பலரும் வாழ்கையை தப்பாவே புரிஞ்சுக்கிட்டு கஷ்டப்படுறாங்க

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
பலரும் வாழ்கையை தப்பாவே க்கான பட முடிவு
#அருமையான கதை......!
பலரும் வாழ்கையை தப்பாவே புரிஞ்சுக்கிட்டு கஷ்டப்படுறாங்க.
ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவார், கடவுளை வேண்டிக்குவார், அதுக்கப்புறம் காட்டுக்கு போவார், விறகு வெட்டுவார், அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வைத்து நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.
ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார், அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !
அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு...அதை இவர் பார்த்தார் .....அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்
"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லயே ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்.
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது....அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார்.
அந்த புலி ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போயிடுச்சு.
புலி போனபின், கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து, கிட்ட வந்தது, புலி மிச்சம் வைத்ததை சாப்பிட்டது ..
திருப்தியாக சாப்பிட்டுவிட்டு அதுவும் போனது !.
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்.
இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்....
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ....தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா??? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..
நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சார்.
அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை.
கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்....
அப்பப்போ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்,
" கடவுள் நம்மை காப்பாத்துவார்..., அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்..., அப்படின்னு நம்பினார்..,”
கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார் .
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ... சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார், உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு, எலும்பும் தோலுமா ஆயிட்டார்.
ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார்.....
" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா.....?, காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே....!, அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன்..., என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே..., இது நியாயமா.... ?" ன்னாரு
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....
" முட்டாளே....! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரிக்கிட்ட இருந்து இல்லை....! புலி கிட்ட இருந்து....! அப்படின்னாராம்.....•
புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....
நன்றி https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/ffb/1/16/1f64f_1f3fb.png🙏🏻https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fe3/1/16/1f490.png💐. இணையம்


இஸ்ரோ புதிய தலைவர் k. சிவன் பற்றி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:21 PM | Best Blogger Tips
இஸ்ரோ புதிய தலைவர் k. சிவன் பற்றி க்கான பட முடிவு
இஸ்ரோ புதிய தலைவர் k. சிவன் பற்றி அறிய பல தகவல்கள் :
கன்னியாகுமரி: அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி டாக்டர் கே சிவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராம மக்களும், விஞ்ஞானின் சிவனின் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி #கே_சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ஏ.எஸ்.கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, கே.சிவன் இந்த பதவியை ஏற்கவுள்ளார். #தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது #இதுவே_முதல்_முறை. இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.
விஞ்ஞானி டாக்டர் கே சிவன் :
விஞ்ஞானி கே.சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கைலாசவடிவு, தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f52/1/16/2638.png
☸ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங்
பின்னர் பியுசி படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பட்ட படிப்பும் அங்கு பயின்றார். கடந்த 1980ல் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தன்னுடைய முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் 1982-ல் முடித்தார்.
https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f52/1/16/2638.png☸ பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உருவாக்கம்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி திட்டத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்த சிவன், தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f52/1/16/2638.png
☸ ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்
2014
ல் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது அதன் திட்ட இயக்குநராக பணியாற்றியிருந்தார். ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அதன் பாதையை விண்ணில் தீர்மானிப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கியவர். ஆய்வுகள் வாயிலாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதில் சிவன் வெற்றி கண்டார்.

https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f52/1/16/2638.png
☸ விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம் ;
இஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். மனைவி மாலதி, 2 மகன்கள். மூத்த மகன் சித்தார்த், பி.டெக் படிக்கிறார். இளைய மகன் சிஷாந்த், அனிமேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.
இஸ்ரோ புதிய தலைவர் k. சிவன் பற்றி க்கான பட முடிவு
நண்பர்கள் மகிழ்ச்சி ~
விஞ்ஞானி டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் மக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் வழியில் படித்து இன்றைக்கு மிகப்பெரிய பதவிக்கு வந்து ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் அரசு பள்ளியில் படித்தாலும் சிறு வயதில் இருந்தே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார். கணக்கில் புலியாக இருப்பார் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
நன்றி 💐 இணையம்