இப்படியும் சிந்தனை செய்யலாம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:44 PM | Best Blogger Tips
Image result for இப்படியும் சிந்தனை செய்யலாம்
தென்னையை விட சிறந்தது வேப்பமர வெள்ளாமை.!!!
போன வருஷம் வேப்பங்கொட்டைகள் கிலோ ரூ.38, இந்த வருஷம் கிலோ ரூ.72. இது இந்த ஒரு வருஷத்தின் ஏற்றமல்ல.. பல வருஷங்களாகவே வேப்பங்கொட்டைகள் விலை ஏறுமுகத்தில்தான் தொடர்ந்து உள்ளது. இறங்குமுகம் என்பதே இல்லை. காரணம், வேப்பமரம் ஒரு விவசாயப் பயிர் கிடையாது. ஒரே இடத்தில் விளைவிக்கப்படுவதில்லை. முன்புபோல சேகரிக்கும் மக்களும் சரி, வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் சிறு வணிகர்களும் தொடர்ந்து குறைந்துவருவதாலும், வேப்பெண்ணெய்-வேப்பம்புன்னாக்கு தேவைகள் தேவை அதிகரித்து வருவதால் இந்த ஏறுமுகம்.
வேப்பமரம் ஏக்கருக்கு 60-90 மரங்கள், 15X15 அடி விகிதத்தில் வைக்கலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ஐந்து வருஷத்தில் பலனளிக்க வந்துவிடும். மரத்துக்கு குறைந்தபட்சம் முப்பது முதல் ஐம்பது கிலோ விளைச்சல் இருக்கும். நூறு-நூற்றைம்பது கிலோ விளைச்சல் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். நல்ல விளைச்சல் உள்ள மரங்களின் விதைகளை தேர்ந்தெடுத்து விதைத்தால் விளைச்சல் அதிகமிருக்கும். வேறு பக்கம் முளைத்துவரும் வளர்ந்த செடிகளையும் பிடுங்கி நடலாம். அல்லது மரத்தின் கிளையை வெட்டி அப்படியே நட்டு மரம் வளரும் காலத்தைக் குறைக்கலாம்.
மரத்துக்காக வளர்ப்பவர்கள் ஏக்கருக்கு 440 மரங்கள் நடுகிறார்கள். ஆறுவருஷதில் மரமொன்று 1,500 ரூபாயும், பத்தாம் வருஷத்தில் 7,500 ம், பதினைந்து வருஷத்தில் 10,000 ரூபாயும் விலை போகிறது. ஆறாம் வருஷத்தில் ஒன்று விட்டு ஒன்றாக சுமார் 220 மரங்களை வெட்டிவிடுகிரார்கள். அதன்பின் பத்து பதினைந்து ஆண்டுகள் வரை வேப்பங்கொட்டை வருமானமும், உபரியாகக் கிடைக்கிறது.
வருஷத்தில் இரண்டு மாதங்கள் தான் வேலை இருக்கும். நீர் தேவை மிக மிக குறைவு. ஆரம்பத்தில் உயிர்நீர் தேவை, பின்னர் மழை நீர் போதுமானது. மிக வறட்சி வரும் காலத்தில் மட்டும் பார்த்துக் கொண்டால் போதும். வறட்சி மாவட்டங்களுக்கு ஏற்ற வெள்ளாமை. அமிலத்தன்மை மிகுந்த/பேக்டரி கழிவுகளால் அமிலத்தன்மை ஏறிய நிலங்களை சீராக்க வேம்பு சாகுபடி நல்ல பலனளிக்கும்.
வேப்பங்கொட்டை மட்டுமின்றி, தோப்பாக வளர்க்கும்போது வேப்பம் இலைப் பொடியும் தயார் செய்யலாம், நல்ல தேவை உள்ளது. மருத்துவ குணம் உள்ள வேப்பம்பூ தேனுக்கு நல்ல வரவேற்பு உலகெங்கும் உண்டு. தேன் பெட்டி வைப்பதால் விதை மகசூலும் அதிகரிக்கும். தோப்பாக வளரும்போது அந்த பகுதியே குளுமையடையும், மழை ஈர்ப்பு மிக நன்றாக இருக்கும். மண்வளம் உயரும்.
வேண்டாம் வேறு வெள்ளாமை செய்யலாம் என்றாலும், வேம்பின் மரம் உறுதியானதால் தச்சு வேலைகளுக்கும், தீக்குச்சி போன்றவற்றிற்கும் பயன்படும். மலைவேம்பை விடவும் மிக நல்ல விலைக்கு போய்விடும்.
மொத்தமாக இருக்கும் வேப்பங்கொட்டைகளை வணிகர்களோ, வேம்பு எண்ணெய் உற்பத்தியாலர்களோ வீடு தேடி வந்து வாங்கிக் கொள்வார்கள். அவ்வளவு கிராக்கி உள்ளது.
எப்படிப் பார்த்தாலும் வேப்பங்கொட்டையில் ஆண்டுக்கு, ஏக்கருக்கு எழுபதாயிரம் முதல் இரண்டு லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும். வேப்ப மரத்தில் பதினைந்து வருஷ முடிவில் ஏக்கருக்கு 22 லட்சம் வரை பெற முடியும். வேப்ப மரத்தின் ஆயுள் நூறு வருஷம் வரை.
நன்றி இணையம்


கடவுள் கணக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:41 PM | Best Blogger Tips

நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில்
கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்.
நாம் எத்தனையோ பேருக்கு எத்தனை நன்மைகள் செய்திருக்கிறோம். பின் நமக்கு ஏன் இப்படி என்று வருத்தப்படுவோம். அப்போது பெரியவர்கள் நமக்கு ஆறுதலாய் அவன் கணக்கு யாருக்குத் தெரியும். நமக்கு புரியவில்லை என்பதால் அது தவறு என்று நினைப்பது சரியல்ல என்பார்கள். இந்த வாதம் எனக்கு புரியாமல் இருந்த்து. நேற்று வரை!
சிறு கதை ஒன்று எனக்கு ஒரு தெளிவினைக் கொடுத்தது.
ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர்.
முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள் ,இதனை நாம் எப்படி
மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு
நான் ஒரு வழி சொல்ல்கிறேன்.( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)
நீங்கள் உங்கள் ரொட்டிகளை ,ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்.
பொழுது விடிந்தது.மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு
நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார். மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(5:3)
மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன்.
நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை.சமமாகவே பங்கிடுவோம் என்றார்.
சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த் நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
ஒரு காசு வழங்கப்பட்டவர்
மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார்.
அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார்.
ஆம் கடவுளின் கணக்கு இவ்வளவு துல்லியமாக இருக்கும்.
இழந்ததை எல்லாம் தருவது அல்ல அவன் கணக்கு. எது உனக்கு புண்ணியம் சேர்க்குமோ அதுதான் உனக்கு என்பது அவன் கணக்கு
ஏனென்றால் அவனது கணக்கு ஏட்டு கணக்கு அல்ல. தரும கணக்கு.


நன்றி இணையம்