சித்ரா பவுர்ணமி 2026 (01-05-2026)

மணக்கால் அய்யம்பேட்டை | 4:54 PM | Best Blogger Tips

May be an image of temple and text that says "- சித்ரா பவுர்ணமி 2026 பாவ பாவநிவர்த்தி வெர்த்தி தரும் அரிய அரியநாள் நாள் சித்திரகுப்தரின் தெய்வீக ரகசியம் தெரிந்துகொள்ளுங்கள்"

🌕 சித்ரா பவுர்ணமி 2026 – பாவ நிவர்த்தி தரும் அரிய நாள் | சித்திரகுப்தரின் தெய்வீக ரகசியம் 🌕
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
 
தமிழகத்தின் ஆன்மீக மரபில், சில நாட்கள் சாதாரண நாளாக இல்லை…
 
அவை மனித வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்ட தெய்வீக தருணங்கள்.
 
அத்தகைய அரிய நாள்களில் ஒன்றாக விளங்குவது
 
சித்ரா பவுர்ணமி.
 🌕 சித்ரா பவுர்ணமி 2026 – பாவ நிவர்த்தி தரும் அரிய நாள் | சித்திரகுப்தரின்  தெய்வீக ரகசியம் 🌕 தமிழகத்தின் ஆன்மீக மரபில், சில நாட்கள் சாதாரண ...
இந்த நாள்
 
👉 பாவ நிவர்த்தி
 
👉 கர்ம சுத்திகரம்
 
👉 இறையருள் பெறும் வாய்ப்பு
என்ற மூன்றையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய தெய்வீக நாள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
📅 சித்ரா பவுர்ணமி 2026 – சரியான தேதி & நேரம்
📆 தேதி: மே 01, 2026 – வெள்ளிக்கிழமை
🌕 பவுர்ணமி துவக்கம்: ஏப்ரல் 30 – இரவு 09:51
🌕 பவுர்ணமி முடிவு: மே 01 – இரவு 11:07
⭐ சித்திரை நட்சத்திரம் துவக்கம்: ஏப்ரல் 30 – அதிகாலை 01:11
⭐ சித்திரை நட்சத்திரம் முடிவு: மே 01 – அதிகாலை 02:41
👉 இந்த நேரங்களில் செய்யப்படும் பூஜைகள்
பல மடங்கு பலன் தரும் என்று நம்பப்படுகிறது.
 
🌸 சித்ரா பவுர்ணமியின் தெய்வீக சிறப்பு
சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி நாளே
 
சித்ரா பவுர்ணமி.
 
இந்த நாள் மிகவும் சிறப்பு பெறுவதற்கான முக்கிய காரணம்:
 
👉 சித்திரகுப்தர் வழிபாடு
 
📖 சித்திரகுப்தர் – கர்மத்தின் கணக்காளர்
 சித்ரா பௌர்ணமி 2026 – சித்திரகுப்தர் வரலாறு, வழிபாடு & கள்ளழகர் வைபவம் | Chitra  Pournami 2026
இந்து மரபு கூறுவது:
 
👉 நாம் செய்யும் ஒவ்வொரு நல்லதும், கெட்டதும்
 
👉 ஒவ்வொரு சிந்தனையும் கூட
அனைத்தையும் பதிவு செய்து வைத்திருப்பவர்
சித்திரகுப்தர்
 
மரணத்திற்கு பின்:
 
👉 சொர்க்கமா?
 
👉 நரகமா?
 
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அவருக்கே உண்டு என்று நம்பப்படுகிறது.
 
🌿 ஒரு ஆன்மீக கதை
 
ஒரு நகரத்தில் வாழ்ந்த ஒரு மனிதன், வாழ்க்கை முழுவதும்
 
சிறிய தவறுகளை செய்து வந்தான்.
 
அவன் பெரிய பாவங்கள் எதுவும் செய்யவில்லை…
ஆனால் சிறிய தவறுகள் நிறைய.
 
ஒருநாள் ஒரு சந்நியாசி அவனிடம் கூறினார்:
 
👉 “உன் வாழ்க்கையை மாற்ற விரும்பினால், 
சித்ரா பவுர்ணமி நாளை தவற விடாதே”
 
அந்த நாள், அவன்:
 
புனித நீராடினான்
 
சிவனை மனமார வேண்டினான்
 
தனது தவறுகளை நினைத்து மனம் உருகினான்
ஏழைகளுக்கு உணவு தானம் செய்தான்
 
அந்த இரவு, அவன் கனவில்
 
சித்திரகுப்தர் தோன்றி கூறினார்:
 
👉 “நீ செய்த தவறுகளை ஒப்புக்கொண்டாய்
அது பெரிய புண்ணியம்”
 அதன் பின் அவன் வாழ்க்கை முழுவதும் மாறியது.
 
👉 இது ஒரு கதை மட்டும் அல்ல…
 
ஒரு உண்மை உணர்வு!
 
🔱 சித்ரா பவுர்ணமி வழிபாடு ஏன் முக்கியம்?
 
இந்த நாளில்:
 
கடந்த கால பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கலாம்
மன சுத்திகரம் பெறலாம்
 
கர்ம வினைகள் குறையலாம்
 
👉 அதனால் இந்த நாள்
ஆன்மீக மறுபிறவி தரும் நாள் என்று கருதப்படுகிறது.
 
🛕 சித்ரா பவுர்ணமியில் செய்ய வேண்டியவை
 
🌊 1. புனித நீராடல்
காலை நேரத்தில் நீராடி:
 
👉 உடல் + மனம் தூய்மை பெறும்
 
👉 தெய்வீக சக்தி பெறலாம்
 
🕉️ 2. சிவ வழிபாடு & சித்திரகுப்தர் வழிபாடு
 
சிவபெருமானை வழிபடுதல்
சித்திரகுப்தரை மனமார வேண்டுதல்
 
👉 கர்ம வினைகள் குறையும்
 
👉 மன அமைதி கிடைக்கும்
 
🌕 3. விரதம்
நாள் முழுவதும் விரதம்
மாலை சந்திரனை வழிபட்டு விரதம் முடித்தல்
 
👉 மன உறுதி, ஆன்மீக சக்தி அதிகரிக்கும்
 
🎁 4. தானங்கள்
 
உணவு
உடை
அத்தியாவசிய பொருட்கள்
 
👉 பாவ நிவர்த்தி
 
👉 புண்ணியம் பெருகும்
 Tiruvannamalai Chitra Pournami 2026 | திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி 2026:  கிரிவல நேரம் மற்றும் முன்னேற்பாடுகள் முழு விவரம் | Tamil Nadu News in Tamil
🔥 5. திருவண்ணாமலை கிரிவலம்
சித்ரா பவுர்ணமி அன்று:
 
👉 திருவண்ணாமலை கிரிவலம்
மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாவங்கள் நீங்கும்
 
ஆன்மீக சக்தி அதிகரிக்கும்
 இறையருள் கிடைக்கும்
 
👉 இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நாளில் கிரிவலம் வருகின்றனர்.
 
🌟 மதுரை சித்திரை திருவிழா – கள்ளழகர் வைபவம்
 
சித்ரா பவுர்ணமியின் மிகப் பெரிய சிறப்பு:
 
👉 கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா
இந்த நிகழ்வு:
 
பக்தர்களுக்கு தெய்வீக அனுபவம்
அருளாசி பெறும் தருணம்
பாரம்பரியத்தின் உயிர்
 
👉 இதை காணும் பாக்கியம்
பெரிய புண்ணியம் என்று கருதப்படுகிறது.
 
🌸 இறுதி உண்மை
சித்ரா பவுர்ணமி என்பது:
 
👉 ஒரு பண்டிகை மட்டும் அல்ல
 
👉 ஒரு ஆன்மீக வாய்ப்பு
 
இந்த நாளில்:
நம் தவறுகளை ஏற்றுக்கொள்வோம்
மனதை சுத்தப்படுத்துவோம்
நற்செயல்கள் செய்வோம்
அப்போதுதான்
சித்திரகுப்தரின் கணக்கில்
நம்முடைய பக்கம் அதிகரிக்கும்…
 
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
 
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .
 
 உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
 
சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
 
நன்றி திருவாசகம் 

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:27 AM | Best Blogger Tips

 எப்போதும் ஆரோக்கியமாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஆரோக்கியமாக  வாழ்வதற்கான 3 வழிகள்


1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 


கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.

2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 


மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.

காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.

3. உள்ளாடைகள் கிழியாவிட்டாலும்
6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுங்கள்.
ஒருநாள் பயன்படுத்தியபிறகு கட்டாயம் துவைத்துக் காயப்போடுங்கள்.
சொர்க்கம் நம் வீட்டிலே... எப்படி? இப்படி... இசைக்கு இருக்கு அபார சக்தி!
4. சிறுவர்கள் 1 ஸ்பூன், பெரியவர்கள் 2 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை, வெறும் வயிற்றில் மென்று விழுங்க வேண்டும்,
சர்க்கரையும், இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கப்படும்.
வந்தால் கட்டுக்குள் இருக்கும்.

5. காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்
தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிடுங்கள்.
கொழுப்பைக் குறைக்கும். தொப்பையைக் கரைக்கும்.

உணவை நன்றாக மென்று,
பொறுமையாக
உண்ணுங்கள்.

6. சுட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது.
அதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்;
புற்றுநோயை
உருவாக்கும்.

7. மைதா பரோட்டா வேண்டவே வேண்டாம்,
வாழ்நாளைக் குறைக்கும்.
குளிர்பானம், பாக்கெட் தீனிகள் வேண்டாம்.

8. பிராய்லர் கோழிக்கறி வேண்டாம்.
மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக் கோழி மட்டும் சாப்பிடுங்கள்.
மது, புகை கூடவே கூடாது.

9. மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு
சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு
அடுத்த திட உணவு கூடாது.
ஆரோக்கியமான வாழ்க்கை: உணவு மற்றும் உடற்பயிற்சி குறிப்புகள் மற்றும் தவிர்க்க  வேண்டியவை
10. பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், டார்க் சாக்லட், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம், சோற்றுக்கற்றாழை (ஏழு முறை சுத்தம் செய்து தேன் கலந்து) நாள்தோறும் சாப்பிடவும்.

11. பயோட்டின் (எச் வைட்டமின்) என்ற வைட்டமின் குறைவால், தலைமுடி உதிர்தல், நகங்கள் உடைதல், தோல் நோய், எடை குறைவு, தசைவலி, கொழுப்பு அடைப்பு, மன அழுத்தம் ஏற்படும். இவற்றைத் தவிர்க்க, வேர்க்கடலை, முந்திரி, மீன், முட்டை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி, காலிபிளவர், காளான், மோர் சாப்பிடவேண்டும்.

12. காலை அல்லது மாலை 1 மணி நேரம் உடற்பயிற்சி, உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா???*
 

தயவு செய்து


*வேர்க்கடலை,*
 

*பேரீச்சம்பழம்* தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள்!
 

*கீரை* வாரம் *3*முறை பருப்புக்கூட்டாகவும்,
*ராகியை*


*சேமியாவாக,கொழுக்கைட்டையாக,ரொட்டியாக வாரம்* இருமுறை கொடுக்கவும்!
 

*ஆப்பிள்,ஆரஞ்சை* விட *பப்பாளி,கொய்யாவில் சத்துக்கள்* அதிகம்!
தினமும் சாப்பிடக்கொடுங்கள்!
 

உங்கள் *மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்???*
தயவு செய்து 

*மண் சட்டியும்,இரும்புக்கடாயும்,மரச்செக்கு எண்ணெய்யும்* வாங்கிக்கொடுக்கவும்!
தினமும் *5பேரிச்சம்பழம்* குறைந்த பட்சம்
சாப்பிடக்கட்டாயப்படுத்துங்கள்!
 

*கருப்பு அரிசி,கருப்பு எள்,கருப்பட்டி,கருப்பு உளுந்து,மண் பானை தண்ணீர் சாப்பிட* வலியுறுத்துங்கள்!
உங்கள் *கணவர்* மீது அதிக அக்கறை கொண்ட 

*மனைவியா நீங்கள்???*

🚪தயவு செய்து *பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்

🥃 *சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர்* குடிக்கக்கொடுக்கவும்!
 

*நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம் *
 

*இழந்த ஆரோக்கியத்தை* முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் *50%* ஆரோக்கியத்தை மீட்டெடுக்க *நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை* நாம் நம் நடைமுறை வாழ்க்
கையில் பயன்படுத்துவன் மூலம் 

*சாத்தியமாகும்.*


*இன்றே! முயற்சிப்போம்! *வாருங்கள்!*

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை
கட்டாயம் உறங்க வேண்டும்... 

நன்றி - நமது நலனில் என்றும் உங்களுடன்.. பரதேசி  - 

தவ யோகேஷ்வர்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஐ பாகவதர்..

மணக்கால் அய்யம்பேட்டை | 10:10 AM | Best Blogger Tips

 May be an image of text that says "THEVARINA நசிறப்பு செய்தி கள் 24x7 கண்பார்வை இழந்தும் தேவரை சந்திக்க துடித்த தியாகராஜ பாகவதர்"

 

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என போற்றப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர்.
தனது புகழின் உச்சியிலும் மனதில் வைத்திருந்த ஒரு தீராத ஆசை மட்டும் நிறைவேறாமல் இருந்தது. அது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை நேரில் சந்திப்பதே
 
அந்நாளில் இந்தியா முழுவதும் பெயர் பெற்ற பாகவதரின் புகழ், அக்கால அரசியல் தலைவர்களின் புகழையும் மிஞ்சியதாக கூறப்பட்டது. அரசியலில் சேருமாறு அழைப்புகள் வந்தபோதும், அவர் அதை மரியாதையுடன் நிராகரித்தார். 
 
ஆனால் தேவரை நேரில் காண வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிலைத்திருந்தது.
காலம் மாறியது. வாழ்க்கை சோதனைகள் சூழ்ந்தன. புகழ் குறைந்து, பல துன்பங்களை சந்தித்த பாகவதர், கண்பார்வையையும் இழந்த நிலையில் இருந்தார். 
 
அந்த சமயத்தில் தேவர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக ரயிலில் வருவதாக அறிந்த அவர், திருச்சி ரயில் நிலையம் சென்று காத்திருந்தார். 
 
தேவரும் அவரை சந்திக்க சம்மதித்து ரயிலிலிருந்து இறங்கினார். பார்வையற்ற பாகவதர், “அவரை தொட்டு உணர வேண்டும்” என்று கேட்டார்.
 
தேவரை தழுவிய அந்த நொடியில் பாகவதர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தார். “இந்த பிறவி எடுத்த கடன் முடிந்தது போலிருக்கிறது.
இவர் மனிதப் பிறவி அல்ல; சாட்சாத் முருகப்பெருமானின் அவதாரம்” என்று தழுதழுத்த குரலில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 
 
அந்த சந்திப்பு ஒரு மனிதரைச் சந்தித்த தருணம் மட்டும் அல்ல; ஒரு ஆன்மீக அனுபவமாக அவர் உணர்ந்த தருணமாக நினைவுகூரப்படுகிறது.
 
அவரது நிலையை அறிந்த தேவர், பாகவதருக்கு பொருளுதவியும் செய்ததாக கூறப்படுகிறது. பலரின் நினைவில் தேவர் வாழ்ந்த காலத்திலேயே சித்தராகவும், மறைந்த பின் தெய்வமாகவும் உயர்ந்தவர் என்ற மரியாதை நிலைத்தது.
 
 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


🌷 🌷🌷 🌷

 

கோவில்கள் எதற்கு.?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:49 PM | Best Blogger Tips

May be an image of temple

கோவில்கள் எதற்கு.?
 
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
 
*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*
 Meenakshi Temple - 7 Wonders
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
 Glimpses of Madurai Meenakshi Temple
*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
 
*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*
 Big Temple" Images – Browse 936 Stock Photos, Vectors, and Video | Adobe  Stock
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
 
*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*
 
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.
 Temple, Travel and Sport: Thanjavur Big Temple Chitrai Rishabham
*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 
 
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
 Tallenge - Temples Of India - 2024 Wall Calendar - 12 x 17 Inches (Paper,  Wall Calendar) : Amazon.in: Office Products
*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*
 
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
 
*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
 Largest Temple in India – Sri Ranganathaswamy, Tamil Nadu
*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*
 
உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*
 
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.
 
Thanks to  
க.சதீஸ்குமாா்,தமிழாசிரியா்,ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளி,மதுரை .