ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 AM | Best Blogger Tips

 


ராமாயணத்தில், எந்தக் காண்டத்துக்கும், ராமனின் பெயரோ, சீதையின் பெயரோ வைக்கவில்லை! ஆனால் அனுமன் பெயர் கொண்டு ஒரு காண்டமே உள்ளது! அது, சுந்தர காண்டம்! இது தான் தொண்டருக்குக் கிட்டிய பெருமை! அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு! அவன் பெயர் தான் இங்கு வைக்கப்பட்டுள்ளது!

அனுமனை விரும்பாதார் தான் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட மாலைஇப்படி மாலை மரியாதைகள் தான் என்ன? சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன், சமய சஞ்சீவி என்ற எத்தனை பட்டப் பெயர்கள் இவனுக்கு? மனத்துக்கினியான் ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கொடுத்திருக்கிறார்களா?

·
சீ்தையின் உயிரைக் காத்தான்விரக்தி/தற்கொலையில் இருந்து!

·
இலக்குவன் உயிரைக் காத்தான்கொடிய நாக பாசத்தில் இருந்து!

·
பரதன் உயிரைக் காத்தான்தீ மூட்டி மாய்த்துக் கொள்வதில் இருந்து!

·
இப்படி எல்லோரையும் காத்து, ராமனையே காத்தான்! உயிர் காப்பான் தோழன் அல்லவா?

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல! மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான்! ‘மல்யுத்த வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்’, என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார். அதனால் தான் ஸ்ரீராமாநுஜர், ‘உருவம் கண்டு அடியவரை எடை போடக் கூடாதுஎன்பதை மிக உறுதியாக விதித்தார். இப்பேர்பட்ட அனுமன் பிறந்த இடம்: திருமலை திருப்பதி, அஞ்சனாத்ரி மலை!

இப்படிப்பட்ட அனுமனை, கவிச் சக்ரவர்த்தி கம்பரின் அழகுத் தமிழ்ப் பாடல் ஒன்றினால் துதி செய்யலாம் இன்று!

அஞ்சிலே ஒன்று பெற்றான், அஞ்சிலே ஒன்றைத் தாவி
 
அஞ்சிலே ஒன்று ஆறாக, ஆரியர்க்காக ஏகி
 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு,அயலார் ஊரில்
 
அஞ்சிலே ஒன்றை வைத்தான், அவன் எம்மை அளித்துக் காப்பான்!

இது பஞ்ச பூதப் பாடல்.

அஞ்சிலே ஒன்று பெற்றான் = அஞ்சிலே ஒன்று காற்று; வாயு! அவன் புதல்வன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன்.

அஞ்சிலே ஒன்றைத் தாவி = அஞ்சிலே ஒன்று நீர்; கடல்! அந்தக் கடலைத் தாண்டிச் சென்று அன்னையைச் சேவித்தவன் அனுமன்.

அஞ்சிலே ஒன்று ஆறாக = அஞ்சிலே ஒன்று ஆகாயம்; அந்த ஆகாயத்தின் வழியாகப் பறந்தான்! யாருக்காக? ஆரியர்க்காக ஏகி = அருமையான இயல்பு கொண்டவன் இராமன்; அவனுக்காக ஏகினான்.

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு = அஞ்சி்லே ஒன்று பூமி்; மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்) சீதை!

கண்டு அயலார் ஊரில் = அவளைக் கண்டு, அயலார் ஊரான இலங்கை நகரத்தில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் = அஞ்சி்லே ஒன்று நெருப்பு; தீ! அந்தத் தீயை அவனுக்கு வைக்கப் பார்த்தனர்; அதை அவர்களுக்கே வைத்தான் அனுமன்.

அவன் எம்மை அளித்துக் காப்பான் = அந்த அனுமன், பஞ்ச பூதங்களால் ஆன என்னையே, எனக்கு அளித்துக் காப்பான்!

அது எப்படி என்னையே எனக்கு அளிப்பான்?


 
அந்தராத்மா என்கிற நான்; அங்கு இதய கமல வாசம் செய்பவன் இறைவன்; அனுமனின் இதய கமலத்தில் இராமன்.


 
இப்படி ஆழ் மனதில் புதைந்துள்ள இறைவனையே நமக்குக் கொண்டு வந்து அளிப்பவன் தான் அனுமன். என்னை எனக்கு அளிப்பான்!🌹

 

!🌹நன்றி இணையம்




அற்புதமான வாழ்க்கை போதனை........

மணக்கால் அய்யம்பேட்டை | 3:00 PM | Best Blogger Tips

 Vanakkam sivagangai - அற்புதமான வாழ்க்கை போதனை..... 1. வாழ்வென்பது உயிர்  உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4.  இயன்ற வரை ...

 

அற்புதமான வாழ்க்கை போதனை..

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.. 

2. தேவைக்கு செலவிடு.
3.
அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4.
இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
5.
மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6.
இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7.
உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.


8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9.
உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10.
உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.

11.
உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12.
உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13.
அவ்வப்போது பரிசுகள் அளி.
14.
அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15.
பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16.
அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17.
உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18.
அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “
அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படிஎன அறிந்து கொள்.
20.
இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21.
ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “
எல்லாமே நான் இறந்த பிறகு தான்என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23.
எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24.
மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25.
மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26.
அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27.
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28.
நண்பர்களிடம் அளவளாவு.
29.
நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.... | bhagavad gita

 30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்❗

31. வாழ்வை கண்டு களி❗
 

32. ரசனையோடு வாழ்❗
 

33. வாழ்க்கை வாழ்வதற்கே❗

34.
நான்கு நபர்களை புறக்கணி!
  மடையன்
  சுயநலக்காரன்
  முட்டாள்
  ஓய்வாக இருப்பவன்

35.
நான்கு நபர்களுடன் தோழமை    கொள்ளாதே!
   பொய்யன்
   துரோகி
  பொறாமைக்கைரன்
   மமதை பிடித்தவன்

36.
நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
 அனாதை
 ஏழை
 முதியவர்
 நோயாளி

37.
நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
 மனைவி
 பிள்ளைகள்
 குடும்பம்
 சேவகன்

38.
நான்கு விசயங்களை  ஆபரணமாக அணி!
  பொறுமை
  சாந்த குணம்
   அறிவு
   அன்பு

39.
நான்கு நபர்களை வெறுக்காதே!
   தந்தை
   தாய்
  சகோதரன்
  சகோதரி

40.
நான்கு விசயங்களை குறை!
  உணவு
  தூக்கம்
  சோம்பல்
  பேச்சு

41.
நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
  துக்கம்
  கவலை
  இயலாமை
  கஞ்சத்தனம்

42.
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
மனத்தூய்மை உள்ளவன்
வாக்கை நிறைவேற்றுபவன்
கண்ணியமானவன்
உண்மையாளன்

43.
நான்கு விசயங்கள் செய்!
தியானம், யோகா
நூல் வாசிப்பு
உடற்பயிற்சி
சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.
கண்டவுடன் என் கண்களில் வரும்...


🧐🧐மிகவும் சூதானமாக இருக்க வேண்டிய காலம் இப்போ! 


நன்றி இணையம்