திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips


திருத்ராஷ்ட்ரனுக்கு ஏன் கண் குருடானது? ஏன் அவனுக்கு நூறு குழந்தைகள்?

அடியேன் சமீபத்தில் படித்த ஒரு நிகழவு தங்களுக்காக,
குருசேஷத்திர போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துகொண்டிருந்தது.
அப்போது திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம், கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது நூறு மைந்தர்களும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார்.
அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உனக்கு நான் ஒரு கதை கூறுகிறேன். அதன் பின் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீ அதற்கு பதில் சொன்னால், நான் உனக்கு பதில் தருகிறேன்! என்ற பகவான், கதையைக் கூறினார்.

நீதி தவறாது ஆட்சி செய்த ஓர் அரசனிடம் மிகவும் வறியவன் ஒருவன் சமையற்காரனாகச் சேர்ந்தான்.

மிகச் சுவையாக சமைப்பது, அரசரை பிரத்யேகமாகக் கவனிப்பது என அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகளினால் வெகு சீக்கிரமே தலைமை சமையல் கலைஞனாக உயர்த்தப்பட்டான்.
அரசருக்கு வித்தியாசமான சுவையை அறிமுகப்படுத்தி பரிசு பெறும் நோக்கில், அவனுக்கு விபரீதமான யோசனை தோன்றியது.

அதன்படி,அரண்மனைக் குளத்தில் இருந்த அன்னத்தின் குஞ்சு ஒன்றினைப் பிடித்து ரகசியமாய் சமைத்து, அரசருக்குப் பரிமாறினான்.

தான் சாப்பிடுவது இன்னதென்று தெரியாமல் அப்பதார்த்தத்தின் சுவையில் மயங்கிய மன்னர், அதை மிகவும் விரும்பிச் சாப்பிட்டதோடு அடிக்கடி அதை சமைக்கவும் கட்டளை இட்டு, சமையற்காரனுக்கு பெரும் பரிசும் அளித்தார்.

திருதராஷ்டிரா, இப்போது சொல்... அரசன், சமையல் கலைஞன் இருவரில் அதிகம் தவறிழைத்தவர் யார்? என்று பகவான் கேட்டார்.

வசிஷ்டரின் சமையற்காரன் தான் அறியாமலே புலால் கலந்த உணவை அவருக்கு வைத்து விட்டார்.

ஆயினும் வசிஷ்டர் அதைக் கண்டுபிடித்து, அவனுக்கு சாபமிட்டார்.

அந்த விவேகமும் எச்சரிக்கையும் இந்த அரசனிடம் இல்லையே! சமையற்காரன் பணம், பரிசுகளுக்கு ஆசைப்பட்டிருப்பான். அதனால் அவன் செய்த தவறு சிறியது.

ஆனால் பல நாட்கள் அசைவம் உண்டும் அதைக் கண்டுபிடிக்காத அரசன்தான் அதிக தவறிழைத்தவன் ஆகிறான்! என்றார், திருதராஷ்டிரன்.

புன்னகைத்த கண்ணன், திருதராஷ்டிரா! நீயும் ஓர் அரசனாக இருந்தும், நியாயம் தவறாது, மன்னவன் செய்ததே தவறு! என கூறினாய்.

அத்தகைய நீதி பரிபாலனம்தான் பீஷ்மர், துரோணர், போன்ற சான்றோர் சபையில் உன்னை அமர்த்தியது.

நல்ல மனைவி, நூறு குழந்தைகள் என நல்வாழ்க்கையைத் தந்தது.

ஆனால், நான் சொன்ன கதை உன்னைப் பற்றியதுதான்.
சென்ற பிறவியில் நீயே உன் தவறால் நூறு அன்னக் குஞ்சுகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறாய்.

அந்த அன்னங்கள், அதன் தாயார் எத்தகைய துயரும், வேதனையும் அடைந்திருக்கும் என்பதை உன் நூறு பிள்ளைகளை இழந்து நீ அறிந்துகொள்கிறாய்.

ஆனால் தினம் தினம் பார்த்தும் உனக்கு சைவ, அசைவ உணவுகளுக்கிடையே வேறுபாடு தெரியவில்லை.
அப்புறம் உனக்கு, கண் எதற்கு? அதனாலேயே நீ குருடனானாய்.
தெய்வத்தின் சன்னிதானத்தில் ஒரு போதும் நீதி தவறாது

அவரவர் வினைக்கேற்பவே அவரவர் வாழ்வு அமையும்! என்றார்.

தன்வினையே தன்னைச் சுட்டதென்பதை உணர்ந்த திருதராஷ்டிரன் வாயடைத்து நின்றான்.


நன்றி இணையம்

பிறப்பு என்பது நம் கையில் இல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 9:04 PM | Best Blogger Tips

பிறப்பு என்பது நம் கையில் இல்லை 

பிறவியைப்போல் ஒரு பெரும் துன்பம் இல்லை 

பிறந்தவர் யாவரும் நிம்மதியுடன் இல்லை 

பிறவி என்னும் பெருங்கடலை 
நீந்தி கடந்திடும் நாளே
 மகிழ்ச்சியின் எல்லை 

எத்தனை எத்ததை ஏக்கங்கள்

எத்தனை எத்தனை தாக்கங்கள் 

எத்தனை எத்தனை நோக்கங்கள்

எத்தனை எத்தனை ஆசைகள் 

எத்தனை எத்தனை தேவைகள் 

எத்தனை எத்தனை கோபங்கள் 

 *எல்லாம் ஒரு நாள் விலகிடும் மாயைகள்* 

எத்தனை எத்தனை பாசங்கள் 

எத்தனை எத்தனை நேசங்கள் 

எத்தனை எத்தனை வேசங்கள் 

எத்தனை எத்தனை உறவுகள் 

 *அத்தனை அத்தனையும்* 

ஒரு நாள் பிரிந்திடும் துன்பங்கள் 

எத்தனை எத்தனை துன்பங்கள் 

அத்தனை அத்தனைகளில் இருந்து 

விடுதலை ஆவதும் அந்நாளே

உடம்புடன் சதையும் எலும்பும் ஒருநாள்

தீயில் அழியும் அல்லது
மண்ணில் மறையும்

வாழ்ந்த ஒவ்வொரு நாளும் 

நரகத்தின் பிடியில் சிக்கிய நாளே 

மனிதனின் வாழ்வும் கானல் நீரும்

ஒன்றெனத் தெரியும் 


உடலும் உயிரும் பிரிந்திடும் நாளே 

பூமியில் இருந்து விடுதலை அடைந்திடும் நாளே

புண்ணியம் செய்து உயிர் புறப்பட்டதாலே 

போன உடலை சுற்றி வணங்கிடும் ஊரே 

 *போனவர் வாழ்க்கை முடிந்தது முடிந்ததே* 

இருப்பவர்களுக்கு எல்லாம் இறைவன் அவரே 

இருப்பவர்கள் யாவரும்
தானமும் தவமும் செய்திடுவர் 
அவர் பெயராலே 

ஆலயம் காண்பர் , அஸ்தியும் கரைப்பர் 

பார்த்து வணங்கிட பலவும் செய்வர்

இருப்பினும் 

பார்க்கும் உயிர்கள், பொருள்களில் எல்லாம்

 இருப்பவர் அவரென்று பாவம் அவர்கள் அறியார்.

 *ஞானம் அடைந்திடும் நாள்வரும் போது* 

உலக வாழ்க்கை ஒன்றுமில்லை என அறிவர்

அதை உணரும் நாள் வரை மனம் கெட்டு திரிவர்

அதை உணரும் நாள் வரை மதி கெட்டு திரிவர்

மந்திரம் இல்லை மாயமும் இல்லை

வணங்கிடும் யாவும் தெய்வமும் இல்லை 

உன் மனமே அனைத்தும் என்றுணரும் 

 *நாள் வரும் போது ஞானியும் நீயே* 

பற்றுகள் துறப்பாய்

பதவியும் துறப்பாய் 

உடைமைகள் துறப்பாய் 

உறவுகள் துறப்பாய் 

பாவம் புண்ணியம் எதுவென அறிவாய்

வாழ்ந்திடும் வாழ்க்கை சுமை என அறிவாய்

மண்ணில் இருந்து விண்ணை அடைவாய் 

அறிந்து பிரிந்தால்  அகிலமும்  ஆள்வாய் 

பிறவிகள் இன்றி 
இயற்கையில் கலப்பாய் 

இதை அறியாதோர் யாவரும்

தரணியில் வாழ்ந்தது போல 

துன்பம் மட்டும் தொடர்ந்திடக் காண்பார் 

 *அறிந்திடும் மனமும் தெளிந்திடும் ஒரு நாள்* 


அழுதிடும் கண்ணும் வறண்டிடும் ஒருநாள் 

நினைத்திடும் மனமும் மறந்திடும் ஒரு நாள் 

வாடிய முகமும் சிரித்திடும் ஒரு நாள் 

வாழ்க்கை இதுவென உணர்ந்திடும் ஒரு நாள் 

மெய்ஞானத்தை மட்டும் நினைத்திடும் மனமும் 

எல்லாவற்றையும் தனக்குள் அடக்கும்.

அடக்கிய மனமும் ஒரு நாள் அடங்கும்

இதுவே இயற்கையின் நியதி 

இதுவே என்றும் இயற்கையின் நியதி

இதை அறிந்தும் 

இனி ஒருபிறவி கேட்டு வணங்கினால் 

வாழ்ந்ததைவிட துன்பங்கள் யாவும் 

 பலமடங்கு வந்து உன்னைச் சேரும்

 என்பதை மனதினில் உணர்ந்து 

இனி ஒரு பிறவி வேண்டாம் என்று 

என்றென்றும் மனதினில் விரும்பு 

என்றென்றும் மனதிலே இதையே விரும்பு 

இன்பத்தை காண இதுவே மருந்து 

துன்பமில்லாமல் இன்பத்தை காண இதுவே மாமருந்து 

இயற்கை ஒன்றே நிலையென உணர்ந்து 

நாளும் நாளும் அதில் கலந்திட விரும்பு 

ஆசைகளைத் துறத்தலே அனைத்துக்கும் மருந்து 

அமைதி கொள்வாய் இதை உணர்ந்து 

என்றும் அமைதி கொள்வாய் மனமே 

இது தான் உண்மை என உணர்ந்து 

ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 
ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 
ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

இனிய காலை வணக்கம் 🙏

எனக்குள் ஒரு பயணத்தை நோக்கி 

நன்றி

இரா.இரகுநாதன் 

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳