நீண்ட நேர கணினி பயன்பாட்டினால் ஏற்படும் சிரமங்கள். (கட்டாயம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டியவை)

மணக்கால் அய்யம்பேட்டை | 5:02 PM | Best Blogger Tips



(நீங்கள் உங்கள் கண்ணைப் போல அடுத்தவரது கண் தொடர்பிலும் அக்கறை கொண்டவராயின் படித்த பின் பகிரவும்.)

இடைவெளியின்றி ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கணினியைப் பார்த்து உபயோகிக்கும் பலருக்கு உடலிலும், கண்களிலும் ஏற்படும் சிரமமே 'Computer Vision Syndrome' என்றழைக்கப் படுகிறது. கணினியில் ஒரு நாளில் மூன்று மணி நேரமும், அதற்கு மேலும் தொடர்ந்து வேலை செய்பவர்களில் 90% சதவிகிதத்தினர்க்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

உடலில் சோர்வு, பின் கழுத்து, முதுகு மற்றும் தலை வலி, கைகள், மணிக்கட்டு மற்றும் தோள் பட்டை வலி ஆகிய நோய்க்குறிகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும், கண் இமைகள் சிமிட்டல் குறைவதாலும் கண்கள் உலர் தன்மை அடைகிறது. இதனால் கண்களில் உறுத்தல், எழுத்துக்கள் இரண்டாகவும், பலவாகவும் தெரிதல் மற்றும் பார்வை தெளிவற்றும் தோன்றுகின்றன.

இந்த சிரமங்களுக்கான காரணங்களை இதோ அறிந்து கொள்ளுங்கள். தகவல் அறிய > http://anasgrafix.blogspot.com/2013/04/blog-post_11.html