ஆப்பிரிக்காவிலுள்ள செவ்விந்தியர் என்னும் பழங்குடி மக்கள் வீரம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் உண்டு. அவர்களுடைய தலைவனை வாரிசு
அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். எனவே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
தனக்குப் பின் பொறுப்பேற்க இருக்கும் தன் பிள்ளைக்கு, சிறுவயதில் இருந்தே
பலவிதமான சோதனைத் தேர்வுகளை நடத்தி, அவர்களை தலைமைப் பதவிக்கு தயார்
செய்வார்கள். அந்த இளைஞர்கள் அப்போது கடுமையான சோதனைகளைச் சந்திப்பார்கள்.
ஒருமுறை ஒரு தலைவன் தன் மகன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்ததும், அவனை
அமேசான் காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு அமாவாசையன்று இருளில்
தன்னந்தனியாக விட்டு வந்து விட்டான். அந்த இரவு முழுவதும் அவன் அங்கேயே
தங்கியிருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குகொடுக்கப்பட்ட சோதனைப்பயிற்சி.
அங்கு மிருகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றின் உறுமல் சத்தம் பயங்கரமாக
இருந்தது. இதுவரை தந்தையின் அணைப்பில் இருந்த அந்தச்சிறுவனுக்கு, ""இப்போது
தனிமையில் இருக்கிறோமோ! என்னாகுமோ?'' என்ற சிந்தனை ஒரு பக்கம். ""இந்தத்
தேர்வில் மட்டும் ஜெயித்துவிட்டால், நாளை நான் செவ்விந்தியர்களின் தலைவன்
ஆகிவிடுவேனே!'' என்ற ஆவல் மறுபுறம். ஒருவழியாக இரவுப்பொழுது கடந்துவிட்டது.
வானம் வெளுத்து லேசான வெளிச்சம் படர்ந்தது. அந்த இளைஞன் தான் இருந்த
இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான். தூரத்தில் தன் தந்தை வில்லை
நாணேற்றி நின்று கொண்டிருந்ததைக் கண்டான். ""அப்பா! இரவெல்லாம் இங்கேயா
இருந்தீர்கள்? என்னைத் தனியாய் விட்டுவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள்
என்றல்லவா நினைத்தேன்!'' என்றான் மகன். அந்த தந்தை அவனிடம், ""உன்னை பயமற்ற
தலைவனாக்குவது என் கடமை. அதே நேரம் உன்னைக் காக்க வேண்டிய பொறுப்பும்
எனக்குண்டு. அதனால் தான் உன்னை மிருகங்கள் ஏதும் தாக்காதபடி மறைந்து காவல்
நின்றேன்.'' என்றான். இந்த தகப்பனின் இருத யத்தைப் போலத் தான்
நம்மையெல்லாம் பாதுகாப்பதாக ஆண்டவரின் இருதயமும் உள்ளது. அவரது பிள்ளைகளான
நம்மை சிம்மாசனத்திற்கு உயர்த்தும்படியான தகுதிகளை நாம் பெற்றுக்கொள்ள
நம்மைக் "கடுமையான சோதனை' என்னும் பாதையில் அவர் வழிநடத்துகிறார். அவற்றில்
இருந்து மீளும் பயிற்சியைத் தருகிறார். சில சமயங்களில் அவர் நம்மைக்
கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண
முடிவதில்லை. சோதனை வேளைகளில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே
இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயிருக்கின்றன. எனவே,
சோதனைகளை பயமின்றி கடந்து சாதனையாக்குவோம்.
நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...
நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...
Via
மெய்ப்பொருள்








![Pen Drive பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?
சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
எளிமையான வழி:
Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0
பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.
உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.
reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1
சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/p110x80/296146_570834509633549_2083680784_n.jpg)