மாற்றங்கள்....!! மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:14 PM | Best Blogger Tips
Image result for மாற்றங்கள்....!! மனங்களிலும்,  குணங்களிலும்,  வந்தால் தான்
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,
அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,
''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.
''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,
எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !
*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*
"பார்த்தீர்களா....?
பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,
அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே ,
*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,
எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்....
எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??
......*மாற்றங்கள்....!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!

 நன்றி இணையம்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:40 PM | Best Blogger Tips
Related image
கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனைவாலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
"குளிர் கடுமையாக இருக்கிறதே அதை நீ உணரவில்லையா?"
என்று கேட்டான்.
"ஆம். உணர்கிறேன் மன்னா.
ஆனால்,
குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!"
என்றான் காவலாளி.
அதற்கு மன்னன்,
"கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்".
என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான்.
அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறும் எழுதப் பட்டிருந்தது.
"மன்னா...
இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன்.
ஆனால்,
குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குழைத்து என்னை கொன்று விட்டது".
ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் அறியமாட்டீர்கள்!
*உங்களின் நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதி.*
*
நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று.*
படித்ததில்... பிடித்தது...

நன்றி இணையம்

பொதுநலம் உள்ளவன் ....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:12 AM | Best Blogger Tips
Image may contain: 1 person, sunglasses and outdoor

பொதுநலம் 
..
என்பது 
..
புல்லாங்குழல் போன்றது,
..
சுயநலம் 
..
என்பது 
..
கால்பந்து போன்றது,
...
இவை இரண்டுமே 
...
காற்றால் இயங்குகின்றன.
..
ஆனால் 
..
ஒன்று 
..
முத்தமிடப்படுகின்றது,
..
மற்றொன்று 
..
உதைக்கப்படுகின்றது,
..
தான் வாங்கிய காற்றை 
...
சுயமாக வைத்துக் கொள்வதால்
...
கால்பந்து உதைபடுகிறது
..
ஆனால் 
...
தான் வாங்கிய காற்றை 
...
இசையாக புல்லாங்குழல் தருவதால் 
...
அது முத்தமிடப்படுகிறது,
..
சுயநலம் உள்ள மனிதன் 
..
புறக்கணிக்கப்படுவான்,
...
பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான் !
..
இனிமையான காலை நேர வணக்கம்.!!

நன்றி இணையம்