இந்தோனேசியா நாட்டின் தனி இந்து மத தீவாக திகழும் பாலி தீவு!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:52 AM | Best Blogger Tips

உலக முஸ்லீம் மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில் இந்துக்கள் மட்டும் 4.22 மில்லியன் (93%) உள்ளனர். இந்தோனேசியாவில் பரவிக்கிடந்த இந்து மதத்தை இஸ்லாம் அழித்தொழித்த காலகட்டத்தில் தனியொரு மாமன்னனாக இந்து மன்னன் மஜாபகித் பாலித் தீவில் இஸ்லாத்தை புக விடாமல் விரட்டியடித்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பான்மை மதமாக இந்து மதத்தினர் இருந்தே தனி இந்துமத கொள்கை கொண்ட ஆட்சியை நடத்த முடியாத நிலையில் முஸ்லீம் நாடான இந்தோனேசியாவின் பாலி தீவில் இது சாத்தியமானது ஆச்சரியத்தின் உச்சகட்டமே! 
இவர்களைப் பற்றி சில!!!
1. நெய்பி நாள் (Nyepi day) என்ற ஒரு நாளில் ஒட்டுமொத்த தீவே வருடத்திற்கு ஒரு நாள் மெளன விரதத்தை ஆண்டுதோரும் கடைப்பிடிக்கின்றது. அன்று Ngurah Rai International Airport முதல் கொண்டு 6 AM to 6 PM வரை மூடப்படுகின்றது.வாகனம், பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என அனைத்தும் தடை செய்யப்பட்டு மக்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.

இவர்களை போல இரைச்சல் மிகுந்த நம் நாட்டில் இதை கடைபிடிக்க முடியுமா? 
2.
பாலித் தீவிற்கு இந்து மதக் கலாச்சாரம் இந்தியாவிலிருந்து சென்றுள்ளது. இந்து மதத்தின் முக்கிய ரிஷிகள் மற்றும் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள 402 ரிஷி மற்றும் ரிஷிகஷ் அனைவரின் பெயர்களும் அவர்களின் செயல்களைப் பற்றியும் பாலித் தீவின் அனைத்து பள்ளிகளிலும் பொதுப் பாடமாக உள்ளது. புராணங்களில் வரும் மார்கண்டேயன், பரத்வாஜ், அகத்தியர் போன்றவர்களின் வரலாறுகளும் பயிற்றுவிக்கப் படுகின்றது. 
ஆனால் இந்தியாவின் கல்வி நிலையோ ஆங்கிலேயனின் மெக்காலே கல்வித் திட்டத்தை வைத்து பாடம் நடத்துகின்றது.
3. பாலி நாட்டின் அனைத்து ஆண்களும் பெண்களும் பாரம்பரியமிக்க வேட்டி அணிந்து கொண்டே கட்டாயமாக கோவிலுக்குச் செல்ல வேண்டும் அப்படி இல்லையென்றால் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. 
ஆனால் வேட்டியை பாரம்பரிய உடையாக கொண்டுள்ள தமிழர்களும், தென்னிந்தியர்களும் வேட்டி அணிவதை கவுரவக் குறைச்சலாக எண்ணி அதை அணிபவரை பார்த்து சிரிக்கின்றோம். பாரம்பரியத்தை மறந்து !!
4. சமூக, பொருளாதார, அரசியல் என அனைத்து துறைகளிலும் இந்து மதக் கொள்கைபடியும், தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. Tri - nita - karna என்ற 3 நிலைகளை கொண்டுள்ளது.
அவையாவன, 
) கடவுளுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with God)
) மனிதர்களுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with human beings)
) இயற்கையுடன் நமக்கு உள்ள உறவுமுறை (The relationship that we have with nature)
போன்ற இந்து மதக் கொள்கைகளை பாலியின் அனைத்து பள்ளியிலும் ஆரம்ப வகுப்பிலிருந்தே கற்பிக்கின்றனர்.
5. த்ரி கால சந்த்யா (sun worship three times a day) அதாவது இஸ்லாமியர்களின் 5 வேளை தொழுகை போன்றே பாலித் தீவில் அனைத்து பள்ளிகளிலும் வானொலி மூலமாக "காயத்ரி மந்திரம் " மூன்று வேளை இசைக்கப்பட்டு இறை பிரார்த்தனை நடத்தப்படுகிறது.
நாம் வாழும் இந்தியாவிலோ இந்து மாணவ மாணவி பொட்டு, விபூதி அணிய கூட தடை விதிக்கும் அவலநிலை!
6. பாலி நாட்டில் அரிசி உற்பத்தி முதன்மையாக உள்ளது. அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாயப் பொருள்களை அங்குள்ள ஸ்ரீதேவி, பூமாதேவி கோவில்களில் முதல் அறுவடை பொருளை சமர்ப்பணம் செய்கின்றனர்.
7. நம் நாட்டினரைப் போல பாலித் தீவு மக்கள் அச்சில் பதித்த இராமாயணம், மகாபாரதம் படிப்பதில்லை மாறாக பாரம்பரியம் மிக்க பனையோலையில் எழுதப்பட்ட நூல்களை படிக்கின்றனர்.
எந்தவொரு கட்டிடம் கட்டுவதற்கும் முன் பூமி தாயிற்கு கட்டாயமாக பூமி பூஜை செய்யப் படுகின்றது.
இந்து மதத்தை தன் உயிரைவிட மேலாக நினைக்கும் இவர்களின் உறுதியான மனவலிமைக்கு முன் இந்தியாவின் இந்துக்களான நாம் சற்று சறுக்கியே இருக்கிறோம். இந்தோனேசியாவிலிருந்து பாலித் தீவு ஒருவேளை பிரியும் என்றால் இந்நாடே முதல் இந்து நாடாகவும் திகழக்கூடும்.
கடல் கடந்து தூய இந்துவாக வாழும் இவர்களை எண்ணி நாமும் பெருமைப்படுவோம்.!!! இந்துவாய் வாழ்வோம்! இந்து சமுதாயத்தைக் காப்போம்! 
ஹர ஹர மகாதேவா!

 நன்றி இணையம்