துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை க்கான பட முடிவு

மனிதர்கள் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம். இந்த அடிப்படை வாழ்வியல் தத்துவத்தை விளக்கவென்றே பத்துக் குறள்களைப் படைத்திருக்கிறார் வள்ளுவர். (இடுக்கண் அழியாமை - அதிகாரம் 63)
'இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்பதில்!’
துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற துணை சிரிப்பைத் தவிர வேறில்லை.
விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள் துரத்தத் தொடங்கிவிட்டன. எல்லாம் பெரிய பெரிய குரங்குகள். இப்போது என்ன செய்வது? ஓட்டம்தான் ஒரே வழி. விவேகானந்தர் ஓடலானார். ஆனால், குரங்குகள் அவரை விடாமல் துரத்தத் தொடங்கின. சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த வயதான துறவி ஒருவர் திரும்பிப் பார்த்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். பின் ஆணித்தரமான குரலில் அறிவுறுத்தினார்:
மகனே! ஓடாதே! திரும்பி நில். குரங்குகளை நோக்கி முன்னேறு. என்ன நடக்கிறதென்று பார்!’ விவேகானந்தருக்கு அவர் அறிவுரைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தம் ஓட்டத்தை நிறுத்தினார். குரங்குகளை நோக்கித் திரும்பினார். குரங்குகள் திகைத்தவாறு அப்படியே நின்றன. விவேகானந்தர் கால்களை உறுதியாக வைத்து மெல்ல குரங்குகளை நோக்கி நடக்கலானார். குரங்குகள் பம்மிப் பதுங்கின. விவேகானந்தர் தொடர்ந்து குரங்குகளை எதிர்கொண்டு அவற்றை நோக்கியே நடக்கலானார். அச்சமடைந்த குரங்குகள் சடாரென்று திரும்பி தாங்கள் வந்த வழியிலேயே ஓடி மறைந்தன.

இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் நினைவு கூர்ந்த விவேகானந்தர் எழுதுகிறார்:
`
வாழ்வில் வரும் துன்பங்களெல்லாம் நம்மைத் துரத்தும் குரங்குகளே. அவற்றிற்கு அஞ்சி ஓடினால் அவை நம்மைத் துரத்தும். தைரியமாக எதிர்கொண்டால் அவை நம்மிடம் பயந்து நம்மை விட்டு ஓடியே போய்விடும்!’ விவேகானந்தர் தம் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்து கண்டெடுத்துச் சொல்லும் நீதி, வள்ளுவம் போதிக்கும் அதே நீதிதான். விவேகானந்தர் திருக்குறளைப் படிக்காதிருந்திருக்கலாம். ஆனால், குறள் சொல்லும் கருத்துகளை அவர் தம் வாழ்வில் பின்பற்றியிருக்கிறார்!இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
 நன்றி இணையம் o    பெ.சுகுமார்*

மனித வாழ்க்கையின் உண்மை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:19 PM | Best Blogger Tips
*மனித வாழ்க்கையின் உண்மை க்கான பட முடிவு
கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,
"நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.
இதற்கு கழுதை சொன்னது
"நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்."
கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
"நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு நாய் கூறியது,
"கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்"
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
"
நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்"
கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்."
இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு"
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.
*மனித வாழ்க்கையின் உண்மை*

  நன்றி இணையம்