இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிந்தால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். காய்ப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும். அதன் பிறகு லேசாக மசாஜ் செய்யவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் மிகச் சீக்கிரமே இடுப்புக் காய்ப்புத் தழும்பு நீங்கி விடும்.
புதினா சாறு, தேன், எலுமிச்சை சாறு மூன்றையும் சம அளவு கலந்து குடிக்க, அஜீரணம் உடனே குணமாகும். எலுமிச்சை பழச்சாறை தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வெள்ளைப் பூண்டின் தோலை நீக்கிய பின், சிறிதளவு பாலில் சேர்த்து நன்றாக காய்ச்சி, ஆற வைத்து குடித்தால் வாயு கரைந்து தொல்லை நீங்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் போட்டு கொதிக்க வைக்கவும். ஆறியபின் வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி இவைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர, நினைவுத்திறன் அதிகரிக்கும்.
பருக்களால் கஷ்டப்படுவோர், தினமும் இளநீரில் மஞ்சள்தூளைக் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் நாளடைவில் பருக்கள் மறையும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் வேப்பிலை, கறிவேப்பிலை இரண்டையும் சம அளவு எடுத்து, நிழலில் காய வைத்து பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் நோய் குறையும்.
திருமணம் போன்ற விசேஷங்களில் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தால் சிலருக்கு வயிற்றுக்குள் ஏடாகூடமாக இருக்கும். உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்பதற்கான அறிகுறிதான் அது. இதுபோன்று ஏற்படும் என்று நீங்கள் முன்கூட்டியே உணர்ந்தால், சாப்பிட்டு முடித்ததும் சிறிய இஞ்சித்துண்டை தோல் நீக்கி கடித்து சாறை விழுங்கவும். அந்த ஏடாகூட வயிற்றுப் பிரச்சினை பறந்தே போய்விடும்.
இதுபோல், வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை நிறுத்தவும் சிறிய இஞ்சித் துண்டை சிறிது உப்புடன் சேர்த்து சாப்பிடவும். அப்படி சாப்பிட்டால் எப்படிபட்ட குமட்டலும் உடனே அமைதியாகிவிடும்.
சமையல் செய்யும்போது கொஞ்சம் கவனம் சிதறிவிட்டாலும், அடுப்பில் சூடாக இருக்கும் பாத்திரத்தில் கையை வைத்து சூடு வாங்கிக்கொள்ள நேரிடும். அப்படி சூடு வாங்கிக்கொண்டால், உடனே அந்த இடத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுங்கள். அப்படிச் செய்வதால் சூடு பட்ட இடத்தில் கொப்புளம் போன்ற பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.