வாழ்க்கையின் உண்மை............!

மணக்கால் அய்யம்பேட்டை | 7:05 PM | Best Blogger Tips
Image result for வாழ்க்கையின் உண்மை
ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்...
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
Image result for வாழ்க்கையின் உண்மை
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த 
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2.
மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3.
நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4.
நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.
படித்ததில் பிடித்தது

நன்றி இணையம்


ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 6:38 PM | Best Blogger Tips
Image result for வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்

ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்.
படித்ததில் பிடித்த நீதிக்கதை
ஒரு பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒரு முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான்.
திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான்.
அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஒரு தைரியசாலி குளத்தில் குதித்து நீந்த தொடங்கினான்.
முதலைகள் அவனை விரட்ட தொடங்கின.
அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
வாயெல்லாம் பல்லாக தான் இருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த தைரியசாலி தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான்.
" இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது திடீர்னு என்னை தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?" என்ன செய்திருப்பாய் ?என்று மனைவியிடம் கேட்டான்.
அதற்கு அவன் மனைவி அமைதியாக சொன்னாள் "அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்"என்று.


நன்றி இணையம்

பொன்மொழிகள் ! உன் எதிரியின் எதிரி நீதான்!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:35 PM | Best Blogger Tips
Image result for பொன்மொழிகள்
தோற்ற இடமே
வெற்றியின்
தோற்ற (ஆரம்ப) இடம்!

வெளுத்ததெல்லாம்
பால் அல்ல,
பழைய சட்டை!

உலகில் அதிகம் பேர்
இறக்கும் இடம்
படுக்கையே!

குறைவாகப் பேசுங்கள்,
நிறைய நண்பர்கள்
கிடைப்பார்கள்!

ஒரே கருப்பு பேன்ட்டுக்கு
ஐந்து சட்டைகளைப்
பயன்படுத்துபவன்தான்
மிடில் க்ளாஸ்!

நீந்த தெரிந்தும்
மூழ்கி விடுகிறேன்
கடனில்!

''கரம் மாறியதால்
வி'ளை' நிலம்
வி'லை' நிலமானது!

எல்லாரும் அறியாதவர்களே, வெவ்வேறு விஷயங்களில்!

குறுக்கு வழியை
என்றும் பயன்படுத்தாதவர்கள்
ஆட்டோ/கார் டிரைவர்களே!

தந்திகூட ஒழிந்துவிட்டது,
'தந்தி ஒழியவில்லை!

விதவையான தயிர்சாதம்
சுமங்கலியானது
ஊறுகாயின் வரவால்!

கோடையில்
குளிர்ந்த காற்று
குடிநீர் குழாயில்!

'மன்னிப்பு'
கொடுக்கப்படும்போதைவிட கேட்கப்படும்போது
சுகமானது!

துணை இழந்தவுடன்
உடன் கட்டை ஏறிவிட்டது
செருப்பு!

அப்பா இறந்தவுடன்
சகுனம் பார்ப்பதை
விட்டுவிட்டோம்,
எதிரில் வருவோரெல்லாம்
அம்மாவாகத் தெரிவதால்!

தமிழிலேயே அர்ச்சனை
நடக்கும் இடம்
வீடுதான்!

பிச்சைக்காரர் நம்புவது
கடவுளை அல்ல,
பக்தர்களையே!

விண்ணை முட்ட
உயர வேண்டுமானால்
வெந்துதான் ஆகவேண்டும்
சூளையில் செங்கல்!

பரிதாப்படும்
நிலையில் இருப்பதை விட,
பொறாமைப்படும் நிலையில்
இருப்பது மேல்!

காலையில் வாங்கப்படும் பாக்கெட் பாலில் தொடங்குகிறது ப்ளாஸ்டிக்கின்
அன்றாட வாழ்க்கை!

தாமதமாக வரும்
ரயிலுக்கு சமம்
"
நீதி"
அவமதிப்பை புரியவும் அவமானப்பட வேண்டியுள்ளது!

தொடுவதற்கு சண்டை,
பின்
தொட்டதுக்கெல்லாம் சண்டை!

உன் எதிரியின் எதிரி நீதான்!