கோவில்களின் பணம் எங்கேயா போகுது?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:47 AM | Best Blogger Tips

 





கோவில்களின் பணம் எங்கேயா போகுது?

இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் சொத்துக்களின் விவரம்.

திருக்கோவில்கள்- 41746

சமணத்திருக்கோவில்கள்- 19

திருமடங்கள் -309

திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் - 492

அறக்கட்டளைகள் - 1555

அவர்கள் சொல்லும் கணக்கு:

5037 கோவில்களின் வருட வருமானம்: பத்தாயிரம் - 2 லட்சம் ரூபாய்

938 கோவில்களின் ஆண்டு வருமானம் 2லட்சம் - 10 லட்சம்

1992 கோவில்களின் வருஷத்துக்கு 10 லட்சத்திற்கு மேல்

36,154 கோவில்களில் ஒரு வருடத்திற்கே 10000 ரூபாய்க்கு கீழ் தான் வருமானம் வருகிறதாம். அதாவது அவர்களோட கணக்குப்படி 36154 கோவில்களில் தினசரி வருமானம் 27 ரூபாய்.

திருக்கோவில்களுக்கு சொந்தமாக 4,78,348 ஏக்கர் நிலம் இருக்கிறதாம்.

ஒரு ஏக்கருக்கு 1000 ரூபாய் வருமானம் வந்தாலே 47 கோடி ரூபாய் இருக்கு.


அதுமட்டுமல்லாம, கோவில்களுக்கு சொந்தமா 22600-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கு. ஒரு கட்டிடத்துக்கு 3000 ரூபாய் வாடகை வாங்கினாலே 7 கோடி வரும்.

அது இல்லாம, 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருக்கு. 1000 ரூபாய் வாடகை வைத்தாலும் 3.3 கோடி இருக்கு.

அதுவுமில்லாது, 1,23000 பேருக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டிருக்கு. 1000 ரூபாய் வாங்கினாலும் 12.3 கோடி இருக்கு.

கோவில் வருமானத்தை சேர்க்காமலே, பிற சொத்து வருமானங்களுக்கு மட்டும் ரொம்ப மட்டமான கணக்கு போட்டாலே 70 கோடி வருது.

ஆனால், அறநிலையத் துறையோ 60 கோடி ரூபாய் வருமானம் வருவதாக கூறுகிறது.

1000 கோடி வருமானம் சம்பாதிக்க வேண்டிய சொத்துக்களை வைத்து வெறும் 60 கோடி சம்பாதித்தால் இவர்கள் திறமையற்றவர்கள் தானே. திறமையற்றவர்களால் இந்து கோவில்களை அழிவின் நிலைக்கு சென்று விட்டது. இனிமேலும் இதனை அனுமதிக்க முடியுமா?

அரசன் மட்டும் கோவில் கட்டவில்லை. கோவில் உருவாக்கத்தில் அரசனுக்கு உதவியாக பக்தி அர்ப்பணிப்பில் ஈடுபட்ட நம்முடைய முப்பாட்டன், முப்பாட்டிக்கும் பங்கு இருக்கிறது.

இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் 44218 கோவில்களில் 36154 கோவில்களில் ஒரு நாள் வருமானம் 27 ரூபாய் என்றால் அந்த கோவில்களின் நிலைமை எப்படி இருக்கும். எத்தனை நாளைக்கு வரும் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.

உண்மையில் கோவில்களைப் பற்றிய இவர்களுடைய அறிவும், புரிதலும் அதிர்ச்சியடைய வைக்கிறது.

கோவில்கள் வெறும் கட்டிடங்கள் அல்ல. சக்தி மையங்கள். உடல் வியாதிக்கு ஒரு கோவில், மன வியாதிக்கு ஒரு கோவில், கர்ம வினைக்கு கோவில், மனிதன் பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும். இறக்காமல், மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கும் கூட கோவில்கள் உண்டு. நவ கிரகங்களுக்கும் கோவில், பஞ்சபூதங்களுக்கும் கோவில் என்று மனிதனுடைய உடல், மனம், உணர்ச்சி, உயிர் சக்தி அனைத்தும் உச்சபட்ச சாத்தியத்தை பெறுவதற்காக பல சித்தர்கள், யோகிகள், ஞானிகளால் அமைக்கப்பட்டது தான் தமிழக கோவில்கள்.

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு முறைப்படி ஒவ்வொரு நேரப்படி முறையான மந்திரங்கள், முறையான பூஜைகள் செய்தால் மட்டுமே அந்த கோவில்கள் உயிரோட்டமாக இருக்கும். நமக்கும், நம்முடைய குழந்தைகளுக்கும் பல ஆயிரம் வருடங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 27 ரூபாய் வருமானம் வரும் 36 ஆயிரம் கோவில்களில் விளக்கு கூட ஏற்றாமல் வைத்தால் அதன் கதி என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவானு நந்தனார் சும்மா பாடல.. சிவனை உயிரோட்டமா பார்த்தார்.

நம்ம அப்பனும், அம்மையும் கோவில்ல உயிரோட்டமா இருந்தா அப்படியே அநாதையா கவனிக்காம விட்டுருவோமா.. ஒரு பக்தனா கடும் வேதனையளிக்கிறது. வலிக்கிறது.

கட்டாயம் நம் கோவில்களை மீட்டெடுத்து மீண்டும் புத்துயிர் ஊட்டுவோம். நம் கலைகளையும், கலாச்சாரத்தையும், தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டையும் காப்பாற்றுவோம். ஆம் நம ஷிவாய..

#கோவில்அடிமைநிறுத்து

#FreeTNTemples

 

நன்றி இணையம்