இன்டர்நெட் கனெஷனும் பிரச்சனைகளும்!!!! அவசியமான தகவல் பகிருங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:01 AM | Best Blogger Tips
இன்டர்ெநட் கனெஷனும் பிரச்சனைகளும்!!!! அவசியமான தகவல் பகிருங்கள்
 ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
 இன்டர்நெட் கனெக்ஷனும் வயதுப் பையன்களும் இருக்கிற வீடுகளில் இப்போது இது ஒரு பெரிய பிரச்னை. மெயிலில் தகவல் பரிமாறிக்கொள்ள, இடிக்கெட் புக் பண்ண, ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ண என பல வசதிகளுக்காக இன்று இணையம் அவசியப்படுகிறது. அதேநேரம் அதனுள்ளேயே இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என தொந்தரவுகள்.

 இவற்றைத் தடுக்க எல்லா கணினிகளிலுமே ‘ஃபயர்வால்’ என்ற ஒரு அம்சம் உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே அனுமதித்து, மற்ற அணுகுதல்களைத் தடுத்து விடும் செட்டப் இது. நம் கணினியில் அமைந்துள்ள ஃபயர்வால், அத்தனை வீரியமுள்ளதாய் இல்லையெனில், தனியாகக் கிடைக்கும் ஃபயர்வால் மென்பொருட்களையும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். இவை, கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 தவிர, இன்று ஏகப்பட்ட சைஃபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் இந்தப் பணியைச் செய்துதரக் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தேவையான கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்களை அவர்களே உங்கள் கணினியில் நிறுவித் தருவார்கள். இப்படிப்பட்ட மென்பொருட்கள் இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை நீங்களே நிறுவிப் பரிசோதிப்பது உங்கள் தொழில்நுட்ப அறிவைப் பொறுத்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எல்லாவற்றையும் ஏமாற்றி ஆபாசத் தளங்களைப் பார்க்க முடியும் என்பதால், உங்கள் மகனின் நடவடிக்கை மீது ஒரு கண் வைப்பதும், எப்போதும் ஆள் இருக்கும் வரவேற்பறை போன்ற இடத்துக்கு கணினியை இடம் மாற்றுவதும் நல்ல பலனைத் தருமஇன்டர்நெட் கனெக்ஷனும் வயதுப் பையன்களும் இருக்கிற வீடுகளில் இப்போது இது ஒரு பெரிய பிரச்னை. மெயிலில் தகவல் பரிமாறிக்கொள்ள, இடிக்கெட் புக் பண்ண, ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ண என பல வசதிகளுக்காக இன்று இணையம் அவசியப்படுகிறது. அதேநேரம் அதனுள்ளேயே இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என தொந்தரவுகள்.

இவற்றைத் தடுக்க எல்லா கணினிகளிலுமே ‘ஃபயர்வால்’ என்ற ஒரு அம்சம் உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே அனுமதித்து, மற்ற அணுகுதல்களைத் தடுத்து விடும் செட்டப் இது. நம் கணினியில் அமைந்துள்ள ஃபயர்வால், அத்தனை வீரியமுள்ளதாய் இல்லையெனில், தனியாகக் கிடைக்கும் ஃபயர்வால் மென்பொருட்களையும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். இவை, கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தவிர, இன்று ஏகப்பட்ட சைஃபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் இந்தப் பணியைச் செய்துதரக் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தேவையான கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்களை அவர்களே உங்கள் கணினியில் நிறுவித் தருவார்கள். இப்படிப்பட்ட மென்பொருட்கள் இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை நீங்களே நிறுவிப் பரிசோதிப்பது உங்கள் தொழில்நுட்ப அறிவைப் பொறுத்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எல்லாவற்றையும் ஏமாற்றி ஆபாசத் தளங்களைப் பார்க்க முடியும் என்பதால், உங்கள் மகனின் நடவடிக்கை மீது ஒரு கண் வைப்பதும், எப்போதும் ஆள் இருக்கும் வரவேற்பறை போன்ற இடத்துக்கு கணினியை இடம் மாற்றுவதும் நல்ல பலனைத் தரும். 

Via FB சுபா ஆனந்தி

தமிழ்நாடு இழந்த பகுதிகள்! அதிர்ச்சியான வரலாறு !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:00 AM | Best Blogger Tips
தமிழ்நாடு இழந்த பகுதிகள்! அதிர்ச்சியான வரலாறு ! 

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது

'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத் தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.

அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.

நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.

முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.

அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.

வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.

அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.

மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.

அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.

தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).

ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.

தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.

தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.

பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.

இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.

இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...

இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.

பவானி நதிப் பிரச்சினை கிடையாது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.

சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.

எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.

கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.

சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.

1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.

இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.

ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?

வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.

வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.

1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.

சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.

இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.

காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.

கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.

பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-

பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.

தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.

இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.

நன்றி : கருப்பு ரோஜாக்கள் (இந்நேரம்.com)

14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:43 AM | Best Blogger Tips
14 நூற்றாண்டுகால அதிசயமாக விளங்கும் சூரிய ஒளிக் கடிகாரம்!

காலம் எதற்காகவும், யாருக்காகவும் நிற்பதில்லை... 

ஆனால், காலத்தால் அழியாத படைப்புகள்... 

பன்னெடுங்காலத்திற்கும் பெருமையை பறைசாற்றி வருகின்றன. 

அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஒன்றில், சூரிய ஒளியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமான விஷயமாக இருந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவயோகிநாதர் சிவன்கோவிலின் சுற்றுச்சுவரில் இந்த சூரிய ஒளி கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 1400 ஆண்டுகால பழமையான கோவிலில் உள்ள இந்த கடிகாரத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆணி, சூரிய ஒளியில் பட்டு நிழலாக விழுகிறது.

இந்த நிழல் விழும் பகுதிகள் காலை சூரியன் உதிக்கும் 6 மணி முதல் மாலை சூரியன் மறையும் 6 மணி வரை ஒவ்வொரு மணிநேரத்தையும் துல்லியமாக காட்டுகிறது.தவறாமல் காலம் காட்டும் இந்த கடிகாரம் எதிர்காலத்திலும் காலம் காட்ட தமிழக அரசு பாதுக்காக்க வேண்டும்.

Via FB தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture
 
தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி ..

மணக்கால் அய்யம்பேட்டை | 1:39 AM | Best Blogger Tips

பிராமணர்கள் தமிழர்களே கிடையாது, தமிழுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல பலர் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் வளர்த்த பிராமணர்கள் பற்றி கொஞ்சமேனும் நினைவு கொள்வது நம் வரலாற்றறிவுக்கு நல்லதல்லவா!

சங்ககாலம்

1. அகஸ்தியர்
2. தொல்காப்பியர் (காப்பியக்குடி என்னும் கபிகோத்திரத்தார்)
3. ஜயன் ஆரிதனார் (ஹரித கோத்திரத்தார்)
4. கபிலர்
5. கள்ளில் ஆத்திரையனார் (ஆத்ரேய கோத்திரத்தார்)
6. கோதமனார்
7. பாலைக் கெளதமனார்
8. ஆமூர்க் கெளதமன் சாதேவனார் (கெளதம கோத்திரம்)
9. பிரமனார்
10. மதுரை இளங்கண்ணிக் கெளசிகனார் (கெளசிக கோத்திரம்)
11. மதுரைக் கெளணியன் பூதத்தனார் (கெளண்டின்ய கோத்திரம்)
12. மாமூலனார்
13. மதுரைக் கணக்காயனார்
14. நக்கீரனார்
15. மார்க்கண்டேயனார்
16. வான்மீகனார்
17. கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட்டினப்பாலை)
18. வேம்பற்றூர்க் குமரனார்
19. தாமப் பல்கண்ணனார்
20. குமட்டுர்க் கண்ணனார்

இடைக்காலம்

21. மாணிக்கவாசகர்
22. திருஞானசம்பந்தர்
23. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
24. பெரியாழ்வார்
25. ஆண்டாள்
26. தொண்டரடிப்பொடியாழ்வார்
27. மதுரகவி
28. நச்சினார்க்கினியர் (பாரத்துவாசி)
29. பரிமேலழகர்
30. வில்லிபுத்தூரார்
31. அருணகிரிநாதர்
32. பிள்ளைப் பெருமாளையங்கார்
33. சிவாக்ரயோகி
34. காளமேகப் புலவர்

பிற்காலம்

35. பெருமாளையர்
36. வீரை ஆசுகவி (செளந்தர்யலகரி மொழி பெயர்த்தவர்)
37. வேம்பற்றூரார் (பழைய திரவிளையாடலாசிரியர்)
38. நாராயண தீக்ஷிதர் (மகரநெடுங்குழைக்காதர் பாமாலை)
39. கோபாலகிருஷ்ண பாரதியார்
40. கனம் கிருஷ்ணையர்
41. அரியலூர்ச் சடகோப ஐயங்கார்
42. கஸ்தூரி ஐங்கார் (கார்குடி)
43. சண்பகமன்னார்
44. திருவேங்கட பாரதி (பாரதி தீபம் நி கண்டு)
45. வையை இராமசாமி சிவன் (பெரியபுராணக் கீர்த்தனைகள்)
46. மகாமகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்
47. சுப்ரமண்ய பாரதியார்
48. பரிதிமாற் கலைஞர் (வி.கோ.சூ)
49. சுப்பராமையர் (பதம்)
50. முத்துசாமி ஐயங்கார் (சந்திரா லோகம்)
51. ரா.ராகவையங்கார்
52. பகழிக் கூத்தார்
53. வென்றிமாலைக் கவிராயர்
54. வேம்பத்தூர் பிச்சுவையர்
55. கல்போது பிச்சுவையர்
56. நவநீதகிருஷ்ண பாரதியார்
57. அனந்தகிருஷ்ணஐயங்கார்
58. திரு, நாராயணசாமிஐயர்
59. மு.ராகவையங்கார்
60. திரு. நா.அப்பணையங்கார்
61. வசிஷ்டபாரதி (அந்தகர்)
62. கவிராஜ பண்டித கனகராஜையர்
63. பின்னத்தூர் அ.நாராயணசாமிஐயர்
64. ம.கோபலகிருஷ்ணையர்
65. இவை.அனந்தராமையர்
66. நா.சேதுராமையர் (குசேல வெண்பா)
67. கோவிந்தையர் (மாணிக்கவாசகர் வெண்பா)
68. வ.வே.சு.ஐயர்
69. கி.வா.ஜகந்நாதையர்
70. அ.ஸ்ரீநிவாசராகவன்
71. ஸ்வாமி சாதுராம்
72. திராவிடகவிமணி வே.முத்துசாமி ஐயர்.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

வளம் தரும் விரதங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:36 AM | Best Blogger Tips

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம்" என்பது சித்தர் பெருமகனார், ஆசான் திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர்.

மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது.

நோன்பை அறிவுறுத்தும் மதங்கள்

அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.

இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும்.

இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன.

விரதத்தின் பலன்கள்

விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை.

உடல் உறுப்புக்கள் தூய்மை

நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது.

நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன.

உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன.

இளமை பாதுகாக்கப்படும்

வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது.

நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன.

மாரடைப்பு தடுக்கப்படும்

வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

விரத்தை யார் தவிர்க்க வேண்டும்?

நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும்.
 
Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism

சித்தர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:33 AM | Best Blogger Tips

சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும்.

இதை ஒளவையார் `எறும்பும் தன் கையால் எண் சாண்' என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்கடைபபிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. இச்செயல்களை மருத்துவக் கண்ணோட்டமுள்ளவர்கள் அறிவர்.

இன்று நவீன மருத்துவ முறையில் உடற்கூற்றுத் தத்துவங்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச்சித்தர்கள் இத்தத்துவங்களை தன் உடலையே சோதனைச்சாலையாக்கி அறிந்து, ஆன்மீகப்பெயர்களில் இவற்றை அழைத்துள்ளனர். மனித உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் பகுத்தனர்.

சித்தர்கள் குறிப்பிடும் இந்த 96 தத்துவங்களில் (உடலின் வேதியியலில்) ஏதாவது மாற்றம் ஏற்படின் நோய் ஏற்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் இயக்கம் பாதிக்கும். உதாரணமாக நீர் ஒருவர் உடலிலிருந்து அதிகமாக வெளியேறக் கூடாது. வெப்பம் அளவாய் இருக்க வேண்டும். அது போல் நாடிகள் சர்வர இயங்க வேண்டும்.

இதுதவிர, மூச்சு விடும் அளவிலும் ஒழுங்குமுறை இருக்கவேண்டும். மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை 21600 என்றும் இது கூடுவதும் குறைவதும் என்று நிலை மாறினால் ஆயுள் குறையும் என்றும் , 21600 முறை தினமும் மூச்சுவிடக்கூடிய மனிதன்1 120 ஆண்டுகள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் கணித்துள்ளனர்.

முறையற்ற வாழ்க்கைப்போக்கை மேற்கொள் பவர்களுக்கு சுவாசம் அதிகரித்து ஆயுள் குறைகிறது என்கிறார் திருமூலர்( திருமந்திரம்729). முறையான மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு நடுமூச்சைச்சார்ந்து சுவாசிக்கக் கற்றால் 166 ஆண்டுகள் வரையிலும் வாழலாம் என்கிறார் இப்பாடலில்.

முதுமையில் அல்லது நோயினால் இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு மரணம் எத்தனை நாட்களுக்குள் ஏற்படும் என்பதையும் துல்லியமாகக் கணித்துள்ளனர். மற்றவர் புருவத்தைப் பார்த்தால் தெரியாதவர்களுக்கு 9 நாளிலும்,காது கேட்காவிட்டால் 7 நாளிலும்,நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு 5 நாளிலும்,மூக்குநுனி தெரியாதவர்களுக்கு 3 நாளிலும், இரண்டு கண்களையும் கையால் அமுக்கினால் கண்ணீர் வராதவர்களுக்கு 10 நாளிலும் மரணம் வரலாம் என்கிறார்கள் சித்தர்கள்.

சித்தர்கள் ஆன்மீகவாதிகள் போல வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் உண்மையில் அவர்கள் விஞ்ஞானிகளே. மெய்ஞானத்தோடு இணைத்து உடல்அறிவியலை எளிய மக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்துள்ளார்கள். உயிரினங்கள் ஒரு நிமிடத்திற்கு விடும் மூச்சு அளவு.

தேரை (11) (நிமிடம்) 500-1000 வாழும் ஆண்டு
திமிங்கிலம் (34) 200-250 வாழும் ஆண்டு
ஆமை (45) 150-155 வாழும் ஆண்டு
யானை (11-12) 100-120 வாழும் ஆண்டு
பாம்பு (78) 126-130 வாழும் ஆண்டு
குரங்கு (31-32) 20-30 வாழும் ஆண்டு
முயல் (38-39) 810 வாழும் ஆண்டு
பண்டையமனிதர் (12-13) 100-120 வாழும் ஆண்டு
இக்காலமனிதர் (1617) 60-80 வாழும் ஆண்டு.

உலக சித்தர்கள் நாள்..........

உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதலாவது உலக சித்தர்கள் தினம் 2009 ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. 2வது உலக சித்தர்கள் நாள் 2010 ஏப்ரல் 14 இல் சென்னை, அடையாறில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 2000 இற்கும் அதிகமான சித்த மருத்துவர் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மூன்றாவது சித்தர்கள் நாள் கேரளாவில் திருவனந்தபுரத்தில் 2011 ஏப்ரல் 14, 15 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது.
 
 Via FB ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய

மணக்கால் அய்யம்பேட்டை | 1:26 AM | Best Blogger Tips
ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய 
 ○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
 ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .
 உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .
 ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?
 அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் . அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள

○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○○
ருத்ராட்ச மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .
உங்கள் இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் , லேசாக வைத்திருங்கள் . அது யோகத்தில் ஒரு முத்திரை . அப்போது ருத்ராட்சமாலையை விரலின் முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .
ஓர் ஆச்சர்யம் நிகழும் . ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் . அது யோகத்தை முறித்தல் நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச் செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை . முனிவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?
அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள் இருப்பார்கள் . கிடைத்ததைச் சாப்பிடுவார்கள் . அப்போது அது நல்ல உணவா , கெட்ட உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது நல்ல உணவாக இருந்தால் மாலை கடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக் கண்டுகொள்வார்கள.
 
Via FB சுபா ஆனந்தி
 
அட்ட மூர்த்தங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:15 AM | Best Blogger Tips

நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக சிவபெருமான் இருக்கிறார். அதனால் அவர் அட்டமூர்த்தி என்று அழைக்கிறார்கள். அவ்வாறான எண் பொருளாக சிவபெருமான் இருக்கும் தலங்கள் அட்ட மூர்த்தர்கள் என்று அழைக்கப்பெறுகின்றன.
நிலம் - திருவாரூர்
நீர் - திருவானைக்கா
தீ - திருவண்ணாமலை
காற்று - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
சூரியன் - திருச்சிராப்பள்ளி
சந்திரன் - மதுரை
ஆன்மா - திருப்பெருந்துறை

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:15 AM | Best Blogger Tips

முக்தி தரவல்ல தலங்கள் என்று நான்கு சிவாலய தலங்கள் உள்ளது. அந்த தலங்கள் அமைந்துள்ள இடங்கள்

திருவாரூர்-பிறக்க முக்தி தருவது
சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது
திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது

பஞ்சபூத சிவத்தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 AM | Best Blogger Tips
பஞ்சபூத சிவத்தலங்கள்
உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. மண், நீர், தீ, வளி,வான், என்பன ஐம்பூதங்கள். இவை பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் கூறப்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும்.(அடைப்புக் குறிக்குள் வடமொழிப்பெயர்)

மண் (பிருத்திவித்தலம்) - காஞ்சிபுரம், திருவாரூர், (திரு + ஆர் + ஊர் ; ஆர் = மண்)

நீர் (அப்புத்தலம்) -திருவானைக்கா திருச்சிராப்பள்ளி

தீ (தேயுத்தலம்) - திருவண்ணாமலை

வளி (வாயுத்தலம்)- திருக்காளத்தி

வான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:12 AM | Best Blogger Tips
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர். 

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network 
Associate Security),

OCJP (Oracle Certified Java 
Professional).

CCNAவில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

வேண்டுகோள்:

1) ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!

தகவலுக்கு நன்றி  -அம்மு குட்டி

Via FB இன்று ஒரு தகவல்(பக்கம்)
 
சப்த(ஏழு) விடங்க சிவத்தலங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 AM | Best Blogger Tips
சப்த(ஏழு) விடங்க சிவத்தலங்கள்
வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).

திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).

திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)சப்த(ஏழு) விடங்க சிவத்தலங்கள்
வடமொழியில் "டங்கம்" என்பது உளியைக் குறிக்கும். விடங்கம் என்றால் உளியால் செதுக்கப் பெறாத என்று பொருள். ஏழு திருத்தலங்களில் சிவபெருமான் விடங்கராக வீற்றிருக்கிறார்.அந்த ஏழு திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள்.

திருவாரூர்-வீதிவிடங்கர் (அசபா நடனம்).

திருநள்ளாறு- நகரவிடங்கர் (உன்மத்த நடனம்).
திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் (வீசி நடனம்).

திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் (குக்குட நடனம்).

திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் (பிருங்க நடனம்).

திருவாய்மூர்- நீல விடங்கர் (கமல நடனம்).

திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் (கம்சபாத நடனம்)

அட்டவீரட்டானக் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 AM | Best Blogger Tips

சிவபெருமானின் வீரம் குறித்த பெருமைகளைக் குறிப்பிடும் எட்டு கோயில்கள் அட்டவீரட்டானக் கோயில்கள் எனப்படுகின்றன. அவை

திருக்கண்டியூர் - பிரம்மன் சிரத்தைச் சிவன் கொய்தது
திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
திருவதிகை - திரிபுரம் எரித்தது
திருப்பறியலூர் - தக்கன் சிரம் கொய்தது
வழுவூர் - யானையை உரித்தது
திருவிற்குடி - சலந்தாசுரனைச் சங்கரித்தது
திருக்குறுக்கை - காமனை எரித்தது.
திருக்கடவூர் - எமனை உதைத்தது.

காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்”

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 AM | Best Blogger Tips
காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்”.

கி.பி.1910 எழுதி வெளிவந்த இந்த புத்தகம் அவரது எண்ணங்களை வெளிப்படுதுகிறது.இதை அவர் பத்தே நாட்களில் எழுதினார்.எழுதி எழுதி தனது வலது கை ஓய்ந்த போது இடது கையாலும் எழுதினார்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல இந்தப் புத்தகம் சின்னஞ்சிறுபுத்தகமே!

இந்த புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.

இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:

ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும் டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை வஞ்சிக்கிறார்கள்.

மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச் சுரண்டுகிறார்கள்.

“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும் ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.

ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடுமைமுதலியன அதிகரித்துவிட்டன.ஆங்கிலம் அறிந்த இந்தியர்கள் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும் அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.

சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!

தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.

இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப் புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டதாகும்.

நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும் அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.

சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.

மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.கி.பி.1910 எழுதி வெளிவந்த இந்த புத்தகம் அவரது எண்ணங்களை வெளிப்படுதுகிறது.இதை அவர் பத்தே நாட்களில் எழுதினார்.எழுதி எழுதி தனது வலது கை ஓய்ந்த போது இடது கையாலும் எழுதினார்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல இந்தப் புத்தகம் சின்னஞ்சிறுபுத்தகமே!

இந்த புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.

இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:

ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும் டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை வஞ்சிக்கிறார்கள்.

மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச் சுரண்டுகிறார்கள்.

“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும் ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.

ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடுமைமுதலியன அதிகரித்துவிட்டன.ஆங்கிலம் அறிந்த இந்தியர்கள் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும் அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.

சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!

தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.

இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப் புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டதாகும்.

நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும் அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.

சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.

மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.
 
Via FB தர்மத்தின் பாதையில்
 
முல்லா கதை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:49 AM | Best Blogger Tips

நம் தென்னாலி இராமன் கதைகள் போல் முல்லா நஸ்ருதின் கதைகள் மிகவும் பிரசித்தம். நகைச்சுவையான ஆனால் ஆழமான தத்துவங்களையும் விளக்கும் சுஃபி இஸ்லாமிய‌ கதைகள் அவை.
ஒரு முறை முல்லாவின் கிராமத்தை நோக்கி "திமுர்" என்கிற கொடுங்கோல்அரச‌ன் படையெடுத்து வருகிறான் என்ற செய்தி வந்தது.
இதை கேட்ட முல்லா, உடனே கூட்டத்தை கூட்டி தன் போதனையை அறிவித்தார், "நாம் எல்லோரும் சேர்ந்து, திமுரின் சாவிற்காக பிரார்த்தனை செய்வோம்" என்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் "நீங்கள் திமுரை பார்த்திருக்கிறீர்களா ?" என்று கேட்டார்.

"பார்த்ததில்லை, ஏன் உன்னை கூட இதற்கு முன் பார்த்ததில்லை" என்றார் முல்லா

அந்த மனிதர் சொன்னார், "உண்மைதான், நான் தான் அந்த திமுர்" என்று.

முல்லாவும் கிராமத்தவரும் திகைத்து போயினர். முல்லா கிராமத்தவரை பார்த்து அமைதியாக தன் போதனையை தொடர்ந்தார் "நாம் நம் கூட்டுப் பிரார்த்தனையை தொடர்வோம், இம்முறை நம் ஜணசாவுக்காக (மரண பிரார்த்தனை) என்றார்.

"மூடனே, உன் ஜணசாவிற்கு நீ எப்படி பிரார்த்திப்பாய் ? இறந்தவர்களுக்கு, உயிரோடு இருப்பவர்தானே பிரார்த்திக்க வேண்டும் " என்று கேட்டான் திமுர்.

முல்லா சொன்னார். "ஐயா, நாங்கள் எல்லோரும் இறப்பது உறுதியாகிவிட்டது. ஆகையால் எங்களுக்காக பிரார்த்திக்க யாரும் இருக்க போவதில்லை, ஆகையால் எங்களுக்கு நாங்களே பிரார்த்தித்து கொள்கிறோம்" என்றார்.

திமுர் இதை கேட்டு மனம் விட்டு சிரித்து, அவர் நகைச்சுவை உணர்வை பாராட்டி, ஒரு யானையை பரிசளித்தான்.

கூடிய விரைவில், வளர்ந்த அந்த யானை தங்கள் விவசாய நிலங்களை நாசம் செய்ய தொடங்கியதை அறிந்த கிராமத்து மக்கள், முல்லாவிடம் வந்து முறையிட்டார்கள். இந்த யானை திமுர் பரிசாக கொடுத்தது, இதை ஒன்றும் செய்யவும் முடியாது, ஆகையால் நீங்கள் அவரிடமே இதை திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று மன்றாடினர்.

தயக்கத்துடன், முல்லா திமுரிடம் செல்வதற்கு ஒப்புக்கொண்டார், ஆனால் ஒரு விதியோடு. அனைவரும் அவரோடு கூட வரவேண்டும் என்று. அனைவரும் ஒப்புக் கொண்டனர்.

முல்லா திமுர் தங்கியிருந்த கூடாரத்திற்கு சென்றார். உள்ளே நுழைந்த முல்லாவை என்ன வேண்டும் என்று கேட்டான் திமுர். முல்லா சொன்னார், "உங்கள் யானையை குறித்து......:

"என்னவாயிற்று" என்றான் திமுர் கோபத்துடன். "என்ன குறை என் பரிசில் கண்டீர்" என்றான். முல்லா திரும்பி பார்த்தார், கிராமத்து மக்கள் ஒருவர் கூட இல்லை. தன்னை ஏமாற்றி இக்கட்டான நிலையில் விட்டுவிட்டது புரிந்தது.

சுதாரித்துக் கொண்டு, முல்லா சொன்னார், "ஐயா நீங்கள் அருமையான ஆண் யானையை கொடுத்தீர்கள், அது ஜோடியில்லாமல் இருக்கிறது. அதற்கு ஒரு ஜோடியும் தந்தருளுங்கள்".
 
Via FB Enlightened Master
 
இந்தியா கண்ட சிறந்த தவப்புதல்வர் - ஜெனெரல் பீல்ட் மார்ஷல் சாம் மானக்சா

மணக்கால் அய்யம்பேட்டை | 12:46 AM | Best Blogger Tips
நம்மில் பலருக்கு தெரியாது இன்று இந்தியா கண்ட சிறந்த தவப்புதல்வர்களில் ஒருவரான முன்னாள் ராணுவ ஜெனெரல் பீல்ட் மார்ஷல் சாம் மானக்சாவின் நினைவு தினம் இன்று  (3 April 1914 - 27 June 2008), தனது வாழ்நாள் முழுவதும் ஒரு ராணுவ வீரராக வாழ்ந்த இவரை கடவுளுக்கு இணையாக பார்த்தனர் ராணுவ வீரர்கள், இவரை பற்றி பல முக்கிய குறிப்புகள் கூறலாம் அதில் சில இவை...

On being placed in command of the retreating 4 Corps during the Sino-Indian War of 1962: “There will be no withdrawal without written orders and these orders shall never be issued.”

இந்திய - சீனா யுத்ததின்  போது சரியான தலைமை இன்மை காரணமாக பின்னடைவை சந்தித்த நமது ராணுவம் இறுதியி‌ல் நிலைமை மோசமான பிறகு மேற்கு பிராந்திய கமாண்டரை நீக்கி அந்த பதவிக்கு சாம் மனக்சாவை நியமித்தது, அவர் பதவி ஏற்ற பின்பு போர் முனையில் இருந்த ராணுவ  வீரர்களுக்கு அனுப்பிய கட்டளை கடிதம் இது...

"என்னிடம் இருந்து உங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவு வரும் வரை யாரும் உங்களின் நிலைகளை விட்டு கொடுக்க கூடாது" இறுதியாக அந்த கடிதத்தில் "அந்த உத்தரவு உங்களுக்கு ஒருபோதும் வராது" என்று எழுத பட்டு இருந்தது...!!

மானக்சா பதவி ஏற்ற பின்பு இந்திய ராணுவ வீரர்கள் உத்வேகத்துடன் போராடினர் சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தினர்...

----------------------------------------------------------

இவர் முதல் முறையாக கமாண்டர் பொறுப்பு ஏற்ற படை பிரவு கூர்க்கா பட்டாளம், மானக்சாவை கூர்க்கா ராணுவ வீரர்கள் தங்களில் ஒருவராக கண்டனர், அந்த கூர்க்கா வீரர்கள் பற்றி மனக்சா கூறிய வாசகம் இவை...

About the Gurkha: "If a man says he is not afraid of dying, he is either lying or is a Gurkha."

ஒருவன் தனக்கு மரணத்தை கண்டு பயம் இல்லை என்று கூறுவான்  என்றால்  அவன் ஒன்று பொய் கூற வேண்டும் அல்லது அவன் ஒரு கூர்க்கா வீரனாக இருக்க வேண்டும்...

To a surgeon who was going to give up on his bullet-riddled body who asked him what had happened and got the reply, “I was kicked by a donkey.” A joke at such a time, the surgeon reckoned, had a chance.

இரண்டாம் உலக போரில் பல துப்பாக்கி குண்டுகளால் துளைக்க  பட்டு  குற்றுயி‌ரும் குளையி‌ருமாக கொண்டு வர பட்ட சாம் மானக்சவின் உடலை பார்த்து வருத்தம் கொண்ட மறுத்தவர் கேட்டார் "சாம் உங்கள் உடலுக்கு என்னவென்று" - அதற்க்கு அவர் கூறினார் "ஒரு கழுதை என்னை எட்டி உதைத்து விட்டது" என்று, இந்த சம்பவத்தை பின்னால் நினைவு கூர்ந்த அந்த மறுத்தவர் "எவன் ஒருவனால் தனது மரண படுக்கையில் இருக்கும் போது பிறரை மகிழ்விக்க நகைசுவையாக பேச இயல்கிறதோ அவனை மரணம் நெருங்காது...!!! 

மேலும் 1971 போரில் வெறும் ஒரே வாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியாவிடம் மண்டியி‌ட செய்த இந்த மாவீரன் மரணம் அடைந்த சமயம் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் பிரதமர், ஜனாதிபதி சகிதம் ஒரு அமைச்சரும் வந்து மரியாதை செலுத்த வில்லை, நம் வருங்கால சந்ததி ஒவ்வொருவருக்கும் சாம் மானக்சா பற்றி பள்ளிகளில் பாடம் பயி‌ற்றுவிக்க பட வேண்டும்...

Via FB Tamil Arasan