நாடுகளை அலறவைக்கும் மிகபெரிய

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:18 | Best Blogger Tips


 


_*இந்தியா தெற்காசியாவினை மட்டுமல்ல சீனா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை அலறவைக்கும் மிகபெரிய விஷயத்தை கையில் எடுத்துவிட்டது*_

_இது சற்றும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி, தமிழக திராவிட கோஷ்டிகளும் நாத்திக கோஷ்டிகளும் கையினை பிசைந்து நிற்கும் பேரதிர்ச்சி_

_இந்திராவின் சில பலவீனங்களை மோடி எப்படி அசால்ட்டாக நொறுக்கி தள்ளி இந்திய நலனை காக்கின்றார் எனும் மாபெரும் ஆட்டம் இது_

_விஷயம் இதுதான், ஏப்ரல் 26ம் தேதி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜாண்சனை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தனுஷ்கோடியில் சந்திக்கின்றார் மோடி_

_போரிஸ் ஜாண்சன் கடந்த குடியரசு தினத்திலே சிறப்பு விருந்தினராக வருவதாக இருந்தது ஆனால் உருமாறிய கொரோனா தொற்று லண்டனை புரட்டி போட்டதால் வருகைதர முடியவில்லை_


_பெரும் குழுவோடு வரும் அவர் வருகை அப்போது சாத்தியமில்லை, இப்பொழுது அவரின் வருகை உறுதியாயிற்று_

_தனுஷ்கோடி என்பது புயலால் அழிந்துவிட்ட ஒரு மண்மேடு தீவு என்பதும் அங்கு இரு பெரும் நாட்டின் பிரதமர்கள் ஏன் சந்திக்க வேண்டும் என்பது பலருக்கு திகைப்பை ஏற்படுத்தலாம்_

_முன்பு ராமேஸ்வரம் போலவே இருந்த தீவு தனுஷ்கோடி, அங்கு ராமனுக்கு சிறிய ஆலயமும் இருந்தது, ஆனால் 1964ல் வீசிய பெரும் புயலால் அது அழிந்து மக்கள் வாழ தகுதியில்லா இடமானது_

_அதன் பின் எந்த அரசும் அதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை , இப்பொழுதுதான் மோடி அரசு தீவுகளின் முக்கியத்துவம் அறிந்தும் , ராமபிரானின் அடையாளங்களில் ஒன்றெனவும் அதை மீளெடுக்கின்றது_

_இதிலுள்ள மிகபெரும் விஷயங்கள் பல, ஒவ்வொன்றாய் பார்க்கலாம்_




_முதலாவது விஷயம் இந்திய பாஜக மோடி அரசு ராமர் பாலத்துக்கு ஒரு அடையாளம் தேடுகின்றது அத்தோடு ராமர் கோவில் எழும் நேரம் ராமாயணம் சம்பந்தபட்ட அனைத்தும் புது பொலிவு பெற வேண்டும் என விரும்புகின்றது_

_ராமபிரான் தன் வில்லை அதாவது தனுசை ஊன்றிய இடம் தனுஷ்கோடி என்பது வரலாறு, ராவணனை வீழ்த்தி அவர் பிரம்மகத்தி தோஷம் தீர வழிபட்ட இடம் ராமேஸ்வரம்_

_ராமேவரத்தில் ஆலயம் உள்ள நிலையில் தனுஷ்கோடியும் ராமர் கட்டிய பாலமும் அழிந்திருக்கும் நிலையில் அதில் சில அடையாளங்களை ஏற்படுத்தி துலங்க வைக்க தயாரயிற்று இந்திய பீடம்_

_இது நிச்சயம் செய்யவேண்டியது இது இந்திய கலாச்சார புரட்சியின் அடையாளம், அதை இந்திய கலாச்சாரத்தை அழித்து போட நினைத்த பிரிட்டனின் பிரதமரை வைத்தே செய்வது ஒருவகையான கலாச்சார மீட்பு பழிவாங்கல்_


_அடுத்த விவகாரம் கச்சதீவு, இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி நடந்தவரை கச்சதீவு இந்தியாவுக்கே சொந்தம் என்பது பிரிட்டனுக்கும் தெரிந்த விடயம், இதை இலங்கைக்கு கொடுத்தார் இந்திரா_

_கச்சதீவு விவகாரம் அர்ஜென்டினா அருகில் உள்ள பாக்லேண்ட் தீவினை போன்ற சிக்கல், அந்த தீவு பிரிட்டனுடனயது அதை உரிமை கோரும் நாடு அர்ஜென்டினா இதனால் பெரும் போர்களெல்லாம் நடந்தன‌_

_அப்படி கச்சதீவின் சில சிக்கல்கள் பிரிட்டனுக்கு புரியவைக்கவும் அதை மீட்கும் நடவடிக்கையில் உலக நாடுகளை திரட்டவும் எடுத்துவைக்கபடும் முதல் அடி இது_

_பிரிட்டன் அமெரிக்காவின் அந்தரங்க காரியதரிசி என்பது உலகம் அறிந்த உண்மை_

_மூன்றாம் விவகாரம் மேற்கு நாடுகளை சீனாவுக்கு எதிராக வங்க கடலுக்கு அழைத்து வரும் முயற்சி_

_ஆம் மாமல்லபுரம் வந்து சென்றபின் அதாவது இந்தியா உறவுக்கு கைநீட்டினாலும் சீனா யுத்தத்துக்கு வந்து பின் மூக்கறுபட்டி பதுங்கி திருபி சென்றபின் காட்சிகள் மாறிவிட்டன‌_

_சீனாவினை மேற்கில் நிலத்திலும் நீரிலும் எதிர்க்கும் நாடு இந்தியா எனும் வகையில் சீனாவினை எதிர்க்கும் சக்திகள் இந்தியாவினை நெருங்குகின்றன‌_

_இப்பொழுது சீனாவினை அமெரிக்காவுக்கு அடுத்து எதிர்க்கும் வல்லரசு நாடு பிரிட்டன், ஹாங்காங்க் விவகாரத்தில் அது சீனாவுடன் கடுமையாக மோதுகின்றது_

_அப்படியே பிரிட்டனின் போர்கப்பலும் தென்சீன கடலில் அதிரடி காட்டுகின்றது_

_சீனாவோ இலங்கை வழியாக கச்சதீவில் கால்வைக்க துடிக்கும் நிலையில் உலக நாடுகளின் உதவியோடு கச்சதீவினை திரும்ப எடுக்க தயாராகின்றது இந்தியா_

_இது மூன்றாம் காரணம்_

_நான்காம் காரணம் இந்திராவின் பலவீனம், ஆம் கச்சதீவு பகுதிகள் கடத்தலுக்கு பெயர்போனவை, அதை அதிரடியாக தடுக்க எண்ணிய இந்திரா தமிழக திராவிட கும்பல்களுக்கு அஞ்சினார்_

_அதில் கைவைத்தால் திராவிட கோஷ்டிகள் வித்தியாசமான அரசியலை கையிலெடுக்கும் என யோசித்த இந்திரா விவகாரத்தை இலங்கைக்கே தள்ளிவிட்டார்_

_தன் இயலாமையினை அவர் அப்படி மறைத்திருந்தார் இது போக இலங்கையில் பாகிஸ்தான் கால் வைக்கும் எனவும் அஞ்சினார்_

_மோடி இதில் அடித்து ஆடுகின்றார், இலங்கையில் சைவம் வளர்க்க பாஜக தொடங்கபட்டுள்ளது, அதை கண்டு யோசிக்கும் சிங்கள தரப்பு சீதா தேவி அமர்ந்த கல்லை ராமர் கோவிலுக்கு காணிக்கையாக்குகின்றது_

_தலைமன்னார் அருகே ராமர் பாலத்தினை இந்திய அதிகாரிகள் வணங்கும் பொழுது அமைதி காக்கின்றது_

_ஒரு விதமான எச்சரிக்கைக்குள் இலங்கையினை கொண்டுவந்துவிட்டார் மோடி, தமிழக திராவிட இம்சைகளை தமிழக பாஜகதான் கண்டு கொள்கின்றது_

_மோடி அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, மதித்தால் தன்போன்ற தேசபக்தனுக்கு அது அழகல்ல என்பது அவருக்கு தெரியும்_

_*ரகசியமாக தமிழக திராவிட கும்பலுக்கு என்ன தெரிவிக்க வேண்டுமோ அதை தெரிவித்துவிட்டு ராமர் பாலம், தனுஷ்கோடி என களமிறங்கிவிட்டார்*_

_கச்சதீவு இந்திரா தோற்ற இடம், அதை மீட்டு அதன் பின்னும் கடத்தலை தடுக்கும் பொருட்டு அப்பக்கம் ராணுவத்தை நிறுத்தும் திட்டம் அவரிடம் உண்டு_

_தென்னக கடற்கரையில் மிக ஆழமாக இந்தியா காலூன்ற போகின்றது, முன்பு ஈழத்தில் இருந்து வந்த இந்திய எதிர்ப்பும் தமிழக இந்திய எதிர்ப்பும் இங்குதான் சந்தித்தன‌_

_இங்கிருந்துதான் ராஜிவ் கொலைவரை திட்டங்கள் உருவாயின‌_

_இப்பொழுது ஈழத்திலும் இந்தியாவிலும் தமிழன் என உருவாக்கபட்ட பிம்பத்தை இந்து என மாற்ற பல வகைகளை செய்துவிட்டார் மோடி, இனி ஆபத்தில்லை_

_ஆக கலாச்சாரம், மதம், ராணுவம்,பாதுகாப்பு என பல விஷயங்களை முன்னிட்டு ஏப்ரல் 26ம் தேதி பிரிட்டிஷ் பிரதமரை தனுஷ்கோடிக்கு அழைத்து வருகின்றார் மோடி_

_பிரிட்டிஷ் பிரதமரின் தனுஷ்கோடி வருகையினை கேட்டு ஆடிபோய் இருக்கின்றது சீன இலங்கை கூட்டணி, இனி வங்கபடலில் அதிரடி காட்சிகள் பல இடம்பெறலாம்_

_மெல்ல பலம்பெறும் தனுஷ்கோடியில் இருந்து ராமர்பாலம் புதுமாற்றம் அடையலாம், ராமரின் நினைவு சின்னங்களும் ஆலயமும் உருவாகலாம்_

_*பாரதி கனவு கண்ட சிங்கள பாலம் நனவாகலாம்*_

_கச்சதீவு இனி இந்தியாவுக்கு திரும்ப வர வேகமெடுக்கலாம், குறைந்தபட்சம் அதில் இந்திய நலன்களாவது நிலைநிறுத்தபடலாம்_

_பாரதத்தின் தலைமகனாக அசுர பலத்துடன், இல்லை இல்லை தேவர் பலத்துடன் ஒரு வீரதுறவி அமர்ந்திருக்கும் நேரம் நம்பமுடியாத காட்சிகளெல்லாம் நடக்கின்றன‌_

_இந்தியாவா? இப்படியா? தனுஷ்கோடியிலா? பிரிட்டிஷ் பிரதமரா? கச்சதீவு திரும்ப வாங்குவதா? என ஏகபட்ட கேள்விகள் அலைமோதுகின்றன‌_

_நம்ப முடியாத அதிசயங்கள் கண்முன் நடப்பதை கண்டு ஒவ்வொரு தேசாபிமானியும் ஆனந்த கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றான்_

_பாரத பீஷ்மரின் மாபெரும் சாதனைகள் இவை, இந்திய வரலாற்றில் மின்னும் பொற்காலங்கள் இவை_

_*இப்படி ஒரு தலைவனுக்காய் ஏங்கிய நாடு, இவனே இனி நிரந்தர தலைவன் என கொண்டாட தொடங்கிய தருணம் இது*_

_அந்த நல்லாட்சி கொடுத்த ராமபிரானும், பாம்பன் சுவாமிகளும், பாம்பனில் அமர்ந்து தியானம் செய்த விவேகானந்த மகானும் எல்லா ஆசிகளையும் மோடிக்கு கொடுக்கட்டும்_

_ஹனுமன் சாயல் கொண்ட வீரதுறவியின் ஆட்சியில் ராமர் கோவில் எழ எழ ராமனின் அடையாளமெல்லாம் துலங்குகின்றன‌_

_ராமன் புகழ் துலங்க துலங்க பாரதம் பலமாகின்றது, ஜெய் ஸ்ரீராம் என வங்ககடல் உரக்க எழுப்பும் ஓசையில் நாட்டுக்கு நல்ல விஷயங்களாக விடிய தொடங்கிவிட்டன‌_

_மோடி இந்நாட்டுக்கு இனி நிரந்தர பிரதமராக அமர்ந்துவிட வேண்டும், அதற்கு தேர்தல்களெல்லாம் வெறும் சம்பிரதாயமாக இருந்து தொலையட்டும்_

_ராமன் வில் ஊன்றிய இடத்தில் புதிய இந்தியா படைக்க வருகை தரும் மோடிக்கும், இந்தியா தன் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதை காணவரும் பிரிட்டிஷ் பிரதமருக்கும்

வாழ்த்துக்கள்

_

_மோடி செய்திருப்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாபெரும் புரட்சி, இதன் நுணுக்கமும் பலமும் இது கொடுக்கும் விளைவுகளும் ஒருநாள் அந்த மகானை தேடி உங்கள் கைகளை குவித்து வணங்க சொல்லும்_

_நாம் முன் கூட்டியே இப்பொழுதே வணங்கி கொண்டிருகின்றோம், இந்திய தேசாபிமானியாக நன்றியோடு வணங்கி கொண்டிருக்கின்றோம்_

_*ஜெய் மோடி*_,

_*ஜெய் ஸ்ரீராம்*_,

_*ஜெய் ஹிந்த்*_..

Stanley Rajan....

 

நன்றி இணையம்