*சப்தவிடங்கத் தலங்களும் தியாகராஜப் பெருமானும்*

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips



ஒரு சமயம் பிள்ளைப்பேற்றை வேண்டித் தவம் செய்த திருமால் தனக்கு சிவபிரான், முருகன், உமாதேவியார் ஆகிய மூவரும் ( சோமாஸ்கந்தர் ) ஒருசேரக் காட்சியளித்ததை மனதில் நினைந்து நினைந்து மகிழ்ந்தார்.

அக்காட்சியை விஸ்வகர்மா எனும் தேவதச்சனைக் கொண்டு அழகிய திருவடிவமாகச் செய்து அதனைத் தன் மார்பில் வைத்துப் பூஜை செய்து கொண்டிருந்தார்.

பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்.

ஒருமுறை இந்திரனுக்கு வலன் எனும் அசுரனால் ஆபத்து ஏற்பட்டது.

அதை முசுகுந்த_சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்து வெற்றி பெற்றான்.

முசுகுந்தனே சூரிய

வம்சா வழி இஷ்வாகு ஸ்ரீ ராமரின் முன்னோர்கள் குலத்திலிருந்து சோழர் குலத்தை துவக்கினாா்.

அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் என்ன வேண்டும் என கேட்க திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க தியாகராஜரைக் கேட்டார்.

தேவர்கள் மட்டுமே பூஜிக்கத்தக்க அந்த விடங்கரை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை.

தேவசிற்பியான மயனை வரவழைத்து தான் வைத்திருப்பதைப்போலவே ஆறு விடங்க மூர்த்தங்களை செய்து அவற்றில் இருந்து ஒன்றை தேர்ந்து எடுத்துகொள்ள சொன்னார்.

முசுகுந்தன் சிவபெருமான் அருளால் நிஜ விடங்க மூர்த்தியை கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ விடங்கருடன்,

மயன் செய்த விடங்கரையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.


தியாகராஜர் உடன் பூதங்களும் இசைக்கருவிகளும் பரிவாரங்களாக பூலோகம் வரப்பட்டது. அவற்றில், நிஜ விடங்க மூர்த்தியை திருவாரூரிலும் மற்ற விடங்கரை சுற்றியுள்ள ஆறு கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது.

தியாகேசர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் மரகதலிங்கம் உள்ளது.

இவருக்கே தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது .

தியாகேசர் திருமேனியில் முகம் மட்டுமே தெரியும்.

மார்கழி ஆதிரையில் தியாகராஜாவின் இடப்பாதத்தையும், பங்குனி உத்தரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்கலாம்.

விடங்கம் என்றால் உளியால் செதுக்கப்படாத என்று பொருள்.

சப்தவிடங்கத்தலங்களை

குறித்து தனிப்பாடல் ஒன்று உள்ளது.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறுகாரார் மறைக்காடு காராயில் பேரானஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலிசத்த விடங்கத் தலம்.

சப்தவிடங்க தலங்கள்

ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்கு ஒவ்வொரு பெயர் உள்ளது.

1) திருவாரூர் வீதிவிடங்கர் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம் .

2) திருநள்ளாறு

நகர விடங்கர் - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம் .

3) நாகைக்காரோணம் (நாகப்பட்டிணம்). சுந்தரவிடங்கர் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம் .

4) திருக்காறாயில்

( திருக்காரவாசல்) ஆதிவிடங்கர் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம் .

5) திருக்கோளிலி

(திருக்குவளை). அவனிவிடங்கர் - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம் .

6 திருவாய்மூர் நீலவிடங்கர் -

தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம் .

7) திருமறைக்காடு (வேதாரண்யம்). புவனிவிடங்கர் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம் .

ஆரூரா தியாகராஜா...

🙏

 நன்றி இணையம்