*அஷ்டமி - நவமி நல்லதா? கெட்டதா?*

மணக்கால் அய்யம்பேட்டை | 10:37 AM | Best Blogger Tips
*அஷ்டமி - நவமி நல்லதா? கெட்டதா க்கான பட முடிவு
எளிமையான விளக்கமும், செய்ய வேண்டிய காரியமும் செய்யக் கூடாத செயல்களும்....

மனிதனின் ஆன்மாவுக்கும் விண்ணுலக நிகழ்வளுக்கும் தொடர்பு உண்டு இதை சித்தர்கள் அண்டமே பிண்டம் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சொல்கிறார்கள் .

ஒரு ஒரு தித்திக்கும் நம் ஆன்மா தொடர்ப்பு கொள்கிறது ,அமாவசை தர்ப்பணம் ,பௌர்ணமி தரிசனம், மற்றும் தான தர்ம செயல்கள் எல்லாம் திதியுடன் சேரும்பொழுது தெய்வத்தை அடைகிறது .

தேய் பிறை புதன் கிழமை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் .
இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார் .

சோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியம்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று சொல்கிறது.

வியாழன் அன்று வரும் அஷ்டமி வளரும் பலனை (அட்சயம் )தரும் தன்மை உடையது என்றும் ,

வெள்ளியன்று வரும் அஷ்டமி குபேர தன்மைகளை தரும் என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது .

பொதுவாக அஷ்டமி என்றால் கம்சனை வதம் செய்ய கிருஷ்ணன் பிறந்த தினம் என்றும் ,தாய் மாமனுக்கு ஆகாது என்றும் சிலர் சொல்வர் .

108 அஷ்டமிக்கு அம்மை அப்பனை (சிவ சக்தி)தரிசனம் செய்வதவர்களை சனியும் அஷ்டம விதியும் ஒன்றும் செய்யாது அது விலகி செல்லும் என்று மகா முனிவர் அகத்தியர் சொல்கிறார் .

சனியின் சாபம் ,கோபம் உள்ளவருக்கு மட்டும் தான் அஷ்டமியில் சில விபத்துகள் நடக்கிறது, சிலருக்கு இரவு துக்கம் கெடுகிறது , சிலருக்கு காரிய தடைகள் வருகிறது என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

அஷ்டமி அன்று என்ன என்ன காரியங்கள் செய்யலாம் என்று ஜோதிட நூல்கள் தெளிவாக விளக்கமாக கூறியுள்ளது.

அஷ்டமி அழிக்கும் தன்மை உடைய திதி அதனால் சண்டை துவங்க (போர்) காவல் துறைக்கு செல்ல, தீய செயல்களை தடுக்க ஹோமம், பூசைகள் செய்வது,கடன் தொகையை அடைக்க அஷ்டமி திதி பயன்படும்.

இதை மையமாக வைத்து சோதிடர்கள் நல்ல காரியம்களை அஷ்டமியில் துவங்க வேண்டாம் என்பார்கள் .

நவமி திதி சுப திதி --சரஸ்வதி தேவி ஹயக்ரீவரை குருவாக ஏற்ற திதி ,

வெள்ளியுடன் சேரும் நவமியில் சரஸ்வதி மிகவும் பலம் கொண்டு விளங்குகிறாள் என்று நூல்கள் சொல்கிறது ... அவசியமாக அஷ்டமியில் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றாலும் ,பயணம் செல்லவேண்டும் என்றாலும் விநாயகர்/துர்க்கை பாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் வைத்து பூசை செய்து அதை கைகளில் வைத்து கொண்டு செயலில் இறங்கலாம் .

செயல் முடிந்தவுடன் அதை ஓடும் நீரில் சேர்த்துவிடவேண்டும்.
Top of Form



Image may contain: 1 person, sunglasses and outdoor
 நன்றி இணையம்

சுடுகாட்டில் சிவன் ஏன்..!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips
சுடுகாட்டில் சிவன் ஏன் க்கான பட முடிவுசுடுகாட்டில் சிவன் ஏன் க்கான பட முடிவு

சிவன் பித்தனென்றும் சுடுகாட்டில் ஆடும் சடையன் என்றும் பலர் தானும் குழம்பி மற்றவரையும் குழப்பி மெய் உணராமல் பிதற்றுவர். அவர்களுக்கு மெய் உணர்த்தவே இந்த பதிவு!

சுடுகாடு:

உயிராகிய மெய், தான் தங்கிய கூடாகிய உடலை விட்டு பிரிந்த பின், அப்பயனற்ற கூட்டை நெருப்பு கொண்டு எரிக்கும் இடம் சுடுகாடு .

சுடுகாட்டில் உயிரின் நிலை

உயிர் உடல் என்னும் கூட்டில் இருக்கும் வரை, உயிரினம். உயிரற்ற உடல் பிணம் ( சவம் ) 50 – 60 ஆண்டு காலம் வாழ்ந்த கூடாகிய உடலை விட்டு உயிர் பிரியும் போது தான் இத்தனை ஆண்டுகள் இருந்த கூட்டில் மீண்டும் நுழைய முடியாமல் பரிதவிக்கும் (1 ஆண்டு வசித்தாலும் ஒரு வீட்டை விட்டு பிரியும் போது ஏற்படும் உணர்வு போல – 50 – 60 ஆண்டு காலம் இருந்த கூடு அல்லவா?)

தமக்கு என்றும் நிரந்தரம் என நினைத்த உறவுகள் அனைத்தும் உடலை எரித்துவிட்டு திரும்பிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டனர் . இன்புற சேர்த்த சொத்து அனைத்தும் தமக்கு இல்லை என்று மெய்யை உயிர் உணர்ந்து பரிதவிக்கும் போது மாபெரும் கருணையாளன் நம்பெருமான் ஈசன் கருணையுடன் உயிரை தன்னுள்ளே ஒடுக்கி அபயம் அளிக்கிறார்.

இதை உணர்த்தவே அப்பர் பெருமான்
திருஅங்கமாலை தேவாரத்தில்
‘உற்றார் ஆருளரோ – உயிர் கொண்டு போகும் பொழுது குற்றாலத் துறை கூத்தனல்லால் நமக்குற்றா ராருளரோ...! மிக தெளிவாக கூறியுள்ளார்.

யார் உதவியும் ஆறுதலும் கிட்டாது அல்லல்ப்பட்டு பரிதவிக்கும் நேரத்தில் கருணையுடன் அடைக்கலம் தந்து அருளும் மாபெரும் கருணையை உணராமல் சுடுகாட்டில் ஆடும் கடவுள் என்று கூறுவது எவ்வளவு சிறுமை என்று உணருங்கள்.

சுடுகாட்டில் மட்டும் ஆடிக்கொண்டு இருக்கும் கடவுள் இல்லை அகிலத்தையே ஆட்டுவிக்கும் ஆண்டவன் நம் உயிரின் பரிதவிப்பை பொறுக்காமல் அந்த உயிருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டி சுடுகாட்டிலும் எழுந்தருளி மாபெரும் கருணையோடு காக்கிறான் என்று உணர்த்தவே ஈசன் திருவருளால் இப்பதிவு.
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
 Image may contain: 1 person, sunglasses and outdoor

 நன்றி இணையம்