மனைவியின் அருமை

மணக்கால் அய்யம்பேட்டை | 3:31 PM | Best Blogger Tips
old age hindu husban wife tamilnadu க்கான பட முடிவுold age hindu husban wife tamilnadu க்கான பட முடிவு
தொடர்புடைய படம்old age hindu husban wife tamilnadu க்கான பட முடிவு

பொறுமையாக இதை படிக்க முடிந்தால் வாழ்க்கையில் உங்களால் கடைபிடிக்கவும் முடியும்.

மனைவியின்_அருமை...

♥திருமணமாகி 35வருடங்கள் அவருக்கு 61வயது. கடந்த மாதம் ஓய்வபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.
♥வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிறில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது.. கடுமையா உழைத்து குடும்பத்தை பார்த்தார்...
♥இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது.. வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...
♥வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியை கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தால்...
வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..
old age husban wife tamilnadu க்கான பட முடிவு

♥ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டு பேசி எவ்ளவு காலமாச்சு...

♥அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. அம்மு என்னது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்துவரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...


♥அவள் மெல்லிய சிரிப்புடன்
நா எதை என்னவென்று சொல்ல.. 35 வருசதில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி எதேதோ நடந்திருக்கும்... என்றால்... மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...


♥என்னம்மு சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்ள பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...


♥நீங்க என்னய வண்டில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனன் கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...

♥இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே.. அம்மு...

♥நா சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நா சொன்னா கூட நீங்க என்னய தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்

♥என் கண்களில் கூட படலயே அம்மு இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த குரலில்..

♥என்னை நீங்க அருகில சந்திக்கிறதே இரவு இருட்டில தானே அதுகூட சில நிமிடம்தான்
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள்
உங்களுக்கு தெரியும் என்றாள்...

♥அம்மு... அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நா இப்படி ஓடாய் உழைத்தேன் பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினன்.. உன்னயும் ஒரு குறயும் இல்லாம பார்த்தன்... என்றார்..


♥உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...
♥என்னய மன்னிச்சிடு அம்மு... பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...


♥எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேக்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...
♥கேளு அம்மு... என்றார்

♥நாம திருமணமான புதிதில சில நாட்கள் நா உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையனிலதான் நாம தலை வைத்து படுத்திருக்கம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என அம்மு கேக்க அவருக்கும் அம்முக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.

♥மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....


♥இதே போல்தான் பெரும்பாளும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...


♥எத்தனை கணவன் மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேக்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...
♥ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...

அவளின்_மனக்காயம்_வெளிவரும்..Image may contain: 1 person, tree, outdoor, nature and water


நன்றி இணையம்


முடிவெடுக்கும் முன்னே

மணக்கால் அய்யம்பேட்டை | 3:05 PM | Best Blogger Tips
முடிவெடுக்கும் முன்னே க்கான பட முடிவு

முடிவெடுக்கும் முன்னே ஒரு அழகான கதை
ஒரு நாட்டின் ராஜாவுக்கு ஒருநாள் சிந்தனை ஒன்றுத் தோன்றியது , அதாவது தனது வாழ்வில் துன்பத்தினால் இறுதியை அடைந்த ஒருவனுக்கு , அவனைக் காப்பாற்றக் கூடிய ஒரு மந்திரம் எதுவாக இருக்கும் ? என்பதே அந்த சிந்தனை .

மன்னனும் எவ்வளவோ முயன்றும் அப்படி ஒரு மந்திரம் என்னவென்றுத் தெரியவில்லை , உடனே நாட்டு மக்களுக்கு பறையறிவிக்கச் சொன்னான்.

வாழ்வின் துன்பத்தில் சிக்கி இறுதி நாளில் இருக்கும் ஒருவனை காப்பற்றக் கூடிய மந்திரத்தினைசொல்பவருக்கு தனது நாட்டில் ஒரு பகுதியைத் தருவதாக அறிவித்தான் .
நிறைய பேர் தினமும் வரத் துவங்கினார்கள் .

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மந்திரங்களைச் சொன்னார்கள் .
நமசிவாய என்றார் ஒருவர் .
ஓம் சக்தி என்றார் மற்றவர் .
உன்னையே நம்பு என்றார் இன்னொருவர்.
ஆனால் மன்னன் திருப்தியாகவில்லை .

எல்லோர் சொன்னதையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி மறுத்தான் , அவர்களின் பதிலில் அவன் மனம் ஏனோ சமாதானமாகவில்லை .

இந்நிலையில் ஒருநாள் மன்னனைக் காண ஒருவன் வந்தான் .
அவன் மன்னனிடம் ஒரு மோதிரம் தந்துமன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தைத் திறந்துப் பாருங்கள் , அதுவரை இதனைப் பார்க்க வேண்டாம்”, பின்னொருநாளில் நான் தங்களைச் சந்திக்கின்றேன் என்று சொல்லி மோதிரத்தை மிகவும் பவ்யமாக மன்னனிடம் தந்து விட்டுச் சென்றான்.
மன்னனுக்கு அந்த மனிதனின் சொல்லும் செயலும் ஒருவிதமான நம்பிக்கையும் , எதிர்பார்ப்பையும், மன அமைதியையும் தந்தது .

இந்தச் சம்பவத்திற்கு பின் மன்னன் இதனை மறந்தே போனான் .

சில வருடங்களுக்குப் பின்

திடீர் என இந்த மன்னனுக்கும் வேறு நாட்டு மன்னனுக்கும் போர் மூண்டது.

போருக்கு தயார் நிலையில் இல்லாததால் இந்த மன்னன் தோற்றுப் போனான்.

நாடு, மனைவி, மக்களை இழந்த மன்னன் மிகவும் மனம் தளர்ந்து தன் வாழ்வினை முடித்துக் கொள்ள எண்ணினான் . தப்பித்து உயிர் பிழைத்த தன் நிலையை எண்ணி எண்ணி மனம் சஞ்சலமான மன்னன் , தூரத்தில் ஒரு மலையினைக் கண்டான் .

இந்த மலையில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொள்ள தீர்மானித்த அந்த மன்னன் அந்த மலையின் மீது ஏறினான் .

தட்டுத் தடுமாறி மலையின் உச்சியை அடைந்த மன்னன் , இறைவா, என்னை ஏற்றுக் கொள் என்று வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்தி விண்ணைப் பார்த்து உரக்கக் கூவினான் .

அப்போது அவன் கையில் இருந்த மோதிரம் சூரிய ஒளியில் மின்னியதைக் கண்டான்.

உடனே , அவன் மனதில் அந்த மோதிரத்தைக் கொடுத்த மனிதன் சொல்லிய வார்த்தைகள் ஒலித்தன.

மன்னா , நீங்கள் எந்த குறையுமின்றி நீடுழி வாழ வேண்டும் , ஒருக்கால் நீங்கள் சொன்னது போல ஒரு நிலை உங்களுக்கு வருமானால் அன்றைய தினம் இந்த மோதிரத்தைத் திறந்து பாருங்கள் , அதுவரை இதனைப் பார்க்க வேண்டாம்
இப்போது அது போன்ற நிலை தானே அதில் என்ன தான் உள்ளது என்றுப் பார்ப்போம் , என்று தற்காலிகமாக கீழே விழுந்து மரணிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு அமர்ந்து அந்த மோதிரத்தை திருப்பி உள்ளே என்ன இருக்கின்றது எனப் பார்த்தான்.

மோதிரத்தின் உள்ளே ஒரு சிறிய காகிதம் ஒன்று சுருட்டி வைக்கப்பட்டிருந்தது , அதனை மிகவும் ஜாக்கிரத்கையாக எடுத்துப் பார்த்தான் ,

ஒரே ஒரு வாசகம் ஒரே ஒரு வரியில் எழுதப்பட்டிருந்தது .
அந்த வாசகம் இது தான்

இந்த நிலை மாறும்

அர்த்தமுள்ள இந்து மதம்

அவ்வளவு தான்

வேறொன்றும் இல்லை , முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்த மன்னன் ஏதும் காணாததால் அந்த வாசகத்தினைப் பற்றி யோசித்தான் .

தான் தற்போது உள்ள நிலை மாறும் , இதற்காக தற்கொலை செய்துக் கொள்ளும் அளவிற்கு வந்து விட்டோமே என்று எண்ணி மனதினை தைரியப்படுத்திக் கொண்டு மன்னன் மலையிலிருந்து கீழே இறங்கினான்.

தனது ஆதரவாளர்களைக் தேடிக் கண்டுப்பிடித்தான் , கிராமங்களில் வாழும் மக்கள் தங்களது மன்னனைக் கண்டதும் மகிழ்ந்து கொண்டாடினார்கள் . இளைஞர்களை ஒன்று திரட்டி படைகளை உருவாக்கினான்.

அரண்மனையில் இருந்த அவனது பழைய படைவீரர்களின் ரகசிய ஒத்துழைப்போடு, எதிர்பாராமல் திடீரென்று அரண்மனையின் ரகசிய வாசல் வழியாக உள்நுழைந்து எதிரி நாட்டு மன்னனை அதிரடியாக கைது செய்து சிறையிலடைத்து மீண்டும் மன்னன் ஆனான்.

மீண்டும் மன்னன் ஆட்சியில் அமர்ந்ததும் மக்கள் மிகவும் ஆனந்த வசமானார்கள்.

இந்நாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய மன்னன் , இந்த வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த மோதிரம் கொடுத்த மனிதனைப் பறையறிவித்து வரவழைத்தான் .

நாடு முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது , அரண்மனையில் மக்கள் கூட்டம் , அரியணையில் மன்னன் , அருகில் மகாராணி , மன்னனின் குழந்தைகள் , மந்திரி , பிரதானிகள், ஆடல் பாடல் என்று எங்கும் சந்தோஷ வெள்ளம் அலை பாய்ந்து கொண்டிருந்தது .

மோதிரம் கொடுத்த மனிதன் வந்தான் , மன்னனைத் தாழ்ந்து பணிந்தான். மன்னன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வரவேற்றான்.

தான் அறிவித்திருந்த படி பாதி நாட்டினை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் மன்னன்.

மன்னா, நாட்டினை ஆளும் தகுதி கொண்டவர் தாங்கள் மட்டும் தான், எனக்கு எதுவும் வேண்டாம் என்று பணிவோடு சொன்னான் அந்த மனிதன் .

மன்னன் எவ்வளவோ மன்றாடியும் எதனையும் ஏற்க மறுத்தான் அந்த மனிதன் .

இறுதியாக மன்னன் சொன்னான் , அன்பரே , நீங்கள் ஏதேனும் என்னிடம் இருந்து பெற விரும்பினால் தயங்காமல் கேளுங்கள் .

அந்த மனிதன், மன்னா , “வாழ்வின் மிக அதிக சந்தோஷத்தின் உச்சாணியில் தாங்கள் தற்போது அமர்ந்துள்ளீர்கள் என்பது உண்மை தானே
மன்னன் : “ஆமாம் அது உண்மை தான் அன்பரே
அப்படியானால் அந்த மோதிரத்தினை இப்போது எடுத்துப் பாருங்கள் என்றான் அந்த மனிதன் .

ஏன் என மன்னன் வினவ , எடுத்துப் பாருங்களேன் என்றான் அந்த மனிதன்.

சரி என சொல்லிய மன்னன் , தனது விரலில் இருந்த , மோதிரத்தினை எடுத்து உள்ளிருக்கும் அந்தச் சிறிய காகிதத்தைப் பிரித்துப் பார்த்தான்.

அதில் அந்த மந்திர வாசகம் தெரிந்தது .

இந்த நிலை மாறும்

இது தான் மன்னா வாழ்க்கை , இந்த நிலை மாறும், எனவே எதிலும் கவனமாகவும் சந்தோஷமாகவும் இருங்கள் , நான் வருகின்றேன் என்று அவையோரை பணிந்து மன்னனிடமிருந்து விடை பெற்றான் அந்த மனிதன் .

நெஞ்சம் தழுதழுக்க அவன் செல்லும் திசையைப் பார்த்து வணங்கி நின்றான் மன்னன்.

தான் இழந்த வாழ்வை மீட்டுத் தந்த மந்திரம் தந்தவனல்லவா இந்த மனிதன்

ஆனால் எந்த முடிவெடுக்கும் முன்னரும் இந்த மந்திர வாசகம் நினைவில் வரட்டும்.

இந்த நிலை மாறும்

அனைவரும் வளமோடு வாழுங்கள் , வாழும் நாளெல்லாம்
நான் படித்ததில் ரசித்தது

Image may contain: 1 person, sunglasses and outdoor
 நன்றி இணையம்