கருப்பு விளக்கு - சுயமரியாதைக் கூடிய இத்தலைமுறை வாழ்வு நீ தந்தது!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:54 AM | Best Blogger Tips

May be an image of 1 person and text that says "អេកមត្ធប់ பெருச் தரயம் Κ. காமராஜ் மோற்கத் 15-7-1903 apc BAH 時 2-10-1975"  

கருப்பு விளக்கு
~
எங்கள் பூட்டன் பாட்டன்களின் சரித்திரம்
புராதன அழுக்கைக் கொண்டது
 
சிமினி விளக்கை ஏற்றியும்
லாந்தரைக் கொளுத்தியும் அகலாதது
 
அவர்களைச் சூழ்ந்த இருள்
புழுதியும் சேறும்தான் 
 
அவர்களுடைய பகல்
 
அத்தைகளைக் கட்டிக்கொடுக்க
வாங்கிய ஆயிரம் ரூபாய்க்கு
  
அவர்களது இடக்கை பெருவிரல்
மாயவ படையாட்சியிடம்
வண்டிப்பசை பூசியது
 
தெருவுக்கு வந்த வெளிச்சத்திலும்
அவர்கள் கண்கள் மூடியேக் கிடந்து
செவிவழியாய்க் கேட்ட 
 
பழம் பாடல்களை
அவர்கள் முணுமுணுத்துக்
கொண்டிருந்தார்கள்
 
ஊர் போய்ச் சேர பேருந்தின்
வண்ணங்களை ஒடுக்குகளை
அடையாளம் கண்டவர்கள்
 
பாட்டிகள் அத்தைகளின் கதையோ
இன்னும் மோசம்
 
விறகுப் புகையில் இருமி
பிள்ளைப் பேற்றில்
செத்துப் போனார்கள்
 
குக்கிராமங்களில்
விலங்குகளைப்போல் வாழ்ந்த இவர்களைச் சிந்தித்தான் 
 
ஒரு தலைவன்
அவனும் படிக்காதவன்
 
ஏழை பாழைகளின்..
பஞ்சைப் பராரிகளின்..
 
ஏக்கங்களை..
 
பெருமூச்சை..
 
கண்ணீரை..
 
குருதியைப்
படித்த மா மேதை
 
மண்சுவர் கொண்டு
கூரை வேய்ந்து
ஒரு கோவில் செய்தான்
 
அதில் ஒரு தண்டவாளத்
துண்டை மாட்டினான்
 
வயிற்றுத் தீயை
இரண்டு உருண்டை
சோற்றுப் பருக்கைகளால் 
 
அணைத்து வைத்தான்
ஒவ்வொரு குடிசையிலும்
ஔவைப் பாட்டி 
 
வலதுகாலெடுத்து வைத்தாள்
வள்ளுவர் வந்தார்
கம்பர் வந்தார் 
 
ஷேக்ஸ்பியர் வந்தார் 
 
அல்ஜிப்ரா வந்தது
 
நியூட்டன் வந்தார் 
 
குடிசையிலிருந்து
 
அப்பா ஆசிரியராய்
 
வெளிவந்தார்
 
ரலே சைக்கிளில் போகும்
மகனைப் பார்த்து 
 
கண்ணீர் துடைத்தார்
என் தாத்தா
 
துணி உலர்த்தும் கொடிகளில்
சில வெள்ளைச் சட்டைகள்
தொங்க ஆரம்பித்தன
 
அக்காக்களுக்கு
டீச்சர் ட்ரைனிங் கனவு
 
மருமகள்களுக்கு
மருத்துவக் கனவு
 
இப்போது தாத்தாக்களை
நினைவு கொள்ள
 
ஒரு புகைப்படம்கூட இல்லை
அப்பா அப்படியில்லை 
 
அவர் கட்டிய ஓட்டு வீட்டின்
வாசல் முகப்பில்
 
கம்பீரம் மின்ன நாற்காலியில்
அமர்ந்திருக்கிறார்
 
புகைப்படமாக
எங்களை தெய்வங்கள்கூட
 
சற்று தூரத்தில் 
 
இடுப்பில் துண்டைக் கட்டி
நிற்க வைத்தது
 
எம் கருப்புத் தலைவனோ
எங்களுக்கு பாதுகாப்பான
கூரையைத் தந்தான்
 
ஆண்களோடு பெண்கள்
சமமாக அமர
நாற்காலி தந்தான்
 
சாதியைக் காட்டி
பிடுங்கிக் கொண்ட
பாடப் புத்தகங்களை
அவனே மீட்டுக் கொடுத்தான்
 
 
வேறெப்படி சொல்லமுடியும்
பெருந்தலைவனே..
 
கருப்பாயிருந்தாலும் 
 
நீ விளக்கு
 
நீ வெளிச்சம்
 
சுயமரியாதைக் கூடிய
 
இத்தலைமுறை
 
வாழ்வு நீ தந்தது!
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

 

 

 

துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப்.............!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:35 AM | Best Blogger Tips

 May be a doodle of 3 people

ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது…  மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… 
.
ஒரு முக்கியமான வேலை…
.
Building Construction | Commercial Building Construction Service | Shevaroy  Engineering And Construction Private Limited, Salem
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு  முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
Construction Cost in Coimbatore 2025 | Per Sqft Rates Explained
ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்… 
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை…
.
 இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க
முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்… 
.
ஒரு
பத்து ரூபாய் நோட்டை எடுத்து
மேலே இருந்து,கொத்தனார் அருகில் போட்டார்…
.
10 Rupees - India – Numista
ரூபாயைப் பார்த்த கொத்தனார், 
அதை எடுத்து
பையில் போட்டுக்
கொண்டார்…
.
 ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.

இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு
ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
Mystery of Missing Rs 500 Notes: Who is ...
 அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு… கொத்தனார் மும்முரமாக இருந்தார்… 
.
எஞ்சினியர்.. பொறுமை இழந்து 
ஒரு சின்ன
கல்லை எடுத்து,
கொத்தனார்
மீது போட்டார்… 
.
Stone Masonry Art in Ireland
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு
மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித்தான்….

மேலே இருந்து இறைவன்
அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...
DO YOU KNOW THE GIFTS GOD GAVE YOU? - Baptist & Reflector
இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...
God's Gift of Salvation - Salvation Through Jesus Christ
ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
.
புரிந்து கொள்ளுங்கள்.. 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  


🌷 🌷🌷 🌷

 

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips

 May be an illustration of 1 person, scooter and motorcycle

நடுத்தர வர்க்க ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு வரும் பெண்தான் உண்மையிலேயே 
 
 
பெரிய இடத்துக்கு வாழ்க்கைப்பட்டு போகிறவர்கள் அடிமை வாழ்க்கை வாழ வேண்டும்... இல்லை என்றால் தனெக்கென ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும்... இவர்களிடம் பணம், நகைகள் குவிந்திருக்கலாம்....
 
ஏறினால்/இறங்கினால் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் இருக்கலாம்..... அடுக்கு மாடி வீடிருக்கலாம்... அதட்டி வேலை வாங்க ஆள் இருக்கலாம்... ஆனாலும் அவர்கள் பணக்கார #உரிமையற்றவர்கள்தான்...
 Realistic Tamil Woman Painting By Ilayaraja 11
அடித்தட்டு ஆணுக்கு வாழ்க்கைப்படுபவர்கள் சரிக்கு சரியாய் உழைக்க வேண்டும்.. வெளியில் கணவனுக்கு சமமாகவும், வீட்டில் 
 
கணவனுக்காகவும் உழைக்கவும் அல்லது அதற்கு மேலும் கூட உழைக்க வேண்டும்... குடிகார கணவெனென்றால் அவனுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும்... இங்கே அதிகாரமிக்க #அடிமையாகத்தான் பெண் வாழ முடியும்...
 
நடுத்தர குடும்ப ஆணுக்கு 
 Realistic Tamil Woman Painting By Ilayaraja 14 - Full Image
வாழ்க்கைப்பட்டவர்களுக்கு சம்பாதிக்க உழைக்க வேண்டிய கட்டாயமில்லை... அவர்கள் உழைக்க தயாரானாலும் தடை இல்லை.... கணவனின் வருமானத்தை கணக்கிட்டு செலவு செய்யவோ, சேமிக்கவோ முழு அதிகாரம் உண்டு..
 
வேண்டியவர்களை சேர்க்கலாம்... 
 
வெறுப்பவர்களை விலக்கலாம்.. எல்லா முடிவுகளையும் தாமே எடுக்கலாம்.... 
 
வியர்வையோடு தூங்கினாலும் பாதுகாப்பாய், ஆதரவாய் தூங்கலாம்.... பேருந்தில் பயணித்தாலும் உற்றவர்களுடன் பயணிக்கலாம்...
 Realistic Tamil Woman Painting By Ilayaraja 10
கடன் வாங்கினாலும் கவலை பட்டாலும் உனக்கு நான் எனக்கு நீ என சாய்ந்துகொள்ள தோளிருக்கும் ... இன்ஸ்டால்மெண்டில் வாங்கினாலும் சந்தோஷத்தை ஒவ்வொரு நொடியும் உணரலாம்..வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்ப தாமதமானால் தேடி வர ஆளிருக்கும்...
இப்படி ஆயிரமாயிரம் இருக்கும்...
 
தன் பொறுப்புணர்ந்து வாழும் நடுத்தர வர்க்க பெண்ணா நீங்கள்??? உரக்கச்சொல்லுங்கள் இந்த உலகிற்கு....

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

💓❤️💓❤️💓❤️💓❤️💓 பெருந்தலைவர் காமராசர்.........🌷 🌷 🌷 🌷🌷 🌷

மணக்கால் அய்யம்பேட்டை | 11:53 AM | Best Blogger Tips

 May be an illustration of 2 people and child

பெருந்தலைவர் காமராசர்.
💓❤️💓❤️💓❤️💓❤️💓
இந்தப் பெருந்தலைவன்
பிறந்தபோது
வானத்தில் துருவ நட்சத்திரம்
எதுவும் தென்படவில்லை.

ஒரு தேவதூதன்
தோன்றியதாய்
தேவர்கள் பூமாரி எதுவும்
பொழியவில்லை.
காமராஜர்: மக்கள் தலைவர் | காமராஜர்: மக்கள் தலைவர் - hindutamil.in
ஒரு ஓலைக்குடிசையில்
ஏழை வீட்டில்
எங்கள்
நாளைய தலைவன்
அவதரித்தான்
.

கருப்பை நிறமாய்
உடுத்திக்கொண்டு
அடிமை இருட்டை விரட்ட
அவன் பிறந்தான்.
பெருந்தலைவர் காமராஜர்
காந்திய வழியை
ஏற்றுக்கொண்டு
கதராடையில் கடவுளாய்
தினம்
நடந்தான்.

எளிமை நேர்மை
அணு அளவும் குறையா
அரசியல் தூய்மை
.
நல்லவேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு... | Kadhambam jeeva and kamarajar friendship
வறுமை நெருப்பில்
வாடிய போதும்
வளைந்து கொடுக்கா
வணங்கா முடியின் வாய்மை
.
காமராசர் - தமிழ் விக்கிப்பீடியா
பெருந்தலைவர் என்ற
பெயரைச் சொன்னால்
உலகம் வியக்கும்
ஒப்பற்ற தலைமை
.
காமராசர் - தமிழ் விக்கிப்பீடியா
பதவி நூறு தேடி வந்தும்
பல்லிளித்து ஓடவில்லை.
பகைவர்களிடம் பணிந்து சென்று
பல்லக்கும் சுமக்கவில்லை.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு- Kamarajar Life History
தனி மனித ஒழுக்கத்தின்
புனிதாக வலம் வந்தார்.
எதிரிகளும் போற்றுகின்ற
எடுத்துக்காட்டாய்
அவர் நின்றார்.

ஆடு மாடு மேய்த்த கூட்டம்
ஆனா...
ஆவன்னாவைப் படிக்கவே,
S.Badrinath on X: "Tribute to the original Father of TN who always stood by  the poor and valued their education above anything #Kamarajar #பெருந்தலைவர்  #காமராஜர் #HBDKamarajar https://t.co/wCx8p3QtFW" / X
கால்நடையாய்த் திரிந்த மக்கள்
எழுதுகோலைப் பிடிக்கவே
Kamarajar: கல்வி தந்தை காமராஜரின் 120வது பிறந்தநாள்... ஏழைகளின் கல்வி  வளர்ச்சிக்கு கர்மவீரர் ஆற்றிய சேவை... | Kamarajar 120th Birthday His  Services To The Education Of Tamil ...
தேடித் தேடி மக்களிடம்
தெருத்தெருவாய் நடந்திட்டார்.
ஓடிச்சென்று
கையேந்தி
அறிவை வளர்க்கும் 
வழிகண்டார்.

காமராஜர் செய்த கல்விப்புரட்சி- முனைவர் கவிஞர் இரவிபாரதி | maalaimalar  special articles kamarajar
ஊர்கள்தோரும் பாடசாலை
உருவாக்கியது கல்விச்சாலை
.
தடைகள் நூறு வந்தபோதும்
அதைத்
தகர்த்தெறிந்தது
தற்குறியின் மூளை
.
காமராஜர் எனும் கல்வி விளக்கு | காமராஜர் எனும் கல்வி விளக்கு - hindutamil.in
அறிவுப் பசியைத் தீர்த்து வைக்க
ஆலயமாய்ப்
பள்ளிகள்.
இருந்தும்
வயிற்றுப் பசியைக் காட்டிக்காட்டி
வர மறுத்தன பிள்ளைகள்.
காமராஜரின் குழந்தைகளுக்கான பேச்சு போட்டி கட்டுரை | Kamarajar Speech in  Tamil for Kids..!
மெத்தப் படித்த மேதையெல்லாம்
புத்தகம் மட்டுமே போதுமென்றார்.
இந்த
படிக்காத பாமரனோ
வயிற்றுச் சோறு போடவேண்டுமென்றார்
.
பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என எண்ணியவர் காமராஜர்! கர்மவீரரின் கதை  இது! | 120th birthday of Ex Tamilnadu Cm Kamarajar - Tamil Oneindia
புழுதி மைந்தன் புத்தியில்
உதித்த புதிய திட்டமே.
வறுமை நோயை விரட்டவந்த
மதிய உணவுத் திட்டமே
.

பசித்து வந்த வயிறு எல்லாம்
புசித்து மகிழ்ந்து உண்டது.
நிஜத்தில் வந்து
நிற்கின்ற
கடவுள் என்றே
சொன்னது.
மக்கள் மனதில் என்றென்றும் வாழும் கர்ம வீரர் காமராஜர்! - மனிதன்
அஃறிணையாய் இருந்த கூட்டம்
அகரம் படித்துச் சென்றது.
அறிவினிலே சிறகு விரித்துச்
சிகரம் தாண்டி
வென்றது.

பொதுவாழ்வில் இவர் போல
ஒருவர் எவரும் இல்லையே.
இரண்டு
வேட்டி சட்டை தவிர வேறு
சொத்து
சேர்க்கவில்லையே.
Speech About Kamarajar in Tamil for School Students : காமராஜர் பிறந்தநாள்  பேச்சுப்போட்டியில் கலக்க வேண்டுமா? பள்ளி மாணவர்களுக்கு உதவும் உரை இதோ
தனக்காக என்று எதுவும்
பதுக்கிவைத்ததில்லையே.
தலையணை கூட இவர்
தலைக்கு
வைத்ததில்லை.

ஆட்சி அதிகாரம் வந்தபோதும்
காட்சி மாறவில்லையே.
பல
அவமானம் கண்டபோதும்
கட்சி மாறவில்லையே.
கல்விக்கண் திறந்த காமராசர்..! - Magizhchifm - Tamil radio
ஆள் பிடித்துக் கால் பிடித்து
அடிமையான தில்லையே
.
தோள்கொடுத்துத் தாங்கி
நிற்பார்
இவர்
எவர் காலையும்
வாரவில்லையே
.

வாழ்ந்து போகட்டும் விட்டுவிடு இவர் வாய்மொழியின்
மந்திரம்.
ஆகட்டும் பார்க்கலாம் -
இதுதான் இவர்அரசியலின் தந்திரம்
.




K.Kamaraj - by Kamaraj's family - விருதுநகர்: November 2007
முதல்வர் என்ற உயர்பதவி
இவர் தோளில் விழுந்த துண்டுதான்.
முதலில் இவர்
தொண்டர்
பெருந்தலைவர் எல்லாம்

பின்பு தான்.
Kamarajar Essay In Tamil For Students : நான் விரும்பும் தலைவர் காமராஜர் -  பள்ளி மாணவர்களுக்கு உதவும் கட்டுரை
இந்தியாவின் பிரதமராய்
இருக்கும் வாய்ப்பு வந்துமே!
இரண்டு முறை மறுத்துவிட்ட
பெருந்தன்மை இவரின் உயர்ந்த பண்பு
தான்.

அணைகள் கட்டி ஆறு காத்த
பட்டிக்காட்டுப் பாமரன்.
புதிய ஆலைகளைக் கொண்டுவந்த
பாரத்தின் தலைமகன்.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு- Kamarajar Life History
தமிழர் மானம் காத்து நின்ற
பச்சைத் தமிழன் பரம்பரை.
உலகம் யாவும் போற்றுகின்ற

ஒப்பற்ற தலைமுறை.

இவர் இறந்தபோது சொத்துக்கணக்கு
நூற்றைம்பது சொச்சமே
.
கிழிந்த
இரண்டு வேட்டி சட்டை மட்டுமே
விட்டுச் சென்ற மிச்சமே
.

இவர் போல அரசியலில்
புனிதத் துறவி இல்லையே.
இவர் போல யாரும் இனி
இந்த மண்ணில் பிறப்பதில்லை.

பெருந்தலைவா
உனைப்போல
இருந்ததில்லை ஒருதலைவன்
.
இனி பிறந்து வந்தால்
எவன் ஒருவன்
அவன் பேரே இறைவன்
.

நறுமுகை. 



 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர், அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாக....!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:05 PM | Best Blogger Tips

 பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு கடற்கரையோரத்தில் தனது கைத்தடியுடன் நிற்கிறார்

 யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். 

அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். 

தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். 

வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். 

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. 
ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. 
நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். 

உடலில் தேவையான அளவிற்கு வியானப் பிராணா வை அவர் தக்கவைத்துச் சென்றதால், இத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.





இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. 
ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் விஞ்ஞானிகள்/மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர். 
அதனால் போகும்போது, அவர்களுக்கு கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். 

காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்து கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.

 
 யோகி பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விட்டு நீங்கும்பொழுது, அவர்முன் 700 பேர் இருந்தனர். 

அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். 

தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். 

வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன் உடலை நீத்தார். 

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு விஷயமிது. 
ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று நம்பப்படுகிறது.

இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. 
நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா உடலை விடும்போது, "'33 நாட்களுக்கு பிறகுதான் இவ்வுடலை அடக்கம் செய்ய வேண்டும், அழிந்து போகாத இவ்வுடலை அப்படியே வைத்துக் கொள்ளலாம்’" என்று சொல்லிவிட்டு உடலை நீத்தார். 

உடலில் தேவையான அளவிற்கு வியானப் பிராணா வை அவர் தக்கவைத்துச் சென்றதால், இத்தனை நாட்களுக்கு பிறகும் உடல் நன்றாக இருக்கும்.



பரமஹம்ஸ யோகானந்தர் | போதனைகள் | ஒய் எஸ் எஸ்

அவர் உடல் (U.S.A) லாஸ் ஏஞ்சல்ஸில்
இன்றும் அழிவில்லாமல் அப்படியே இருக்கிறது.

இவரது குரு யுக்தேஸ்வரகிரியும் இவரை போலவே தன் உடலை துறக்க போவதை முன்கூட்டியே அறிவித்தார். மேலும் அவர் உடலை துறந்த மறுநாளே பரமஹம்ஸ யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார்.

ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி என்றழைக்கப்படும். 

தன் உடலை ஒரு சட்டையை கழற்றுவது போல நீக்கிவிட்டு சென்றுவிடுவர். அது மரணமல்ல-சாகாநிலை-மரணமில்லா பெருவாழ்வு*. அவர்கள் காரியப்படுவதற்கு இந்த உடல் தேவையில்லை. 
அவ்வளவுதான்.

கபீர் தாசர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா பூக்களே இருந்தன.

ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் மறைந்தது.

பட்டினத்தார் பிரம்பு கூடைக்குள் புகுந்து திருவொற்றியூர் கடற்கரையோர சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டி அந்த கூடைக்குள்ளிருந்தே மறைந்து போனார். 
தன் அடையாளம் அழித்து பூரணமான அவரின் அடையாளமாக, அவர் மறைந்த இடத்தில ஒரு சிவலிங்கம் இருந்தது.

மாணிக்கவாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னதி கருவறையில் வெட்டவெளியில் ( வான் பொருள்-ஆகாயம் ) பலர் முன்னிலையில் கலந்து விட்டார்.

150 ஆண்டுகளுக்கு முன்பு இராமலிங்கசுவாமிகள் வடலூரில் ஒருதனி அறையில் ஒளிஉடலோடு மறைந்து விட்டார்.

பரமஹம்ஸயோகனந்தரின் யோகா உடல் 33 நாட்கள் பொதுமக்கள்பார்வைக்கு வைக்கப்பட்டது.

ஆன்மீகம் என்பது ஒரு புரியாத புதிர். அதை ஒவ்வொருவரும் சுய அனுபவ வாயிலாகதான் உணர முடியும்.

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷