அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) கோயில், மதுரை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips
Image result for அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) கோயில், மதுரை
https://www.facebook.com/images/emoji.php/v8/f1f/1.5/16/1f6a9.png🚩🕉🕉🕉 *தினம் ஒரு திருக்கோவில்:🕉🕉🕉🕉அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) கோயில், மதுரை
முக்கியத்துவம் :
உலகப்புகழ் பெற்ற சிவாலயம்.
சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்திய தலம். கால் மாறி ஆடிய தலமும் இதுவே.
சிவனே எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளியிருக்கும் அதி அற்புத தலம். தென்னாடுடைய சிவனே போற்றி என சிவபக்தர்களால் மனமுருக கூறும் சுலோகம் அமைய காரணமான சிவத்தலம்.
Image result for அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) கோயில், மதுரை
இந்திரன் வருணன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம்.
இது சிவதலம் என்றாலும் கூட 64 சக்தி பீடங்களுள் மீனாட்சி பீடம் முதல் பீடத்தைப் பெற்றுள்ளதால் எல்லா பூஜைகளும் அன்னை மீனாட்சிக்கு முடிந்த பிறகே சிவபெருமானுக்கு நடைபெறுகின்றன.
டவ்சனே தருமி என்ற புலவருக்காக இறையனாராக வந்து தமிழை ஆராய்ந்த இடம்.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட தலம்.
நக்கீரர் வாழ்ந்த இடம்.
முருகன் திருவருளால் ஊமைத் தன்மை நீங்கிய குமரகுருபரர் மீனாட்சி பிள்ளை தமிழ் அரங்கேற்றியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை கொடுத்ததும், இத்தலத்தில் தான்.
பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம்.
இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம்.
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பெற்ற பெருமான் வாழும் இடம்.
எப்போதும் திருவிழாக்கள் நடந்த வண்ணமே இருக்கும் சிறப்பு வாய்ந்த தலம்.
பல புராண இலக்கியங்களையுடையது :
கலையழகும், சிலைவனப்பும், இசையமைப்பும் ஆயிரக்கணக்கான அழகிய சுதைகளையும் கொண்ட வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்டது.
ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். அம்மையும் அப்பனும் வீதியில் வருவதும், அண்டிய அன்பருக்கு இன்பமே தருவதும் மதுரையில் காலம் காலமாக நடந்து வருவதாகும்.
14 கோபுரமும் 5 வாயிலும் உடைய மிகப்பெரிய கோயில். கலையழகும், சிலையழகும், சிற்பத்திறனும், சிற்பவனப்பும், நாத அமைப்பும் கொண்டது. பல மூர்த்திகளின் திருவுருவங்களும், பொற்றாமரைக்குளமும், கோயில் விமானங்களும் சிற்பத்திறனில் சிறந்து விளங்குகின்றன. முத்தமிழுக்குரிய இயல், இசை, நாடகங்களைக் காட்டும் கலைக்கோயிலாகவும், சிலைக்கோயிலாகவும் இத்தலகோயில் விளங்குகிறது. தெற்கு கோபுரம் தான் மிகவும் உயரமானது.
தலத்தின் பெயர் காரணங்கள் :
சிவபெருமான் தமது சடையிற் சூடிய பிறையினிடத்துள்ள அமிர்தமாகிய மதுவைத் தௌpத்து. நாகம் உமிழ்ந்த விஷத்தை நீக்கிப் புனிதமாக்கியதால் மதுரை எனப் பெயர் பெற்றது.
சிவபெருமானுக்கு அணியாயிருந்த பாம்பு வட்டமாய் வாலை வாயால் கவ்வி மதுரையின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் வந்தது.
கடம்பவனம் :
கடம்பமரம் அடர்ந்த காடாக இருந்ததால் கடம்பவனம் எனப் பெயர் பெற்றது.
நான்மாடக்கூடல் :
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தம் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடிக்காத்ததால் நான்மாடக்கூடல் எனப் பெயர் ஏற்பட்டது.
இத்தலம் குறித்த பதிகங்கள் :
மாணிக்கவாசகர் - திருவாசகம், அருணகிரிநாதர் - திருப்புகழ், பாணபத்திரர் - திருமுகப்பாசுரம், பரஞ்சோதி முனிவர் , திருவிளையாடற்புராணம், மதுரைக்காஞ்சி - மாங்குடி, மருதனார்மீனாட்சி, பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்.
சிறப்பு தகவல் :
மூன்று கோடி சிற்பம் :
அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில். இந்த பீடத்திற்கு ராஜமாதங்கி சியா மள பீடம் என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது. சுந்தரானந்தர் என்ற சித்தர் அடங்கிய தலம். இத்தலத்தினை பூலோக கைலாசம் என்றும், இத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்கிறது புராணம். அத்துடன் உலகத்திலேயே சிலைகளும், சிற்பங்களும் மூன்றுகோடி உள்ள ஒரே திருக்கோயில் இதுதான். இந்திரன் உருவாக்கியது. சிவபெருமான் மதுரை நகரில் தனது 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்தினார். அதில் முதல் திருவிளையாடல் தான் இந்திரன் சாபம் தீர்த்த படலம். இந்திரன் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும் போது மதுரையில், ஒரு சுயம்புலிங்கத்தை கண்டு அதை பூஜித்து தன் தோஷம் நீங்கப் பெற்றான். அங்கு இந்திர விமானத் துடன் கூடிய கோயிலை கட்டினான்.
பெண்மைக்கு முக்கியத்துவம் :
அன்னை மீனாட்சி மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் இடைநௌpத்து கையில் கிளி ஏந்தி அழகே உருவாக மரகத மேனியாக அருள்பாலிக்கிறார். சுவாமி சுந்தரேஸ்வரர் கருவறையில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். கடம்பம், வில்வம் இரண்டும் தல விருட்சங்களாக உள்ளன. பொற்றாமரை, வைகை ஆகிய தீர்த்தங்கள் இத்தலத்திற்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தலத்தை பொறுத்தவரை பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அம்மனின் இடப்பக்கம் சுவாமி வீற்றிருக்கிறார்.
முக்குறுணி விநாயகர் :
ஒரு முறை திருமலை நாயக்கருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. வலி நீங்க மீனாட்சிக்கு தெப்பக்குளம் கட்டுவதாக நேர்ந்து கொண்டாராம். அப்படி தெப்பக்குளம் தோண்டும் போது பிரம்மாண்டமான பிள்ளை யார் கிடைத்தார். அவரை சுவாமி சன்னதி செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி முக்குறுணி விநாயகர் என்ற திருநாமத்துடன் பிரதிஷ்டை செய்தனர். இவருக்கு விநாயகர் சதுர்த்தியன்று 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைக்கிறார்கள்.
தங்கத்தேர் :
அன்னை மீனாட்சிக்கு 1981 ல் தங்கத் தால் தேர் செய்யப்பட்டது. இந்த தங்க தேர் இழுப்பதற்கு அலுவலகத் தில் பணம் கட்ட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் இலவசமாக தங்கத்தேர் இழுக்கலாம். இத்தேரின் அப்போதைய மதிப்பு ரூ.14,07,093.80. 14.5 அடி உயரத் தில் செய்யப்பட்ட இந்த ரதத்தில் 6.964 கிலோ தங்கமும், 87.667 கிலோ வெள்ளியும், 222.400 கிலோ தாமிரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
அங்கயற்கண்ணி பெயர் விளக்கம் :
அன்னை மீனாட்சிக்கு பல திருநாமங்கள் இருந்தாலும், அங்கயற்கண்ணி என்ற திருநாமம் தான் மீனாட்சிக்கு பெருமை சேர்க்கிறது. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. மீன் தன் முட்டைகளை தன் பார்வையாலேயே தன்மயமாக்கு வதைப் போல், அன்னை மீனாட்சியும் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை தனது அருட்கண்ணால் நோக்கி அருள்பாலிக்கிறாள்.
தலபெருமை :
ராமர், லட்சுமணர், வருணன் மற்றும் பிற தேவர்களும் மற்றும் பல முனிவர்களும் பூஜித்து பேறு பெற்றது மதுரை. சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பாடப்பெற்றது. குமரகுருபரர் மீனாட்சி பிள்ளைத் தமிழ் பாடியதும், திருவாதவூராருக்கு மாணிக்கவாசகர் என்ற பெயரை சிவன் கொடுத்தருளியதும் இங்கு தான். நவக்கிரக தலத்தில் இது புதனுக் குரியதாகும்.
நடராஜர் கால் மாறி ஆடியது ஏன்? :
சுவாமி சன்னதியில் நுழைந்தவுடன் நடராஜர் இடதுகால் ஊன்றி வலது கால் தூக்கி நடனமாடுகிறார். பஞ்ச சபைகளுள் இது வெள்ளிசபை. மதுரையை ஆண்ட ராஜசேகர பாண்டியன் நடனக்கலையை படித்து முடித்து விட்டு, நடராஜருக்கு நன்றி சொல்ல வந்தான். இறைவா! நடனம் கற்பதற்கு மிகக் கஷ்டமாக இருக்கும் போது காலம் காலமாக வலது கால் ஊன்றி இடது கால் தூக்கி ஆடிக்கொண்டிருக்கிறாயே! எனக்காக கால் மாறி ஆடக் கூடாதா? நீ அப்படி செய்யாவிட்டால் நான் இங்கேயே உயிர் துறப்பேன், என கீழே விழுந்தான். மன்னனின் வேண்டுகோளை ஏற்ற நடராஜர் அன்று முதல் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி ஆடலானார்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவிழா காணும் இக்கோயிலில் சித்திரையில் நடக்கும் விழா தான் மிகவும் சிறப்பானதாகும். இதுதவிர ஆவணி மூல திருவிழா, தெப்பத்திருவிழா, ஆடிப்பூரம் போன்றவையும் முக்கிய விழாக்கள் ஆகும்.
திருவிழா :
சித்திரை மாதம் வளர்பிறையில் நடக்கும் 12 நாள் விழாவில் முதல் நாள் கொடியேற்றம், பின் ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வாகனங்களில் வீதி உலா வருவர். 8ம் நாள் மீனாட்சி பட்டாபிஷேகம், செங்கோல் வழங்கும் வைபவம், 9ம் நாள் மீனாட்சி திக்விஜயம், 10ம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம், 11ம் நாள் தேர்த்திருவிழா, 12ம் நாள் தீர்த்த விழா, வைகையில் அழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதுடன் சித்திரை திருவிழா முடி வடையும்.
வைகாசியில் 10 நாள் வசந்த விழா, திருஞான சம்பந்தர் விழா. ஆனியில் ஊஞ்சல் திருவிழா. ஆடியில் முளைக்கொட்டு விழா.
அடுத்து 12 நாள் நடக்கும் ஆவணி மூலப்பெருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி தந்தது, மாணிக்கம் விற்றலீலை, தருமிக்கு பொற்கிழி வழங்கியது, உலவாக் கோட்டை அருளிய லீலை, அங்கம் வெட்டியது, வளையல் விற்றல், குதிரை கயிறு மாறிய லீலை, பிட்டுக்கு மண் சுமந்தது, விறகு சுமந்த லீலை ஆகியவை இடம் பெறும்.
புரட்டாசியில் நவராத்திரி விழா, ஐப்பசியில் 6 நாள் கோலாட்ட உற்சவம், அன்னாபிஷேகம், கார்த்திகை யில் தீபஉற்சவ விழா, 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. மார்கழியில் மீனாட்சிக்கு 4 நாள் எண்ணெய் காப்பு உற்சவம், தை மாதம் சங்கராந்தியன்று கல் யானைக்கு கரும்பு தந்தருளிய லீலை, வலைவீசியருளிய திருவிளையாடல், தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் உலா வரும் தெப்பத்திருவிழா நடக்கும். மாசி மகாசிவராத்திரியன்று சகஸ்ர சங்காபிஷேகமும் 4 கால பூஜையும் உண்டு. பங்குனி மாதத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் செல்லு}ர் திருவாப்புடையார் கோயிலில் எழுந்தருள்வர்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலின் இடது பக்கம் உள்ள சித்தி விநாயகர் சன்னதி விநாயகரின் நான்காவது படை வீடாகும்.
பொற்றாமரைக்குளம் :
நந்தி மற்றும் பிற தேவர்களின் வேண்டுகோளின் படி சிவன் தமதுசூலத்தால் பூமியில் ஊன்றி உண்டாக்கியதே பொற்றாமரைக் குளம். கோயிலுக்குரிய தீர்த்தங்களில் இது முதன்மையானது. இதனை சிவகங்கை என்றும் அழைப்பார்கள். தேவேந்திரன் தனது சிவபூஜைக்காக பொற்றாமரையைப் பெற்றதும், நக்கீரர் இறைவனை எதிர்த்து வாதிட்டதும் இங்கு தான். அமாவாசை, கிரகணம், மாதப் பிறப்பு ஆகிய நாட்களில் இக்குளத்தில் நீராடி சிவனை பூஜித்து வந்தால் வேண்டியதைப் பெறலாம் என்பது ஐதீகம். 165 அடி நீளமும் 120 அடி அகலமும் உள்ள இக்குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. திருக்குறளின் பெருமையை நிலைநாட்டி சங்கப்பலகை தோன்றிய இடம் இது தான்.
ஆயிரங்கால் மண்டபம் :
கோயிலில் உள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது இந்த மண்டபம் தான். நடுவில் பெரிய நடராஜர் திருவுருவத்துடன் கூடிய இந்த மண்டபத்தில் 985 தூண்களும், 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் 2 உட்கோயில்களும் உள்ளன. இங்கு ஏழிசை எழுப்பக்கூடிய 2 தூண்கள் உள்ளன. வடக்கு ஆடி வீதி கோபுர வாயிலின் அருகே 5 இசைத்தூண்கள் உள்ளன. இந்த மண்டபம் சிற்பக் கலையின் சிறப்புக்களை விளக்கும் ஒரு அருங்காட்சி மண்டபமாக திகழ்கிறது.
அஷ்ட சக்தி மண்டபம் :
மீனாட்சி சன்னதிக்குள் நுழைந்ததும் இருப்பது அஷ்ட சக்தி மண்டபம். 18 அடி அகலமும், 25 அடி உயரமும், 46 அடி நீளமும் உள்ள இந்த மண்டபத்தை அஷ்ட லட்சுமி மண்டபம் என்றும் அழைப்பார்கள். மண்டபத்தில் இருபக்கங்களிலும் நான்கு நான்கு தூண்கள் உள்ளன. எட்டுத்தூண்களிலும் யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி, கவுமாரி, ரவுத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தை கட்டியவர்கள் மன்னர் திருமலைநாயக்கரும், அரசிகளான ருத்திரபதியம்மையும், தோளியம்மையும் ஆவர். பாண்டியன் மகளாக மீனாட்சி பிறப்பதும், முடிசூட்டிக்கொள்வதும், ஆட்சி நடத்துவதும், வீரஉலா செல்வதும், இறைவனை காண்பதும், சோமசுந்தரர் ஆட்சி நடத்துவதும் இம்மண்டபத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. அஷ்ட சித்தி மண்டபத்தை அடுத்துள்ளது இந்த மண்டபம். 110 தூண்கள் உள்ள இம்மண்டபத்தை 1707ல் விஜயரங்க சொக்கநாதநாயக்கரின் அமைச்சரான மீனாட்சி நாயக்கர் கட்டினார்.
முதலிப்பிள்ளை மண்டபம் :
மீனாட்சி நாயக்கர் மண்டபத்தை அடுத்துள்ளது இந்த மண்டபம். 25 அடி அகலமும், 60அடி நீளமும் கொண்ட இந்த மண்டபம் கடந்தை முதலியாரால் 1613 ல் கட்டப்பட்டது. இதில் 1008 விளக்குகள் கொண்ட திருவாச்சி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் மருதுபாண்டியர். இதில் சிவனின் பிட்சாடனர் சிலை மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.
ஊஞ்சல் மண்டபம் :
1563
ல் செட்டியப்ப நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டது ஊஞ்சல் மண்டபம். வெள்ளிதோறும் இங்கு சுவாமி அம்மன் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
கிளிக்கூட்டு மண்டபம் :
ஊஞ்சல் மண்டபத்தை அடுத்து கிளிக்கூட்டு மண்டபம் அமைந்துள்ளது. மீனாட்சி தன் கையில் கிளி ஏந்தியிருப்பதை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மண்டபம் இது. 1623 ல் அபிதாக பண்டாரம் என்பவரால் கட்டப்பட்டது.
ஆறுகால் மண்டபம் :
அம்மன் சன்னதியின் முன் ஆறுகால் மண்டபம் உள்ளது. இதில்தான் குமரகுருபரர் அமர்ந்து மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றினார். மீனாட்சி ஒரு குழந்தை வடிவில் வந்து திருமலை மன்னர் கழுத்தில் கிடந்த முத்துமாலையை எடுத்து குமரகுருபரர் கழுத்தில் போட்டு மறைந்தாள் என்பர்.
திருக்கல்யாண மண்டபம் :
விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் (1706-1732) இந்த மண்டபம் கட்டப்பட்டது. இதைகட்டிய நாயக்கர் இந்த மண்டபத்தில் சிலையாக நிற்கிறார். இந்த மண்டபத்திற்கு மேற்கட்டு, மரசெதுக்கு வேலையை வயிநாகரம் வேங்கடாசலம் செட்டியாரும், நாகப்ப செட்டியாரும் செய்துள்ளனர். இந்த மண்டபத்தில் தான் ஆண்டு தோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. கம்பத்தடி மண்டபம் : சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு எதிரே இம்மண்டபம் உள்ளது. இதனை நந்தி மண்டபம் என்பார்கள். மண்டபத்தின் நடுவே தங்க கொடி மரம், நந்தி பலிபீடம் ஆகியவையும் உள்ளது. இது 1564 ல் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
மூர்த்தி நாயனார் சிறப்பு :
63
நாயன்மார்களில் ஒருவர் மூர்த்தி நாயனார். இவர் மதுரை வணிகர் குலத்தில் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் தினமும் கோயிலுக்கு சந்தனத்தை அரைத்து கொடுக்கும் பணி செய்து வந்தார். ஒரு சமயம் வேற்று நாட்டு மன்னன், பாண்டியனை வென்று ஆட்சியை கைப்பற்றினான். இவன் சைவத்தை வளர விடாமல் பெரும் தொந்தரவு கொடுத்தான். சொக்கநாதருக்கு சந்தனம் அரைக்கும் மூர்த்தி நாயனாருக்கும் சந்தனக்கட்டை கிடைக்காதபடி செய்தான். எனினும் தன் இறைபணியில் தடை ஏற்படாதபடி தன் முழங்கையையே அரைக்க தொடங்கினார். தோல் தேய்ந்து ரத்தம் பீறிட்டு எலும்பும் சதையும் வெளியே தெரிந்தது. இதற்கு மேல் நாயனாரை சோதிக்க விரும்பாத இறைவன், வேற்று நாட்டு மன்னன் வெல்லப்படுவான். நீயே நாட்டை ஆள்வாய் என்று கூறியருளினார். அப்போது ஆண்ட மன்னருக்கு வாரிசு இல்லை. எனவே அரசவழக்கப்படி யானையிடம் மாலை கொடுக்க, அது மூர்த்தி நாயனாரின் கழுத்தில் போட்டது. இவர் பொன்முடி, மணிமாலை இல்லாமல் ருத்திராட்சம், விபூதிப்பட்டை, சடைமுடியுடன் இறைவன் விருப்பப்படி நாட்டை ஆண்டு இறுதியில் சிவனின் திருவடி சேர்ந்தார்.
சித்தர் சிறப்பு :
சிவன் சன்னதியின் சுற்றுப் பிரகாரத்தில் துர்க்கை சன்னதிக்கு அருகில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார் இந்த எல்லாம் வல்ல சித்தர். சிவனே இங்கு சித்தர் வடிவில் அமர்ந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் சிவன் சித்தர் வடிவெடுத்து மதுரையை சுற்றி வந்தார். சித்து விளையாட்டுக்கள் செய்து மக்களை வியப்பில் ஆழ்த்தினார். இதனை கேள்விப்பட்ட அரசன் சித்தரை அரண்மனைக்கு அழைத்து வர சொல்கிறார். ஆனால் சித்தரோ, வேண்டுமானால் அரசன் என்னை இங்கு வந்து பார்க்கட்டும் என்று கூறி விட்டார். மன்னனும் சித்தரை பார்க்க வந்தான். மன்னனின் வருகையை அறிந்தவுடன் சித்தர் கோயிலுக்குள் ஓடி வந்து துர்க்கைக்கு அருகே யோகநிஷ்டையில் அமர்ந்து கொண்டார். அரசனுக்கு இவர் உண்மையிலேயே சித்தர்தானா என்பதில் சந்தேகம் வந்தது. எனவே தன் கையில் உள்ள கரும்பை அங்கிருந்த கல்யானையை தின்னுமாறு செய்ய வேண்டினான். சித்தரும் கல்யானையை பார்த்து கண் அசைக்க கல்யானை கரும்பை தின்றதுடன் மன்னனின் கழுத்தில் இருந்து முத்து மாலையையும் இழுத்தது. பதறிப்போன மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து சித்தரிடம் மன்னிப்பு கேட்டு தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டினான். சித்தரும் அவன் கேட்ட வரத்தை தந்தார். இப்படி எல்லாமே தரக்கூடியதால் இவரை எல்லாம் வல்ல சித்தர் என்று அழைத்தார்கள். சுந்தரானந்தர் சித்தர் என்றும் சொல்வர். இவரிடம் தாங்கள் வேண்டியது நிறைவேறியதும், பூக்கூடாரம் அமைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். மீனாட்சியிடம் கிளி இருப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இந்திரன் சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தபோது இத்தலத்திற்கு வந்தான். அப்போது சொக்கநாதர் லிங்கமாக எழுந்தருளியிருந்த இடத்தின் மேலே பல கிளிகள் வட்டமிட்டபடி அவரது திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு பறந்து கொண்டிருந்தன. இதைக்கண்டு ஆச்சரியமடைந்த இந்திரன், சொக்கநாதரை வணங்கி விமோசனம் பெற்றான். இவ்வாறு இந்திரன் இங்கு சிவவழிபாடு செய்வதற்கு கிளிகள் வழிகாட்டியதன் அடிப்படையில் மதுரை தலத்தில் கிளி முக்கியத்துவம் பெற்று விட்டது. மீனாட்சியம்மன் கோவிலில் தினமும் முதலில் அம்பாளுக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே, சிவனுக்கு பூஜை நடக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இக்கோவிலில் அம்பிகை பதிவிரதையாக எப்போதும் தன் கணவனையே எண்ணிக் கொண்டிருக்கிறாள். திருமணமான பெண்கள், கணவர் எழும் முன்பாகவே எழுந்து நீராடி பின் கணவரை எழுப்ப வேண்டும் என்பர். இதை வலியுறுத்தும் விதமாக, இங்கு மீனாட்சி தன் கணவருக்கு முன்பே குளித்து (அபிஷேகம் செய்யப்பட்டு) தயாராகிறாள். இதன் அடிப்படையில் காலையில் மீனாட்சிக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சிவனுக்கு பூஜை நடக்கிறது.
எட்டு காலம் எட்டு கோலம் :
தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத்தேற்றும் ஜகன்மாதாவாக அவள் திகழ்கிறாள். ஒவ்வொரு நாளும் மீனாட்சியம்மன் பல்வேறு திருக்கோலங்களில் அருள்பாலிப்பதாக ஐதீகம். திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை என தினமும் எட்டுகால பூஜை நடக்கிறது. இந்த எட்டு காலங்களில் முறையே மஹhஷோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி ஆகிய திருக்கோலங்களில் அம்பிகையை பாவித்து வழிபடுவது இத்தலத்திற்கே உரிய ஒன்றாகும். இப்பூஜைகள், திருமலை நாயக்கரின் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தபடி நடந்து வருகிறது. இங்கு காரண, காமிக ஆகமங்கள் பின்பற்றப்படுகின்றன.
சிறப்பம்சங்கள் :
இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் ரஜத (வெள்ளி) சபையாகும். இத்தலத்தில் மட்டும் தான் பாண்டிய மன்னனுக்காக நடராஜர் கால் மாறி இடது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடியுள்ளார்.
மாரியம்மன் தெப்பக்குளத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் 7 அடி உயர முக்குறுணி விநாயகர் இங்கு அருள் பாலித்து வருகிறார்.
ஒரு நாரைக்கு பெருமான் அருளிய வரத்தின்படி பொற்றாமரைக் குளத்தில் மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் இல்லாதிருப்பது இன்றும் ஓர் அதிசயம்.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் அம்மன் சன்னதி நுழைவு வாயிலின் இடது பக்கம் உள்ள சித்தி விநாயகர் சன்னதி விநாயகரின் நான்காவது படை வீடாகும்.
வடகோபுரத்திற்குப் பக்கத்தில் 5 இசைத் தூண்களும், ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத்தரும் சிலைகளும் உள்ளன.
இந்த ஆயிரங்கால் மண்டபம் இங்குள்ள மண்டபங்களில் மிகவும் பெரியது. இங்கு 985 தூண்கள் உள்ளன. நடுவில் பெரிய நடராஜர் திருவுருவம் உள்ளது.
என்றும் இறைப்பணியில் என்றும் உங்கள் அன்புள்ள
https://www.facebook.com/images/emoji.php/v8/f1f/1.5/16/1f6a9.png🚩🕉S.Krishna Kumar 🕉https://www.facebook.com/images/emoji.php/v8/f1f/1.5/16/1f6a9.png🚩
பாரத் மாதா கீ ஜெய்https://www.facebook.com/images/emoji.php/v8/f1f/1.5/16/1f6a9.png🚩🕉