நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:42 PM | Best Blogger Tips

 


கழுகு ஒன்று மேகத்துக்கு மேலே பறந்து கொண்டிருந்தது. எல்லா மேகங்களும் காற்றின் வேகத்துக்கு ஏற்றபடி நகர்ந்து கொண்டிருக்க, ஒரே ஒரு திரள் மேகம் மட்டும் நகராமல் பிடிவாதமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது.
கழுகு அந்த மேகத்துக்கு அருகே வந்து, ‘‘ஏன் நீ மட்டும் நகராமல் கஷ்டப்பட்டு காற்றை எதிர்த்து இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது.

‘‘ஓர் உயிருக்கு ஆபத்து. அதனால் கலங்கிப் போய், அதைக் காப்பாற்ற இங்கேயே நிற்கிறேன்’’ என்றது.
‘‘யாருக்கு ஆபத்து? என்னிடம் சொல். நான் உனக்கு உதவி செய்கிறேன்’’ என்றது கழுகு.

கழுகை நம்பிய மேகம் விஷயத்தைச் சொன்னது. ‘‘கீழே தரைப்பகுதியில் எனக்கு நேரே ஒரு சிறு குளம் இருக்கிறது. அதில் நிறைய தாமரை மலர்கள் இருக்கின்றன. அதில் ஒரு இலை நடுவே சிறுதுளி நீர் இருக்கிறது.
தாமரை, தீரா நோய்களை தீர்க்கும் மூலிகை! – Aram Online
அந்த நீரில் ஒரு மீன்குஞ்சு தெரியாமல் விழுந்து விட்டது. அது துள்ளி விளையாடும்போது தெரியாமல் அந்த தாமரை இலை சிறு துளி நீரில் விழுந்து விட்டது. அதற்கு எப்படி மீண்டும் குளத்துக்குள் போவது என்று தெரியவில்லை.

அதன் அம்மா மீனோ, குஞ்சு மீனைக் காணோம் என்று கலங்கி வெளியே வெளியே எட்டிப் பார்க்கிறது. சூரிய வெளிச்சம் பட்டால் தாமரை இலையில் உள்ள சிறிதளவு சூடாகி குஞ்சு மீன் உயிருக்கு ஆபத்தாகிவிடும். அதனால்தான் நான் சூரிய ஒளியை மறைத்துக் கொண்டு நிற்கிறேன்’’ என்றது.

இதைக் கேட்ட கழுகின் புத்தி மாறியது. ‘‘நான் பெரிய மீன் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை குஞ்சு மீன் சாப்பிட்டதில்லை. நல்லவேளை, விஷயத்தைச் சொன்னாய்’’ என்றது.

மேகம் வேதனையடைந்தது. கோபமாக கழுகிடம், ‘‘நீ காப்பாற்றுவேன் என்று சொன்னதால்தான் நான் உண்மையைச் சொன்னேன். இப்போது நீ செய்வது அநியாயம், துரோகம்’’ என்று கத்தியது.

கழுகு அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் குஞ்சு மீனை சாப்பிட தாமரை இலையை நோக்கிப் போக ஆரம்பித்தது.
மேகத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குஞ்சு மீனைக் கொல்வதற்கு கழுகிடம் தானே யோசனை சொல்லிவிட்டோமோ என குற்ற உணர்வு அடைந்தது.

அதை உணர்ந்துகொண்ட காற்று சொன்னது. ‘‘மேகமே! நீ கழுகிடம் சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் உனக்கு உதவி செய்கிறேன். கழுகு குஞ்சு மீன் அருகே போகும்போது நான் வேகமாக வீசுகிறேன். நீ சட்டென்று விலகிவிடு. நான் சொல்வதை மட்டும் செய்’’ என்றது.

மேகத்துக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும், காற்று சொன்னதைச் செய்ய நினைத்தது. கழுகு தாமரை இலையில் இருக்கும் குஞ்சு மீன் அருகே போகும்போது காற்றின் வேகத்தில் பட்டென்று விலகியது.

அது விலகியதும் சூரிய ஒளி பளீரென்று அந்த தாமரை நீரில் விழுந்தது. அந்த ஒளி கழுகின் கண்களை கூசச் செய்தது. திடீரென்று அத்தனை ஒளிக் கூச்சத்தை எதிர்பாராத கழுகு, தடுமாறி இலையில் விழுந்தது. விழுந்த நேரத்தில் காற்றும் வேகமாக வீச, தாமரை இலை அசைந்து, அதன் நடுவில் உள்ள நீரோடு குஞ்சு மீன் குளத்தில் விழுந்தது.

அப்போது கழுகின் காதருகே பேசிய காற்று, ‘‘நல்ல விஷயத்தைக் கெடுக்க ஒருவர் வந்தால், உதவி செய்ய ஆயிரம் பேர் வருவார்கள்’’ என்றது. கழுகு தலைகுனிந்து நிற்கும்போது, அங்கே தாய் மீன் குஞ்சு மீனோடு நீந்தி நீந்தி பாதுகாப்பான இடத்தை அடைந்தது. மேகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.🌹

🌷 🌷🌷 🌷  May be an image of 1 person and temple 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

 



எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | 9:40 AM | Best Blogger Tips

 May be an image of text

எப்பொழுது தெய்வம் நமக்கு துணை நிற்கும்
 
1. காகத்தை போல என்றும் ஒற்றுமையாக இரு
சனீஸ்வரன் அருகில் வரமாட்டார் 
 
2. நாய் போல நன்றி விசுவாசத்துடன் இரு
பைரவர் உனக்கு செல்வத்தை அள்ளித் தருவார்..
 
3. ஆந்தையை போல தீமையிடம் பாதுகாப்பாக விழித்திரு லட்சுமி வீட்டில் வாசம் செய்வாள்.
 
4. சிங்கத்தை போல வீரமாக தைரியத்துடன் இரு
பார்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள்...
 
5. அன்னப்பறவை நீரையும் பாலையும் பிரிப்பதை போல அறிவுள்ள நல்ல மனிதர்களுடன் நட்புக் கொள்
சரஸ்வதி உன் வீட்டில் வாசம் செய்வாள் ...
 
6. எலி போல தொழிலில் ஊழல் செய்யாமலிரு
வினைகளை அழிக்கும் விநாயகர் உன் வீடு தேடி வருவார்.
 
7. மயிலை போல மகிழ்ச்சியில் எப்பொழுதும் தோகை விரித்தாடு முருகன் உன் வீட்டினில் அவதரிப்பான்.
 
8. உன் மனம் உலக பிரச்னைகளை கடந்து வானத்தில் கருடனை போல பறக்கட்டும் கண்ணன் வருவான் அகத்திற்கு... 
 
9. தீமை எல்லாவற்றிக்கும் அஞ்சாத காளையாய் எதிர்த்து நில். 
 
உலகை படைத்த ஜோதியான தந்தை ஈசனே வருவார் உன் வாழ்வினில் என்றும் துணை நிற்பதற்கு...
 
🌹 

 

BIO CLOCK என்றால் என்ன...? எண்ணங்களே வாழ்க்கை...!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:50 PM | Best Blogger Tips

 BIO CLOCK” என்றால் என்ன? – nadappu.com



நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான்  " Bioclock "

நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclockல் செட் செய்துவிடுகிறோம். அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது *Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
what is Biological clock in tamil/ உயிரியல் கடிகாரம் என்றால் என்ன? - YouTube
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.

1. நாம்  குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.

2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.

3. டை அடியுங்கள் ( முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.

4. சுறுசுறுப்பாக இருங்கள் வாக்கிங்  போங்கள்.

5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். அது தான் உண்மை.

6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.

முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள். Keep your Legs Active and Strong.

தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து  சருமம் தளர்ந்து முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
Bio Clock Programing | உங்கள் உயிரியல் கடிகாரம் இப்போது எப்படி இருக்கிறது?  - YouTube
நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை வருமுன் தடுப்பு prevention மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு  முதியவர்கள் மற்றும் இளைஞர்கள்  இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம். எனவே நடந்து செல்லுங்கள்.

கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.

நமது முழு உடல் எடை சுமையை கால்களே தாங்குகிறது. கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். அதற்கு தினமும் நடைப்பயிற்சி அவசியம். ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.

மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன. ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல் burning the calories இரண்டு கால்களால் செய்யப்படுகிறது.

ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய தொடைகள் 800 கிலோ  எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. கால் கள் உடல் நடமாட்டத்தின் locomotion மையம். இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.
தமிழ் (தொழில்)நுட்பம் – பக்கம் 12 – புதிய தொழில்நுட்பங்களைத் தமிழில்  தெரிந்து கொள்ளலாமே
கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.

ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.

கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள். இது
தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும். பொதுவாக  வயதான நோயாளிகளில் 15% தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?
உங்கள் உடம்பில் இருக்கும் இயற்கை கடிகாரம் பற்றி தெரியுமா உங்களுக்கு?  Biological Clock Tamil Explains - YouTube
நடை பயிற்சி செய்வது 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல. தினமும் குறிப்பிட்ட தூரம் நடந்து எப்பொழுதும் கால்களை வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் தனது வயதான தோற்றம் வருவதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யுங்கள், நடைபயிற்சி நம் கால்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் நல்ல புத்துணர்வையும் ஆரோக்கியத்தையும் தரும்...

வாழ்க வளமுடன் நலமுடன்... 🙏🏻❤️ 

🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

கடவுள் எப்படிப்பட்டவன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:41 PM | Best Blogger Tips

 கடவுள் எப்படிப்பட்டவன்? யார் இறைவன்? கவிஞர் கண்ணதாசன் தத்துவ வரிகள்  #kannadhasan who is God in Tamil



கவியரசன் கண்ணதாசன் சொன்னது.

ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.

மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.

அவன் தான் கடவுள்

பூலோகத்தில் வாழும் போது புகழையும் கொடுப்பான்.

பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.

அவன் தான் கடவுள்

பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.

அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.
படித்ததில் பிடித்தது..கடவுள் எப்படிப்பட்டவன் - கவியரசு கண்ணதாசன்.
பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.

அவன் தான் கடவுள்

கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.

அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.

அவன் தான் கடவுள்

ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.

பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை  புலிக்கும் கொடுப்பான்.

அவன்தான் கடவுள்

அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.

அதை முழுவதும் பயன் படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.

அவன் தான் கடவுள்

தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.

அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.

அவன்தான் கடவுள்

‌நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.

அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.

அவன் தான் கடவுள்

புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.

தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.

அவன் தான் கடவுள்

கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.

தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.

அவன் தான் கடவுள்

மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.

சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.

பின்னிருந்து இயக்குவான்.

அவன் தான் கடவுள்

தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.

(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.

அவன் தான் கடவுள் கண்ணதாசன் ஆன்மிக சி்தனைகள் பதிவில்

🙏🙏🙏💐💐💐🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🪷🪷🪷🥭🍋🍓🍑🍍🍎🌿🌹🌷🌷🌹🌿
🙏💐😊 


🌷 🌷🌷 🌷  No photo description available. 🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

 
🙏✍🏼🌹

"உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை"

மணக்கால் அய்யம்பேட்டை | 11:13 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and chess

முகநூலில் படித்ததில் மனதில் நின்றது!
எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார், "அம்மா பசிக்கிறது. சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க" என்றார்.
 
"10 நிமிடம் இங்கயே உட்காருங்க.. சாப்பாடு கொண்டு வரேன்" என்று சமையலறைக்குள், சென்று காலை மெனு இட்லி - சட்னி. அவசர அவசரமாக தயார் செய்து, உணவு பரிமாற எடுத்துகொண்டு வெளியே வந்தேன்.
 
10 நிமிடத்தில் எங்கள் வீட்டை சுற்றியுள்ள குப்பை, ,புல் மற்றும்
தேவையற்ற செடிகளை கையாலேயே பிடுங்கி சுத்தம் செய்துகொண்டு இருந்தார். மனம் கலங்கியது...
என் தாத்தாவை விட பெரியவராக இருப்பார். 
 
நடக்கவும் முடியவில்லை,
கை,கால் நடுக்கம் வேறு. "தாத்தா இங்கே வாங்க", என்று கூறியதும் சாப்பிட அமர்ந்து "2 இட்லி போதும் வயதாகிவிட்டது அதிகமா சாப்பிட முடியவில்லை" என்றார்.
 
2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து சாப்பாடு கேட்கிறார். மிகவும் வருத்தமாக உள்ளது.
 
உங்களுக்கு உணவு அளித்து பாதுகாத்த தாய், தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்.
 
தாத்தா சாப்பிட்டு விட்டு கிளம்பும்போது அவரது கையில் 100 ரூபாய் கொடுத்ததும் மகிழ்ச்சியில் "இன்னொரு நாள் வரேன்.. வேலை ஏதாச்சும் இருந்தால் சொல்லுங்க, செஞ்சிட்டு போறேன்" என்றார்.
 
"உழைக்காமல் எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை" என்றார்.
 
வீட்டின் வெளியே சுத்தம் செய்து உணவு கேட்கும் தாத்தாவின் நேர்மை
 
மனம் சிலிர்க்க வைத்தது