குடியில்லா தீபாவளி! 🪔
குடும்பத்துடன் கொண்டாடுங்கள்! 🍁
தீபாவளி வருகிறது...
தெருவெங்கும் தீபங்களின் ஒளி,
வானில் வண்ணமயமான பட்டாசுகள்!
குழந்தைகளின் குதூகலச் சிரிப்பொலி,
வீடுகள் தோறும் பலகாரங்களின் மணம்,
புத்தாடைகளின் மினுமினுப்பு!
இந்த சந்தோஷம் ஒவ்வொரு வாசல் படியிலும் பொங்கி வழிய வேண்டும்.
ஆனால்,
சில வீடுகளில் மட்டும் அந்த ஒளியின் துளி கூட எட்டாத இருள் சூழ்ந்திருக்கிறது!
அந்த இருளுக்கு ஒரே காரணம்...
'மது' என்னும் நஞ்சு 👹
ஒரு வருடம் முழுவதும் வியர்வை சிந்தி...
உழைத்து கிடைத்த சிறிய போனஸ் தொகை...
குடும்பத்தின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும்
என்பதற்காகத்தான்.
ஆனால்,
அந்த மகிழ்ச்சியை...
'சின்னதொரு குஷி, கொண்டாட்டம்'
என்று சொல்லி மது பாட்டிலில் மூழ்கடித்தால்...
அந்த வீட்டிற்குள் வரவிருந்த
தீபாவளி ஒளி 🪔
அணைந்து, சோகம் மட்டும் மிஞ்சும்.😔
ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தீபாவளி நாளில்...
பண்டிகையின் களிப்பில் அல்லாமல்,
போதையின் மயக்கத்தில்...
பல குடும்பங்கள் நாசமடைகின்றன.
சிலர் வாழ்வை சிதறடிக்கின்றனர்.
சிலர் உயிரையே இழக்கின்றனர்.
அவர்களெல்லாம்...
'அந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்'
என்ற எண்ணத்தில் தான் இருப்பார்கள்.
ஆனால்...
ஒரு பாட்டில்,
ஒரு தவறான பழக்கம்,
ஒரு நொடியின் முடிவு...
அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் கண்ணீர் கடலாக்கி விடுகிறது.
“அப்பா, எப்போ வீட்டுக்கு வருவீங்க?
பட்டாசு கொளுத்தலாம்!”
என்று...
குழந்தைகள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பு,
ஒரு தீக்குச்சிப் பட்டாசு போல துள்ளிக் கிளம்புகிறது.
ஆனால்,
அந்த அப்பாக்கள் சிலர், அந்த மகிழ்ச்சியான தருணத்திற்காக வீடு வந்து சேர முடியாமல்...
தெருவோரங்களில் மயங்கிக் கிடக்கிறார்கள்.
பட்டாசுச் சத்தத்துக்கிடையில் உங்கள் குழந்தையின் முகத்தில் பூக்கும் புன்னகையே...
உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி! 🍁
ஒவ்வொரு வீட்டிலும்...
ஒரு தாயோ, தகப்பனோ, சகோதரனோ, சகோதரியோ,
மனைவியோ, பிள்ளைகளோ
தங்கள் அன்புக்குரியவருடன் தீபாவளி கொண்டாட காத்திருப்பார்கள்.
ஆனால்...
அவர்களோ 'தீபாவளி பார்ட்டி'
என்ற பெயரில் சம்பாதித்த காசு, உடல்நலம், குடும்ப உறவுகள்...
என அனைத்தையும் போதையில் கரைத்துக் கொண்டிருப்பார்கள்.
குடி பழக்கத்தால் நாசமான குடும்பங்களில்...
இந்த போதை அரக்கன் ஒரு கொண்டாட்டத்தின் போதும்...
'விளையாட்டாக தான் முதன்முதலாக நுழைந்திருப்பான்!'
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களை நிபந்தனையின்றி நேசிக்கும்...
குடும்பமே உண்மையான செல்வம். 🍁
ஆகவே,
இந்த தீபாவளியை...
ஒரு துளி மதுவின்றி...
குடும்பத்துடன் இருங்கள்!
கொண்டாடுங்கள்! 🎉
ஒவ்வொரு விடியலும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது.
போலி விடியலை நம்பி வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்!
அரசின் வருவாயை பெருக்க...
ஆயிரம் வழிகள் இருக்கிறது.
மக்களை சிந்திக்க விடாமல்...
மனதை மயக்கத்தில் ஆழ்த்தி...
குடும்பங்களை ஏழ்மையில் மூழ்கடித்து...
ஓட்டுக்கு பணம் கொடுத்து...
வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் அரசியல் கட்சிகளை...
ஓட ஓட விரட்டுங்கள்!
இன்றே... இப்போதே!
குடியை மறந்து...
நம் குடியை காப்போம்! 🍁
தமிழகம் மீட்போம் 🤝
போதை மயக்கத்தில் தள்ளாடாமல்...
உண்மையான மகிழ்ச்சியை அனுபவியுங்கள்!
மனதின் இருளை அகற்றி...
'போதையில்லா'
தீபாவளியை கொண்டாடுங்கள்! 🎉
இனிய...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 💐
என்றும் அன்புடன்
ரமேஷ் ராமலிங்கம்
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏