"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து

மணக்கால் அய்யம்பேட்டை | 12:18 PM | Best Blogger Tips

 ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் ” என்று பேசுவதும்  எழுதுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! | Mukadu

"ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨

மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை.
திருமணம் ஆயிரம் காலத்து பயிர்'. 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்'.  'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' போன்ற பழமொழிகளை… The post ...
இது மிகப் பெரிய காரணம் எனலாம்.

"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.

உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.

தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.
விவாகரத்து பெறும் முன்பு மறுதிருமணம் செய்ய முடியுமா?
பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. 

பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் | barnswallow birds story - YouTubeஅர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.

அதிசய குணம் கொண்ட ஐந்தறிவு சிறிய பறவை...மனிதர்களுக்கு கற்றுக்கொடுக்கும்  பாடம்! - ஜே.வி.பி நியூஸ்

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.
Sri Vinayakaa Vastu: பார்ன் சுவாலோ
சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.
Padithathil pidithathu - பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து  கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., தூரத்தில்  எங்கும் ...
தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?
வாழ்க்கை தத்துவங்கள் ..*** | Facebook
அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?
Important Qualities Of A Man,ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது என்ன? எப்போது  ஆணிடம் முழுமையாக சரணடைகிறாள் தெரியுமா? - what women expect in men know here  the details - Samayam Tamil
அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !
பயனுள்ள வாழ்க்கை குறிப்புகள்
மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
13 Amma ideas | indian paintings, krishna art, radha krishna art
அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !
யாழ்ப்பாணிச்சி
😊💯🧡✨ படித்ததில் பிடித்தது 


🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 7 சுவாரஸ்யமான இடங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:26 AM | Best Blogger Tips
தமிழ்நாட்டின் அதிகம் அறியப்படாத 7 சுவாரஸ்யமான இடங்கள்! | 7 Lesser Known  Interesting tourist Places in Tamil Nadu
பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களைக்கொண்ட தனித்துவமான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகின்றது.
 
மிகப் பிரபலமான பல இடங்கள் இருந்தாலும், இன்னும் சில இடங்கள் பலருக்குத் தெரியாதவையாகவே இருக்கின்றன. 
 
அப்படிப்பட்ட சில இடங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்:
 
கொடைக்கானல் -
 
 வட்டக்கண்ணி நீச்சல் குளம்:
 Kodaikanal
பொதுவாகவே கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகள் பெரும்பாலும் இங்கே உள்ள வட்டக்கண்ணி நீச்சல் குளத்தைப் பார்வையிடுவதில்லை. வட்டக்கண்ணி நீச்சல் குளம் என்பது மலைகளின் நடுவே மறைந்திருக்கும் இயற்கை குளம். இது அற்புதமான இயற்கை சூழலுடன், பசுமையான காடுகளால் சூழப்பட்டு, ஓய்வு எடுத்துக் கொள்ள அமைதியான இடமாக அமைந்துள்ளது.
 
திருவண்ணாமலை - வந்தவாசி கோட்டை:

May be an image of temple
திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி கோட்டை, தமிழகத்தில் அதிகம் பேசப்படாத இடங்களில் ஒன்று. இது பழைமையான கோட்டை மட்டுமன்றி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. இந்த பிரம்மாண்டமான கோட்டை பிரிட்டிஷ் காலத்திய போர்க்களமாக இருந்தது. இங்கு வருகை தருவதன் மூலம், பழங்கால போர்முறைகள் அதன் முக்கிய நிகழ்வுகள், வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும்.
 
திண்டுக்கல் - சிறுகுட்டு பாறை:
 திண்டுக்கலில் பார்க்கவேண்டிய மிக முக்கியமான இடங்கள் - மிஸ் பண்ணிடாதீங்க! -  தமிழ்நாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுகுட்டு பாறை என்பது மிகவும் அழகான மற்றும் அமைதியான இடம் ஆகும். இது ஒரு கற்பாறையால் ஆன அமைப்பு. இந்த பாறைக்குள் பல சிறிய குகைகளும் அமைந்துள்ளன. இந்த இடத்தை பார்க்கச் செல்பவர்களுக்கு, இங்கு இருக்கும் இயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குகைகள் மூலம் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப் பெறலாம்.
 
நாகப்பட்டினம் - கோடிக்கரை கடலோரக் காடு:
 தீக்கதிர் - கோடியக்கரை சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள்
நாகப்பட்டினம் அருகில் இருக்கும் கோடிக்கரை கடலோரக் காடு என்பது மிகக் குறைவாகவே பார்வையாளர்களால் பார்க்கப்படும் இடமாக உள்ளது. இது பல்வேறு வகையான விலங்குகள், பறவைகளைக் கொண்ட ஒரு விலங்கியல் பூங்கா. இங்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த இடம் கண்கவர் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 
நாமக்கல் - கொல்லிமலை:
 namakkal district news : namma falls attracts tourists in Kolli hills |  கொல்லிமலை போனா இந்த சூப்பர் அருவிய மிஸ் பண்ணாதீங்க..
சேலத்தில் அமைந்துள்ள கொல்லி மலை, சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பார்க்கப்படாத இடமாகும். இங்கு பல அழகான நீர்வீழ்ச்சிகள், பழைமையான கோயில்கள் மற்றும் மர்மமான குகைகள் உள்ளன. குறிப்பாக, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மிகப் பிரபலமானது. சமீப காலமாகத்தான் இந்த இடத்தைப் பற்றிய தகவல்களும் இயற்கை காட்சிகள் குறித்த விவரங்களும் மக்களிடையே பேசப்பட்டு வருகின்றன.
 
மதுரை - மாங்குளம் கோயில்:
 May be an image of temple and monument
மதுரையில் உள்ள மாங்குளம் கோயில், பழமையான தமிழரின் கலை மற்றும் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நிற்கிறது. மதுரையின் பரபரப்பான சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அமைதியான இடமாக இந்த மாங்குளம் கோவில்அமையப்பெற்றுள்ளது. பக்தி உணர்வுடன் கூடிய ஒரு ஆன்மிக சுற்றுலாவிற்குச் சிறந்த இடமாக இது விளங்குகின்றது.
 
கன்னியாகுமரி - திருப்பரப்பு நீர்வீழ்ச்சி:
 May be an image of 4 people and Iguazú Falls
கன்னியாகுமரியில் உள்ள திருப்பரப்பு நீர்வீழ்ச்சி என்பது மிகக் குறைவான சுற்றுலா பயணிகளால் பார்க்கப்படும் ஒரு இடமாகும். இங்கு நீரின் கொட்டும் சத்தம் மற்றும் அதன் அழகான தோற்றம், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. இதன் அருகில் சில பழைமையான கோயில்களும் உள்ளன.
 கன்னியாகுமரி மாவட்டத்தின் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் 'திற்பரப்பு  நீர்வீழ்ச்சி'... படங்கள் - ரா.ராம்குமார் - Vikatan
இப்படிப்பட்ட மறைந்திருக்கும் அல்லது அதிகம் அறியப்படாத இடங்களை சென்று பார்ப்பது நமக்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான சுற்றுலா அனுபவத்தைத் தரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. போவோமா.

❤️❤️❤️தந்தை❤️❤️❤️..... காலத்தால் மீண்டும்.......❤️❤️❤️❤️❤️❤️❤️🙏✍🏼🌹🙏✍🏼🌹🙏✍🏼🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 12:38 PM | Best Blogger Tips

 Father's day painting - The Brilliant Brushes✨ - Paintings & Prints, People  & Figures, Other People & Figures, Other - ArtPal

என் அம்மா எப்போதும் எங்களிடம் கூறுவார்:
 
தந்தை வீட்டிற்கு வரும்போது சிரித்த முகத்துடன் எதிர் கொள்ளுங்கள்
 
ஏனெனில் வெளி உலகம் உங்கள் தந்தையை வெறுப்பேற்றி அலைகழிக்கச் செய்கிறது.
 Father's Day Easy Painting/Father's Day Painting Ideas, 52% OFF
தாய் தந்தை வித்தியாசம்???
 
தாய் 9 மாதங்கள்
தன் வயிற்றில் சுமக்கிறாள்...
 
வாழ்நாள் முழுவதும் தந்தை தன் தோளில் உங்களை சுமக்கிறார்.. (நீங்கள் உணரமாட்டீர்கள்)
 
அம்மா உங்களை பசிக்காமல் பார்த்துக் கொள்கிறாள்...
 
நீங்கள் பட்டினி கிடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் தந்தை கற்பிக்கிறார்.. (உங்களுக்குப் புரிவதில்லை)
 Father and Son Acrylic Painting|Step-by-Step Painting|Correa Art - YouTube
அம்மா உங்களை மார்பில் சுமக்கிறாள்.
அவரை நீங்கள் பார்க்க முடியும்..
 
தந்தை உங்களை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.. (அவரை நீங்கள் பார்க்க முடியாது)
 May be an image of 1 person and text
தாயின் அன்பு, அது நீங்கள் பிறந்ததிலிருந்தே உங்களுக்குத் தெரியும்...
 
தந்தையின் அன்பு
அது நீங்கள் தந்தையாகும்போது தான் உங்களுக்குத் தெரியும்.. (பொறுமையுடன் இருங்கள்)
 
ஒரு தாய்... விலைமதிப்பற்றவள்
 May be a black-and-white image of 1 person


காலத்தால் மீண்டும் வழங்க இயலாத சொத்து.

 

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person, smiling and mountain 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹


 
🙏✍🏼🌹