வால்மீகி ராமாயணம் பிறந்த கதை.

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:53 | Best Blogger Tips

வால்மீகி ராமாயண பாராயணத்துக்கு முன்பாக சொல்லப்படும் த்யான ச்லோகங்கள். இதில் பிள்ளையார், சரஸ்வதி தேவி, வால்மீகி முனிவர், ஹனுமார், ...ராமாயணம், சீதா சமேத ஸ்ரீ ராமர் பற்றிய ச்லோகங்கள் உள்ளன.

வால்மீகி ராமாயணத்தை ஏன் அடிக்கடி கேட்க வேண்டும்? காதுகள் என்கிற மடல்களில், வால்மீகி முனிவரின் முகம் என்கிற தாமரையில் இருந்து வெளிப்பட்ட ராமாயணம் என்னும் தேனை அடிக்கடி வாங்கி, விருப்பத்தோடு குடிப்பவர்கள், உபத்ரவம் மிகுந்த ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு சாஸ்வதமான விஷ்ணு பகவானின் பதத்தை அடைவார்கள்.

வழிப்பறிக் கொள்ளைக்காரன் வால்மீகி முனிவராக ஆனதெப்படி?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்.

இந்த உலகில் ‘சத்யம், தர்மம், அழகு, படிப்பு, வீரம், ஒழுக்கம் என்று எல்லா நல்ல குணங்கள் கொண்ட மனிதன் யாரேனும் உண்டா?’ என்று வால்மீகி முனிவர் கேட்க, நாரத பகவான் ‘உண்டு. அவர் தான் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத குமாரர் ஸ்ரீராமர்’ என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை சுருக்கமாக நூறு சுலோகங்களில் உபதேசித்தார். இது ஸங்க்ஷேப ராமாயணம் எனப்படும் வால்மீகி ராமாயணத்தின் முதல் ஸர்கம்.

வால்மீகி முனிவர் தமஸா நதியில் ஸ்நானத்திற்கு செல்கிறார். வழியில் வேடன் ஒருவன் அம்பால் ஒரு பக்ஷியை அடித்ததைப் பார்த்து சோகத்தால் அவர் சொன்ன வார்த்தைகள் அனுஷ்டுப் சந்தத்தில் ஒரு ஸ்லோகமாக வெளிப்படுகிறது. வியப்படைந்த முனிவருக்கு பிரம்மதேவர் தர்சனம் தந்து, நாரதர் சொன்ன ராம சரிதத்தை, அனுஷ்டுப் சந்தத்தில் ஸ்லோகங்களாக இயற்றி விஸ்தாரமாக, ஒரு காவியமாக பாடும்படி அநுக்ரகம் செய்தார்.

வால்மீகி முனிவர் தாம் மனக்கண்ணில் கண்ட வண்ணம் ராமாயணத்தை 24000 சுலோகங்களில் இயற்றி முடிக்கிறார். முடித்தவுடன் வந்து வணங்கிய லவ குசர்களுக்கு அதைக் கற்றுத் தருகிறார். அவர்கள் அதை மற்ற முனிவர்களுக்கும் பின்னர் அஸ்வமேத யாக மண்டபத்தில் ஸ்ரீராமருக்குமே பாடிக் காண்பித்தார்கள்.