வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:30 AM | Best Blogger Tips

 



வெற்றி பெற முழுக்காரணம் ஆழ்மனம் தான்......

ஆழ்மனதைப் பற்றி ஓர் ஆய்வு.

நமது ஆழ்மனம் நாம் விரும்பும் எதையும் நமக்கு கொடுக்கவல்லது! மனத்தில் இரண்டு நிலைகள் உண்டு.

(1) மேல் மனம் அல்லது வெளிமனம்.

(2) ஆழ்மனம்.

மனமென்பது ஆர்டிக் கடலில் மிதக்கும் பனிப் பாறைகளைப் போன்றது. கடலுக்கு மேல் கண்ணுக்குத் தெரிகின்ற 20% பனிப்பாறையைப் போன்றது மேல் மனம். கடலில் மூழ்கியிருக்கின்ற கண்ணுக்குத்த தெரியாத 80% பனிப்பாறையைப் போன்றது ஆழ்மனம்.

மேல்மனத்தை விடப் பல மடங்கு பெரியதும், ஆற்றல் மிக்கதும் ஆழ்மனம் ஆகும். மேல்மனம் என்பது விழிப்பு, உணர்வு நிலை எனப்படும். நினைவு நிலைக்கு இதுவே காரணமாகிறது. ஆனால் ஆழ்மனம் துயில் நிலைக்கும், துயிலுக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட மெய்மறதி நிலைக்கும் காரணமானது!

நாம் படிப்பதும், பேசுதலும், செயல்படுவதும் மேல் மனத்தின் மூலமாகத்தான், ஆனால் என்ன படிக்கிறோம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம், ஏன் எப்படிச் செயல்படுகிறோம் என்பதற்கெல்லாம் காரணம் அடிமனம் தான் (ஆழ்மனம்)

எனவே நமது குறிக்கோள்களை நமது அடிமனம் ஏற்றுக்கொள்ளுமாறு எண்ணங்களைச் செலுத்த வேண்டும். நாம் செய்ய வேண்டியது இதுதான்.

(1) நமது ஆழ்மனத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும்.

(2) உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன என்பதை ஆழ்மனதிற்கு தெரிவிக்க வேண்டும்.

உங்கள் குறிக்கோள்களைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட ஆழ்மனம், அந்த குறிக்கோள்களை விரைவில் அடைய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, உடனே உங்களைச் செயல்படுத்த தூண்டும்.

நமது குறிக்கோள்களை ஆழ்மனத்திற்கு எப்படி கொண்டு செல்வது:

(1) நமது எண்ணங்கள் எல்லாம் நமது குறிக்கோள்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும்.

(2) ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட வேளையில் (காலையில் 15 நிமிடங்கள்) குறிக்கோளை அடைவதற்கான மனப்பயிற்சியை செய்துவர வேண்டும்.

(3) நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்ட குப்பை எண்ணங்களை எண்ணாமல், நமது குறிக்கோளைப் பற்றிய எண்ணங்களாகவே நினைக்க வேண்டும்.

உதாரணமாக வீடு வேண்டும் என்றால் அந்த வீட்டில் (கற்பனை வீட்டில்) எத்தனை அறைகள் இருக்க வேண்டும். அதனுடைய அளவுகள் எப்படி இருக்க வேண்டும், எந்த அளவில் கதவுகள், வர்ணங்கள் என்ன என்பதை பற்றிய கற்பனைகளையே உங்களது எண்ணம் முழுவதும் நிரம்பியிருக்க வேண்டும்.

நமது முன்னால் குடியரசுத் தலைவர் திரு ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் கூட இதன் அடிப்படையில் தான் "கனவு காணுங்கள்" என்று சொன்னார்.

(4) உங்கள் மனதில் குறிக்கோள் விதையை வலுவாக ஊன்றுங்கள். அதை உங்களது தீவிர எண்ணங்களால் உரமேற்றுங்கள். நிச்சயம் உங்களது குறிக்கோளை அடைந்துவிடுவீர்கள். விதைத்ததையே அறுவடை செய்து விடுவீர்கள் என்பது நிச்சயம்.

(5) உங்களது கற்பனையில் உங்களது குறிக்கோளை ஒரு படமாக மாற்றி அதை உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டும். என்ன நினைக்கிறீர்களோ அதை அப்படியே செய்து முடிப்பதாக நினைக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு புதிய வீடு கட்ட வேண்டும் எனில், கற்பனையில் வீடுகட்டி அதற்கு கிரகப்பிரவேசமும் செய்து முடித்ததாக எண்ண வேண்டும். உங்கள் கற்பனை எண்ணங்கள் மேலோங்கி, எண்ணங்கள் வலுப்பெற்று அது உண்மையாகவே நடக்க ஆரம்பித்துவிடும்.

(6) குறிக்கோள்களை அடைவதற்கு, தற்காலத்தில் அனுபவிக்கக் கூடிய சிறுசிறு சுகங்களை தியாகம் செய்யவும் தயங்கக் கூடாது.

(7) உங்கள் ஆழ்மனத்தை, பிடிவாதத்துடன் நம்ப வைத்துவிடுங்கள். ஆழ்மனம் வெகு சீக்கிரம் உங்கள் குறிக்கோளில் கொண்டு சேர்த்துவிடும்.

(😎 உங்களது குறிக்கோளை தெளிவாக ஒரு அட்டையில் எழுதி / உங்கள் கண்களில் அடிக்கடி படும்படியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பார்க்கும் போதெல்லாம், எண்ணங்கள் உங்கள் குறிக்கோளின் மீது குவியட்டும்.

எனவே நாம் நமது குறிக்கோளைத் தெளிவாக ஒரு காலவரையில் முடித்தே தீருவேன் என்று முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள். பின்பு ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆழ்மன எண்ணங்களே ஒருவரின் நிஜங்கள்!!!

பழக்கங்கள் உருவாகி பலப்படும் இடம் ஆழ்மனம் தான். அது மட்டுமல்ல ஒரு மனிதனின் வெற்றி தோல்வியையும், அவன் பலங்கள் பலவீனங்களையும் தீர்மானிப்பது அவன் ஆழ்மன நிலையே தான். ஏன் ஒருவர் இன்று எப்படி இந்த உலகில் வாழ்கிறார் என்பதைத் தீர்மானிப்பதும் ஆழ்மனமே.

ஆழ்மனதில் எதை மனிதன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது .


நாம் பல சமயங்களில் நம்மை அறியாமலேயே சுயமாக நம்மை நாமே ஹிப்னாடிசம் செய்து கொண்டு கருத்துகளைப் பதிவு செய்து கொண்டு விடுகிறோம். அது போல சில சமயங்களில் நாம் மிகவும் நம்பும் அல்லது மதிக்கும் மனிதர்களை நம்மை ஹிப்னாடிசம் செய்து கருத்துகளை நம் மனதில் பதிக்க அனுமதித்து விடுகிறோம். அந்தக் கருத்துகள் உயர்ந்ததாகவும், பலம் வாய்ந்ததாகவும் இருக்கும் போது நாம் சாதனையாளர்கள் ஆகிறோம். மாறாக அவை தாழ்ந்ததாகவும், பலமிழந்தும் இருக்கிற போது தோல்வியாளர்களாகவும் மாறி விடுகிறோம்..

ஆழ்மனம் எதையும் மேல்மனம் தந்தபடியே எடுத்துக் கொள்கிறது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான தகவல்களை மேல் மனம் தந்தபடி இருக்க அவற்றை ஆழ்மனம் மனதில் பதித்துக் கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது.

ஓரிரு எண்ணங்கள் தவறாகவும், பலவீனமாகவும் உள்ளே செல்வதில் பெரிய பாதிப்பு இருக்காது. தொடர்ந்து அதே போல் எண்ணங்கள் ஆழ்மனதில் பதிய ஆரம்பித்தால் தான் பிரச்னை.

எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் மிக கவனமாக இருங்கள். மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட எண்ணங்களாக இருந்தால் அவை பலப்பட்டு அப்படியே பதிவாகி அதை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளாக உங்கள் வாழ்வில் கண்டிப்பாக வரும். அதற்கு எதிர்மாறாக தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே உங்கள் நிஜ வாழ்வில் பிரதிபலிக்கும் என்பது உறுதி

மனோசக்தியே மந்திரசக்தி.

-------------------------------------------------

எப்படி நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான். அந்தப் படிப்பைப் பெற்றவர்கள்கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம்தான் தியானம். இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் இது சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.

ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும்

காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள்தான் என்று மனவியல்

அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி

செலுத்துகிறோம் என்பது அதைவிட முக்கியம். இதைத்தான் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பார்கள்.

பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒருமுகப்படுத்துகிறது ஒருமுகப்படுத்தும்போது சக்தி

அதிகமாகிறது. வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.

இப்படி நம் மனசக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் "ஜெபம்" என்றும் "தியானம்" என்றும் சொல்கிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை "ஜெபம்" என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை "தியானம்" என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை

இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள்.

எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான்

இரகசியமாகச் சொல்வதன் காரணம்.

மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்?ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வதுதான் மந்திர சக்தியை ஏற்படுத்துகிறது. எதைத் திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ்மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

"வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் நமக்கு வழிகாட்டும்.

திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும்? முன்னைவிட ஆரோக்கியமானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம்

அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும்

பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் (திக்ரு)மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப்பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்;

வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும்.

இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது.

ஆழ்மனம் என்பது நம்மில் உள்ள மிகப்பெரிய சக்தி (காஸ்மிக் எனர்ஜி). ஆழ்மனம் எப்பொழுது திறக்கும் துக்கமும் இல்லாமல் விழிப்பும் இல்லாத நேரத்தில் திறக்கும். இதன் முலம் நமக்கு பிரபஞ்சசக்தி கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள்

உள்ளன. அவற்றில், ஒன்று காஸ்மிக் energy. இதைப் பயன்படுத்தி நமது ஆசைகளை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் செய்துவர வேண்டும். இதன் மூலம் மிக எளிய முறையில் லட்சியங்களை நிறைவேற்ற முடியும்.

லட்சியகள் மட்டும் அல்ல நாம் நோய்களையும் குணப்டுத்தமுடியும், மற்றவர்களின் ஆழ்மனதுடனும் உரையாடமுடியும்.

வேலைக்காரன் என்றொரு ஆழ்மனம்

-------------------------------------------------------------------

பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை.

ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப்பிறந்தோமா? என்று....

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்யவேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும்,

நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும்.

மாற்றங்களை விரும்பாத எவரும்

மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம்ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு

கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத்

தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத்

தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், "பூமி சுற்றுவதை உணர

முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை." சூரியன் தன் ஈர்ப்புச்சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது?

சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த

பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும்

சக்தியை அனுதினமும் கொடுத்துக்

கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக

அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம் பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறுபகுதிதான். நாம் உயிர் வாழும் பூமி.

இந்த பூமியை இயக்கிக்கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம்

கொடுக்கிறது.

இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம் ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

"உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த

உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய.முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது." இதுவரை நாம்

வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும்.பிடிக்காதிருந்தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்!

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது?

இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும்.

நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே

ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம்

வண்ணமாவது திண்ணம்.....

வெற்றி நிச்சயம்!.

- சித்தர்களின் குரல் shiva shangar

 

 நன்றி இணையம்

சோ ராமசாமி அழுத இடம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:27 AM | Best Blogger Tips

 


சோவின் நாடகம் தடைசெய்யபடுகின்றது, கோர்ட்டுக்கு செல்கின்றார் சோ

ஆட்சேபகரமான காட்சிகள் என சில காட்சிகளை சொல்லி தடை செய்ய சொல்கின்றார் நீதிபதி

சட்டம் இதுவானால் அதை நீக்கி நாடகம் நடத்துவேன் ஆனால் நீதிமன்றம் தடை செய்த காட்சிகள் எது என எழுதிகொண்டே இருப்பேன் அப்பொழுது நீங்கள் தடை செய்ய நினைத்த விஷயம் உலகெல்லாம் தெரியும்

அதற்கு மேல் நீதிபதி ஒன்றும் செல்லவில்லை, நாடகம் நடந்தது

காமராஜர் வந்திருந்தார்

நீதிமன்றம் செல்லும் நிலைவரை வந்தாயிற்று என்றார் சோ

நீ சட்டத்தை மீறி ஏதும் எழுதியிருப்ப, அதான் சிக்கலாயிருக்கும் என்றார் காமராஜர்

இப்போ லைசன்ஸ் கிடைச்சிட்டே என்றார் சோ

லைசென்ஸ் கிடைச்சிட்டா உன் இஷ்டத்துக்கு கார் ஓட்டுவியா? அக்கம் பக்கம் பாக்க மாட்டியா என்கின்றார் காமராஜர்

லைசென்ஸ் கொடுக்கிறதே கார் ஓட்டத்தானே, நான் யாருக்கும் ஆபத்தில்லாமல் ஓட்டும்வரை என்ன சிக்கல்

என்னமும் பண்ணு, நாடகத்தை தொடங்கு என்றார் காமராஜர்

இப்படியாக காமராஜருக்கும் அவருக்கும் நட்பு இருந்திருக்கின்றது

எல்லா இடங்களிலும் சிரித்து கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான்

அது காமராஜர் பணக்காரர் கை கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க வைக்கபடுகின்றனர் என எதிர்கட்சிகள் சர்ச்சை கிளப்பிய நேரம்

அதை அழிச்சாட்டியமாக செய்தவர் கருணாநிதி, டெல்லி கணவான்களை காங்கிரஸ் பண்ணையார் வீடுகளில் தங்க வைத்து மேட்டுகுடி பாவனை செய்கின்றார் ஏழைபங்காளர் என வேஷமிடும் காமராஜர் என பொங்கி தீர்த்தார் கருணாநிதி

இது அன்று பெரும் சர்ச்சையாயிற்று அல்லது ஆக்கபட்டது

காமராஜரை காண சென்ற சோவிடம் இதனை குறித்து சொல்லிகொண்டே சட்டென்று கேட்டார் காமராஜர்

நீ இவ்வளவு நாளும் இங்க வந்து போற, என்னைக்காவது உன்னை என்கூட சாப்பிட சொல்லியிருக்கேனா?

இல்லை என தலையாட்டுகின்றார் சோ

ஒரு காபியாது கொடுத்திருக்கேனா?

நெற்றியினை சுருக்கி இல்லை என்கின்றார் சோ

இங்கு அவ்வளவுதான் வசதிண்ணே, நானும் என் சமையல்காரனும் சாப்பிடுற அளவுதான் வசதிண்ணேன், இது வாடகை வீடுண்ணே

டெல்லியில் இருந்து திடீர்னு வாரவங்களுக்கு இங்க கொடுக்க ஒண்ணுமில்லை அதான் வசதி உள்ளவங்க வீட்டுக்கு அனுப்புறேன், இது குத்தமா

ஒரு ஒண்டிகட்டை வீட்டுல என்ன இருக்கும்ணு தெரியாம அவனுக இஷ்டத்துக்கு எழுதுறானுக" சொல்லிவிட்டு கலங்குகின்றார் காமராஜர்.

சோ ராமசாமி அழுத இடம் இதுதான், இது ஒன்றுதான்.

 

 நன்றி இணையம்

இந்தியாவில் எப்படி தாமரை மலர்ந்தது !

மணக்கால் அய்யம்பேட்டை | 1:12 PM | Best Blogger Tips

 



 

பாஜக ஆட்சிக்கு வந்ததில் குஜராத்தின் பங்களிப்பு பெரியது.

 

குஜராத்தை ஹிந்துத்துவாவின் ஆய்வுக்கூடம் என்று சொல்வார்கள் மீடியாக்கள்.

 

பாஜக பாரத தேசத்தில் முதன்முதலாக ஆட்சிக்கு வந்த  மாநிலம் குஜராத்,

 

பாஜகவுக்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்த காலகட்டம் அது,  நான் குஜராத்தில் உள்ள மெஹ்சானாவைச் சேர்ந்தவன்.

 

குஜராத்தில் பாஜக எப்படி ஆட்சிக்கு வந்தது என்று கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.

 

குஜராத்தில் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில், பிரபல மாஃபியா கும்பலின் தலைவன்  அப்துல் லத்தீஃப் பெரும் பங்கு வகித்தான், ஆச்சரியமாக இருக்கிறதா ஆம் மேலே படியுங்கள்.

 


அப்துல் லத்தீப் இல்லை என்றால், பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்காது?

 

அப்துல் லத்தீஃப் மிகவும் மோசமான ரவுடி, 

68 போலீஸ்காரர்கள் உட்பட 150 க்கும் மேல் அரசாங்க கணக்குப்படி கொன்று குவித்த அரக்கன் அவன்.

 

பல கொலைகள், ஆள் கடத்தல், கள்ளக் கடத்தல், மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாராயத்தை ஆறாக ஓட விட்டது,

இதில் சாராயம் விற்பதில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக ராதிகா ஜிம்கானா கிளப் என்கிற ஒரு ஓய்வு விடுதி, மீது லத்தீஃப் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரே நேரத்தில் 35 பேரைக் ஜஹாங்கீர் என்கிற ஆயுத வியாபாரி துணையுடன் கொலை செய்தான்.

 

ராதிகா ஜிம்கானா கொலை மூலம் வெளியுலகுக்கு தெரிய வந்தான், மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் இது போன்ற பல சமூக விரோதச் செயலில் இவன் முக்கிய பங்காற்றினான்.

 


மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் ஆசீர்வாதம் இவனுக்கு இருந்தது,

 

லத்தீப் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளில் உள்ள பெரும் தலைவர்களின் துணையுடன் வளமாக வாழ்ந்து வந்தான்,

 

லத்தீப், குஜராதை காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அந்தக் காலத்தில் அப்போதைய  முதல்வர் சிமன்பாய் படேலின் அறைக்கு எந்தவித அனுமதியும் இல்லாமல் சென்று வரும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.

 

தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் பலகோடி ரூபாய் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அனைவரையும் விலைக்கு வாங்கியிருந்தான், மேலும் அவனுக்கு கட்டுப்படாதவர்களை கொலை செய்து சுற்றியுள்ளவர்களை பயத்தில் அழுத்தினாள்.

 

 


லத்தீப் அல்லது அவன் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாராவது ஒரு இந்து பெண்ணை விரும்பினால்,  அன்றைய இரவு அந்தப் பெண்ணின் வாழ்க்கை முடிந்தது என்று அர்த்தம், திரும்பிய பக்கமெல்லாம் அராஜகம் நடந்தது.

 

குஜராத்தில் உள்ள இந்துக்கள் யாராவது ஒரு ஆபத்பாந்தவன் வருவானா என்று தினமும் இறைவனை பிரார்த்தித்து கொண்டிருந்தார்கள்,

 

அன்றைய காலகட்டத்தில்

 நரேந்திர மோடி, ஷங்கர் சிங் வகேலா, கேசுபாய் படேல் ஆகியோர் சைக்கிள், ஸ்கூட்டரில், ஊர் ஊராக சென்று பாரதிய ஜனதாவை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

ஒரு நாள் குஜராத் கோம்திபூரில் பா.ஜ.க கூட்டம் நடந்த போது கேசுபாய் படேல் சொன்னார், ​​

 

பாரதிய ஜனதா அரசு எப்போது ஆட்சிக்கு வருகிறதோ, அரக்கன் அப்துல் லத்தீப் அன்றைய தினமே என்கவுன்டர் செய்யப்படுவான் என்று ஆக்ரோசமாக உறுதி அளித்தார்.

 

அப்துல் லத்தீப்பின் கோட்டையில் அவனை எதிர்த்து இவ்வளவு தைரியமாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்ற செய்தி குஜராத் மக்களுக்குள் வேகமாக பரவியது,

 

கேசுபாய் படேலின் இந்தப் உரைக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் ​​குஜராத்தில் பா.ஜ.க. 35  இடங்களை பெற்று மகத்தான முதல் வெற்றியைப் பெற்றது,

 

முதல் வேலையாக பாரதிய ஜனதா ஜெயித்த இடத்தில் அப்துல் லத்தீப் மற்றும் அவரது அடியாட்களுக்கு எதிராக பிஜேபி ஒரு குழுவை உருவாக்கியது, அதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள் மேலும் அவர்களுடைய செயல்களை வெளியுலகிற்கு கொண்டு வந்தார்கள்.

 

அதன் பலனாக அடுத்த தேர்தலில், பிஜேபி முழு பெரும்பான்மை பெற்று அரசாங்கம் அமைக்கப்பட்டது,

 

கேசுபாய் படேலின்,  அளித்த வாக்குறுதியின்படி முதல்வராக அமர்ந்த ஷங்கர் சிங் வகேலா  அப்துல் லத்தீப்பின் என்கவுண்டரைச் செய்தார். 

 

அப்துல் லத்தீஃப் என்கவுன்டரும் சுவாரசியமாக நடந்தது..

 

டிஎஸ்பி ஜடேஜா என்பவர் சாஹிப் ஷங்கர் சிங் வகேலாவின் முன் வந்து, ஐயா லத்தீப்பை என்கவுன்டர் செய்ய எனக்கு அனுமதி வேண்டும்,

 


ஏனென்றால் எங்களுடைய இன்ஸ்பெக்டர் தனது கர்ப்பிணி மனைவியைப் பார்க்க விடுமுறையில் செல்லும்போது அவரை கொலை செய்தார்கள், அதற்குப் பழிவாங்க இதற்கு மேல் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது ஆகவே எனக்கு அந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டு வாங்கிச் சென்றார். 

 

யாரும் எதிர்பாராத விதமாக அப்துல் லத்தீப் கைது செய்யப்பட்டு நவரங்புராவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்திருந்தார்கள்.

 

அடுத்த நாள் காலை உணவை சாப்பிடுவதற்காக லத்தீஃப் கைவிலங்குகளை கழற்றி விட்டுள்ளார்கள், அப்போது காவலுக்கு வந்தவர்களின் துப்பாக்கியை பிடுங்கி சுட்டு விட்டு தப்பி ஓட முயன்றதாக போலீசாரால் சுட்டு

கொல்லப்பட்டான்,

 

அவன் மரணத்தை குஜராத்தி மக்கள் திருவிழாபோல் கொண்டாடினார்கள்.

 

அதன் பிறகு சங்கர்சிங் வகேலா மற்றொரு நல்ல வேலையைச் செய்தார். 

 

குஜராத்தின் இந்துக்களை முஸ்லிம்கள் அடக்கியாளும் பல பகுதிகள் குறிக்கப்பட்டன, 

 


இந்துக்களை அவர்கள் வசிக்கும் பகுதியை விட்டு துரத்தி கொண்டிருந்தார்கள் அந்த நிலை மாறியது, கூட்டமாக சேர்ந்து இந்துக்களை தாக்கினார்கள் அதுவும் மறைந்து போனது.

 

அதன் பிறகு குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி,  வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் இன்று பாஜக வெற்றிவாகை சூடியுள்ளது.

 

இப்பொழுது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மீண்டும்  சட்டமன்றத்தில் நுழைந்துள்ளது அடுத்தது பாரதிய ஜனதா ஆட்சி அமைய வேண்டும், அப்பொழுது தான் இந்த நாடும் பலமடையும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து நடைபெறாது என பல நல்ல பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது அதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

நாட்டில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் ஆதரவுடன் மத்தியில் 303 இடங்களுடன் பாரதிய ஜனதா இன்று ஆட்சியில் உள்ளது.

 

ஒரு இந்து தூங்கும் மற்ற இந்துக்களை எழுப்பும்போது தான் இந்த குஜராத் சூழல் உருவாகிறது, ஒருவகையில் இங்கே நாமும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 

லத்தீஃப் என்கவுண்டர் செய்யப்பட்டதை கேசுபாய் அறிவித்தபோது, ​​குஜராத்திகள் எந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல் பாஜகவுக்கு முழு ஆதரவை வழங்கினர். 

 

நாடு முழுவதும் உள்ள குஜராத் முடிவுகளை இந்துக்கள் விரும்பினால், குஜராத்திகள் செய்ததை அனைவரும் செய்ய வேண்டும். 

 

அதனால் பிஜேபியையும், மோடியையும் கேள்வி கேட்காமல் ஆதரியுங்கள், அப்போதுதான் நாடு முழுக்க  நிறைந்துள்ள லத்திஃபாக்களை ஒழிக்க முடியும். 

 

மோடிஜியையும் பிஜேபியையும் சின்ன விஷயங்களில் எதிர்க்காமல் அவர்களுக்கு உங்கள் முழு ஆதரவையும் கொடுங்கள்,

 

அப்பொழுது தான் அவர்கள் தங்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.

 

இந்த தகவலை 25 இந்து அன்பர்களுக்கு தனியாக அனுப்பி வையுங்கள்.

 

 ஜெய் ஹிந்த்



 நன்றி இணையம்