பில்கேட்ஸ் Fun only

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:10 | Best Blogger Tips
Image result for பில்கேட்ஸ்
Fun only
பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,
"
நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."
"
நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"
"
ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"
"
அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"
நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.
இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...
"
ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"
வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.
அங்கே,
நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..
நீண்ட யோசனைக்குப்பின்,
"
தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"
உன் விருப்பம்", எமன்.
இரண்டு வாரங்களுக்குப்பின்,
பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"
எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.
பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"
முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,
"
அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !" https://www.facebook.com/images/emoji.php/v8/f52/1/16/1f923.png🤣