உன்னை மிருகங்கள் ஏதும் தாக்காதபடி மறைந்து காவல் நின்றேன்.'' என்றான். இந்த தகப்பனின் இருத யத்தைப் போலத் தான் நம்மையெல்லாம் பாதுகாப்பதாக ஆண்டவரின் இருதயமும் உள்ளது. அவரது பிள்ளைகளான நம்மை சிம்மாசனத்திற்கு உயர்த்தும்படியான தகுதிகளை நாம் பெற்றுக்கொள்ள நம்மைக் "கடுமையான சோதனை' என்னும் பாதையில் அவர் வழிநடத்துகிறார். அவற்றில் இருந்து மீளும் பயிற்சியைத் தருகிறார். சில சமயங்களில் அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளைகளில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயிருக்கின்றன. எனவே, சோதனைகளை பயமின்றி கடந்து சாதனையாக்குவோம். 

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

Img crtsy: krishnadaily@fb

Via மெய்ப்பொருள்

மஹா கும்பாபிஷேகத்தின் சிறப்புகள் (அ) மஹா கும்பாபிஷேகம் ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 AM | Best Blogger Tips

Photo: மஹா கும்பாபிஷேகத்தின் சிறப்புகள் (அ) மஹா கும்பாபிஷேகம் ஏன்?

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

இறைவன் ஜோதி வடிவானவன். பஞ்ச பூத சக்திகளையும் தன்னுள்ளே அடக்கி ஆள்பவன். தன்னுடைய சக்தியை ஒரு கல்லினுள் நிலைபெறச்செய்து தன்னை நம்பி வருவோர்க்கெல்லாம் அருள் பாலிக்கிறான். அதற்காக, எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் இறை சக்தியை ஈர்த்து சேர்த்து மூலஸ்தானத்தில் நிலைப்படுத்தி வழிபாட்டுத்தலமாக உருவாக்குகிறார்கள்.

இக்கலியுகத்தில் பிறவி எடுத்த நாம், பிறவிப்பயன் அடைய வேண்டும் என்று நம் முன்னோர்கள், ரிஷிகள், ஞானிகள் இவர்களைக்கொண்டு பூஜைகள், விரதங்கள், யாகங்கள், தான தர்மங்கள் ஆகியன செய்து மனிதன் தெய்வத்தன்மை அடைந்து வாழ்வாங்கு வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று ஆலயம் கட்டுதல், ஆலயத் திருப்பணி செய்தல் என்பதாகும். இவை ஆபர்தம், அனாவர்தம், புனராவர்தனம், சுந்தரிதம் என நான்காக பிரிக்கப்படும்.

வேத, ஆகம, சிற்ப,சாஸ்திர முறைப்படி கருங்கற்களைக் கொண்டு ஆலயம் கட்டி அதில் யந்திர ஸ்தாபனம் செய்து தெய்வ உருவங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.

ஆலயத்தின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகள் மந்திர வடிவமாக இருந்து ஆன்மாக்களுடைய கர்மாக்களையும், மாயைகளையும் போக்கி அருள் பாலிக்கின்றனர்.

மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். மந்திரங்களில் சிறந்த மந்திரமாக கருதப்படும் காயத்ரீ மந்திரத்தின் சக்தி, ஒலிக்கப்படும் இடத்திலிருந்து ஆயிரம் மீட்டர் தொலைவு வரை வியாபித்திருக்குமாம். பெரிய மகான் ஆக இருந்தாலும் ஆலய வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவர்.

கல்லினால் வடிவமைத்த தெய்வ திருவுருவங்களை தானியவாசம், ஜலவாசம் செய்வார்கள். தங்கம், வெள்ளி அல்லது செம்பு தகட்டில் மந்திரங்களை எழுதி, நாற்பத்தெட்டு (48) நாட்கள் முறைப்படி வழிபாடுகள் செய்து அவற்றை தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் பதிய வைப்பார்கள்.

கல்லினாலும், மண்ணினாலும், உலோகங்களாலும் மனிதனால் உருவாக்கப்பட்ட தெய்வ உருவங்களுக்கு சக்தியை உண்டு பண்ணுவதற்காக செய்யப்படும் பல வித யாகங்க்களுள் ஒன்று தான் கும்பாபிஷேகம். இதற்காக வேதத்தில் சிறந்தவர்களும், சிவா பூஜையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர்களும் தேவையான யாக குண்டங்களை அமைப்பார்கள்.

இனிய மந்திரங்களை ஓதி யாகத்தில் அக்கினி வளர்த்து அரிய வகை மூலிகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அக்கினியில் சேர்த்து அதில் தோன்றும் ஜோதியை கும்பத்தில் சேர்ப்பார்கள்.

தெய்வ சக்திகள் உருவேற்றப்பட்ட காச தீர்த்தங்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து கருவறையில் யந்திரங்கள் பதித்து சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். கோபுரத்தின் மேலுள்ள கலசங்களுக்கும் உயிரூட்டப்பட்ட சக்தி வாய்ந்த கலச தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படும்.

சைவர்கள் மகா கும்பாபிஷேகம் என்றும் வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் கூறுவர்.

ஆகம விதிப்படியும், சாஸ்திர முறைப்படியும் தெய்வ உருவங்களில் சக்தியையும், கோபுர கலசத்தில் உருவேற்றிய சக்தியையும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கப்படுத்தி மனித வாழ்க்கை மேம்படுவதற்காக நடைபெறுவதே மகா கும்பாபிஷேகம். மகா கும்பாபிச்கேகதன்று முப்பத்து முக்கோடி தேவர்களும் நமக்கு ஆசி வழங்குவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

கும்பாபிஷேகத்தன்று வணங்க முடியாதவர்கள் அதனைத் தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் கலந்து கொண்டு கடவுளை வணங்கினாலும் இறைவன் திருவருள் நிரம்ப துணை செய்யும்.

பழமை வாய்ந்த கோயில் கோபுரங்களை தரிசனம் செய்யும்போதும், கோயிலுக்குள் நாம் நுழையும் போதும், ஓர் அற்புதமான சக்தி நம் உடலில் ஊடுருவிச்செல்வதை பலர் உணர்ந்திருக்கலாம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் உடலால், மனத்தால், பொருளால் உதவி செய்வது, கும்பாபிஷேகம் காண்பது, அதில் பங்கு கொள்வது என்பது வாழ்நாளில் கிடைப்பதற்கரிய ஒரு வாய்ப்பாகும். இந்த அறிய வாய்ப்பினை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்பவர்கள், வாழ்நாளில் சகல விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு, பொருளாதார முன்னேற்றத்துடன், குடும்ப ஒற்றுமையுடன், மன மகிழ்ச்சியுடன், இறைவன் திருவருள் கூடி வர வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

குலம் தழைக்க, வளம் பெருக, நலம் சிறக்க, அனைத்து ஆலய கும்பாபிஷேகத்திலும் முடிந்த வரை பங்கு பெறுவோம், பயன் பெறுவோம், நலன் பெறுவோம்.

வாழ்க வளமுடன்!

இந்தியாவில் பழங்காலத்தில் விமானம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:22 AM | Best Blogger Tips
Photo: 1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/2004-10-18/mumbai/27162445_1_plane-wright-brothers-air-show )

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.

இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?

(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

Tnks to ...vithai
1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

தடைகள் விலக பரிகாரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:20 AM | Best Blogger Tips

Photo: தடைகள் விலக பரிகாரம்

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

                    நாம் செய்கின்ற காரியங்கள் எந்தவித தடங்களும் இல்லாமல் நடைபெற்றால் நாம் நினைக்கின்ற இலக்கை வெகு எளிதில் அடையலாம். மனிதன் நினைப்பது அனைத்தும் கிடைத்துவிட்டால் அவனை ஒன்றும் செய்யமுடியாது என்று தான் கடவுள் பல தடைகளை உருவாக்குகிறார் என்று நினைக்கிறேன். அப்படி இருந்தாலும் மனிதனின் சக்தியை முழுவதும் பயன்படுத்தினால் அவனை ஒன்றும் செய்யமுடியாது. மனிதன் எப்படியாவது தான் நினைத்த இலக்கை அடையவேண்டி பல வழிகளை பின்பற்றுகிறான்.

பல வழிகளில் ஆன்மீகமும் ஒன்று இந்த ஆன்மீகத்தில் உட்பிரிவான சோதிடத்தில் என்ன காரணத்தால் தடைகள் வருகின்றன என்று பார்த்தால் அது பித்ரு தோஷத்தால் வருகிறது என்று பார்க்கிறோம். அந்த பித்ருதோஷத்திற்க்கு என்ன செய்தால் அந்த தோஷம் போகின்றன என்று பல வழிகளை நமக்கு நமது மதம் தருகிறது. அதில் இருந்து ஒரு விசயத்தை மட்டும் உங்களிடம் தருகிறேன். அதனை நீங்கள் செய்து இந்த தடைகளை வென்று வெற்றியை அடையவேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்பொழுது நமது தடையை வெல்லமுடியும் இறந்தவர்களுக்கு திவசம் செய்யும்பொழுது காய்கறிகளை சமர்பணம் செய்வார்கள். அந்த காய்கறியில் கண்டிப்பாக புடலங்காய் இருக்கும். இந்த புடலங்காய் மிகவும் விசேஷமான ஒன்று. பித்ரு உலகம் என்று ஒரு உலகம் இருக்கிறது அங்கு மிகச்சிறந்த மூலிகையாக விளங்குவது இந்த புடலங்காய் தான். புடலங்காய் அங்கு தெய்வீக ஆற்றலை கொண்டது என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த புடலங்காயை நாம் அமாவாசை விரதம் செய்யும் பொழுது இதனை உணவு செய்து படைத்துவிட்டு நீங்கள் சாப்பிடலாம். எப்பேர்ப்பட்ட தடையும் நீக்கும் ஆற்றல் கொண்டது.அமாவாசை மட்டும் இல்லை சனிக்கிழமையில் கூட நீங்கள் இதனை சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடலாம்.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

Om Namasivaya...._/i\_

ராமாயணம் 108 வரிகளில்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 AM | Best Blogger Tips

Photo: ராமாயணம் 108 வரிகளில்..!

மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்து இணையவும் -> http://www.facebook.com/Meipporul

வால்மீகி முனிவர் எழுதிய ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.

1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10. சென்று மந்திரம் கற்றனை ராமா
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம்பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா

அயோத்யா காண்டம்

26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா

ஆரண்ய காண்டம்

35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா

கிஷ்கிந்தா காண்டம்

46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா

சுந்தர காண்டம்

56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா

யுத்த காண்டம்

65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக் கணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா
80. விபீஷணன் முடிசூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
91. லவகுசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா
93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நரஹரி ராகவ நாரண ராமா
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

Om Namo Narayanaya...._/i\_

அங்காள பரமேஸ்வரி அம்மன் – மேல்மலையனூர்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:09 AM | Best Blogger Tips
அன்னை பார்வதிதேவி பூலோகத்தில் தோன்றி, இருக்க இடம் இல்லாமல் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவதிப்பட்டாள். இப்படியே பல இடங்களுக்கு சென்று களைப்படைந்து நிற்கும் போது ஒர் இடத்தில் நறுமணம் வீசியது. அந்த திசையை நோக்கி நடந்தாள்.அந்த இடம் அழகான நந்தவனமாக இருந்தது. அவ்விடத்திலேயே அமர்ந்து தவம் செய்ய தொடங்கினாள். 

இந்த காட்சியை கண்ட அங்கு காவலுக்கு இருந்த மீனவ இனத்தை சார்ந்தவன், “ ஏய் பெண்ணே… இது இந்த நாட்டின் மலையரசனுக்கு உரிமையான இடம். இங்கு நீ தவம் செய்வது உனக்கு நல்லதல்ல. எங்கள் அரசர் தெய்வ நம்பிக்கை அற்றவர். நீ தவம் செய்யும் தகவல் அரசருக்கு தெரிந்தால் உன் உயிருக்கு? ஆபத்து நேரலாம். ஆகவே இங்கிருந்து போய் விடு.” என்று எச்சரித்தான்.

“மகனே… இந்த பூமியே என் சொந்த இடம் தானப்பா. இவ்விடத்தை உன் மலையரசனுடையது என்று நீ கூறுவது நகைப்புக்குரியதடா. நான் இங்குதான் தவம் செய்வேன்.” என்று சொன்னாள் பராசக்தி.

அன்னை பராசக்தி புன்னகைத்தப்படி தன் உடலை புற்று மண்ணால் மூடினாள். அந்த காட்சியை பார்த்தவன் பிரமித்து போனான். இந்த பெண், அன்னை பராசக்தி என்பதை உணர்ந்தான். அம்பிகை மீது பக்தி உண்டானது. மக்களிடம் சொன்னான். 

இந்த தகவல் அரசருக்கு தெரிந்து, “எனக்கு சொந்தமான தோட்டத்தில் புற்று இருக்கிறதா? இதை உடனே இடித்து தள்ளுங்கள்.” என்று உத்தரவிட்டான்.

புற்றை இடிப்பது பெறும் பாவம், அதை செய்யாதீர்கள் என்று எத்தனையோ பேர் கூறியும் கேட்கவி்லலை அரசர். 

மலை அரசனும் இறைவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன் பூந்தோட்டத்தில் இருந்த புற்றை உடைக்க உத்தரவிட்டான். பணியாளர்கள் புற்றை உடைத்தார்கள். அப்போது அருகில் இருந்த மீனவ இனத்தை சார்ந்த அந்த காவலன், அந்த புற்று மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வைத்து கொண்டான். புற்றை உடைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்து சென்று விட்டார்கள் அரசரின் பணியாளர்கள்.

அவர்கள் போன பிறகு தன் கையில் இருந்த புற்று மண்ணை அந்த இடத்தில் மறுபடியும் வைத்து பூஜை செய்தான் மீனவன். புற்று மறுபடியும் வேகமாக உருவானது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட அரசன், மறுபடியும் பணியாளர்களை அனுப்பினான். புற்றை உடைக்க புற்றின் அருகில் சென்றவுடன் அன்னைக்கு காவலாக வந்து நின்ற சிவபூதங்கள் அந்த பணியாளர்களை கொன்றார்கள். இதுகெல்லாம் காரணம் அந்த மீனவன் தானே என்று கோபம் கொண்ட அரசன், அந்த மீனவனை கொன்று விடுங்கள் என்று கையை நீட்டி காவலர்களுக்கு உத்தரவிட்டான்.

உத்தரவிட்ட அந்த நொடி, அரசனின் கை உணர்ச்சி இன்றி அப்படியே தளர்ந்தது. கை வேலை செய்யவில்லை. இது தெய்வ மகிமைதான் என்று புரிந்துக் கொண்டான். தன் தவறுக்கு மனப்பூர்வமாக அன்னை ஆதிபராசக்தியிடம் மன்னிப்பு கேட்டான்.

அம்மன் அரசனை மன்னித்தாள். தன் தவறுக்கு பரிகாரமாக அந்த பூந்தோட்டத்தை அம்மனுக்கே காணிக்கையாக வழங்கினான் மன்னன்.
 
அம்மனுக்கு உதவியாக இருந்த மீனவ சமுதாயம்தான் இன்றுவரை அந்த கோயிலில் சேவை செய்கிறார்கள். உலகில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலயங்களுக்கெல்லாம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தான் தலைமையிடம் என்கிறது ஸ்தலபுராணம்.

இந்த ஆலயத்திற்கு சென்று வணங்கினால் செய்வினை பாதிப்பு, விரோதிகளால் உண்டான பிரச்சனைகள் விலகும். சகல நன்மைகளும் உண்டாகும். அன்னை அங்காள பரமேஸ்வரி துணை நிற்பாள்.

அங்காள பரமேஸ்வரி செஞ்சியிலிருந்து வடப் புறம் 20 கி.மீட்டர் தொலைவில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள்.

நிரஞ்சனா
Copyright www.bhakthiplanet.com

அங்காள பரமேஸ்வரி அம்மன் – மேல்மலையனூர் http://bhakthiplanet.blogspot.in/2013/06/blog-post_18.html

http://www.manamakkalmalai.com/

Like This Page----> http://www.facebook.com/bhakthiplanet

Via நிரஞ்சனா

கருத்துடன் செயல்படு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:20 PM | Best Blogger Tips
கருத்துடன் செயல்படு
---------------------------------

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

Via வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

Pen Drive பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:58 PM | Best Blogger Tips
Pen Drive பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். 

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\CurrentControlSet
\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet
\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

Viaரிலாக்ஸ் ப்ளீஸ்