மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:18 AM | Best Blogger Tips
மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் க்கான பட முடிவு 

ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில்
வானில் ஒரு கழுகு,
தன் இரையான பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது.
பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம்
அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.....!!
எவரும் அதை கவனிக்க வில்லை.
அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க,
அதை உண்ட மறு கணமே
அவர் இறந்து போனார்.......!!
அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.......!!
கர்மா வினைகளை நிர்ணயிக்கும் சிதிரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது....... !!
யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது.....?
கழுகிற்கா,...
பாம்பிற்கா .....
அல்லது அரசனுக்கா?
கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது......
அது அதன் தவறு இல்லை.
இறந்து போன பாம்பின் விஷம்....
அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை.
அரசனும் ....
இதை வேண்டுமென்றே செய்ய வில்லை.
அது அவனை அறியாமல் நடந்த விஷயம்.
சரி தன் எஜமான் எமதர்மனிடமே கேட்கலாம் என்று
எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்
சித்திரகுப்தன்.
இதைக் கேட்ட எமதர்மன்,
சற்று நேர சிந்தனைக்குப் பிறகு,
இதற்கான விடை விரைவில் கிடைக்கும் என்றும்,
காலம் வருமவரை பொறுமையாக இருக்கவும் அறிவுறித்தினான்.
ஒரு நாள்
சில அந்தணர்கள் உதவி நாடி அந்த அரசனைக் காணச் சென்றார்கள்.
அரண்மணைக்கு வழி தெரியாமல்,
சாலையோரமாக வியாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.
அவளும் சரியான பாதையை அவர்களுக்கு சொல்லி விட்டு
ஒரு விஷயம்..சற்று எச்சரிக்கையாக இருங்கள்..
இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன்என்று கூறினாள்.
இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்த்தும்,
சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது......!!
அந்தணரைக் கொன்ற
'
கர்மாவின் வினை ' இந்த பெண்மணிக்கே என முடிவு செய்தான் ......!!
நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்,
மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது
அதில் உண்மை இருக்குமானால்
பழி சுமத்துபவருக்கு அந்த கர்மாவில் 50 விழுக்காடு வந்து சேரும்.......!!
பழி சொன்னதற்காக......
நடந்த எதையுமே உணராமல்.....
அபாண்டமாக பழி சுமத்துவோருக்கே......
கர்மவினை அனைத்து சேரும்.....!!
எனவே,
மற்றவர்கள் மீது பழி சொல்லும் முன் யோசிக்க வேண்டும்......!!!
பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்......!!
Image may contain: Ramesh Uma, sitting and indoor
ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து.....!!!
 நன்றி இணையம்

விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

விவசாயிக்கு க்கான பட முடிவு
🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,


🌴திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு: விவசாயி மகன்.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்
Image may contain: Ramesh Uma, sitting and indoor
படித்து வருந்தியது!!!
🌳🤝🤝🤝💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

🐎PMR

வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:04 AM | Best Blogger Tips
தொடர்புடைய படம்

- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.
- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- தொழிலில் பல சிக்கல்களும் இடயூறுகளும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

Image may contain: Ramesh Uma, sitting and indoorஇன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*

Top of Form

நன்றி  பெ.சுகுமார்*