EECP சிகிச்சை - *🫀🫀 நெஞ்சு வலி*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:30 AM | Best Blogger Tips

 How EECP Helps? | EECP Treatment | EECP Therapy | OPLUS

*🫀🫀 நெஞ்சு வலி* சமீபத்தில், ஒருவர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் ஆஞ்சியோகிராஃபி பரிந்துரைத்தனர்.
 
இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராஃபிக்குப் பிறகு, ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு முன் இரத்தக்குழாயில் பல அடைப்புகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு பதிலாக, 'பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
 eecp treatment for heart failure
🫀அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவுரித்தினர்,அன்று மாலை அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார், 10 - 15 நாட்களுக்குப் பிறகு, அதிக ஆபத்துடன் தான் பைபாஸ் செய்ய முடியும் என எச்சரித்தனர்.
 
இதற்கிடையில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்த பிறகு, ஒரு குடும்ப நண்பரிடமிருந்து புதிய தகவல் வந்தது.இந்திய மருத்துவ (எய்ம்ஸ்) டாக்டரால் * EECP சிகிச்சை * என அழைக்கப்படும் ஒரு புதிய சிகிச்சை அறிகமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இப்போது அது *US FDA & T.N GOVT ஆல் அங்கீகரிக்கப்பட்டது *
 
🫀 இங்கே,
பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் மற்றும் ஸ்டெட்கள் இல்லாமல் இதய அடைப்புகள் குணமாகும், ஆனால் இந்த மேம்பட்ட *EECP மெஷின் * எந்திரத்தின் உதவியுடன்
இந்த சிகிச்சையின் மூலம், பைபாஸ் செய்ய வேண்டிய ஒரு நோயாளி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
 eecp treatment for heart failure
(இது இயற்கை பைபாஸ் என்று அழைக்கப்படுகிறது)
 
அதற்கு பதிலாக, நோயாளிக்கு சுமார் 20 பாட்டில்கள் IV திரவங்கள் கொடுக்கப்பட்டு அதில் சில மருந்துகள் செலுத்தப்படுகின்றன.
 
இந்த மருந்து இதயத்தில் உள்ள இரத்த குழாய்களிலுள்ள அனைத்து அடைப்புகளையும் நீக்குகிறது. நோயாளியின் வயது மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து மருந்து செலுத்தப்படும் பாட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
 
ஒரு பாட்டிலின் விலை ரூ .2,000/- வரை இருக்கலாம்.
தற்போது, ​​இந்தியாவில் சில மருத்துவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள DR.S.பிரபு,🫀🫀🫀
முக்கிய மருத்துவமனைகளில் இந்த இயற்கை பை-பாஸ் செய்த(EECP தெரபி) நோயாளிகளின் பட்டியல் அவரிடம் உள்ளது. இதய நோயாளிகள் இந்த புதிய சிகிச்சைக்குப் பிறகு, அவர்கள் முற்றிலும் நன்றாக இருக்கிறார்கள் மற்றும் குறைந்தபட்ச மருந்துகள் கூட இல்லாமல் சாதாரண வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
 
இந்த சிகிச்சை கோயம்புத்தூரில் உள்ள
* PGS மருத்துவமனை*. செய்யப்பட்டது
மேலும் தகவலுக்கு
 
DR. S.பிரபு MD PGDHsc( ECHO)PPHC ( UA)
(General Physician & Preventive Cardiology )
 
ஆக்கிரமிப்பு & அறுவை சிகிச்சை இல்லாத இதய பராமரிப்பு & மேம்பட்ட வாழ்வியல் தரத்தின் அனுபவம்.
 
0422 4971331
Mobile : +91 91597 00800
+91 94430 61115
 
தயவுசெய்து இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் அது பலருக்கு உதவக்கூடும்.
தயவுசெய்து, இதை பகிராமல் நீக்க வேண்டாம்.
என்னால் முடிந்தவரை அதை அனுப்புகிறேன்.
அது 130 கோடி இந்தியர்களையும், மீதமுள்ளவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்!
 
*இது யாருக்காவது உதவலாம்.* உங்களால் முடிந்தவரை இதை அனைவருக்கும் பகிருங்கள்.
🙏🏻🙏🙏❤️❤️❤️❤️
 

 FB copy from  

Sivanthi சிவந்தி

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

 

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:17 AM | Best Blogger Tips

 May be an image of bicycle

 

திருச்சி உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் கோயில். ஐவண்ணநாதர் கோயில் என்றழைக்கப்படும் இந்த கோயிலை வீர ஆதித்த சோழன் அமைத்ததாக உறையூர் புராணம் கூறுகிறது. இவர் வாழ்ந்த காலம் (கிபி872-907). 
 Panchavarneswarar Temple : Panchavarneswarar Panchavarneswarar Temple  Details | Panchavarneswarar- Urayur | Tamilnadu Temple | பஞ்சவர்ணேஸ்வரர்
இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்ற கோயிலை காட்டிலும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும், வித்தியாசங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. யானையை கோழி அடக்குவது போன்ற சிற்பங்களைக் கொண்டு காணப்படுகிறது.
 திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் – சரவணன் அன்பே சிவம்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டதாக சொல்லப்படுகிற இந்த கோயிலில் சைக்கிளில் ஒருவர் அமர்ந்து இருக்கும் சிற்பம், பளு தூக்குவது போன்ற சிற்பம், 
 
யோகாசனங்களை குறிக்கும் வகையிலான சிற்பங்கள், பெண்கள் இணைந்து யானை வடிவில் நின்று அதன்மீது ஒரு பெண் நின்று அம்பு எய்வது போன்ற சிற்பங்கள் காண்போரை வியக்க வைப்பவையாக அமைகின்றது.
 Trichy Uraiyur Panjasewarar Temple,உறையூருக்கு இத்தனை சிறப்புகளா? -  தெரிஞ்சுக்குங்க மக்களே! - all you should know about speciality of trichy  woraiyur panchavarneswarar temple - Samayam Tamil
அம்மன் சன்னிதியில் கீழ் புறச் சுவரில் ஒரு இடுக்கில் சைக்கிள் ஓட்டும் மனிதன் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை ஆராய்ச்சிக்கு உரியதாக கருதப்படுகிறது. இச்சிலையில் சிறுவன் கழுத்தில் துண்டு சுற்றப்பட்டுள்ளது. 
 
வேட்டி வரிந்து கட்டிய நிலையில் உள்ள இந்த சிற்பம் அப்போது பணியாற்றிய ஒரு சிற்பியின் ஆர்வத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அனைவராலும் வியந்து பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சைக்கிள் முதலில் 1890 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற நிலையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயிலில் அக்காலத்திலேயே சைக்கிள் பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை.
 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலாக இருந்தாலும், அதன் பிறகு பல்வேறு நிலைகளில் புரனமைக்கப்பட்டுள்ளது. எனவே, 80 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருப்பணி நடைபெற்ற போது கூட இந்த சிற்பம் செதுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இத்தகைய சிற்பங்களை மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.
 
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிற்பத்தின் தொன்மை குறித்து ஆராய்ச்சி செய்தால் தமிழரின் பண்பாடு மேலும் சிறக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 


குடியில்லா தீபாவளி! 🪔 குடும்பத்துடன் கொண்டாடுங்கள்! 🍁

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 

குடியில்லா தீபாவளி! 🪔
குடும்பத்துடன் கொண்டாடுங்கள்! 🍁

தீபாவளி வருகிறது...

தெருவெங்கும் தீபங்களின் ஒளி, 
வானில் வண்ணமயமான பட்டாசுகள்!
 

குழந்தைகளின் குதூகலச் சிரிப்பொலி, 
வீடுகள் தோறும் பலகாரங்களின்  மணம், 
புத்தாடைகளின்  மினுமினு
ப்பு! 

இந்த
சந்தோஷம் ஒவ்வொரு வாசல் படியிலும் பொங்கி வழிய வேண்டும்.

ஆனால், 
சில வீடுகளில் மட்டும் அந்த
ஒளியின் துளி கூட எட்டாத இருள் சூழ்ந்திருக்கிறது! 

அந்த இருளுக்கு ஒரே காரணம்... 
'மது' என்னும் நஞ்சு 👹
தீபாவளி கொண்டாட்டம் குடும்பத்துடன் குதூகலம் | Deepavali Celebration 2022 |  Dinamalar
ஒரு வருடம் முழுவதும் வியர்வை சிந்தி... 
உழைத்து கிடைத்த சிறிய போனஸ் தொகை
... 

குடும்பத்தின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் 
என்பதற்காகத்தான்
.

ஆனால், 
அந்த
மகிழ்ச்சியை... 
'சின்னதொரு குஷி, கொண்டாட்டம்'
என்று சொல்லி மது பாட்டிலில் மூழ்கடித்தால்
... 

அந்த
வீட்டிற்குள் வரவிருந்த 
தீபாவளி ஒளி  🪔
அணைந்து, சோகம் மட்டும் மிஞ்சும்
.😔

ஒவ்வொரு
ஆண்டும் இந்தத் தீபாவளி நாளில்... 

பண்டிகையின் களிப்பில் அல்லாமல், 
போதையின் மயக்கத்தில்... 
பல குடும்பங்கள்
நாசமடைகின்றன.

சிலர் வாழ்வை சிதறடிக்கின்றனர்.
சிலர் உயிரையே இழக்கின்றனர். 

அவர்களெல்லாம்... 
'
அந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்' 
என்ற எண்ணத்தில் தான்
இருப்பார்கள்.

ஆனால்... 
ஒரு
பாட்டில், 
ஒரு
தவறான பழக்கம், 
ஒரு
நொடியின் முடிவு... 
அந்தக் குடும்பத்தின்
ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கண்ணீர் கடலாக்கி விடுகிறது.

“
அப்பா, எப்போ வீட்டுக்கு வருவீங்க? 
பட்டாசு கொளுத்தலாம்
!”
என்று... 
குழந்தைகள்
ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.

அவர்களின்
எதிர்பார்ப்பு, 
ஒரு தீக்குச்சிப் பட்டாசு போல துள்ளி
க் கிளம்புகிறது.

ஆனால், 
அந்த அப்பாக்கள் சிலர், அந்த மகிழ்ச்சியான தருணத்திற்காக வீடு வந்து சேர முடியாமல்... 
தெருவோரங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள்
.

பட்டாசுச் சத்தத்துக்கிடையில் உங்கள்
குழந்தையின் முகத்தில் பூக்கும் புன்னகையே... 
உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி!
🍁

ஒவ்வொரு
வீட்டிலும்... 
ஒரு தாயோ, தகப்பனோ, சகோதரனோ, சகோதரியோ, 
மனைவியோ, பிள்ளைகளோ 
தங்கள் அன்புக்குரியவருடன் தீபாவளி கொண்டாட காத்திருப்பார்கள்
. 

ஆனால்... 
அவர்களோ
'தீபாவளி பார்ட்டி' 
என்ற
பெயரில் சம்பாதித்த காசு, உடல்நலம், குடும்ப உறவுகள்... 
என அனைத்தையும் போதையில் கரைத்துக் கொண்டிருப்பார்
கள். 

குடி பழக்கத்தால் நாசமான குடும்பங்களில்... 
இந்த போதை அரக்கன் ஒரு கொண்டாட்டத்தின் போதும்... 
'விளையாட்டாக தான் முதன்முதலாக நுழைந்திருப்பான்!' 
என்பதை நினைவில்
கொள்ளுங்கள். 

உங்களை
நிபந்தனையின்றி நேசிக்கும்... 
குடும்பமே உண்மையான
செல்வம். 🍁

ஆகவே, 
இந்த
தீபாவளியை... 
ஒரு துளி மதுவின்றி... 
குடும்பத்துடன் இருங்கள்!

கொண்டாடுங்கள்! 🎉

ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது.

போலி விடியலை நம்பி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்!
அரசின் வருவாயை பெருக்க... 
ஆயிரம் வழிகள்
இருக்கிறது. 

மக்களை சிந்திக்க விடாமல்... 
மனதை மயக்கத்தில் ஆழ்த்தி... 
குடும்பங்களை ஏழ்மையில் மூழ்கடித்து... 
ஓட்டுக்கு பணம் கொடுத்து... 
வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் அரசியல் கட்சிகளை... 
ஓட ஓட விரட்டுங்கள்
! 

இன்றே... இப்போதே! 
குடியை மறந்து... 
நம் குடியை காப்போம்! 🍁
தமிழகம் மீட்போம்  🤝


போதை மயக்கத்தில் தள்ளாடாமல்... 
உண்மையான மகிழ்ச்சியை
அனுபவியுங்கள்!

மனதின் இருளை அகற்றி... 
'போதையில்லா' 
தீபாவளியை   கொண்டாடுங்கள்
! 🎉
No photo description available.
இனிய... 
தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 💐

என்றும் அன்புடன் 

ரமேஷ் ராமலிங்கம்

❤️💕💜💖No photo description available.💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏



குப்பை வண்டி விதி’ தெரியுமா? (The Law of the Garbage Truck)

மணக்கால் அய்யம்பேட்டை | 5:53 PM | Best Blogger Tips

1,439 Man Hit By Car Stock Video Footage - 4K and HD Video Clips |  Shutterstock 

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்லவேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

 What if someone drives my car and gets in an accident?

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட… ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

Dealing with the shock of a near miss - Ageas

அந்த காரிலிருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுனர் இவர்களை கன்னாபின்னாவென்று நா கூசும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்ட ஆரம்பிக்கிறான்.இந்த டாக்சி டிரைவரோ பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஜஸ்ட் ஒரு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு டாட்டா காட்டுவது போல கைகளை காட்டுகிறார்.

 Liability When Passengers Cause Crashes in South Bend

அவர் செய்தது ஏதோ நண்பரை பார்த்து செய்வது போல இருந்ததே தவிர தவறாக வண்டி ஒட்டிய ஒரு டிரைவரிடம் செய்வது போல இல்லை.“ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு வாங்கு வாங்கியிருக்கலாம் இல்ல… அவன் மேல தப்பு வெச்சிகிட்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி டிரைவரிடம் கேட்கிறார்.

 Just miss accident in charmudi ghat

அதற்கு டாக்சி டிரைவர் சொன்னது தான் ‘குப்பை வண்டி விதி’ எனப்படுவது. ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.“இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் ஸார், பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள்.

 

மனம் நிறைய குப்பைகளையும் அழுக்குகளையும், வைத்திருப்பார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்திருக்குக்ம். அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் பர்சனலாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜஸ்ட் அவர்களை பார்த்து ஒரு புன்னகை சிந்தி, கைகளை ஆட்டிவிட்டு நாம் போய்கொண்டே இருக்க வேண்டும்”

 1,443 Car Hit Man Videos

அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணிபுரியும் இடத்திலோ அல்லது வீட்டிலோ தெருவில் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார். நம்ம பேர் தான் நாறிப்போகும்…!!” என்று சொல்ல, அதிகாரி அதில் உள்ள நுணக்கத்தை அறிந்து வியந்துவிட்டார்.

 

வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும் இந்த குப்பைவண்டிகள் தங்கள் அன்றைய நாளை ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள். அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி உங்கள் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ அல்லது வன்சொற்கள் வீசினாலோ பதிலுக்கு நீங்களும் வார்த்தை யுத்தத்தில் இறங்காது ஜஸ்ட் ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்துவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றுவிடுங்கள்.

  How Many Car Lengths Between Cars Is The Recommended Following Distance? -  In The Garage with CarParts.com

நம்மை சரியாக நடத்துகிறவர்களை நேசிப்போம். அப்படி நடத்தாதவர்களை புறக்கணிப்போம். வாழ்க்கை என்பது 10% நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதை பொருத்தது. 90% நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதையே பொருத்தது

 

💕💜💖💖❤️💜💖💕 




🙏🌹 நன்றி இணையம்            🌹🙏