பிறப்பு என்பது நம் கையில் இல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 9:04 PM | Best Blogger Tips

பிறப்பு என்பது நம் கையில் இல்லை 

பிறவியைப்போல் ஒரு பெரும் துன்பம் இல்லை 

பிறந்தவர் யாவரும் நிம்மதியுடன் இல்லை 

பிறவி என்னும் பெருங்கடலை 
நீந்தி கடந்திடும் நாளே
 மகிழ்ச்சியின் எல்லை 

எத்தனை எத்ததை ஏக்கங்கள்

எத்தனை எத்தனை தாக்கங்கள் 

எத்தனை எத்தனை நோக்கங்கள்

எத்தனை எத்தனை ஆசைகள் 

எத்தனை எத்தனை தேவைகள் 

எத்தனை எத்தனை கோபங்கள் 

 *எல்லாம் ஒரு நாள் விலகிடும் மாயைகள்* 

எத்தனை எத்தனை பாசங்கள் 

எத்தனை எத்தனை நேசங்கள் 

எத்தனை எத்தனை வேசங்கள் 

எத்தனை எத்தனை உறவுகள் 

 *அத்தனை அத்தனையும்* 

ஒரு நாள் பிரிந்திடும் துன்பங்கள் 

எத்தனை எத்தனை துன்பங்கள் 

அத்தனை அத்தனைகளில் இருந்து 

விடுதலை ஆவதும் அந்நாளே

உடம்புடன் சதையும் எலும்பும் ஒருநாள்

தீயில் அழியும் அல்லது
மண்ணில் மறையும்

வாழ்ந்த ஒவ்வொரு நாளும் 

நரகத்தின் பிடியில் சிக்கிய நாளே 

மனிதனின் வாழ்வும் கானல் நீரும்

ஒன்றெனத் தெரியும் 


உடலும் உயிரும் பிரிந்திடும் நாளே 

பூமியில் இருந்து விடுதலை அடைந்திடும் நாளே

புண்ணியம் செய்து உயிர் புறப்பட்டதாலே 

போன உடலை சுற்றி வணங்கிடும் ஊரே 

 *போனவர் வாழ்க்கை முடிந்தது முடிந்ததே* 

இருப்பவர்களுக்கு எல்லாம் இறைவன் அவரே 

இருப்பவர்கள் யாவரும்
தானமும் தவமும் செய்திடுவர் 
அவர் பெயராலே 

ஆலயம் காண்பர் , அஸ்தியும் கரைப்பர் 

பார்த்து வணங்கிட பலவும் செய்வர்

இருப்பினும் 

பார்க்கும் உயிர்கள், பொருள்களில் எல்லாம்

 இருப்பவர் அவரென்று பாவம் அவர்கள் அறியார்.

 *ஞானம் அடைந்திடும் நாள்வரும் போது* 

உலக வாழ்க்கை ஒன்றுமில்லை என அறிவர்

அதை உணரும் நாள் வரை மனம் கெட்டு திரிவர்

அதை உணரும் நாள் வரை மதி கெட்டு திரிவர்

மந்திரம் இல்லை மாயமும் இல்லை

வணங்கிடும் யாவும் தெய்வமும் இல்லை 

உன் மனமே அனைத்தும் என்றுணரும் 

 *நாள் வரும் போது ஞானியும் நீயே* 

பற்றுகள் துறப்பாய்

பதவியும் துறப்பாய் 

உடைமைகள் துறப்பாய் 

உறவுகள் துறப்பாய் 

பாவம் புண்ணியம் எதுவென அறிவாய்

வாழ்ந்திடும் வாழ்க்கை சுமை என அறிவாய்

மண்ணில் இருந்து விண்ணை அடைவாய் 

அறிந்து பிரிந்தால்  அகிலமும்  ஆள்வாய் 

பிறவிகள் இன்றி 
இயற்கையில் கலப்பாய் 

இதை அறியாதோர் யாவரும்

தரணியில் வாழ்ந்தது போல 

துன்பம் மட்டும் தொடர்ந்திடக் காண்பார் 

 *அறிந்திடும் மனமும் தெளிந்திடும் ஒரு நாள்* 


அழுதிடும் கண்ணும் வறண்டிடும் ஒருநாள் 

நினைத்திடும் மனமும் மறந்திடும் ஒரு நாள் 

வாடிய முகமும் சிரித்திடும் ஒரு நாள் 

வாழ்க்கை இதுவென உணர்ந்திடும் ஒரு நாள் 

மெய்ஞானத்தை மட்டும் நினைத்திடும் மனமும் 

எல்லாவற்றையும் தனக்குள் அடக்கும்.

அடக்கிய மனமும் ஒரு நாள் அடங்கும்

இதுவே இயற்கையின் நியதி 

இதுவே என்றும் இயற்கையின் நியதி

இதை அறிந்தும் 

இனி ஒருபிறவி கேட்டு வணங்கினால் 

வாழ்ந்ததைவிட துன்பங்கள் யாவும் 

 பலமடங்கு வந்து உன்னைச் சேரும்

 என்பதை மனதினில் உணர்ந்து 

இனி ஒரு பிறவி வேண்டாம் என்று 

என்றென்றும் மனதினில் விரும்பு 

என்றென்றும் மனதிலே இதையே விரும்பு 

இன்பத்தை காண இதுவே மருந்து 

துன்பமில்லாமல் இன்பத்தை காண இதுவே மாமருந்து 

இயற்கை ஒன்றே நிலையென உணர்ந்து 

நாளும் நாளும் அதில் கலந்திட விரும்பு 

ஆசைகளைத் துறத்தலே அனைத்துக்கும் மருந்து 

அமைதி கொள்வாய் இதை உணர்ந்து 

என்றும் அமைதி கொள்வாய் மனமே 

இது தான் உண்மை என உணர்ந்து 

ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 
ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 
ஓம் சாந்தி ஓம்   ஓம் சாந்தி ஓம் 

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

இனிய காலை வணக்கம் 🙏

எனக்குள் ஒரு பயணத்தை நோக்கி 

நன்றி

இரா.இரகுநாதன் 

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳