யோகி ஆதித்யநாத், கிழக்கு உத்தரபிரதேசத்தின் ராஜரிஷி !! ஐந்து முறை கோரக்பூர் தொகுதியின் எம் பி !! கோரக்நாத் மடத்தின் தலமை மடாதிபதி !! "ஹிந்து யுவ வாஹினி" எனும் சமூக, தேசியவாத தொண்டு நிறுவனத்தை தொடக்கிய மகான் !! ராஜ்புட் வம்சத்தை சேர்ந்த இவர் கனிதத்தில் பட்டம் பெற்றவர்
2005ல், 1800 கிறிஸ்துவர்களை தன் தலைமையில் புனித சடங்கு நடத்தி தாய்மதம் திருப்பினார். மொத்தம் ஐயாயிரம் பேர் தாய் மதம் திரும்பினர். "உபியும், இந்தியாவும் இந்து தேசமாக மாறும் வரை நான் ஓய மாட்டேன்" என்றார் யோகி !! "முஸ்லீம்கள் 10 முதல் 20 சதவீதம் இருக்கையிலேயே இந்துக்கள் மீது அநீதிகளும், அத்துமீறல்களும் நடக்கின்றன, அவர்கள் 20 முதல் 35 சதவீதம் ஆனால் என்னவாகும் என நினைத்துப் பாருங்கள்" என்று முழங்கிய மதிப்புக்குரிய மதவாதி அவர். "ஒரு இந்துப் பெண்ணை நீங்கள் முஸ்லீமாக்கினாள், நூறு முஸ்லீம் பெண்களை நாங்கள் தாய் மதம் திருப்புவோம். 'லவ் ஜிஹாத்' எனும் கொடுமை கேரளாவில் தொடங்கி, மேற்கு உத்தரபிரதேசம் வரை பரவி வருகிறது, இதை எதிர்த்து நான் மக்களிடம் செல்வேன்" என முழங்கினார். "இந்து-முஸ்லீம் கலப்பு திருமணத்தை நான் எதிர்க்கவில்லை, ஆனால் சூழ்ச்சியால் அது நடந்திட கூடாது, இரு பாலரும் ஒருமித்து எந்த மதத்தை தேர்ந்தெடுத்தாலும் நான் வரவேற்கிறேன்" என்றார். "இந்துக்கள் ஒன்றினைய வேண்டும், தர்மம் காக்கப்பட வேண்டும், தேசம் வளர்ச்சியை பெற வேண்டும்" என்று சதா முழங்கிக் கொண்டிருந்தார். "இந்துத்துவம் எங்களின் ஆதாரம், உத்தரபிரதேசத்திலும், இந்தியாவிலும் இந்து எழுச்சியை ஏற்படுத்துவேன்" என்பது அவரின் கர்ஜனை. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மதசகிப்புத்தன்மை இந்தியாவில் இல்லை என்று கூறிய போது, "ஷாருக்கான் இன்று பெரிய நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருப்பதுதான். அவர்கள் அவரின் திரைப்படத்தை புறக்கனித்தால், ஷாருக்கான் தெருவுக்கு வர வேண்டிவரும். பாகிஸ்தான் தீவிரவாதி ஹஃபீச் சயித்தை போல் ஷாருக்கான் பேசுகிறார்" என வெளிப்படையாக பேசினார்.. "இந்துக்கள் சாதிகளை தாண்டி இனைய வேண்டும், அதுவே அந்நிய சக்திகளை அடங்க வைக்கும்" என்றார் அவர். ஒவ்வொரு முறை அவர் எம் பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அவரின் வெற்றி 'மார்ஜின்' அதிகமாகி கொண்டே வந்துள்ளது.
யோகி ஆதித்யநாத் மிக அமைதியானவர். வன்முறையை விரும்பாதவர். ஒரு சிறு உயிருக்கு கூட தீங்கு நினைக்காதவர். ஆனால் அதே வேளையில் இந்த தேசம் முழுவதும் நடந்துவரும் சிறுபான்மை ஓட்டுப் பொறுக்கித்தனத்திற்கு எதிரானவர். பதவிகளை பெரிதாக கருதாதவர். பலராலும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டவர். அதர்மத்திற்கு எதிராக போராட எப்போதும் தயாராக இருப்பவர். பலமுறை சிறுபான்மை ஓட்டுப் பொறுக்கி கட்சிகளால் அவர் சிறைப்பிடிக்கப்பட்டார். இன்று அவர் உத்தரபிரதேசத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்துத்துவமும், வளர்ச்சியும், வேறு வேறல்ல என்பதை இது உணர்த்தியுள்ளது. அவரை ஒரு மதவாதி என்றும் மதவெறியர் என்றும் அனைத்து தேச விரோதிகளும், இந்து விரோதிகளும் கூக்குரல் எழுப்புவார்கள். உண்மைதான்... சொதப்பாத, குழப்பாத, தெளிவான இந்து உணர்வாளர் அவர். நம் "மதிப்புக்குரிய மதவாதி". இந்த ராஜயோகி, நல்லவருக்கு நல்லவர், மிகச்சிறந்த தேசப்பற்றாளர். அவர். உத்தரபிரதேசத்தை மிகச்சிறந்த வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என்பதில் துளியும் ஐயமில்லை. அவரின் வழிகாட்டுதலில் ஸ்ரீ ராமனுக்கு மிகப்பெரும் ஆலயம் அமையும் !! வந்தே மாதரம், வாழ்க பாரதம் !!
நன்றி - மாஸ்டர் Prakash P