சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448

மணக்கால் அய்யம்பேட்டை | 11:07 AM | Best Blogger Tips
 அவை, உடல் முழுவதும் தோன்றுவதாகும். உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும் உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி, அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய நோய்களின் எண்ணிக்கை பிரித்துக் கூறப்படுகிறது.

1. தலை 307

2. வாய் 18

3. மூக்கு 27

4. காது 56

5. கண் 96

6. பிடரி 10

7. கன்னம் 32

8. கண்டம் 6

9. உந்தி 108

10. கைகடம் 130

11. குதம் 101

12. தொடை 91

13. முழங்கால் கெண்டை 47

14. இடை 105

15. இதயம் 106

16. முதுகு 52

17. உள்ளங்கால் 31

18. புறங்கால் 25

19. உடல்உறுப்பு எங்கும் 3100


ஆக 4448 என்பனவாகும். இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும் நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத் தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.

உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத் தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது கருதுதற்குரியது.

கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்

குடலில் உருவாகும் பூச்சிகள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள் என்று குறிப்பிடப் படுகின்றன. அவை, குடலில் உண்டாகும் நோய்களின் மூலமாகவும், கெட்ட உணவுகளின் மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம், தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு, வெள்ளைப் புழு, செம்பைப் புழு, கீரைப்புழு, கர்ப்பப் புழு, திமிர்ப்பூச்சி எனப் பலவாகும். இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும், சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி, வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.

கிருமிகளால் உண்டாகும் நோய்க்குறி குணங்கள்

குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக நோய்க்குரிய குணங்கள் புறத்தே தோன்றுமாறு குணங்களை ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும். சுரம், வயிற்றுவலி, மார்பு நோய், வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல், வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி, வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள் சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில் பல் கடித்தல், மாலைக்கண், குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை, குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய குணங்களை விளைவிக்கும்.

குடற் கிருமிகளினால் கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம், சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய நோய்களை உண்டாக்கும் என்று, கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல் பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.

கிருமிகள் உருவாகக் காரணம்

கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள் உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை, உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத் தெரியும்.அதிகமான உடலுறவின் காரணத்தினால் உடல் சூடுண்டாகி, அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும் தாக்கி, கிருமிகளை உண்டாக்கும். அக்கிருமிகள் உடலைத் துளைத்துக் கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான் என்னும் நோயை உண்டாக்கித் தினவை விளைவிக்கும்.

அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத் தீய்த்து, கட்டுண்டாக்கித் துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக் கிருமிகளை உண்டாக்கும். அவை குடலுக்குள், உண்ணும் உணவை உண்டு வளர்ந்து குட்டம், வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி, பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற நோய்களை உருவாக்கும். மேலும் குடற்புழுக்களால் மலத்துவாரத்தில் இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம், வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி, சோகை, குன்மம், சயநோய், மலடு, பெருவயிறு, சுக்கில நட்டம், உடல் தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.

நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக் கூடிய விளைவுகளை விவரித்துள்ளது, நோய் வரும் வழிகளை யெல்லாம் கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம். எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும் வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால் மட்டுமே நோயிலிருந்து விலகவும், நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த மருத்துவத்தின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.

கண் நோய் :

கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில் சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே, தமிழ் மருத்துவ நூலாரும் கண் மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக வளர்த்தனர் எனலாம்.

பொதுக் காரணங்கள் :

வேகங்களின் வழியே உண்டாகும் தீவினையாகிய நோய்களையும், வெம்மையால் உண்டாகும் எரிச்சலையும், புவன போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால் உண்டான பற்பல நோய்களும், அதனால் மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும் தளர்ச்சிகளும், உலக வாழ்க்கை என்று கூறப்படும் இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய் உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும், மனிதன் பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற வேகம் என்னும் பதினான்கு நோய்களும் குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை : சுவாசம், விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம், இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம், கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால் மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன் தேவனெனப் படுவான்.

சிறப்புக் காரணம் :

சிசுவானது தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது, தாயின் வயிற்றில் கிருமிகள் சேர்ந்திருந்தாலும், தாயானவள் பசியால் வருந்தினாலும், தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய், மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும் சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில் நோய்கள் உண்டாகும்.

காசநோய் :

கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம், பித்தகாசம், வாதகாசம், வாலகாசம், மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம், விரணகாசம் என எட்டாகும்.

வெள்ளெழுத்து

கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும் ‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து, மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம், நீர் வாயு, மேகம் என்பன.

முப்பத்தேழு வயது வரை கண் பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும். நாற்பத்தைந்தில் கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும், தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த் தோன்றும். ஐம்பத்தேழாம் வயதிலிருந்து சிறிது சிறிதாகக் கண்பார்வை இருளத் தொடங்கும். கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும் நூறாமாண்டில். கூர்மையான பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம் போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க் காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக் காணப்பட்டாலும், பொருள்கள் சற்று மஞ்சளாகவும் நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும். இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால் அதனை வெள்ளெழுத்து (திமிரம்) என்று அறியவும். கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின் விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன் ஒடுங்குவது இயற்கை என்பதையும் இக்கருத்து விவரிக்கிறது.

கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன் தோற்றத்தையும் வண்ணத்தையும் குறிப்பிட்டுக் காட்டியிருப்பது மருத்துவ நூலாரின் ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக் கூடியதாக இருக்கிற தெனலாம்.

தலைநோய் :

உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில் உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில் தலையில் தோன்றும் நோய்கள் 1008 என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள் என்று குறிப்பிடும் அங்காதி பாதம், தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம் வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம், கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும் நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால், தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர் 1008 என்கிறார். இதனால் நாக முனிவர் தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும். மேலும், அம்முனிவர் எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத் தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள் உண்டாகும் என்ற குறிப்பினைத் தருகின்றபோது, தலையின் உச்சியில் நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்) பதினாறு, காதில் நூறு, நாசியில் எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு, கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில் முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து, நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில் இருபது, இதழில் பதினாறு,நெற்றியில் இருபத்தாறு, கண்டத்தில் நூறு, பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில் பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என, தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும் குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின் தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப் படவில்லை.

கபால நோயின் வகை :

வாதம் முதலாகக் கொண்ட முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10, கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6, கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10, கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2, கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக் குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3, கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில் தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.

தலையில் தோன்றும் நோய்களில் கண், காது, தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும். தற்காலத்தில் கண் மருத்துவம் எனத் தனியாகவும், காது, தொண்டை, மூக்கு ஆகியவை தனியாகவும், மூளை மருத்துவம் தனியாகவும்–சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப் படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதால் தனித்தனியே கருதாமல் ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும். அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத காலத்திலேயே அறிவியல் முறைக்கு உகந்ததாகச் சித்த மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில் உருவாகும் குற்றங்களைக் கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.

அம்மை நோய் :

அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக் காரணமாக அமைவது வெப்பமாம். இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேலும், அம்மை நோய்க்குக் குரு நோய், போடகம் என்னும் பெயர்களும் வழங்கப்படுகின்றன.

அம்மைநோய், உடலில் ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால் உடலில் சூடு உண்டாகி, மூளை கொதிப்படைந்து, எலும்பைத் துளைத்துக் கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ நூல் குறிப்பிடுகிறது.

இந்திய மருத்துவ வரலாற்றில் பெரும்பாதிப்பை உருவாக்கியது பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய் உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

அம்மை நோயால் கண்கள் பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக் கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும். அப்புள்ளிகள் என்றும் மாறாமல் இருப்பதுண்டு.

சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள் பதினான்கு. அவை,

1. பனை முகரி 2. பாலம்மை

3. மிளகம்மை 4. வரகுதரியம்மை

5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை

7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை

9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை

11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை

13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை

என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும் அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும், அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும் காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன. இந்நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரும் நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக் காலமான வேனிற் காலத்திலேயே வரும்.

ஆண், பெண், அலியாவது ஏன்?


"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(திருமந்திரம் 480)

ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.

குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே
(திருமந்திரம் 482)

அது சரி, ஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில் பிறப்பதேன்? அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போது அபானவாயு அதனை எதிர்க்குமானால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப்பிறக்கும்.

கருத்தரித்து விட்டது, நமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பல எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவு ஏற்படுவது ஏன்? உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித் துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும் என்கிறார் திருமூலர்.

கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம், உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர். மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால்குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே
(திருமந்திரம் 481)

சரி, குறைகளற்ற குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு திருமூலர் தரும் பதில் என்ன? உடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாக இருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.


 

Thanks to Ongara Kudil

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள் 1

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்:-

* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

* குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.

* மருதாணி அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாற்றால் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

* மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

* நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

* ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.

* கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.

* துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊரவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.

* குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.

* மனத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

* கோவைப்பழம் சாப்பிட பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்.

* நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

*
குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.

*
மருதாணி அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாற்றால் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

*
மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

*
நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

*
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.

*
கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.

*
துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊரவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்.

*
குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.

*
மனத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.

*
கோவைப்பழம் சாப்பிட பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்.

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:05 AM | Best Blogger Tips


யார் இந்த மாமனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

குடும்பம்:

மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

மரங்கள் மட்டும் அல்ல:

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.

இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா? இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 AM | Best Blogger Tips


இன்றும் மன்னராட்சி நிகழும் தாய்லாந்தில், மன்னர் முடிசூட்டுவிழாவின் போது, திருவெம்பாவையும் தேவாரமும் பாடப்படுகிறது!

பொ.பி கக ஆம் (கி.பி 11ஆம்) நூற்றாண்டில், சோழப்பேரரசு காலத்தில், “சீயம்” என்ற பெயரிலிருந்த தாய்லாந்து, சோழர் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. அதன் எச்சமே இந்த பாவையும் தேவாரமும் பாடும் வழக்கம்!

மன்னரின் அரச குரு வாமதேவ முனிவர், தமிழ்நாட்டிலிருந்து சென்று குடியேறிய பிராமணர் பரம்பரையில் வந்தவர். முன்பு ஓரளவு கிரந்த வரிவடிவத்தை அறிந்திருந்த இவர்கள், இன்று தமிழையோ கிரந்தத்தையோ எழுத - படிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். எனினும், திருவெம்பாவைப் பாடல்களை தமது “தாய்” மொழியின் வரிவடிவத்தில் எழுதிவைத்து பாடுகிறார்கள்.

முடிசூட்டுவிழாவில் மாத்திரமன்றி, இன்றும் வருடாந்தம் டிசம்பரில் (நம் மார்கழி மாதம்) நிகழும் அரச ஊஞ்சல் விழாவிலும் தேவாரம் - பாவைப்பாடல்கள் அவர்களால் பாடப்படுவதுண்டு!

மேலதிக விளக்கங்களுக்கு பின்வரும் காணொளியைப் பாருங்கள்! :
https://www.youtube.com/watch?v=ExGjxXY49Gg

(சோழர் போற்றியது சைவத்தையே! எனினும் வைணவத்தையும் பேதமின்றி வளர்த்தார்கள். ஆனால், காணொளியை உற்றுப்பாருங்கள்! 1:20 இற்குப் பின் காட்டப்படும் கற்பொறிப்பில் குறிப்பிட்ட இந்திய சமயத்தை "சைவம்" அல்லது "வைணவம்", ஏன், "இந்து" என்றுகூடக் காட்டாமல் “பிராம்மணியம்” (Brahmanism) என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருப்பது நெருடலாக இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து சீயத்திற்கு, சோழர் காலத்தில், “பிராம்மணியம்” என்று ஏதும் மதம் பரப்பப்பட்டிருக்கிறதா, என்ன? இது யாரையும் புண்படுத்த அல்ல; சற்று சிந்தித்துப் பாருங்கள்!)

இது தஞ்சை ஆய்வாளர் திரு. கோ. கண்ணன் அவர்களது காணொளி:
https://www.youtube.com/watch?v=5IYV_YoTrHk
https://www.youtube.com/watch?v=qAX_y-mFQho

முதற்காணொளியில் காட்டியபடி, கடந்தவருடம் ஈழத்து சைவத்தமிழ் அறிஞரான மறவன்புலவு சச்சிதாந்தன் அவர்கள், கிரந்தம், தமிழ், தாய், வரிவடிவங்களில் திருவெம்பாவையை அச்சிட்டு, ஆங்கில மொழிபெயர்ப்புடன் அவர்களுக்கு வழங்கியிருந்தார். போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய பணி!

இது, சச்சிதானந்தன் அவர்கள் தமிழகத்திற்கு வழங்கும் செய்தி!:

“தமிழ்நாட்டுத் தொடர்புகளைத் தேடுகிறார்கள். வேர்களைத் தேடுகிறார்கள். ஆகம அறிவைத் தேடுகிறார்கள். குறைகளைக் களைந்து முறைகளைப் பேண விழைகிறார்கள். தமிழ்நாட்டுக்கு ஆர்வம் உண்டா? அவர்களது உறவுகளைப் பேண விழைவு உண்டா? உடனே தொலைபேசியில் அழையுங்கள் . 0061 815526646 தவத்திரு புராணசிறீயுடன் பேசுங்கள். காலை வேளைகளில் அழைத்தால் பேசலாம். உங்கள் நண்பர்களையும் பேசச் சொல்க. உறவுகளை மீட்டெடுங்கள்

போலி பகுத்தறிவு வாதிகளுக்கும் , திராவிட பிரிவினை வாதிகளுக்கும் ஒரு சிறு கேள்வி :< (தேச அக்கறை கொண்ட ஒவ்வொரு வரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் )

மணக்கால் அய்யம்பேட்டை | 10:59 AM | Best Blogger Tips



இன்று தமிழர் திருநாளுக்காக போட்ட பதிவிற்கு பல போலி பகுத்தறிவு , திராவிட பிரிவினை வாதிகளும் சித்திரை தமிழர் புத்தாண்டிற்கு எதிராக பல மலங்களை வீசி பார்த்தீர்கள் ,ஆனால் பலனளிக்க வில்லை என்பதை நீங்களும் உணர்ந்தீர்கள் ,நாங்களும் அறிந்து கொண்டோம் .முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் தமிழ் , சமஸ்கிருதம் கவின் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தியும் எங்களதே ,நாங்கள் இந்தியர்கள் ,இந்துக்கள் .எங்களுக்கு எந்த மொழியிலும் கடவுளை வழிபட உரிமை உள்ளது . சமச் கிருதத்தில் ஏன் மந்திரம் சொல்லு கிறீர்கள் என்கிறீர்கள் ? சமச் கிருதம் என்ன இஸ்லாமிய மொழியா ? இல்லை கிறிஸ்துவ மொழியா ? எங்கள் மொழியில் நாங்கள் வழிபடுகிறோம் உங்களுக்கென்ன ? இந்து கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களே ! கடவுள் இருக்கிறார் என்று நம்பி வழிபடும் எங்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை ? சித்திரை முதல் நாள் புத்தாண்டை கொண்டாடினாலும் ,இல்லை தை முதல் நாளில் கொண்டாடினாலும் ,நாங்கள் தானே கொண்டாட போகிறோம் உங்களுக்கு என்ன ?

சரி உங்களின் (போலி ) பகுத்தறிவு கொள்கைக்கே வருவோம் . சரி கருணாநிதி குடும்பத்திற்கு சம்ஸ்கிருத கோவிலில் என்ன பிழைப்பு வேண்டி கிடக்கு ? மாறன் சகோதரர்கள் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு ? ஊருக்கு மட்டும் உபதேசமா ? சித்திரை நாளில் புத்தாண்டை கொண்டாடினாலும் ,தை முதல் நாளில் கொண்டாடினாலும் உங்களில் யாருக்காவது திராணி இருந்தால் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை தமிழ் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ?ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ? தை திருநாளின் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை பொங்கலிட செல்லுங்கள் பார்க்கலாம் ? ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் உழவர் திருநாளுக்கு பொங்கலிட சொல்லுங்கள் பார்க்கலாம் ?

சரி நாங்கள் சமச் கிருதத்தில் மந்திரங்களை உச்சரிக்கிறோம் இருக்கட்டும் .உங்களில் ஒரு நீதிமானாவது இஸ்லாமிய மசூதிகளில் அரேபிய மொழி வழிப்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா ? மசூதியில் ஊதும் நமாசை தமிழில் ஓத சொல்ல முடியுமா ? அவர்களும் தமிழர்கள் தானே ? பெந்தே கொஸ்தே சபைகளில் உலரும் ரபா ரபா பர பரா கோசத்தை ,அது என்ன மொழி என்று கேட்டு அதையும் தமிழில் சொல்ல சொல்லுங்களேன் ? அவர்களும் தமிழர்கள தானே ? உங்களால் முடியுமா ? கோமாளிகளே ? முடியாதென்றால் அந்த dash பிழைப்பு செய்து பிழைக்கலாமே ? எதற்கு இந்த கேவலமான பிரிவினை வாத பிழைப்பு ?

எனக்கு முந்தய தலை முறை வேண்டுமானால் உங்களின் கோமாளி தனத்தை கேட்டு வாய் மூடி மௌனியாக இருந்திருக்கும் .என்னை போன்ற வருங்கால புதிய தலை முறை அப்படி இருக்க போவதில்லை ... என்னை போல இன்னும் பல குரல்கள் எனக்கு பின்னால் உங்களுக்கு எதிராக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்.

நன்றி: ஆர்த்தி
போலி பகுத்தறிவு வாதிகளுக்கும் , திராவிட பிரிவினை வாதிகளுக்கும் ஒரு சிறு கேள்வி :<
(தேச அக்கறை கொண்ட ஒவ்வொரு வரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் )


இன்று தமிழர் திருநாளுக்காக போட்ட பதிவிற்கு பல போலி பகுத்தறிவு , திராவிட பிரிவினை வாதிகளும் சித்திரை தமிழர் புத்தாண்டிற்கு எதிராக பல மலங்களை வீசி பார்த்தீர்கள் ,ஆனால் பலனளிக்க வில்லை என்பதை நீங்களும் உணர்ந்தீர்கள் ,நாங்களும் அறிந்து கொண்டோம் .முதலில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் தமிழ் , சமஸ்கிருதம் கவின் மலையாளம் ,கன்னடம் ,தெலுங்கு ,ஹிந்தியும் எங்களதே ,நாங்கள் இந்தியர்கள் ,இந்துக்கள் .எங்களுக்கு எந்த மொழியிலும் கடவுளை வழிபட உரிமை உள்ளது . சமச் கிருதத்தில் ஏன் மந்திரம் சொல்லு கிறீர்கள் என்கிறீர்கள் ? சமச் கிருதம் என்ன இஸ்லாமிய மொழியா ? இல்லை கிறிஸ்துவ மொழியா ? எங்கள் மொழியில் நாங்கள் வழிபடுகிறோம் உங்களுக்கென்ன ? இந்து கடவுள் மட்டும் இல்லை என்று சொல்லும் புத்தி சுவாதீனம் இல்லாதவர்களே ! கடவுள் இருக்கிறார் என்று நம்பி வழிபடும் எங்களை பற்றி உங்களுக்கு என்ன கவலை ? சித்திரை முதல் நாள் புத்தாண்டை கொண்டாடினாலும் ,இல்லை தை முதல் நாளில் கொண்டாடினாலும் ,நாங்கள் தானே கொண்டாட போகிறோம் உங்களுக்கு என்ன ?

சரி உங்களின் (போலி ) பகுத்தறிவு கொள்கைக்கே வருவோம் . சரி கருணாநிதி குடும்பத்திற்கு சம்ஸ்கிருத கோவிலில் என்ன பிழைப்பு வேண்டி கிடக்கு ? மாறன் சகோதரர்கள் தொலைகாட்சியில் மகாபாரதம் எதற்கு ? ஊருக்கு மட்டும் உபதேசமா ? சித்திரை நாளில் புத்தாண்டை கொண்டாடினாலும் ,தை முதல் நாளில் கொண்டாடினாலும் உங்களில் யாருக்காவது திராணி இருந்தால் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை தமிழ் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ?ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் புத்தாண்டை கொண்டாட சொல்லுங்கள் பார்க்கலாம் ? தை திருநாளின் ஒரு இஸ்லாமியரை ,கிறிஸ்துவரை பொங்கலிட செல்லுங்கள் பார்க்கலாம் ? ஒரு மசூதியில் ஒரு கிறிஸ்துவ கட்டிடத்தில் உழவர் திருநாளுக்கு பொங்கலிட சொல்லுங்கள் பார்க்கலாம் ?

சரி நாங்கள் சமச் கிருதத்தில் மந்திரங்களை உச்சரிக்கிறோம் இருக்கட்டும் .உங்களில் ஒரு நீதிமானாவது இஸ்லாமிய மசூதிகளில் அரேபிய மொழி வழிப்பாட்டை எதிர்த்து குரல் கொடுக்க முடியுமா ? மசூதியில் ஊதும் நமாசை தமிழில் ஓத சொல்ல முடியுமா ? அவர்களும் தமிழர்கள் தானே ? பெந்தே கொஸ்தே சபைகளில் உலரும் ரபா ரபா பர பரா கோசத்தை ,அது என்ன மொழி என்று கேட்டு அதையும் தமிழில் சொல்ல சொல்லுங்களேன் ? அவர்களும் தமிழர்கள தானே ? உங்களால் முடியுமா ? கோமாளிகளே ? முடியாதென்றால் அந்த dash பிழைப்பு செய்து பிழைக்கலாமே ? எதற்கு இந்த கேவலமான பிரிவினை வாத பிழைப்பு ?

எனக்கு முந்தய தலை முறை வேண்டுமானால் உங்களின் கோமாளி தனத்தை கேட்டு வாய் மூடி மௌனியாக இருந்திருக்கும் .என்னை போன்ற வருங்கால புதிய தலை முறை அப்படி இருக்க போவதில்லை ... என்னை போல இன்னும் பல குரல்கள் எனக்கு பின்னால் உங்களுக்கு எதிராக ஒலிக்கும் என்ற நம்பிக்கையில்.

நன்றி: ஆர்த்தி

கோடையின் தாக்கத்தில் தப்பிக்க வீட்டைப் பராமரிப்பது எப்படி..?!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:58 AM | Best Blogger Tips


பொதுவாகவே வீட்டின் வெப்பநிலையை தீர்மானிப்பதில் பெயிண்ட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அடர்ந்த நிறத்தில் உள்ள பெயிண்ட்டுகள் வெப்பத்தை பிரதிபலிப்பதால் வெப்பக்கதிர்கள் வீட்டை சுற்றிலும் உட்புகுந்துவிடுகின்றது. தற்போது பெரும்பாலான வீடுகளுக்கு அடர்ந்த நிற பெயிண்ட்டுகள் தான் அடிக்கப்படுகின்றது. இதை தவிர்ப்பது மிகவும் முக்கியமாகும். இந்த பெயிண்டுகளால் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. வெள்ளை பெயிண்ட் அடித்துள்ள வீடுகளில் வெப்பம் குறைந்து காணப்படுகிறது.

பொதுவாக வீட்டின் மேல்தளம் மொட்டைமாடியாக இருக்கும் பட்சத்தில் வெப்பம் வீட்டிற்குள் இறங்கும். வெப்பம் கீழே இறங்காமல் இருப்பதற்கு தான் சுண்ணாம்பு, செங்கல் கொண்ட கலவையை மேல்தளத்தில் போடுவது வழக்கத்தில் இருந்து வந்தது. இதற்கு சுர்க்கி என்று கூறுவார்கள். ஆனால் நாளடைவில் இந்த சுர்க்கி போடும் முறையை மாற்றி ஓடுகளை பதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. சுண்ணாம்பு மற்றும் செங்கல் கலவையானது குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியாகும்.

முறையாக சுர்க்கி போடப்பட்ட வீடுகளில் மேல்கூரையில் இருந்து வெப்பம் வீட்டிற்குள் இறங்குவது என்பது மிக குறைந்த அளவே இருக்கும். எனவே வீடு கட்டும்போது சுர்க்கி போடுவதை அவசியமாக கருதினால் கோடைகால தொல்லையில் இருந்து ஓரளவு விடுபடலாம். வீட்டின் வெப்பத்தை குறைக்க கார்டனிங் மிகவும் அவசியமாகும். வீட்டை சுற்றிலும் தோட்டங்கள் அமைப்பது இது போன்ற கோடைகாலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீட்டு தோட்டங்களில் உள்ள சொடிகளால் வெப்பம் தனிந்து சற்று குளிர்ச்சி காண வழிவகுக்கும்.

இதே போல வீட்டிற்குள்ளும் தொட்டிகளில் பசுமையான செடிகளை வளர்க்கலாம். வீட்டின் அனைத்து அறைகளிலும் காற்று உள்ளே வரும் வகையில் பகல் நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைப்பது அவசியமாகும். ஜன்னல்களுக்கு காட்டன் திரைசீலைகளை அமைப்பது நல்லது. முடிந்த வரை மின்விசிறிகளை அதிக நேரம் சுழலவிடுவது வீட்டின் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துவிடும் என்பதால் தேவையில்லாத போது மின்விறிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

வீட்டின் மற்ற அறைகளை விட சமையல் அறையில் கண்டிப்பாக வெப்பம் அதிகரித்து காணப்படும். குறிப்பாக சமையல் செய்யும் போது ஏற்படும் வெப்பத்தை வெளியேற்ற சமையல் செய்யும் போது சிம்னியை ஓட விடுவது அவசியம். பொதுவாக சிம்னி மற்றும் எக்சாஸ்ட்பேன் ஆகியவற்றை எண்ணெய் பயன்படுத்தும் போதும் வறுக்கும்போதும் தான் சிலர் அதை ஓட விடுவார்கள். மற்ற நேரங்களில் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் இது போன்ற கோடைகாலத்தில் சமையல் செய்ய தொடங்கும் போதே சிம்னியை ஓட விட்டால் சமையல் அறையில் இருக்கின்ற வெப்பம் ஓரளவு வெளியேறி விடும்.

இதே போல கோடை காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் ஜன்னல்கள் அதிக நேரம் திறந்து வைத்திருப்பதால் வெளியில் உள்ள தூசுகள் அனைத்தும் வீட்டில் விழுந்து கிடக்கும். எனவே வீடுகளை தினந்தோறும் பெருக்குவதோடு இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது வீட்டின் தரைதளத்தை கிருமி நாசினிகளை கொண்டு துடைப்பது அவசியமாகும். வியர்வை அதிக அளவில் வெளியேறும் என்பதால் தலையனை கவர்கள், ஷோபா கவர்கள், பெட்விரிப்புகளை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும்.

ஏசி,ஏர்கூலர் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே ஜெனரல் சர்வீஸ் செய்வது அவசியமாகும். ஏனெனில் ஏசிக்களில் இன்டோர்மெஷினில் தூசிகள் அதிகம் படர்ந்திருந்தால் போதுமான அளவு குளிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. இதனால் மின்சாரத்தின் பயன்பாடு தான் அதிகரிக்கும். எனவே முன்கூட்டியே சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 AM | Best Blogger Tips
இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்
SHARE & Like the page here-->>@[293309174033072:274:World Wide Tamil People]

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்

அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்

வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:57 AM | Best Blogger Tips


வாயுத் தொல்லை! இந்தப் பிரச்சினை இல்லாத மனுஷங்களே இருக்க முடியாது. எத்தனை பெரிய ஆளா இருந்தாலும், தர்மசங்கடத்துல தர்ற பிரச்சினை இது.

ஒருத்தர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானதுன்னு சொல்றாங்க மருத்துவர்கள்.

இந்த வாயுத் தொல்லை ஏன் வருது?

உணவு செரிமானமாகி, வயித்துலேர்ந்து சிறுகுடலுக்குப் போகும். மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறினு எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

அதுக்கு முன்னாடி வாயுவை உற்பத்தி பண்ற உணவுகளைப் பத்திப் பார்க்கலாம். அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள், மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள், குறைந்த வாயுவை வெளியேத்தற உணவுகள்னு மூணு வகை. முதல் வகைல பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை. இரண்டாவது வகைல ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட். கடைசி வகைல முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி.

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்ன வழி?

சமைச்ச உணவு சாப்பிடறப்ப கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, கொஞ்ச இடைவெளி விட்டு, அப்புறம் சமைச்ச உணவை எடுத்துக்கிறது நல்லது. காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைச்ச உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம். மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறைவு.

சாப்பிட்ட உடனேயே வாயு வெளியேறாது. 3 முதல் 5 மணி நேரத்துக்குப் பிறகுதான் வரும். வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, பிரச்சினை குறையும்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ல நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம்னு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.